Thiruppugazh unaithdhinam (thirupparangkundRam) | திருப்புகழ் உனைத் தினம் (திருப்பரங்குன்றம்)

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2022
  • You can now listen and follow Yaazh Music on…
    Spotify - open.spotify.com/album/0yuqlH...
    Apple Music - itunes.apple.com/album/id/1632...
    Amazon Music - music.amazon.com/albums/B0B5H...
    JioSaavn - www.jiosaavn.com/album/thirup...
    Written by - Saint Arunagirinadhar
    Music Rearrangment and production - Karthik Sekaran Instagram @mokkaimouli youtube - / karthiksekaran
    Flute - J Ramakrishnan
    Murugar Art - Ramesstudios @ramesstudios
    Video editing and graphics - FB Design Studio Adhi
    Vocals - Venkatesan Thirunaukkarasu @YaazhMusic
    Produced by - Yaazh Music
    ** Inviting talents to contribute to audio/video work in any form (Digital Art, Lyrics simplification, Music Production, Meaning Simplification) Please reach out to onlyvocalmusic@gmail.com to join the team. ***
    #Thirupugazh #unaithdhinam #MuruganSongs #திருப்புகழ் #உனைத்தினம்
    Thiruppugazh unaithdhinam (thirupparangkundRam) | திருப்புகழ் உனைத் தினம் (திருப்பரங்குன்றம்)
    www.kaumaram.com/thiru/nnt000...
    தனத்த தந்தன தனதன தனதன
    தனத்த தந்தன தனதன தனதன
    தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
    ......... பாடல் .........
    உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
    உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
    உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா
    உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
    விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
    உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே
    கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
    கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
    கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
    கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
    கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
    கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே
    வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
    விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
    விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா
    மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
    கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
    விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே
    தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
    புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
    சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே
    தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
    தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
    திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
    unaiththi nanthozhu dhilanuna dhiyalbinai
    uraiththi lanpala malarkodun adiyiNai
    uRappa Nindhilan oruthava milanuna ...... dharuLmARA
    uLaththu Lanbinar uRaividam aRigilan
    viruppo dunsika ramumvalam varugilan
    uvappo dunpugazh thudhiseya vizhaigilan ...... malaipOlE
    kanaiththe zhumpaga dathupidar misaivaru
    kaRuththa venchina maRalithan uzhaiyinar
    kadhiththa darndheRi kayiRadu gadhaikodu ...... porupOdhE
    kalakku Runseyal ozhivaRa azhivuRu
    kaRuththu naindhala muRupozhy dhaLavaikoL
    kaNaththil enbayam aRamayil mudhuginil ...... varuvAyE
    vinaiththa lanthanil alagaigaL kudhikoLa
    vizhukku daindhumey ugudhasai kazhuguNa
    viriththa kunjiyar enumavu Naraiamar ...... purivElA
    miguththa paNpayil kuyilmozhi azhagiya
    kodichchi kungkuma mulaimuga duzhunaRai
    viraiththa chandhana mrugamadha buyavarai ...... udaiyOnE
    dhinaththi namchathur maRaimuni muRaikodu
    punaRcho rinthalar podhiyavi Navarodu
    chinaththai nindhanai seyumuni vararthozha ...... magizhvOnE
    thenaththe nanthana enavari aLinaRai
    thevitta anbodu paruguyar pozhilthigazh
    thiruppa rangiri thaniluRai saravaNa ...... perumALE.

КОМЕНТАРІ • 202

  • @ilantilak6073
    @ilantilak6073 2 роки тому +29

    arpudam yaazh music, oru oru thirupugazh patulayum, oru oru history kedaikudhu, kumarathunga tamil name ivlo naal srilankan name nu nenaichikuten, iraniyan marbai murugan pilandhu idhu varaikum narasimar dhan iraniyan marbai pillandhavar nu nenaichukuten

  • @Qualitylifeisneedofthehour

    முருகனின் திருப்புகழை அனைவருக்கும் சென்றடைய உதவும் யாழ் musicக்கிற்க்கு மிக்க நன்றிகள்...மேலும் பல பாடல்கள் வெளியிட வேண்டுகிறோம்,🙏🏼🙏🏼🙏🏼

  • @rathyambigaipagan8250
    @rathyambigaipagan8250 2 роки тому +34

    ஆறு படை வேலனே ஈசன் உமை பாலகனே கணபதியின் சகோதரனே எல்லோரையும் காப்பாற்றுங்கள் ஐயனே

  • @archana.5463

    இந்தப் பாடலை பாடிய அவருக்கு மிக்க நன்றி முருகன் பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் உடம்பில் ஏதோ ஒரு மாற்றம் மேலும் யாழிசை அவர்களுக்கு நன்றி

  • @praneshraavanan4063
    @praneshraavanan4063 Рік тому +24

    இந்த பாடலை இப்படி அழகாக உருவாக்கியவரது பாதங்களை நான் வணங்குகிறேன் நன்றி நன்றி நன்றி 🙏

  • @Anand-gp5vl
    @Anand-gp5vl 2 роки тому +9

    அரியலூர் ஆனந்த இறக்கும் வரை உங்கள் நினைவில் என் கடவுள் இசை வடிவம் மிக மிக அருமையாக உள்ளது திருப்புகழ் குழந்தைகள் பார்க்கும் வண்ணம் உள்ளது அடுத்த தலைமுறை திருப்புகழ் எடுத்து செல்வது 👍

  • @saravananmuthirulandi6929

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara 🙏👍❤️ 🐓🦚

  • @user-lb8kq9ih3y
    @user-lb8kq9ih3y 2 роки тому +13

    அருமை அருமை கேக்க கேக்க இனிமை நல்ல குரல்நேர்த்தி வாழ்க நின்தொண்டு

  • @aadalkingaadalking4569
    @aadalkingaadalking4569 2 роки тому +6

    ௐ சரவணபவ ௐ முருகா சரணம்

  • @nirojaniramachandran3678

    அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arumuganainar9517

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..

  • @Selvakumar-kn9ww
    @Selvakumar-kn9ww 2 роки тому +40

    தனத்த தந்தன தனதன தனதன

  • @sivavidhya1857
    @sivavidhya1857 Рік тому +25

    உனைத் தினம் தொழுது இலன், உனது இயல்பினை

  • @v.balasubramanian7946
    @v.balasubramanian7946 2 роки тому +16

    தொடர்ந்து இதுபோன்று திருப்புகழை பரப்புங்கள்....🙏🙏🙏🙏

  • @cv-ve2gy
    @cv-ve2gy 2 роки тому +9

    My 6 yrs old daughter likes ur thirupugal videos.attractive visuals..

  • @sujatharanithiruman1077
    @sujatharanithiruman1077 Рік тому +6

    I bow to the producer and the team who run this channel.

  • @user-yz5so5si9c
    @user-yz5so5si9c 2 роки тому +6

    வேல் முனையில் இருந்து ஊறிய அமிர்தத்திலும் திகட்டா தமிழமிர்தம்!!! திருப்புகள்.

  • @naturenavanee
    @naturenavanee День тому

    திருப்புகள் படிக்க ஆசை இருந்தும் புரியாமலும் ரொம்ப பெரிய பாடலாக இருப்பதாலும், திருப்புகள் பக்கம் போறதே இல்ல. 🙏

  • @prakashm.prakash4013
    @prakashm.prakash4013 2 роки тому +2

    ஆகா... 🥰 அற்புதமான திருப்புகழ் 🥰🤝💯 அற்புதமான குரல் 😍 கோடான கோடி நன்றி🙏💕 நண்பரே...

  • @srijithmenon906
    @srijithmenon906 2 роки тому +4

    Murugaaaa 🙏 migavum sirappu