ஞானக் கடல் தக்கலை அப்பா பீர் முகம்மது - குறவஞ்சிப் பாடல் | Thakkalai appa Peer Mohammed wisdom
Вставка
- Опубліковано 10 лют 2025
- தக்கலை பீர் முகம்மது அப்பா காலத்தால் மூத்த தமிழக சூபிக் கவிஞர். அப்பா என மரியாதையுடன் அழைக்கப்பட்டவர். சிறந்த இறைநேசச் செல்வர். திருக்குர் ஆனின் உன்னத புகழ் அனைத்தையும் தம் மெய்ஞானக் கவிதைகளின் வாயிலாக மக்களுக்குத் தந்தவர். இவருடைய பாடல்கள் யாரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் எளிமையானவை. பீர் என்பது இசுலாமிய சூபித்துவத்தில் ஆன்மிகக் குரு. முகமது என்பது நபிப் பெருமகனாரின் திருப்பெயர்.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டம் கணிகபுரத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் சிறுமலுக்கர். தாயார் ஆமீனா. இவரின் காலத்தைப் பற்றிய சரியான தடங்கள் இல்லை. கிபி 10, 13ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக இருக்கலாம். இசுலாமிய ஆண்டு ஹிஜ்ரி 800 க்கும் 1100 க்கும் இடைப்பட்டது. 108 சித்தர்களின் வரிசையில் அப்பா அவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது. சமசுகிருத மருத்துவ நூல்கள் இவரை சித்த நாகார்ஜுனர் என்றே குறிப்பிடுகின்றன.
தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர்தன்பால னிக்கதையைச் சாற்றினான்" (ஞானப் புகழ்ச்சி)"சிறுமலுக்க ரீன்ற தவச் சிறப்புடைய பீர்முகம்மது" (ஞானக் குறம்)
அப்பா அவர்கள் பிறந்த ஆண்டு இன்னும் கணிக்க முடியாமலே இருக்கிறது. இளமையிலேயே ஞானக் கருத்துக்களில் ஈடுபாடு உடையவராய் விளங்கிய அவர், தென்காசியைச் சேர்ந்தவராயிருப்பினும் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கேரள மாநிலத்தின் கொச்சிப் பகுதியைச் சார்ந்த மலைப் பகுதிகளில்தான் வாழ்ந்தார். இதன்பின் யானை மலைக் காட்டுப் பகுதிகளில் தவம் இருந்தார். அப்போதுதான் சூபிக் கருத்துப் பெட்டகமாம் பல நூல்களை எழுதியதாகத் தெரிகிறது.
திருமெய்ஞானச் சர நூல்
ஞான மலை வளம்,
ஞான ரத்தினக் குறவஞ்சி,
ஞான மணி மாலை
ஞானப் புகழ்ச்சி
ஞானப்பால்
ஞானப்பூட்டு
ஞானக்குறம்
ஞான ஆனந்தகளிப்பு
ஞான நடனம்
ஞான மூச்சுடர் பதிகங்கள்
ஞான விகட சமர்த்து
ஞானத் திறவு கோல்
ஞான தித்தி
அவரின் படைப்புக்களை வைத்து அவர் கிபி 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் எனவும் கருதுகின்றனர்.
இதில் ஞானக் குறவஞ்சிப் பாடலே இது.
குறவன் - குறத்தி பாடிய கேள்வி பதில் பாடலாக ஞானச் சுரங்கத்தை இப்பாடலுக்குள் வைத்திருக்கிறார் அப்பா பீர் முகம்மது.
#ThakkalaiPeerMohammedAppa #Siddhar #WisdomSong #SinganSingi #Tamil #ReachTNTVTamilOodagam
Aiya nandri nandri👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️👌👌👌👌👌
Guruve saranam sat guruve saranam👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌❤️
Nandri 👌👌👌👌👌👌👌👌👌
பொக்கிஷம் அப்பா❤❤❤
எளிய மனிதனும் புரிந்து கொள்ள கூடிய அற்புதமான பாடல் அப்பாவின் பாடல்.
பீரப்பாவின் பாடல்கள் வாழ்வின் உன்னத நிலையடைந்து ஆத்மவிசாரனையின் மேன்மையை உரைக்கும் அற்புத ரகசியம்
கிருபை செய் யாஅல்லாஹ்
இறை ரகசியம் உரைத்த மகான்
Yamadham samadham Aiya vazhgave vazhga valamudam 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️
Nandri vazhga valamudam 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Nandri 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 👌👌👌👌❤️
❤️ ❤️ ❤️ அருமை ❤️ ❤️ ❤️ சிறப்பு ❤️ ❤️ ❤️ தேடினேன் கிடைத்தது ரெம்ப சந்தோசம் ❤️ ❤️ ❤️ நல்வாழ்த்துக்கள் ❤️ ❤️ ❤️
குருவே ௮டி சரணம் 🙏🏽
மனிதகுலமாமேதைஅப்பா
இங்கு பிறப்பில் தமிழன் உடைய வழியில் வந்த முகம்மது குரு அவர்கள் அருமை அருமை சிவன்+
சக்தி = நந்தி விஷ்ணு பிரமன் நமது சித்தர்கள் அகத்தியர் காகபுஜண்டர்
காப்பாற்றுங்கள் அப்பா
Alhamdulillah
அல்ஹம்துலில்லாஹ்
ஆழமான கருத்துக்கள்.
மெய் சிலிர்த்தேன்...
Nandri
நன்றிகள் செண்டிலியன் sa
இறைவன் என்ற ஊருக்கு.......
ஒருத்தன் இந்து என்ற பேருந்திலும்,
ஒருத்தன் இஸ்லாம் என்ற பேருந்திலும்.....
இன்னொருத்தன் கிறிஸ்தவம் என்ற பேருந்திலும்
இன்னும் சில பேர் பல வாகணத்தில் மாறி மாறி பயணித்தார்களாம் .....
அவர்கள் அடைய வேண்டிய ... அந்த இறைவன் எனும் இடம்
அவர்கள் அந்த வாகணங்களில்
ஏறிய இடைவெளி நேரமும் தூரமும் கூடயில்லை....
அதை விடவும் ....
குறுகிய நேரமே ஆகும் .....
ஆனால் .... அவர்கள் அதை புறிந்து கொள்ளாமல் .......வாகனத்தில் ஏறும் முன்னும்
ஏறிய பிறகும் .....
நாம் சென்றடைய வேண்டிய
அந்த இறைவன் இடத்தை பற்றி நினைக்காமல் .....
அவர்கள் ஒவ்வொருவரும் தான் தான் ஏறிய வாகணமே (மதங்கள்) உயர்ந்தது இதுவே தாம் தாம் செல்லும் இடத்துக்கு ... மிக விரைவில் கொண்டு சேர்த்து விடும் என்று.... ஒவ்வொருக்கொருவர் போட்டியிட்டு வாகனத்தை செலுத்த......அந்த வாகணங்கள் ஒவ்வொண்டும்......அதி வேகத்தில் நிலை தடுமாறி .....
அந்த (மூன்று வாகணங்களும் பளுதாகியும் .... வாகணம் கட்டுபாடுகள் இன்றியும் ...... தான் செல்ல வேண்டிய பாதையை சீக்கிரம் சென்றடைவதாக நினைத்து அதிவேகத்தில பாதைகள் மாறியும் சென்று இறுதியில் தான் அடைய வேண்டிய அந்த இறைவன் எனும் இடத்தை அடையாமலயே போனது......)
சரியாக இறைவன் இடத்தை அடைய நினைத்த யோகிகளும் சித்தர்களும்......
தான் எந்த வாகனத்தில் ஏறியிருக்குறோம் என்பதை ஏறியதும் மறந்து நாம் எப்போது தான் சென்றடைய வேண்டிய இடம் (இறைவன்) வரும் என அதையே நினைத்து சரியாக சென் றடைந்தார்கள்)
சிறப்பு சார் நல்வாழ்த்துக்கள்
உண்மை..நாம் தேடுவது ஒருபொருள்தான் என்பதை மனிதனின் மனம் எப்போது உணரும் பராபரமே.
அருமையான கருத்து சகோ
பல நாள் தேடிய பாடல்...
பீர் முகமது அப்பா திருவடி சரணம்.
😮😮😅😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮
wow... Great ... Maa shaa Allah
😊
வாழ்க வளமுடன்
Salaams from Singapore 🇸🇬
ஞானக்களஞ்சியம்
👏👏👏👏👏
பொருள் தெரிய வேண்டுமே
பாட்டில் உள்ள இடம் அனைத்தும் ஒரே இடம்.அந்த ஒரே இடம் எந்த இடம்?
Assalamu alaikum appa❤️
💯🙏🙏🙏
Takkallai peer mohammed story tamil
Peer appa avarhal eluthiya noolhal enge kidaikum?
பீரப்பா தர்ஹாவில்
ஆன்மீகசுடர்
இதில்உல்ல தமிழ் புரியவில்ளை
@@realworld230 appa kovil enka iruku
@@chinnadurai6046 தக்கலை, கன்னியாகுமரி மாவட்டம்.
Map Location 👇
Peer Mohammed Appa Dargha and Auditorium
Dargha Road, Thuckalay, Tamil Nadu 629175
maps.app.goo.gl/pHsofgyXbXmekJQs6
ஷாஹுல் ஹமீது புக் டிப்போ.
திருவல்லிக்கேணி - சென்னை
❤👩❤️👨💚🌠❓☪️🇮🇳🌈🧔🌏
பாடல் 57 தவறாக பாடப் பட்டுள்ளது என நினைக்கிறேன். அல்லாஹ் போதுமானவன்.
No right.
Thavaraaga paadappattu irukkirathu
உயிருடன் இருக்கும் போது ஒரு மனிதன் எண்ணற்ற ஈடற்ற சாதனைகள் புரிந்திருக்கலாம்.
ஆனால் இறந்த பிறகு அவர் உடலை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து கொண்டு அருள் பாலிக்கிறார் என்பதும் அவர் அதை செய்கிறார் இதை செய்கிறார் என்று சொல்வதும் அவர் புதை பூமியில் கூடம் எழுப்பி தொழுவதும் இறைவனுக்கு விரோதமான செயல்கள் இல்லையா ?
Nata ranjan yarum auliakali tholuvathilai, u r mistaken
Illai
நடராஜன் என்றால் பொருள் என்ன என்று உனக்கு தெரியாததால் இப்படி சிறுபிள்ளை மாதிரி பதிவு போடுகிறாய்? முதலில் உன் பெயருக்கு பொருள் என்ன என்று கண்டுபிடி. எந்த கடவுள் சொன்னான் அது தவறு என்று உன்னிடத்தில்?
நம்மைப் பெற்று ஆளாக்கும் தாய் தந்தை இறந்துவிட்டால் குப்பைக் குழியிலா வீசுகிறோம்? நல்லடக்கம் செய்து ஆண்டுதோறும் திதி வணங்கி, படம் வைத்து வணங்குகிறீர்களே அது எதற்கு? அவர்கள் அருள்பாலிக்கவில்லை என்றால் முதலில் உங்கள் பெயரில் உள்ள உங்கள் தந்தையின் பெயரை நீக்கிக் கொள்ளுங்கள்.
அதேபோல உங்கள் மறைவையடுத்து உங்களின் குழந்தைகள் உங்களைப் பற்றி நீங்கள் கூறுவதுபோல எண்ணி செயல்பட்டால் மகிழ்வீர்களா? உங்கள் உடலைக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு சென்றால் பாராட்டுவீர்களா?
செக்கு எது சிவலிங்கம் எது என்று ஐந்தறிவுள்ள மாட்டுக்குத்தான் தெரியாது நக்கிச் செல்லும். ஆறறிவு உள்ளதாகக் கூறும் நமக்குமா தெரியாது?
ஞானம் என்பது குருவால்தான் கிடைக்கும். குரு அருள்பாலிக்காமல் சாத்தியமில்லை.
குருவை நல்லடக்கம் செய்து அவரை விடாது வணங்கியும், அவரது ஞானப் பாடங்களை மறவாது இருப்பதும்தான் ஒரு மனிதனை நிலை உயர்த்தும்.
நமக்கு ஒருவரின் அருமை பெருமை மதிப்புத் தெரியவில்லையென்றால் அமைதியாக இருந்து புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். நன்றி.
அவர் வாழ்க்கையை முழுமையாக பார்க்கவும் சகோதரரே.அவர் நம்மைப்போல சுயநலமாகவும் வாழவில்லை. உலக ஆசைகளை அறுத்து இறைவனை உணர்ந்தவர்கள். நாம் நம் மனசாட்சியிடமே கேட்டுப்பார்க்கவும் நாம் உண்மையில் நல்லவர்கள் தானா என்று?
இறைவன் உருவம் அற்றவர் நேராக தோன்றுவது இல்லை மாறாக மனத்தூய்மை உள்ள ஞானிகளின் மூலமாக நம்மை நல்வழிப்படுத்துகிறார். அவர் சொற்க்களை படியுங்கள் புரியவில்லையென்றால் கேளுங்கள்