Day- 39

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025
  • ஸ்ரீகுருப்யோ நம:
    கிருத்திகா மண்டல வேதபாராயணம் :
    மிகவும் புன்யகரமான கார்த்திகை - மார்கழி மாதங்களில் நிறைய இடங்களில் வேதபாராயணம் நடத்துவது நம் ப்ராசீன ஸம்ப்ரதாயம். அதன்மூலம் வேதமாதாவின் அனுக்ரஹத்தினாலும் , வைதிகர்களின் மந்த்ராஶீர்வாதங்களாலும் நமக்கு அனைத்து வித ஸௌக்யங்களும் கிடைக்கின்றது. மேலும் அந்த மந்த்ர ஶப்தங்களினால் மனிதகுலம் மட்டுமின்றி ப்ராணிகள் வரை அனைத்து ஜீவகோடிகளுக்கும் அமைதியும் - ஆனந்தமும் கிடைக்கிறது. தேசமும் ஸுபிக்ஷத்தை அடைகிறது, மேலும் பகவானுடைய மூச்சுக்காற்றான வேத ஶப்தத்தால் தான் தேவதா ஸாந்நித்யம் ஏற்பட்டு , லோகத்திற்கு மங்களம் உண்டாகிறது, கார்திகை மாதம் பரமேஶ்வரனுக்கும் , மார்கழி மாதம் மஹாவிஷ்ணுவுக்கும் விஶேஷமானது , தேவதைகளின் ப்ரஹ்ம முஹூர்த்த காலமான இந்த மாதங்களில் செய்யக்கூடிய தர்ம கார்யங்களுக்கு அதிக பலன்கள் ஏற்படும். ஆகையால் தான் இவ்விரு மாதங்களில் வீட்டு வாசல்களில் தினமும் தீபம் ஏற்றுவது , வேதபாராயணம் , ஸ்தோத்ர பாராயணம் செய்வது என்ற தர்மங்களை ஏற்படுத்தி உள்ளனர் , அதன்படி கார்த்திகை முதல் தேதி
    [ 16 / 11 / 2024 முதல் ] ஆரம்பித்து மார்கழி மாதம் முடிய
    [ 13 / 01 / 2025 வரை ]
    தினமும் நமது குரோம்பேட்டை , குமரன்குன்றம் வேதபாடசாலையில் மாலை 03.30 - 05.00 மணி வரை
    க்ருத்திகா மண்டல வேதபாராயணம் ( கனபாராயணம் ) நடைபெறுகிறது .
    அதை நம் UA-cam சேனலில் பதிவிடுகிறோம் , நேரில் வேதஶ்ரவணம் செய்ய வர முடியாதவர்கள் நம் சேனலை Subscribe செய்து கொண்டு தினமும் இதில் வேதஶ்ரவணம் செய்து பயனடையும்படி கேட்டுக்கொள்கிறோம் 🙏
    தங்களுக்கு தெரிந்த ஆஸ்திகர்களுக்கும் அனுப்பவும் நன்றி..!🙏
    ⭐வேதபாராயணத்திற்கு பணம் செலுத்த விரும்புவோர் கீழ்காணும் நம்பரில் தொடர்பு கொண்டு பணம் செலுத்தி உரிய ரசீது பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் 🙏🏻
    ⭐வேதபாடசாலை கைங்கர்யத்திற்கு -
    84387 83606 இந்த நம்பரில் தொடர்பு கொள்ளவும்
    நன்றி 🙏
    #GhanaParayanam
    #கனபாராயணம்
    #VedaParayanam
    #வேதபாராயணம்
    #மண்டல_பாராயணம்
    #Mandala_parayanam
    #Kumaran_Kundram
    #Vedapatasalai
    #Vedapatashala
    #குமரன்குன்றம்
    #வேதபாடசாலை

КОМЕНТАРІ • 9