NEET தேர்வு என்றால் என்ன? அதை ஏன் எழுத வேண்டும்? | Neetly App
Вставка
- Опубліковано 9 лис 2024
- Neetly app link: bit.ly/3FiTNI0
#neetlyapp #neet #neetexam
நீட் தேர்வு என்றால் என்ன? அதை ஏன் எழுத வேண்டும்?
NEET தேர்வு 2022 தயாரிப்பு செயலியானது NEET தேர்வுக்குத் தயாராகும் ஆர்வலர்களுக்கான சிறந்த கற்றல் பயன்பாடாகும், மேலும் AIIMS, AIPMT தேர்வுகள் மற்றும் பிற மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். NEET (National Entrance Cum Eligibilty Test), இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம். இதில் AIIMS (All India Institute of Medical Sciences) மற்றும் JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும். இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
NTA (National Testing Agency) என்னும் தனித்து செயல்படும் அமைப்பு தான் இந்தியாவில் நீட் தேர்வை நடத்துவது தொடங்கி அதற்கான முடிவுகளை வெளியிடுவது வரை நீட் தொடர்பான செயல்பாடுகளை கவனித்து வருகிறது. இந்த அமைப்பை இந்தியாவின் கல்வி அமைச்சகம் (முன்னதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்ற பெயரில் இருந்தது) தான் உருவாக்கியது. முன்னதாக மருத்துவப் படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வே பிரதான தேர்வாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, ஒடியா, உருது, பெங்காலி, தெலுங்கு, கன்னடா, அஸ்ஸாமி மற்றும் குஜராத்தி ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வை எழுத முடியும். 2021-ல் இருந்து பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் நீட் தேர்வை எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CREDITS
Edit -Sathya
Vikatan App - bit.ly/vikatanApp
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp