சர்க்கரையின் கதை
Вставка
- Опубліковано 10 лют 2025
- இந்த திரைப்படம் சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவின் தீமைகளை விளக்கி, மக்களுக்கு நீரிழிவு நோயின் அபாயங்களைப் புரிந்து கொள்ள உதவுவதோடு, ஆபத்தில் இருப்பவர்களுக்கு வாழ்கைமுறை மாற்றத்தின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்த வழி வகுக்கிறது.
இக் கதை ஆசியாவின் ஒரு கிராமப்புற விவசாய சமூகத்தில் துவங்குகிறது. குடும்பம் கடின காலங்களை எதிர்கொண்டதால், நகரத்திற்குச் சென்று சிறந்த வாழ்க்கை தேட முடிவு செய்கிறது. தந்தை டாக்சி ஓட்டும் வேலை பெறுகிறார், தாய் தொழிற்சாலையில் வேலை செய்கிறார். அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் அனைவரும் உடல் எடை அதிகரிக்க, தந்தை 2-வது வகை நீரிழிவு நோயின் அறிகுறிகளை அடைகிறார்.
மகனின் ஊக்கத்துடன், நர்ஸ்ஸின் உதவியுடன் குடும்பம் தங்கள் செயல்பாடுகள் மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றம் செய்து, பாட்டியுடன் இணைந்து ஆரோக்கிய வாழ்க்கைக்காக திட்டமிடுகிறார்கள்.
இந்த திரைப்படம் பாரம்பரிய உணவுகளையும் சந்தையில் இருந்து வாங்க கூடிய ஆரோக்கியமான உணவுகளையும், தினமும் நடைபயிற்சி செய்வதையும் ஊக்குவிக்கிறது. மாற்றம் என்பது அடையாளம் காணப்பட்ட நோயாளியிடம் இருந்து மட்டுமல்ல, குடும்ப பழக்கவழக்க முறையில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.
கதையில் சித்தரிக்கப்பட்டுள்ள உடல் வகைகள், உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறைகளை தொடர்புபடுத்துவதன் மூலம் படத்தில் #trending #viralvideo #healthylifestyle உள்ள சூழ்நிலையுடன் பொது மக்களை இணைக்க உதவுவதே எங்கள் குறிக்கோள்.
இயற்கையான உணவுகளை உண்ணுங்கள், தினமும் நடைபயிற்சி செய்யுங்கள், சுறுசுறுப்பாக செயல்படுங்கள். நீங்களும் நீரிழிவில் இருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்!"