நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா ( அமீரகம், புஜைரா ) !

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா ( அமீரகம், புஜைரா ) !
    வரும் ஏப்ரல் 13ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை, புஜைரா மீடியா பார்க் கன்வென்ஷன் சென்டரில் மிக பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது.
    இசை முரசு நாகூர் E.M.ஹனிஃபா அவர்களது மகன் இசை முரசொலி' Dr. E.M.ஹனிஃபா நௌஷாத் அலி அவர்கள் மற்றும் 'அண்ணாத்த' புகழ் திரையிசை பின்னணி பாடகர் கீழக்கரை சம்சுதீன், திரையிசை பின்னணி பாடகி 'சூப்பர்' சிங்கர் புகழ் .ஃபரிதா, திரையிசை பின்னணி பாடகி மதுரைக்காரி சிந்து, இசையமைப்பாளர் சரவணன், சன் டிவி 'ராஜபார்வை' புகழ் ரேஷ்மா, அல்ஹாஜ்' தமிழ்மாமணி Dr. தேரிழந்தூர் தாஜுதீன் ஆகியோர் ஹனிஃபா அவர்களது பாடல்களை பாட உள்ளனர்.
    இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் அவர்களும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்களும் கலந்து கொள்கின்றனர் !
    இவர்களோடு உலக புகழ்பெற்ற அறிவிப்பாளர் B.H.அப்துல்ஹமீது அவர்களும் பல இசை பிரபலங்களும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளனர் !
    இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியை துபாயில் உள்ள மாஸ் ஈவெண்ட்ஸ் நிறுவனம் நடத்துகிறது.
    தா தா கடை ரெஸ்டாரண்ட் மற்றும் சிப்பி மஞ்ச் உணவகங்களின் நிறுவனர் மற்றும் மாஸ் ஈவெண்ட்ஸ் மேலாண்மை இயக்குனர் முருகேசன் அவர்களும், கிரியேட்டிவ் இயக்குனர் ஆர்ஜே நாகா அவர்களும் திட்டமிட்டு இந் நிகழ்வை வடிவமைத்துள்ளனர்.
    தினத் தந்தி நாளிதழ், புதுயுகம் தொலைகாட்சி, நான் மீடியா மற்றும் அமீரக வளையொலி AVO ஆகியோர் மீடியா அனுசரணை வழங்கியுள்ளனர்.
    அமீரகத்தில் உள்ள மியூசிக் இந்தியா துபாய், நூறு இசைக் கலைஞர்கள் வழங்கும் மெட்லி தனித்துவமாக அமைய உள்ளது.
    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பி.ஆர்.ஓ. S.செல்வரகு, ஐயா எம்.டி.இராமலிங்கம், மஹாவீர் சந்த் ஜெயின், A. லட்சுமணன், ராஜ் டிஜிட்டல் எஸ்.யுவராஜ் மற்றும் சுவராஜ் ஆகியோர் துபாய் செல்கின்றனர் !
    #motivationalspeech #taitaltv #besttamilspeech

КОМЕНТАРІ •