சுந்தரர் அருளிய திருமுறைப்பாடல்கள் | Episode : 11

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 18

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug Рік тому +1

    Iraivan arul

  • @ravic2159
    @ravic2159 Рік тому +1

    🙏🙏🙏சிவ சிவ ...🙏🙏🙏
    கீர்தனா
    இன்று உங்களை கண்டு கொண்டேன் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது
    வாழ்துக்கள்
    🙏🙏🙏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Рік тому +1

    ௐ நமசிவாய நமோ நம ௐ🙏🌺🙏🌺🙏🌺
    ஐயன் உமையாள் போற்றி🙏🌹போற்றி🙏🌹 போற்றி🙏🌹
    மிகவும் வெகு சிறப்பான் பதிகம் மகளே 🙏🌷🙏🌷🙏🌷
    வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க🌺🌺🌺
    Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto

  • @velmurugansomasundaram8508
    @velmurugansomasundaram8508 Рік тому +3

    அருமை!அருமை! சுந்தரர் பெருமான் அருளிய கடினமான இப்பதிகத்தை, நோய் தீர்க்கும் பதிகத்தை அற்புதமாகப் பாடி உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கீர்த்தனா வெங்கடேசன் அவர்களையும் ஒளிபரப்பிய பொதிகைத் தொலைக்காட்சிக்கும் நன்றியும் பாராட்டுகளும்!

  • @etherpost
    @etherpost Рік тому +2

    பாடல் வரிகள் தோன்றினால் சிறப்பு

  • @sekargs2890
    @sekargs2890 Рік тому +2

    🙏🙏🌺அருமை 🌺🌺

  • @packrisamy6705
    @packrisamy6705 Рік тому +3

    கீர்த்தனாவின் கீதங்கள் கீர்தனயாய்
    கிளரோளி பிழம்பாகி சுந்தரன் அருளோடு தேன்இனிய பாடல் கேட்டு
    மெய்மறந்து நின்றேனே

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Рік тому +4

    சுந்தரர் அருளிய நோய் நீக்கும் திருத்துருத்தி- திருவேள்விக்குடி தேவார பதிகம் உங்களது இனிய குரலில் அற்புதமாக ஒலிக்கிறது.. வாழ்த்துக்கள் கீர்த்தனாமா. வாத்திய இசை கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். பொதிகை தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி.

  • @dhakshanamoorthy.a687
    @dhakshanamoorthy.a687 Рік тому +5

    கூத்தாடி மகிழ்ந்தான் பரமன்🙏🧘‍♂️🙏
    குறைவில்லாது வாழ்க இறை அமுதே🙏🧘‍♂️🙏
    மெய்ஞான சுடர்விட்டும் 🙏🧘‍♂️🙏

  • @thanjiprakasam8535
    @thanjiprakasam8535 Рік тому +2

    Excellent

  • @senthilandavanp
    @senthilandavanp Рік тому +5

    மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
    வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
    அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்
    அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
    சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
    என்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை. 1
    கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்
    கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி
    மாடுமா கோங்கமே மருதமே பொருது
    மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி
    ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப்
    பழவினை உள்ளன பற்றறுத் தானை. 2
    கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார்
    கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப்
    புல்கியுந் தாழ்ந்தும் போந்து தவஞ்செய்யும்
    போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்
    செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத்
    தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வறுத் தானை. 3
    பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும்
    பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக்
    கறியுமா மிளகொடு கதலியும் உந்திக்
    கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய்
    எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை
    அருவினை உள்ளன ஆசறுத் தானை. 4
    பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும்
    பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி
    இழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டி
    எண்டிசை யோர்களும் ஆடவந் திங்கே
    சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானை
    உற்றநோய் இற்றையே உறவொழித் தானை. 5
    புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும்
    பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி
    அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி
    ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித்
    திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை
    இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை. 6
    வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும்
    வருடியும் வணக்கியும் மராமரம் பொருது
    கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
    காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்
    விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை
    உலகறி பழவினை அறவொழித் தானை. 7
    ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப்
    புள்ளினம் பலபடிந் தொண்கரை உகளக்
    காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
    கவரிமா மயிர்சுமந் தொண்பளிங் கிடறித்
    தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை
    அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானை. 8
    புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப்
    பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப
    இலங்குமார் முத்தினோ டினமணி இடறி
    இருகரைப் பெருமரம் பீழ்ந்துகொண் டெற்றிக்
    கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை
    மேலைநோய் இம்மையே வீடுவித் தானை. 9
    மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி
    மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற
    அங்கையான் கழலடி அன்றிமற் றறியான்
    அடியவர்க் கடியவன் தொழுவனா ரூரன்
    கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல்
    தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார்
    தவநெறி சென்றம ருலகம்ஆள் பவரே. 10

  • @V.T.DILLIBABU
    @V.T.DILLIBABU Рік тому +2

    🙏👍

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 Рік тому +2

    தமிழ் இசைச்செல்விஎனஅழைத்திடலாம்

  • @instathoughts8372
    @instathoughts8372 2 місяці тому +1

    Super

  • @murugesanc843
    @murugesanc843 Рік тому +1

    ❤️🙏🙏🙏