Pattoli veesi parakkattum - patriotic song

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2021
  • Wrote this song on 15th August, 75th Independence Day of India, tuned - sung and accompanied on the mrudangam by yours truly Erode Nagaraj.
    Dedicating this humble composition to “kappalottiya thamizhar” Shri Va. U. Chidhambaram Pillai (V.O.C.) on his 150th birth anniversary.
    பட்டொளி வீசிப் பறக்கட்டும்… கொடி
    பட்டொளி வீசிப் பறக்கட்டும்… இடி
    பட்டொழிந்து தீமைகள் விலக.. கொடி
    பட்டொளி வீசிப் பறக்கட்டும்…
    இட்ட நல்லுரத்தால் விதை தருவாகும்
    முட்டவரும் பகை முடிந்தே போகும்
    அட்ட தனங்களும் ஆத்ம குணங்களும்
    அனைவருமடைந்தே ஆனந்தமுற கொடி
    பட்டொளி வீசிப் பறக்கட்டும்
    வட்டமென்றுரைப்பார் வாழ்வதைப் பெரியோர்
    வாட்டமும் வேண்டாம் வாகை குவிந்திடும்
    சுட்டபொன் நகையாய் சுடர்விடும் நேசம்
    திட்டமும் இதுவே திறனுறும் தேசம்
    பட்டறிவுடன் படிப்பறிவுமிணைந்தே
    பாரினில் பாரதம் பாங்குற விளங்கும்
    பல்கலை வளரும் வல்லமை மிளிறும்
    நற்றவ முனிவர் நயந்தருளிடக் கொடி
    பட்டொளி வீசிப் பறக்கட்டும்
    (அஷ்ட ஐஸ்வர்யங்கள்: தனம், தான்யம், பசு, அரசு புத்திரர், தைரியம், வாகனம், சுற்றம்.
    ஆத்ம குணங்கள்: . தயை, ஷாந்தி, அநஸூயை, சௌசம், அநாயாஸம், மங்களம், அகார்ப்பண்யம், அஸ்ப்ருஹா கருணை, ஷாந்தி, பொறாமையின்மை, ஸுத்தம், சுலபம், ஆனந்தம், தர்ம சிந்தை, பற்றின்மை)

КОМЕНТАРІ •