ஜார்க்கண்ட்டில் பாஜவின் அரசியல் ஆட்டம் ஆரம்பம் Speculation over Champai Soren Joining with BJP

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • ஜார்க்கண்ட்டில் பாஜவின்
    அரசியல் ஆட்டம் ஆரம்பம்
    Speculation over Champai Soren Joining with BJP| Jharkhand Politics| Hemant Soren| JMM| BJP
    ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பிப்ரவரியில் நிலமோசடி வழக்கில் சிக்கியபோது பதவியை ராஜினாமா செய்தார். தமது ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவர் சம்பை சோரனை முதல்வர் பதவியில் அமர்த்திவிட்டு சிறைக்கு சென்றார்.
    சிபுசோரன் அவரை தொடர்ந்து மகன் ஹேமந்த் சோரன் என ஜேஎம்எம் ஆட்சியில் ஒரு குடும்பம் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், சம்பை சோரன் முதல்வர் ஆனது கட்சிக்குள் வரவேற்பையும், புகைச்சலையும் ஏற்படுத்தியது.
    சம்பை தலைமையிலான அரசு மக்கள் மனதில் நற்பெயர் எடுக்க துவங்கிய நிலையில், ஆறே மாதங்களில் ஜாமினில் வெளியே வந்தார் ஹேமந்த். சம்பையின் வளர்ச்சியை பிடிக்காத சக அமைச்சர்கள், சம்பைக்கு எதிராக அரசியல் செய்ய துவங்கினர்.
    ஹேமந்தை மீண்டும் முதல்வர் பொறுப்பேற்க வலியுறுத்தினர். சிறையில் இருந்து வெளியே வந்து ஒரு வாரத்திற்குள் சம்பையை பதவி விலக செய்துவிட்டு, மீண்டும் முதல்வர் ஆனார் ஹேமந்த்.
    முதல்வர் பதவியை பறித்தது சம்பைக்கு வேதனையை அளித்தது. தமது அதிருப்தியை அப்போதே அவர் சூசகமாக வெளிப்படுத்தினார். எனினும், ஹேமந்த் அதை கண்டுகொள்ளவில்லை.
    ஹேமந்த்- சம்பை இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக பனிப்போர் நிலவுகிறது. எனினும் இருவரும் வெளிப்படையாக அதை காட்டிக்கொள்ளவில்லை.
    இந்த ஆண்டு இறுதிக்குள் ஜார்க்கண்ட் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், சம்பை சோரன் எப்போது வேண்டுமானாலும் பாஜவுக்கு தாவலாம் என்ற தகவல் பரவுகிறது.
    ஆனால், அது எந்தளவுக்கு நம்பத்தகுந்தது என்று தெரியவில்லை என்று ஜார்க்கண்ட் பாஜ மேலிட பொறுப்பாளர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சொன்னார்.
    ஜார்க்கண்ட் அரசியலில் மிகப் பெரும் தலைவராக திகழ்பவர் சம்பை சோரன். கடந்த 5 ஆண்டு கால ஜேஎம்எம் கூட்டணி ஆட்சியில் சம்பை முதல்வராக இருந்த போதுதான் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என ஹிமந்தா கூறியிருக்கிறார்.
    மத்திய அமைச்சரும் ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பொறுப்பாளருமான சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் சமீபத்தில் நடந்த பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் கூட சம்பை சோரன் வருகை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
    ஜார்க்கண்ட் மாநில பாஜ தலைவர் தீபக் பிரகாஷ் கூறும்போது, சம்பை சோரன் முதல்வராக இருந்தபோது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவரது பதவி பறிக்கப்பட்டது துரதிஷ்டமானது
    சம்பை போன்ற முதுபெரும் தலைவருக்கு இப்படி நடந்தது அந்த கட்சிக்கு பின்னடைவைதான் ஏற்படுத்தும் என்றார்.#JharkhandPolitics #HemantSoren #JMM #BJP

КОМЕНТАРІ • 11

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q 23 дні тому +2

    BJP government than great 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 Jai shree Ram Jai BJP Jai BJP lovely 🌹 BJP

  • @peer2361
    @peer2361 23 дні тому

    மக்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் எதுவுமில்லை
    வரிப்பணம் அரசியல் நடத்த ....ஆட்சி பிடிக்க
    மக்களுக்கு
    ஜெய் ஸ்ரீராம்
    பாரத் மாதக்கீ ஜே...

  • @rangasamys6995
    @rangasamys6995 20 днів тому

    Adani money will do alllll

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER 24 дні тому

    Monki summa iru

  • @savarimuthumudiappan3849
    @savarimuthumudiappan3849 25 днів тому

    Fake news

  • @benitkaran4262
    @benitkaran4262 25 днів тому +1

    ஒரு பனி போரும் இல்லை
    சங்கி உன் விருப்பம் நடக்காது

    • @Music_zone125
      @Music_zone125 24 дні тому +3

      அடேய் அவன் சொல்லுகின்ற செய்தி உண்மைதான்.அவரு மூன்று MLA உடன் டெல்லிக்கு போயாச்சு😂😂😂

    • @narendramoorthy9616
      @narendramoorthy9616 23 дні тому +1

      பன் tv மட்டும் பார்த்து கொண்டு, டாய்லெட் பேப்பர் முரசொலி படிப்பவங்களுக்கு இது எல்லாம் தெரியாது