வெள்ளை பாறைப்பட்டி கிடைமாடு | மலை மாடு | கீதாரி வாழ்க்கை பயணம் 03 | Hello Madurai | Tv | Fm | Web

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • கீதாரிகளின் தேடல் பயணத்தில், அவர்களின் ஒவ்வொரு காயமும், அறாத வலியை எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது. எத்தனை துயரங்கள், எத்தனை தடங்கல்கள், எத்தனை தடைகள், பொருளாதாரம் எப்படி இருக்கின்றது என்பதை தாண்டி அவர்களுக்கான சுயம் நித்தமும் சுட்டு விழ்த்தப்படுகிறது என்னவோ உண்மைதான்.
    மாடு மேய்ப்பவர்கள் தானே என்ற ஏளனமான பார்வை இன்னும் அகலவில்லை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. கல்விச் சாலைகள் பெருகிய இந்த பாரினில்தான், மாடுகள் மேய்வதற்கும், மேய்ப்பவர்களுக்கும் இடம் இல்லாமல் போகிறது. நாட்டைப் பற்றி கவலைப் படாதவர்கள் ? நாட்டு மாடுகளைப் பற்றியா கவலை கொள்ளப் போகிறார்கள் ?
    மழை, வெயில் எதுவாக இருந்தாலும் குடும்பங்களை விட்டுவிட்டு, மாடுகளுடன் வாழ்ந்துவரும் கீதாரிகளை நாம் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர்களும் நம்மைப்போல் சக மனிதர்கள்தான் என்பதை உணர்ந்து அவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுங்கள். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் பெரும் உதவியாகும்.
    இந்த முறை திரு. இராமன் அவர்களை நாகமலைபுதுக் கோட்டை பகுதி வடிவேல்கரையில், வீடியோ எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. யாதவர் சமுதாயத்தை தாண்டி தான் ஒரு அம்பலக்காரர் என்றும், இருந்தபோதும், மூன்று தலைமுறைகளாக மாடு மேய்க்கும் தொழிலைத்தான் செய்து வருகின்றோம். யாதவர்கள் எங்களை ஒருபோதும் பிரித்துப் பார்த்ததில்லை, உடன் பிறந்த சகோதரர்களாகத்தான் பார்க்கிறார்கள், நானும் அப்படித்தான் என்று கூறிய பொழுது, சாதிகளைத் தாண்டிய அன்பு சாம்ராஜ்யம் கண்களில் தெரிந்தது.
    திரு. இராமன் அவர்களுக்கு பெரும் உற்சாகம் எங்களைக் கண்டதும் தொற்றிக் கொண்டுவிட்டது. நாட்டு பசுவின் மோர் குடிக்க கொடுத்தார்கள். அவ்வளவு ருசி. இதை, இழந்துவிட்டோமே என்ற பெரும் ஏக்கம் அந்த மோரை வற்றச் செய்யாமல் இல்லை. எல்லோருக்கும் எளிமையாக கிடைத்த உணவுப் பொருள் இன்று ஏதோ தேவர்களின் அமிர்தம் போல் ஆனதற்கு நானும் ஒரு காரணம் என்று எண்ணும்போது, தலை கவிழாமல் இல்லை.
    திரு. இராமன் தனது பயணம் குறித்து நிறைய பேசினார். அதில் கோவம் இல்லாமல் இல்லை. ஆயினும், தங்களுக்கு நேரும் வலிகளை எல்லாம் சிரித்துக் கொண்டே கூறினார். அவருக்கு மறைமாடுகள் மீது அவ்வளவு காதல். மீசைதான் கம்பீரமாக வைத்துள்ளார் தவிர, அவரது உள்ளம் ஒரு கன்றினைப்போன்றது.
    200 கிடைமாடுகள் வைத்துள்ளார். இதில் 50 சதவீதம் மலைமாடு எனும் மறைமாடு வைத்துள்ளார். அது குறித்து அனைத்து தகவல்களையும் நீங்கள் வீடியோவில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். கீதாரிகளின் வாழ்க்கை பயணம் எத்தனை கரடு முரடானது என்பது அவர்களின் பாதங்களின் வெடிப்புகள் மட்டுமே அறிந்த உண்மையாகும்.
    எங்களின் நோக்கம் எல்லாம், நாட்டு மாடுகள் எப்படி முக்கியமோ அதேபோல் கீதாரிகளும் முக்கியம். அவர்கள் காணாமல் போகும் பட்சத்தில் நம் நாட்டு மாடுகளும் அழிந்துபோகும். கீதாரிகள் தங்கள் வாழ்வில் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும். அவர்களுக்கு உரிய அங்கீகாரங்கள் கிடைக்க வேண்டும்.
    நாங்கள் படிக்கவில்லை என்று கூறும் அவர்களிடம் இருக்கும் ஆற்றல் நிச்சயமாக படித்த எவரிடமும் இல்லை. 200 மாடுகள் என்ன ? 2000 மாடுகள் இருந்தாலும், அதை சரியாக அடையாளம் கண்டு கொள்ளும் ஆற்றல் இங்கு படித்த எவரிடமும் இருப்பதில்லை. கணினி பெட்டிக்குள்ளும், செல்போனுக்குள்ளும் வாழும் பலருக்கும், கட்டாந்தரையில், நிதமும் மாடுகளுடன் வாழும் இவர்களின் குரல்கள் கேட்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
    இவர்கள்தான், நாட்டு மாடு வளர்ப்பவர்களின் கடைசி தலைமுறை என்று ஆகிவிடுவார்கள் என்ற நிலை மாற வேண்டும் என்றால், அரசு இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு, இவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுக்க முன் வர வேண்டும்.
    ஜல்லிக்கட்டை மீட்பது மட்டும் நமது வீரம் இல்லை. அதற்கு விதையான நாட்டு இன மாடுகளை மேய்க்கும் தொழிலை செய்து வரும் கீதாரிகளையும் நாம் மீட்க வேண்டும் என்பதை உணர்ந்தால் இவர்களின் நிலைமையும், தலைமுறையும் செழிக்கும்.
    மீண்டும் வேறு ஒரு கீதாரிகள் பயணத்தில் உங்களை சந்திக்கின்றேன்.
    நன்றிகள் ~~~
    ________________________________________________________
    ஹலோ மதுரை சேனல்
    உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
    Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. ( Whats app )
    _________________________________________________________
    மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
    💓 App Link: play.google.co....
    💓 Facebook : / maduraivideo
    💓web site : hellomaduraitv...
    💓web site : hellomadurai.in/
    💓web site : tamilvivasayam...
    💓 Telegrame Link: t.me/hellomadurai
    _________________________________________________________
    #கீதாரி #கிடைமாடு #மலைமாடு #ஜல்லிக்கட்டு #நாட்டுமாடு #கிடைமாடு #நாட்டுமாடு #ஜல்லிக்கட்டு #முல்லைநிலம் #ஆயர் #இடையர் #புலிக்குளம்காளை
    #கீதாரி #ஏறுதழுவுதல் #erudhu_vidum_vizhaa #எருது_விடும்_விழா
    #jallikattu_kaalai_challenge #cow #cows #farm #nature #cowsofinstagram #cattle #animals #farmlife #milk #calf #love #bull #photography #farming #animal #k #agro #dairy #farmer #kuh #cowstagram #naturephotography #agriculture #cowboy #vaca #moo #photooftheday #horse #art #bhfyp #indiabulls #hcl #tcs #india

КОМЕНТАРІ • 20