mazhai tharumo en megam

Поділитися
Вставка
  • Опубліковано 13 сер 2010
  • Here comes a soothing melody from the Movie Manitharil Iththanai Nirangala, where SPB leaves his foot prints through out the song. Differently Penned by Kannadasan and composed by the gifted musician Shyam, who maintained a very low profile inspite of his talents , this is one of the bench mark songs for romantic melodies of all time. With the scintillating humming , the versatile diva SP Shailaja marked the beginning of her career into Tamil filmdom.Listen to it once, and i bet you cannot resist listening to it time and again.
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @vadivelthiyagarajan7684
    @vadivelthiyagarajan7684 6 місяців тому +85

    2024 இந்த பாடல் கேட்பவர்கள் like podunga

  • @shabanamohamed4592
    @shabanamohamed4592 Рік тому +148

    இந்த பாடலை இப்போ யார் கேட்டுகொண்டிருக்கிர அனைவருக்கும் ஒரு 👍 போடுங்க 2023.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 роки тому +234

    காலையில் பள்ளிக்கு செல்லும் போது 8.30 க்கு ....இலங்கை வானொலியில் இது போன்ற பாடல்கள் கேட்கும்போது....பழைய சோறு, கிழிந்த சட்டை, ஓட்டை டவுஜர், அழுக்கு புத்தக பை, செருப்பு இல்லாத கால்களில் கால்நடை, .....கவலைகள் இல்லாத வாழ்க்கை.....ஆனந்தம் நெஞ்சில் சிறகடித்து பறக்கும்....

    • @rajarajan6018
      @rajarajan6018 3 роки тому +6

      இப்போது என்ன சார் பண்றீங்க?

    • @shanmugaraja6831
      @shanmugaraja6831 Рік тому +5

      அது தனி சுகம். இந்த ஹம்மிங் ரேடியோ வின் பின்னே என் கொடுத்து கொண்டேயிருப்பாள். இன்று அவள் இல்லை. கண்ணீர் மட்டுமே வருது.

    • @sadhandevarajan3181
      @sadhandevarajan3181 9 місяців тому +4

      நான் அதே கிழிந்த நிக்கருடன் பாடலை கேட்ட படி ஓடிக் கொண்டு இருக்கிறேன்...

    • @user-vz4mo3pd8e
      @user-vz4mo3pd8e 9 місяців тому

      SUPPER.sr.IAMAGE63

    • @lakshmiarun7578
      @lakshmiarun7578 8 місяців тому +5

      உண்மை எவ்வளவு இனிய நாட்கள் இன்று எல்லாம் இருந்தும் மனதில் ஒரு வெறுமை.

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 3 роки тому +1588

    2021ல் இந்த பாடலை கேட்டு மயங்கியவர்கள் யார் யாரோ லைக் பண்ணுங்க நன்பர்களே

  • @raprabaa
    @raprabaa 11 років тому +1882

    இந்த பாடலின் படமெல்லாம் சிறு வயதில் தெரியாது சினிமா செல்வது என்பது மிக ஒரு அறிய விஷயம் அதுவும் டூரிங் தியேட்டர் தான் மர்பி ரேடியோ மூலம் இலங்கை வானொலியில் தென்றலாக வரும் இந்த பாடல்கள் அர்த்தம் கூட தெரியாமல் பாடவைக்கும். காலையில் பள்ளி செல்லும்போது ரேடியோ பக்கத்தில் இருக்கும் விபூதியை நெற்றியில் வைத்துகொண்டு பாடலை பாடிகொண்டே பள்ளிக்கு கிளம்புவோம். என்ன ஒரு அருமையான நாட்கள் டிவி இல்லை மொபைல் இல்லை லேன்ட் லைன் இல்லை உடுத்த புது உடை இல்லை நல்ல உணவு இல்லை ஆனால் மனது முழுக்க மகிழ்ச்சி இருந்தது

    • @draventh1
      @draventh1 7 років тому +16

      Dharma true

    • @karunask7887
      @karunask7887 6 років тому +23

      Dharma true 100 percentage true

    • @KG-mx8ui
      @KG-mx8ui 6 років тому +30

      உண்மை

    • @ramalingamkrishnamoorthy3637
      @ramalingamkrishnamoorthy3637 6 років тому +50

      Dharma மனதை தொட்டுவிட்டீர்கள்

    • @duraisamy1204
      @duraisamy1204 6 років тому +108

      உங்கள் வரிகளை வாசித்தவுடன்
      கண்களில் அளவில்லாத
      ஆணந்த கண்ணீர் நன்றி

  • @MUTHUPANDI-og5pv
    @MUTHUPANDI-og5pv 3 роки тому +434

    ஐயோ... இப்படி ஓர் அற்புதக் குரலுக்கரிய என் அபிமான பாடகர் ,புன்னகை மன்னன், பண்பின் சிகரம், நம் மன வேதனையை தன் இதமான குரலால் வருடி போக்கிய இன்குரல் கடவுள் நம்மை விட்டு மறைந்து மீளாத் துயில் கொண்டு நம்மை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டுச் சென்றதே...இதயம் நொறுங்கிக் கிடக்கிறேன். பாலு ஐயா...நீங்கள் வாழ்ந்த இந்த உலகில் சம காலத்தவராய் நாங்கள் இருந்து ,உங்கள் அமுத குரலின் இனிமையை பருகும் வாய்ப்பளித்த அந்த இறைவனின் உங்கள் ஆத்மா இளைப்பாறட்டும். போய் வாருங்கள். எங்கள் காலம் உள்ளவரை உங்கள் பாடல்களே எங்கள் சுவாசமாய்...

  • @ranganathanb3493
    @ranganathanb3493 2 роки тому +178

    சொர்கத்துக்கே போனாலும் அங்கும் ஒலிக்கும் இதுபோன்ற பாடல்கள்..!

    • @shanthidhananjayan2952
      @shanthidhananjayan2952 Рік тому

      மிக அருமையாக சொன்னீர்

    • @sabitharavi8991
      @sabitharavi8991 Рік тому +1

      இந்த பாடலை கேட்பதே சொர்க்கானுபவம் தான்... 😊

  • @sridevis9087
    @sridevis9087 3 роки тому +256

    எவ்விதத்தில் பார்த்தாலும்
    எக்குறையும் சொல்லமுடியாத
    ஒரு அற்புதமான பாடல்

  • @malathimohan3059
    @malathimohan3059 4 роки тому +558

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திகட்டாத பாடல்

    • @simplesuniel
      @simplesuniel 3 роки тому +3

      S

    • @devigadina5935
      @devigadina5935 3 роки тому +2

      இனிய இசை.

    • @bossraaja1267
      @bossraaja1267 3 роки тому +2

      Adu taaaan unmai +engal spb sir kural &modulation no one no one no one super shiyam md

    • @RaviChandran-eh7ug
      @RaviChandran-eh7ug 3 роки тому +2

      ஹம்மிங்கைக் கேளுங்க....

    • @vjayank4715
      @vjayank4715 2 роки тому +2

      Yes always sweet hart sreedevi

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 3 роки тому +63

    அப்போதெல்லாம் விழுந்து விழுந்து படித்தாலும் தலைக்குள் போகாது..ஆனால்,இது போன்ற இனிமையான பாடல்களை இரண்டு மூன்று முறை கேட்டால் மனதுக்குள் இறங்கி ஆழமாக பதிந்தது....என்னவொரு இன்பமயமான தருணங்கள்... வீட்டு கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து தண்ணீர் தொட்டியில் நினறத்துக் கொண்டு, செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டு,மாடு,கோழிகளை பார்த்து கொண்டு,வீட்டு நாயுடன் தோட்டத்தில் விளையாடிக்கொண்டு,சகோதர சகோதரிகளுடன் விளையாடிக்கொண்டு...அம்மா பண்ணிய ராகி புட்டை சாப்பிட்டுக்கொண்டு இது மாதிரி பாடல்களை கேட்டு அந்த காலங்கள்...அப்பா சைக்கிள் பெல் சவுண்ட் கேட்டவுடன் எல்லா வாலையும் சுருட்டிக்கொண்டு படித்த பாடங்களையே சத்தம் போட்டு படிக்க அப்பா பெருமையாக நகர, அம்மா ஒரு முறைப்பை அப்பாவுக்கு தெரியாமல் வெளிப்படுத்த... அதெல்லாம் ஒரு உன்னத உணர்வு கலந்த காலம்...திரும்ப வர வாய்ப்பேயில்லை....
    இப்போது எல்லாம் போய்..அதே சகோதர- சகோதரி உறவுகள் அந்நியமாகி விலகி போவதும் ஏனோ????

    • @dr.thirumenisundharam3549
      @dr.thirumenisundharam3549 3 роки тому +2

      😍😍😍😍

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Рік тому +3

      unmai

    • @kanimanmadhan
      @kanimanmadhan Рік тому +6

      அதெல்லாம் ஒரு உன்னத உணர்வு கலந்த காலம்...திரும்ப வர வாய்ப்பேயில்லை....

    • @nithishram5389
      @nithishram5389 10 місяців тому +7

      தங்களது பதிவு மனதை மிகவும் பாதித்தது

    • @sriskandarasasomasundaram5464
      @sriskandarasasomasundaram5464 7 місяців тому +8

      தங்கள் உணர்வு எங்கள் உணர்வை வெளிப்படுத்துகிறதே. எவ்வளவு உண்மையான பதிவு.ஏன் இப்படி காலம் மாறியதோ தெரியல.
      அக்காலம் திரும்பி வராதா என ஏங்குகிறேன்.

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 3 роки тому +433

    நான் அதிகமாக திரும்ப திரும்ப கேட்ட பாடல்களில் இந்த பாடல் தான் என் மனதை விட்டு என்றும் நீங்காது

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq 9 місяців тому +31

    இப்படியான பாடல்களை கேட்கும் போது மனதிற்கு ஒருஅமைதி

  • @abithasornanathan2959
    @abithasornanathan2959 2 роки тому +152

    மனதை வருடும் இதமான பாடல் 👌👌 🌹 SPB sir is living with us

  • @PriyanPriyan-zm8wl
    @PriyanPriyan-zm8wl 7 років тому +333

    இலங்கை வானொலி நிலையம்.
    ஒரு ரசனை உணர்வு கொண்ட பல ஒளிபரப்பால்.பலர் மனங்களில் நீங்காத இடத்தில்..

    • @sugunadevi3773
      @sugunadevi3773 7 років тому +3

      Priyan2012 Priyan 2012 ilangai vaanoli il endral 5.30 morn to night 7 varai dhevaamirdham pol iniya paadal gal kottum.ippodhu????

    • @PriyanPriyan-zm8wl
      @PriyanPriyan-zm8wl 7 років тому +7

      Suguna Devi இப்போது நாம்
      நினைத்த நேரத்தில் எந்த
      விரும்பிய ஒரு
      பாடல் கேட்க முடியும்...ஆனால்
      வானொலியில்.
      கேட்பது போல ஒரு ரசனை இல்லையே......

    • @sugunadevi3773
      @sugunadevi3773 7 років тому +1

      Priyan2012 Priyan 2012 yes

    • @jyothinair7512
      @jyothinair7512 5 років тому +2

      Nan school pogum vayadhil vaziyil morning 9.30am inndha pattugallai shilon radiovil kadai veedhigalil muzhangha kelpen. Avvaluvu sandhosham.

    • @binathangavelu3705
      @binathangavelu3705 5 років тому

      Priyan2012 Priyan 2012

  • @arockiyadass869
    @arockiyadass869 3 роки тому +131

    இந்தப் பாடலை ஒருமுறை கேட்டால் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அதோடு மட்டுமல்லாமல் இந்த பாடலை வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும்

  • @devadeivendirangmc4943
    @devadeivendirangmc4943 2 роки тому +138

    பழைய நினைவுகள், மனதை பாதிக்குது 👌👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @acharyaanalytics2818
    @acharyaanalytics2818 4 роки тому +117

    ஷியாம் அவர்களின் இசை மிக மிக தனித்துவமானது. வாழ்வில் என்றும் மறக்க இயலாத இசைக்கோர்வை . வெகு நாட்களாக இளையராஜா என்றே நினைத்து கொண்டிருந்தேன்

    • @shrovan4128
      @shrovan4128 3 роки тому +1

      Aamaa sir naanum raja nu tha nenaichitu irundhan..

    • @graharaj5281
      @graharaj5281 3 роки тому +3

      Raja than ...shyam raja sir inspiration la potathu ..ஏதோ நினைவுகள் பாட்டு கேட்டு பாருங்க

    • @palanivelsrinivasan251
      @palanivelsrinivasan251 3 роки тому

      94299688998969806998799797989808088979877470499889946977908094383968609482787970597029398989707985989985949668887977996942899947979797999640087484899980689709996970998888878877698932789624800068659288888882888987967999999864898848683837007899999949978648000299798798879883898907969629978796749329949898978976284980796649997969986828378393982859888498999477988208928027989926989629093499999995299686690808407979484086969969499679980809797698079994479708986990899889696979697748438832998997948478948959979805039468972497049648097896899879979794946360944602482689698026979889878859797494799409670470784829949698989893992448648596444667966969899979900840707969892789949949689798799889964848067959979856974698984807970809987699909794978487099698999977769493992999499979994397o8888293948999976477780979997048609778846088699698999922897988967994998088494966766496969899489869332920874699663888889846879748999969788779979092947998549896979486888o79974607884234786826649792969279877989828892897970920857098499424987897948709989898399969479694939999296949298866979850988993709978982498979924939969686969659799836924995296943296497499982854849899948346696498888998839466898294969997994806799997088629250829602797040949880984372707943008899889889964387o469489608483964846669748879746052989886444849747972877979766999927886047996777706064989949889798933463966764994769498398979979979778963788996838429968297499979847493666979278698972974966679694729894686984985799899996976968968689797926292264296866949866926989726598i38828797799847899879479697998969793989247594984877989699275924892776459992694689872949869682979796968882989879799747979529427997727482664799262393879493496389749998989666977679797998667997497928998i7292993897999899364826957988489277879824899898968585678592649799928629496477722848776496897988928258896674768797976o9452889889928696998686686977397864626646949969388967726279896794898326947965969o296468o8668626797966y77649728667697979995o2624476922664962966369996696997264o946496969925857346267756679696677762738609695o764999976645899692v6v8b8269u9526269669779462994654659432o726o74296227586969997625995297962965625964669664947669952586399685498o88864689696696o4997476979969496989676i666974286895926672068468595o5257p299467646868946696864o4966857479699655749662946946996499962949699659246696620766969525o7266966t469949699686892649o96968687b2746o686989y9686256o969i066569272
      92549669v9422929m9964v79479259572749929674v6497929296962656ggvv675826996i g2727564o6452409446966
      5969966996994259272996964r9
      999599789969646946649934640642469776427t9497269v264 794273 2vv72
      4996986964g649644
      7v9v6989b600v 94937283uv9464vy49vvv6v64y4y4
      69966969296ro629999497
      9696496
      997
      47
      7
      469624469497

    • @sumathisaravanakumar5221
      @sumathisaravanakumar5221 3 роки тому

      😊

    • @karthik5901
      @karthik5901 11 місяців тому +2

      ​@@graharaj5281mazhai tharumo megam-1978
      Etho ninaivugal-1979
      Therincha sollanum summa raja raja nu

  • @maheshdavaraj9395
    @maheshdavaraj9395 2 роки тому +51

    👍🙏 இந்தப் பாடலை கேட்கும் பொழுது என்னை அறியாமல் என் கண்ணில் நீர் வடியும் 🙏🎉

  • @parthipanayyalusamy5975
    @parthipanayyalusamy5975 3 роки тому +74

    மயிலிறகால் வருடிய சிலிர்ப்பான இனிய நினைவுகள். அரை டவுசரில் ரசித்துக் கேட்டது நாற்பது வருடங்கள் கழித்தும் இன்றும் சலிக்காத அதே இனிமை.மனதை குதூகலமாக்குகிறது.

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 5 років тому +478

    இதயம் பலவீனமானவர்கள்
    இந்த பாடலை கேளுங்க
    இதயத்துக்கு இதை விட
    மருந்தில்லை...

  • @karthikeyankarthik942
    @karthikeyankarthik942 3 роки тому +66

    என் மனதைக் கொள்ளையடித்த பாடல். திரு.ஷ்யாம் அவர்களை வணங்குகிறேன்

  • @appaswamyr393
    @appaswamyr393 5 місяців тому +10

    இந்த பாடலில் வரும் ஹம்மிங் இந்த பாடலின் இனிமையை
    பல மடங்கு கூட்டுகிறது!

  • @babumohan4549
    @babumohan4549 3 роки тому +78

    இசை அரசன் SPB புகழ் வாழும் உலகம் உள்ளவரை 😭😭😭🙏🙏🙏

  • @kumarthangavel6106
    @kumarthangavel6106 2 роки тому +101

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை இந்த பாடல்
    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq Рік тому +20

    இந்த பாடலின் குரலில் பயங்கர வசீகர தன்மை உள்ளது 🎉🎉

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 2 роки тому +55

    40 ஆண்டுகள் கழித்து இப்பொழுது கேட்கும் போது அன்று இருந்த உடன் பிறப்புஅன்று இருந்த வீடு எதுவும் இல்லை நினைவுமட்டுமே கண்ணீரில் ....

  • @vmathavan8436
    @vmathavan8436 3 роки тому +45

    சிறுவயதில் வானொலியில் இப்பாடலை கேட்கும்போது சாப்பிடுவதை தவிர்த்து ரேடியோவின் அருகே ஓடி ரசித்து கேட்பேன் மலரும் நினைவுகள்.......

  • @p.shanmugam6605
    @p.shanmugam6605 2 роки тому +13

    இந்த பாடலை கேட்க்கும் போது என் மனம் எஸ் பி பி சார் சமாதியில் கதரி அழ வேண்டும் என்று துடிக்கிறது. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ganeshc6937
    @ganeshc6937 5 років тому +27

    இன்றும் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். காலத்தை வென்ற பாடலில் இதுவும் ஒன்று. அருமையான குறள். அருமையான இசை.

  • @sellijharasu5722
    @sellijharasu5722 6 років тому +216

    என்னை மறந்து தேடுகிறேன்! எனக்கே புரியவில்லை நான் தரையில் நிற்பதாக!! மனதிற்கு எவ்வளவு அமைதி தருகிறது இந்த ஆனந்தக் காணம்.

  • @thirumoorthyazhwar1330
    @thirumoorthyazhwar1330 4 роки тому +124

    பாடலை பார்த்துக்கொண்டே கேட்டாலும் சுகம் ,கண்களை மூடி கேட்டாலும் இதம் , எப்படி சொல்வது என் மனதில் இந்த பாடல் பசுமரத்தாணியாய் பதிந்துவிட்டது, இந்த பாடலில் பணிபுரிந்தவர்கள் அனைவருக்கும் நன்றி,

    • @saravanandriver8260
      @saravanandriver8260 3 роки тому +3

      அத்தனை ரசனையாக இந்த பாடலில் உங்களுக்கு

    • @rukmanirukmani4741
      @rukmanirukmani4741 Рік тому +1

      Very nice song lovely ❤ song

  • @hamdhoonrefaideen5418
    @hamdhoonrefaideen5418 4 роки тому +88

    எல்லாமே அழகு இதில். ஸ்ரீதேவியின் அழகைத்தான் பாருங்களேன்.

  • @udayanilaads119
    @udayanilaads119 11 років тому +210

    இந்த SPB குரலும் பாடலும் தான் என் மனதை காதல் செய்ய தூண்டியது

    • @balajic1467
      @balajic1467 3 роки тому +5

      Crores of peoples saying the same.
      Good sir.

    • @kamrankhan-lj1ng
      @kamrankhan-lj1ng 2 роки тому +3

      And then there were hundreds and hundreds more like this or even better by SP, the indomitable during the 70s and 80s!

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 7 років тому +350

    என்ன ஒரு பாடல் கேட்க கேட்க தெகட்டவில்லையே,சொக்கி நிற்கிறேன்,கள்ளுண்ட போதையில் மயங்கிவிட்டேன்!

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 3 роки тому +23

    என் கண்களிலும் நினைவிலும் S.P.B.என்கண் முன் வந்து நிற்கிறார் இந்த பாடலை கேட்கும் போது

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s 2 місяці тому +6

    இதுபோதை தரும்..பாடல்... மழை நாட்களில் அழகான...பெண்களை..குடையில்..பார்த்து...கொண்டே..கேட்பது...ஆனந்தம்

    • @muthuabi3137
      @muthuabi3137 Місяць тому

      🎉🎉 zungal . Rasigan . K. M. R. Madurai

  • @newprabhathelectronics7756
    @newprabhathelectronics7756 Рік тому +8

    தற்போது இரண்டு நடிகர்களும் இல்லை ஆனாலும் பாடல் எழுத்தாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இன்று கூட இனிக்கிறது பாடல்

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 2 роки тому +7

    இந்த பாடலை படத்தில் கமல் தான் பாடுவார் என்று ரொம்ப நாளாக நினைத்தேன்

  • @jaisona1593
    @jaisona1593 4 роки тому +28

    சுகமான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத திகட்டாத பாடல் Lovely song 💞

  • @moorthyc9573
    @moorthyc9573 3 роки тому +23

    மனதில் எவ்விதமான வலி இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் போதும்.

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 9 років тому +247

    ஆயிரம் முறை கேட்டுவிட்டேன் என்னால் உறங்கமுடிவதில்லை

  • @GaneshKumar-rt2bl
    @GaneshKumar-rt2bl 5 років тому +246

    வருடங்கள் பல கடந்தாலும் என்றும் மனதை வருடும் .பாடல்......

  • @sudhakarsudhakar6313
    @sudhakarsudhakar6313 3 місяці тому +5

    ஷ்யாம் ஒரு தமிழர், ஆனால் அவர் மலையாள சீனி உலகில் மிக பிரபலமானவர்

    • @RaghuPrema-zw2pi
      @RaghuPrema-zw2pi 2 дні тому

      இவரு முரலிமோகன்.தெலுகு ஹீரோ

  • @srinuvasan2120
    @srinuvasan2120 3 роки тому +36

    நான் திரைக்கதை அல்லது சில காட்சிகளை எழுதும்போது ஏற்படும் மனஅழுத்தத்தை சரி செய்ய இந்த மாதிரி பாடல்களை கேட்கிறேன்...

  • @ganapathyjayaseelan
    @ganapathyjayaseelan 7 років тому +265

    தமிழிசையில் புதிய ஒலிகளை அறிமுகம் செய்த முன்னோடி இசையமைப்பாளர் ஷ்யாம். தமிழ்த்திரை உலகம் கண்டுகொள்ளாத மேதைகளில் அவரும் ஒருவர். அவருடைய அசாத்தியமான கற்பனைவளமும் இசை ஞானமும் தமிழர்களுக்கு மிகக்குறைவான அளவே கிடைத்தது. ஏ.ஆர்.ரகுமானுக்கு முன்னோடி ஷ்யாம் என்று அறுதியிட்டு சொல்லலாம். தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே தனது அபாரமான இசையறிவால் நவீன ஒலியமைப்புடன் கூடிய இசையை நமக்கு அளித்தவர் ஷ்யாம்.

    • @srinivasanr487
      @srinivasanr487 7 років тому +1

      ganapathy jayaseelan

    • @jeff_jags3335
      @jeff_jags3335 7 років тому +4

      ganapathy jayaseelan Do you know other compositions of Music Director Shyam.

    • @seenivasanseeni7604
      @seenivasanseeni7604 6 років тому +2

      DOUBLE O.K.

    • @vmbharathiraja
      @vmbharathiraja 6 років тому +5

      Jagadeesh Kumar
      I think galeer galeer tamil song ...

    • @vmbharathiraja
      @vmbharathiraja 6 років тому +1

      Jagadeesh Kumar . I THINK galeer galeer tamil song ....

  • @subhabarathy4262
    @subhabarathy4262 3 роки тому +34

    Superb melody. Meaningful lyrics by Kaviyarasar Kannadasan, good music by Shyam, excellent rendition by SPB sir and soothing humming by S. P. Shylaja,young sridevi + Murali mohan pair.. all very pleasant.

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 2 роки тому +18

    🙏 எஸ் பி பாலசுப்பிரமணியம் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்கு கிடைத்த பாக்கியம் 🙏

  • @lrelangovan8924
    @lrelangovan8924 2 роки тому +27

    எங்கள் வேலூரை பூர்வீகமாக கொண்ட இசை அமைப்பாளர் ஷியாம் அவர்களின் முத்திரை பதித்த பாடல்களில் ஓன்று."ஆனந்த தாகம்..." மற்றொன்று.நிறைய மலையாளப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

    • @MaheshWaran-f1z
      @MaheshWaran-f1z 19 днів тому

      Galeer ,Galeer ..kaalam thannal indru munneruthu ,song beutiful.

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 7 років тому +122

    ஆஹா தேன் வந்து பாயுதே என் காதினிலே! மனதை மயக்கும் ஹம்மிங்!!

  • @nsubramanian1
    @nsubramanian1 4 роки тому +16

    அருமையான பாடல் வரிகள்...
    இனிமையான குரலோடு பாடல்...
    மிதமான, காதை கிழிக்காத ரம்மியமான இசை...
    பசுமையான இடங்களில் எடுக்க பட்ட காட்சிகள்...
    எல்லாவற்றுக்கும் மேலாக spb அவர்களின் குரலும்...
    திரு. ஷ்யாம் அவர்களின் இசையும்...
    அழகான தேவதை தேவியும்...
    இளம் பிராயத்தில் இது போன்ற பாடல் வரிகள், அச்சிட்டு பாட்டு புத்தகமாக பெட்டி கடைகளில் கிடைக்கும்...
    பாடப்பத்தகத்தை மனப்பாடம் செய்கிறோமோ இல்லையோ, இந்த மாதிரி பாடல்களை மனப்பாடம் செய்து, நண்பர்களிடம் பாடி, பாடி காண்பித்து,...
    என்ன ஒரு இனிமையான நாட்கள்....
    நினைக்க, நினைக்க கண்களில் கண்ணீர்...
    அந்த காலம் திரும்பாது என்று தெரிந்தாலும், மனதில் ஒரு பேராசை....
    1980 க்கு திரும்ப.....
    திருநெல்வேலி, பாளையங்கோட்டை சாலைகளில், எந்த கவலையும் இல்லாமல் ஓடித்திரிந்த அந்த காலம், இந்த ஐம்பது வயதிலும்....
    நான் நானாக இல்லை.....
    அன்புடன் சுப்பிரமணியன்...

  • @viralmedia8904
    @viralmedia8904 4 роки тому +80

    Shailaja's "aah hahaaannn " humming is so haunting. Loving it.

  • @anbalagananba7339
    @anbalagananba7339 4 роки тому +60

    மழை தருமோ என் மேகம்
    மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
    தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி
    தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன்வண்டே.....
    ஆ: மழை தருமோ என் மேகம்
    மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
    தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி
    தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன்வண்டே.....
    ஆ: தேனிருக்கும் வண்ண மலர் நேராடுது
    தேனீயில் ஒன்று இங்கு போராடுது,
    தேனிருக்கும் வண்ண மலர் நேராடுது
    தேனீயில் ஒன்று இங்கு போராடுது,
    அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம்
    தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்
    தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்
    தளிர்மேனி அன்னப்பேடு எண்ணம் மாறுமா.....
    ஆ: மழை தருமோ என் மேகம்
    மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
    தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி
    தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன்வண்டே.....
    ஆ: கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்
    காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்,
    கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்
    காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்,
    தேனியில் ஒன்று இங்கு போராடுது,
    அழைக்கின்ற கண்கள் செய்யும் கலை உள்ளம் இங்கே.
    நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே,
    பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா.....
    ஆ: மழை தருமோ என் மேகம்
    மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
    தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி
    தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன்வண்டே.....
    Unknown at 10:27

    • @senthilkumaran3127
      @senthilkumaran3127 Рік тому

      Manand

    • @Manthanaiyaan
      @Manthanaiyaan Рік тому

      நன்றி

    • @krishanamorthi1508
      @krishanamorthi1508 Рік тому +1

      Mr.Anblagan anba sir your really great sir.l will so proud of you.intha mathri Ella song ku Tamil edit potungal sir pls

    • @jndiram6998
      @jndiram6998 2 місяці тому

      Always I Like This Song Very nice.

  • @arunachalamsavithiri158
    @arunachalamsavithiri158 6 років тому +72

    எத்தனை முறை கேட்டாலும் மனதை விட்டு மறையாத என் விருப்பப் பாடல்

  • @iswariyamiswariyam4390
    @iswariyamiswariyam4390 7 років тому +485

    இந்த மாதிரி பாடல்கள் இனி எக்காலத்திலும் வர வாய்ப்பு இல்லை.

  • @krishmohan6353
    @krishmohan6353 5 років тому +87

    என்ன அழகு என்ன அழகு ஸ்ரீதேவி😍😍

    • @chetenacr3656
      @chetenacr3656 4 роки тому +2

      Yes true.

    • @manmathan1194
      @manmathan1194 2 роки тому

      ஸ்ரீதேவியின் முளை அழகும் குண்டி அழகும் சூப்பர்

  • @meenakumar8861
    @meenakumar8861 2 роки тому +43

    காலச்சக்கரத்தில் ஏற்றி சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் உணர்வு.....😇😇😇

  • @VijayaKumari-id2cm
    @VijayaKumari-id2cm 5 років тому +105

    "வருமோ அந்த 80'கள்.....??
    கண்களை முடிக்கொண்டு பள்ளி பருவம்,நன்பா்களின் கைகளை பிடித்துக் கொண்டு ,காற்றில் மிதப்பது போல் உணா்வு..." Just listening this melodious song...
    Tear is wetting my eyelids, those happiest days have gone with my school , college and play mates.

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 4 роки тому +12

    அருமையான பாடல். எழுபதுகளில் இறுதியில் இந்த பாடல் சிலோன் ரேடியோவில் தினமும் கேட்கலாம். சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இந்த இன்பத்தை கோடி கொடுத்தாலும் தர இயலாது.

  • @saravanangangadharan9619
    @saravanangangadharan9619 2 роки тому +33

    என் காதல் தோல்வியின் போது இந்த பாடல் என்னை ஏங்க வைத்தது .... 🙏

  • @sahayajubileemary213
    @sahayajubileemary213 4 роки тому +149

    இதுதான் ஸ்ரீதேவி மும்பையில் இறந்த்தது ஸ்ரீதேவி அல்ல.

    • @ramasamybalachandran3212
      @ramasamybalachandran3212 3 роки тому +6

      It is true

    • @rameshkrishnan3599
      @rameshkrishnan3599 3 роки тому +9

      ஆமாம்... மும்பையில்​ வாழ்ந்த பொழுது அவர் முகம் இது போன்று இல்லை

    • @keeran9280
      @keeran9280 3 роки тому +9

      படைத்தவனுக்கு தெரியும் எந்த முகத்துக்கு எப்படி மூக்கு இருக்கவேண்டும் என்று. அவனுக்கு தெரியாதென்று நினைத்து நம் விருப்பப்படி மூக்கை செதுக்கினால் இப்படித்தான் கண்றாவியாகி விடும்.

    • @rajarajan6018
      @rajarajan6018 3 роки тому +3

      @@keeran9280 true sir

    • @mutharasus9689
      @mutharasus9689 3 роки тому +1

      Thoodevi iranthathu

  • @J.VidyaSagar
    @J.VidyaSagar 6 років тому +208

    Do you know what was the best part of the 70s was ?
    The answer, will surprise you. The lack of TV. Yes.
    Because you could only hear a song regularly on Radio, you concentrated on the lyrics, the voice, the tune and the humming. Most people could sing many stanzas of a hit song from memory. And even after 40 years or more, remained in memory.

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 5 років тому

      OK sir why we hearing again and again now only due song quality

    • @jyothinair7512
      @jyothinair7512 5 років тому +16

      Yes sir. Ennakhu endha mathri 70's and 80's songs kelkum pothu azhugai varughirathu. Bz inni ethanai varudam kelka mudiyum. After det ini endha janmam. Indha kalathe children's don't like des songs.

    • @selvanselliah1514
      @selvanselliah1514 5 років тому

      Well said

    • @palaniappanr.s2248
      @palaniappanr.s2248 5 років тому +1

      VIDYA SAGAR

    • @vsridharvenkatraman4126
      @vsridharvenkatraman4126 5 років тому +1

      @@jyothinair7512 correct,the same I felt

  • @sshankar370
    @sshankar370 9 років тому +139

    அண்ணனும் தங்கையும் என்ன அருமையாக பாடி இருகிறார்கள்.மறக்க முடியாத பாடல்.சைலஜாவின் ஹம்மிங் ஆஹா ஓஹோ .
    அருமையான பாடல் .கண்டிப்பாக இது போல பாடல்கள் ஒலிக்க போவது இல்லை மீண்டும்.80 களின் தூத்துக்குடி சாலைகளின் நினைவலைகள் இலங்கை வானொலியின் தமிழ் சேவை ஒளிபரப்புடன். பசுமையான 80 களின் நினைவுகள்

  • @vadhavalliveni4835
    @vadhavalliveni4835 4 роки тому +24

    கோவிலுக்குள் தெய்வமகள் குடியேறினால் காதலுக்குள் என்று அவள்தான் படியேறுவாள் அழைக்கின்ற கண்கள் சொல்லும் ஆனந்த கோலம் கலை வன்னம் இங்கே சிலை வன்னம் எங்கே நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா.....

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 2 роки тому +18

    40 yrs old song. Today hearing, it seems so sweet. God SPB & sailaja mam had sung very well.
    Nowadays, people's "rasanai " changed

  • @raprabaa
    @raprabaa 10 років тому +260

    மூணாப்பு படிக்கும்போது காலில் செருப்பு இல்லாமால் பள்ளிக்கு நடந்தே செல்லும்போது ஆனந்தமாக பாடிக்கொண்டு செல்லும்போது வரும் பாட்டு. . மனித வாழ்க்கை முடிவதற்குள் பலவகையான வாழ்க்கை முறைகளை கற்று கொடுத்து விடுகிறது. மிகவும் விசித்திரமானது மனிதனின் அனுபவ வாழ்க்கை

  • @annenilanythirukumar419
    @annenilanythirukumar419 7 років тому +175

    ஆஆஆ அஆஆகாஹா...
    மழை தருமோ... என் மேகம்
    மயங்குதம்மா என் உள் யாவும்
    தோகைக்கு தூதுவன் யாரோ...
    தோள் தொட்ட தென்றலடி
    தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன.... பொன்வண்டே.... 2
    ஆஹா.... ஹா..... ஓஹோ...... ஹூ......ம்ம்மம்ஹு...... ம்ம்ம்ம்....
    தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது
    தேனீயில் ஒன்று இங்கு போராடுது.... 2
    அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்த கோலம்
    தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம- 2
    தளிர்மேனி அன்னப்பேடு எண்ணம் மாறுமா......
    மழை தருமோ... என் மேகம்
    மயங்குதம்மா என் உள் யாவும்
    தோகைக்கு தூதுவன் யாரோ...
    தோள் தொட்ட தென்றலடி
    தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன.... பொன்வண்டே....
    கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்
    காதலுக்குள் என்று அவள் படி ஏறுவாள் 2
    தேனீயில் ஒன்று இங்கு போராடுது....
    அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்த கோலம்
    அலைவண்ணம் அங்கே களை உள்ளம் இங்கே....
    நிலை தன்னை சொல்ல.... தூதுவன் எங்கே.....
    பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா.....
    மழை தருமோ... என் மேகம்
    மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
    தோகைக்கு தூதுவன் யாரோ...
    தோள் தொட்ட தென்றலடி
    தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன.... பொன்வண்டே....
    ஆஹா...ஹா..... ம்ம்ஹூ..... ம்ம்ம்ம்

  • @muralidharanar9505
    @muralidharanar9505 4 роки тому +15

    கணத்த இதயத்திற்கு மருந்து ALWAYS GREAT SPB SIR

  • @pauldurai879
    @pauldurai879 2 роки тому +3

    இனிமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.சைலஜா அவர்கள் முதன் முதலில் திரைப்படத்திற்காக ஒலித்த குரல்.இசை ஷியாம்.நன்றி.

  • @Thambimama
    @Thambimama 9 років тому +373

    திரைப்படம் : மனிதரில் இத்தனை நிறங்களா? - 1978;
    இசை : ஷ்யாம்;
    பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் & S.P.சைலஜா;
    நடிகர்கள் : ஸ்ரீதேவி,முரளி மோகன்.

    • @senjivenkatesan98
      @senjivenkatesan98 7 років тому +9

      thanks for your information always!

    • @goodday5706
      @goodday5706 7 років тому +3

      great.... thanks..

    • @mohanarumugam2962
      @mohanarumugam2962 7 років тому +5

      Kavignar yaar theriyumo.....clever use of my theninum iniya thaai mozhi. Sample is "annapedu"... Wow.

    • @thomasalvaedison7183
      @thomasalvaedison7183 6 років тому +3

      SUPER SONG

    • @priyams1805
      @priyams1805 6 років тому +6

      Kamal hasan, sathya priya, Manorama.

  • @ShivaKumar-oq9yt
    @ShivaKumar-oq9yt 6 років тому +12

    இனிய இசை. மனதை மயக்கும் குரல். இதயத்தை தொட்ட இன்னொரு SPB song.

  • @KalaiArasi-u1r
    @KalaiArasi-u1r 9 годин тому

    Na 2kid than enga amma old songs ah keppanga apdiye enakkum palagiruchu.. 70s, 80s songs lam romba pudikkum... Clg la frdsla kindal pannuvanga.. na athellam kandukka maatten😊

  • @sridharkarup8334
    @sridharkarup8334 2 роки тому +27

    Even today 7.7.2022 , listening and enjoying this amazing song... Lovely 💗

  • @babiselladurai2872
    @babiselladurai2872 7 років тому +157

    ஆயிரம் முறை கேட்டுவிட்டேன் என்னால் உறங்கமுடிவதில்லை.
    ஆஹா தேன் வந்து பாயுதே என் காதினிலே! மனதை மயக்கும் ஹம்மிங்!
    இசை : ஷ்யாம்;
    பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் & S.P.சைலஜா

    • @Browny_24
      @Browny_24 7 років тому +5

      pls come to my chat room ..

    • @sakthis4780
      @sakthis4780 7 років тому

      sema anna unmaiyana lyrics super

    • @aarthisuresh9809
      @aarthisuresh9809 6 років тому

      aarthi enterprises

    • @cstroll6320
      @cstroll6320 6 років тому

      Nilaa penne hi

    • @helpingmindindian1244
      @helpingmindindian1244 6 років тому

      Listen to this song 1 Lac times, you will never get bored. PPN - echrway.blogspot.in/

  • @antonyraj1963
    @antonyraj1963 3 роки тому +9

    தந்தையின் அரவணைப்பு தாயின் தெவிட்டாத பாசம் இந்த பாடலை கேட்ட நேரம் அந்த காலம். ஆனால் இன்று தாய்க்கும் தந்தைக்கும் நேரம் இல்லை. பாசமும் இல்லை.

  • @muniappansurya5091
    @muniappansurya5091 4 роки тому +6

    இம்மாதிரியான பாடல்கள் நம் சிந்தையிலும் மனதிலும் உயிரிலும் கலந்ததற்கு தமிழர்களாகிய நாம் இலங்கை வானொலிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 роки тому +6

    என்னே ஒரு இனிமை ! இந்த பார் உள்ளவரை யில்,உன் பாடல் நிலைக்கும் பாடும் நிலா பாலு🌷😘😍

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +15

    டிவியிலும் அடிக்கடி இந்த பாடல் போடுவார்கள்..... இனிமை யான அருமையான பாடல்... மறக்க முடியாத பாடல்.... நன்றி..SpB..++சைலஜா... ஹம்மிங்... சூப்பர் சூப்பர் சூப்பர்.

    • @bhupathiarumugam7876
      @bhupathiarumugam7876 4 роки тому

      Telugu Actor....MuraliMohan

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 роки тому

      உண்மை ஹம்மிங் சூப்பர் சொல்ல வார்த்தை இல்லை

  • @krishnamoorthit986
    @krishnamoorthit986 3 роки тому +4

    எவ்வளவு இனிமையான பாடல் , இதை பல முறை கேட்டாலும் சலிக்காது, பாடல் வரிகளும் இசையும் மிக அருமை,என் உயிர் இருக்கும் வரை என் மனதை விட்டு நீங்கா பாடல்...❤️❤️❤️❤️❤️

  • @prakashm1468
    @prakashm1468 3 роки тому +9

    I was born in 80s but surely the 70s weren't that far away from the 80s...I can feel the calmness, freedom & the stability of the 70s life from this song..

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 2 роки тому +4

    திரும்ப திரும்ப திரும்ப கேட்கக்கூடிய ஒரு இனிமையான அருமையான பாடல் மனதுக்கு இதமாக இருக்கிறது

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 2 роки тому +14

    எனது மலரும் நினைவுகளை மீட்டெடுக்கும் இனிய பாடல்!
    சூப்பர் ஷ்யாம்! 👍👍👍👍👍

  • @user-rz2ke9bh4u
    @user-rz2ke9bh4u Місяць тому

    நான் இந்த பாடலை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியாது அவ்வளவு ஒரு இனிமையான பாடல் எஸ்பிபி குரல் கேட்கும் போது அப்படியே மயக்கம் வருகிறது ❤️❤️❤️

  • @sharmilamondal9982
    @sharmilamondal9982 11 місяців тому +3

    Very very melodious song.i am bengali women from west bengal if I know Tamil language but I don't know Tamil language.i haer many Tamil song and I saw many Tamil movie

  • @kogul.c1171
    @kogul.c1171 2 роки тому +3

    இனி பிறக்கவும் போவதில்லை இப்படியொரு பாடலை பாட , இசையமைக்க.

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 4 роки тому +3

    ஷியாம் இசையில் SPB அற்புதமான பாடல் ஹம்மிங் சிறப்பு

  • @ravisathiya8332
    @ravisathiya8332 2 роки тому +5

    இந்த பாடலை கேட்டால் மனசு ஏதோ பன்னும் ஆனால் அதுசோகமா மகிழ்ச்சியானு உனரமுடிவதில்லை.

  • @devi1964
    @devi1964 2 роки тому +6

    ஷைலஜா ஹம்மிங் தேன் சிந்துதே

  • @narayananc1294
    @narayananc1294 2 роки тому +5

    இந்த பாடலை முதன் முதலாக நான் அரசு பேருந்தில் பயணிக்கும்போது கோவையில் எனது கல்லூரி பயின்ற காலத்தில் கேட்டது அன்று முதல் இன்று வரையிலும் மட்டுமல்ல நான் இந்த உலகை விட்டு பிரியும் வரையிலும் மறக்கவே மாட்டேன் இந்த இசை கானத்தை

  • @natesanmohan1337
    @natesanmohan1337 6 років тому +45

    This song was balancing my stress. When i was working for 16hrs a day.

  • @rpgaming5300
    @rpgaming5300 4 роки тому +4

    அருமை அருமை அருமை இனிமை இனிமை இனிமை புதுமை புதுமை புதுமை ஷ்யாம் யார் என்று எனக்கு தெரியவில்லை இவர்போல் உள்ள இசையமைப்பாளர்கள் தமிழ் இசை கண்டுகொள்ளாதது இசைபிரியர்களுக்குதான் பெரும் நஷ்டம்

  • @rajanbenjaminggnanakkan4784
    @rajanbenjaminggnanakkan4784 Рік тому +10

    A different tone of singing by SPB sir, we remember him till our last breathe a great singer of this universe

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Рік тому +3

    மேகம் மழை தருமோ இல்லையோ spb sir ! Ungal kural கேட்டதும் எங்கள் மனதில் இசை மழை பொழியும்! மழை மேகம் கண்டு ஆடும் மயில்( ஶ்ரீ ) கிட்டயே ,மழை தருமோ என் மேகம் என்று கேட்கும் உங்கள் குரல் எங்கள் இதயத்தை மயிலிறகு கொண்டு வருடுகிறது spb sir! Indha hero Telugu hero ? மயிலும் மயக்குகிரார்! மைக் பிடித்த வரும்( spb) மயக்குகிறார்! Lovely song ! 🌹🌹🌹💙🙏💙

  • @agalyasamundishwaric462
    @agalyasamundishwaric462 Рік тому +4

    இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் மனதை வருகிறது ❤❤❤

  • @sankarapillaisivapalan.4481
    @sankarapillaisivapalan.4481 3 роки тому +2

    இலங்கை வானொலியில் மிகவும் பிரபலமான பாடல் .மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். இசை மிகவும் அருமை.அற்புதம். 🎼🎼

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 3 роки тому +1

    உயிரை உருக்கும் பாடல்.அமிர்தத்தை பருகும் வாய்ப்பு தேவர்களுக்கு மட்டுமல்ல SPB அப்பா மூலமாக நமக்கும் கிடைத்துள்ளது.அருமையான பாடல் வரிகள்,அழகே உருவான ஸ்ரீதேவி மேம்,இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள்.வேறு என்ன வேண்டும்.பாடலை ரசிப்பதற்க்கு.

  • @skmr321
    @skmr321 7 років тому +14

    what a great song! Hearing this SPB song after a decade. I can remember the lyrics so well thanks to the impact of this song in my childhood :)

  • @rajendranm64
    @rajendranm64 2 роки тому +6

    இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்

  • @gstalin1972
    @gstalin1972 2 роки тому +5

    ஒரு மழைநாளில் கேட்டு சிலிர்த்தேன் 🤩

  • @pgmanoj5894
    @pgmanoj5894 Місяць тому

    That initial humming was simply out of the world. Just SPB things. 👌

  • @santhiek1324
    @santhiek1324 7 років тому +87

    The voice of SPB and music of siyam is lovely one