29. தெய்வத்தின் குரல் 1_ நம் மதத்தின் தனி அம்சங்கள் என்ற தலைப்பில் மஹாபெரியவா அருளிய உரை_Part 1.

Поділитися
Вставка
  • Опубліковано 27 чер 2024
  • ஆதிசங்கர பகவத்பாதர் ஈஸ்வர அவதாரம் என்றால், பக்தர்களால் மஹாபெரியவா என்றும், அனைவராலும் ஜகத்குருவாக போற்றபட்ட, காஞ்சி சங்கர மட த்தின் 68 வது பீடாதிபதியான நம் காஞ்சி மகாசுவாமி அந்த ஆதிசங்கர அவதாரம் தான். இது பிரத்யக்‌ஷம். அப்படி பட்ட உன்னத அவதாரமாக, கலியின் கோர தாண்டவத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு கற்பக விருக்‌ஷமாக, கலியுக வரதனாக இன்னல்கள் களைந்து, நல்வழி காட்டி நடத்தி செல்லும் மகாஅவதாரமாக ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகாசுவாமிகளாக இந்த பாரத தேசம் முழுதும் நடந்து வற்றாத அமுதசுரபியாக நமக்கு, லௌகிகத்துக்கும், ஆன்மிகத்துக்கும் தேவையான வழிகாட்டுதலை அளித்துள்ளார். அவ்வாறு நடமாடும் தெய்வம் காஞ்சி மகான் உதிர்த்த பொன் மொழிகளை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகளாக வந்தது நம் அனைவருக்கும் தெரிந்ததே. சிவன் என் சிந்தையுள் இருந்த அதனால் அவனருளால் அவன் தாள் வணங்கி என்று மாணிக்கவாசக பெருமான் சொன்னது போல், காஞ்சி மகாசுவாமிகள் அருள் இருந்தால் தான் அந்த புத்தகத்தை பார்ககவே முடியும், பார்ததாலும் அதை படிக்க வேண்டும் என்று அவா எழும், அப்படி படித்தாலும், அவர் அருளினால் தான் அதை நம் வாழ்க்கையில் கடைபிடிக்க முடியும். ஆக, நமக்காக அவர் அருளி சென்ற அமுதத்தை அவருடைய உச்சிஷ்டமாக கருதி அதை பிரசாதமாக உட்கொள்ள, அதாவது அவர் கூறியதை நாம் கடைபிடிக்க முயற்சி செய்தால், அவர் அருளால் அது திருவினையாகும். நம் வாழ்வும் பயனுள்ளதாகும். இதுவே அந்த அவதார மூர்த்திக்கு நாம் செய்யும் பூஜையாகும். இராமசந்திர மூரத்தி அமைத்த இராம சேதுவில் அணில்கள் ஆற்றிய தொண்டு போல், மகாபெரியவரின் அருளால் அவர் அருளிய “தெய்வத்தின் குரல்” புத்தகங்களில் இருந்து ஒவ்வொரு அத்தியாயமாக கேட்பதற்கு எளிதாக இருக்கும் விதமாக படித்து இங்கு பதிவிடுகிறேன். இந்த சேவையை எனக்கு அருளிய மகாசுவாமிக்கு எவ்விதம் நன்றி சொல்ல முடியும். தெய்வத்தின் குரல் படிக்கும் வாயிலிருந்து தெய்வத்தின் வாக்கு மட்டுமே வரும். ஓம் நம சிவாய தெய்வத்தின் குரல் கேட்கும் செவியில் தெய்வத்தின் குரல் மட்டுமே ஒலிக்கும்.
    ஓம் நம சிவாய.
    ஹர ஹர சங்கர ஜெய ஜய சங்கர
    Just as Adi Sankara is considered as an incarnation of Lord Shiva Himself, 68th pontiff of Kanchi Sankara Mutt Sri Jagadguru Chandrasekarendra Saraswati Mahaswamy is considered verily the incarnation of Sri Adi Sankara. He was addressed as Maha Periyava by all his devotees. To save the suffering humanity, He walked the length and breath of this country spreading the message of God. His message which is verily the "Voice of God" is compiled as "Deivathin Kural" in Tamil in seven volumes. These volumes with its teachings serve as a guiding light to this chaotic world. It is said only by the Grace of God one can think of God. In the same way one can set their eyes upon this treasure of "Deivathin Kural" only by His Grace. More so, only by His Grace, one gets the longing to read it.. and blessed are those who are able to follow these teachings of Maha Swami given in these volumes. Just as the squirrels served Lord Rama in the construction of the Rama Sethu, Mahaswamy so gracefully made me read these volumes chapter wise. I’m uploading this for the benefit of all the Devotees of Maha Swami. One who reads this “Voice of God” will speak only "Divine words". One who hears this “Voice of God” will hear only the “Voice of God” everywhere.
    Om Namah Shivaya
    Hara Hara Shankara, Jaya Jaya Shankara

КОМЕНТАРІ • 1

  • @nshanthi9904
    @nshanthi9904 19 днів тому

    Nalla karuthukkal
    Vazhga valamudan
    Ohm Nama Shivaya