புல்லூர் தடுப்பணை | கனகநாச்சி அம்மன் கோவில்

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • மனிதனுக்கு இயற்கை கற்றுக்கொடுத்த பாடங்கள் ஏராளம். அந்த வகையில் குன்றாத வளத்தைக் அள்ளிக்கொடுத்த ஒரு ஜீவநதியாக பாலாறு இருந்துள்ளது. பொன்னாய் படர்ந்திருக்கும் மணலுக்கு கீழே வற்றாத நதியாக பாலாறு இன்றும் ஓடி மக்களின் தாகத்தை தணிக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு நிகரான நெல் உற்பத்திக்கு மூலகாரணியும் இதே பாலாறுதான்.
    லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை பசுமையாக்கிய பாலாறு இன்று தனது அடையாளத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறது. பொங்கும் நுரையுடன் புது வெள்ளமாய் கரைகளைத் தொட்டு பாய்ந்த நீரின் ஆர்ப்பரிப்பை இனி எப்போதும் கேட்க முடியாது. ஏரிகளுக்கு நீர் சுமந்து வந்த கால்வாய்கள் காணாமல் போய்விட்டன. உலகில் மாசுபட்ட நதியாக மாறிவிட்ட பாலாற்றின் சோகமான வரலாற்றுப் பதிவுதான்
    பாலாற்றின் பிறப்பிடம் கர்நாடக மாநிலம் கோளாறு - நந்திதுர்கம். அம்மாநிலத்தில் 93 கி.மீ. பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ. கடந்து, தமிழகத்தில் அதிகப்படியாக 222 கி.மீ. என 348 கி.மீ. தூரம் தடம் பதித்த பாலாறு காஞ்சிபுரம் மாவட்டம் வயலூர் முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
    பாலாற்றினால் தமிழகத்தில் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயனடைகின்றன. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மட்டும் 150 ஏரிகள், நீர் பெற்று அவற்றின் கீழ் 15 ஆயிரத்து 409 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.
    பாலாற்றில் கலக்கப்படும் கழிவுகளில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றன.
    இப்படி இருக்க எதிர்கால சந்ததியினருக்கு பாலாறு ஒரு வறண்ட நிலமாகவே காட்சியளிக்க போகிறது என்பதுதான் சோகக்கதை பாலாறு அதனை நம்பி இருந்தவர்களை தமிழகத்தில் பழிவாங்கப் போகிறது பாராட்டை காப்பாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை சிந்தித்து உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
    தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள இந்த புல்லூர் தடுப்பணியில் இருந்து தான் தமிழகத்திற்குள் பாலாறு நுழைகிறது ., இப்பகுதியில் அமைந்துள்ள கனகநாச்சி அம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் ரசித்து பெற்றது இந்த அம்மன் மக்களை காப்பாற்ற காவல் தெய்வமாக எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.
    கோவிலின் ஸ்தல விருட்சமாக துறிஞ்சி மரம்
    உள்ளது.
    இந்தக் கோவில் ஆனது ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.
    கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து அதிகப்படியான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
    தமிழக அரசு பேருந்துகள் இந்த கோவிலுக்கு வாணியம்பாடி திம்மாம்பேட்டை வழியாக இயக்கப்படுகிறது.
    இந்த கோவிலில் நாள்தோறும் காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை பூஜைகள் நடைபெறுகிறது.
    Map location: maps.app.goo.g...

КОМЕНТАРІ • 1