புத்துகோவில் வாணியம்பாடி || Puthukoil | Mystery or History

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • இந்திய நெடுஞ்சாலை துறையை அலரவிட்ட கோவில்
    3 ஆண்டுகள் கழித்து வேறு வழியின்றி மேம்பாலம்
    அப்போதைய வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பெத்த கல்லு பள்ளி கிராம எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலையோரம் பழமையான புற்று ஒன்று இருந்து வந்துள்ளது அதனை மக்கள் தொடர்ந்து வழிபாடு மேற்கொண்டு வந்துள்ளனர்.
    கடந்த 2000 ஆம் ஆண்டு சென்னை பெங்களூர் சாலைமார்கமாக நான்கு வழி சாலை அமைக்கப்பட்டது , அப்போது இந்த கோவில் 4 வழி சாலை ஓரமாக இருந்துள்ளது.
    பின்னர் 2007 கால கட்டத்தில் 6 வழி சாலையாக மாற்ற
    நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கத்திற்கு இடம் கையகப்படுத்தும் போது தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் ஓரமாக உள்ள #புத்துகோவில் - கோவிலை இடிக்க நெடுஞ்சாலை துறை முடிவு செய்கிறது.,
    உள்ளூர் மக்களின் எதிர்பால் சில நாட்கள் பேச்சுவார்தைக்கு பிறகு கோவில் பூசாரிக்கு அருள் வந்து பாம்பு போல் நெளிந்தப்படியே அருள் வாக்கு கூறிய பூசாரி இந்த கோவிலுக்கு பதிலாக புதிய கோவில் அமைத்து தர வேண்டும் என அருள் வாக்கு கூறியதாகவும் இதனால் நெடுஞ்சாலை துறை சார்பில் அருகாமையிலேயே
    இதை விட பெரிய கோவிலாக அமைத்து கொடுத்து உள்ளனர்.,
    பின்னர் சாலையின் நடுவே உள்ள புற்றை இடித்துவிட்டு சாலை அமைக்க முயற்சி செய்த போது
    முதல் முயற்சியாக
    ஆந்திராவை சேர்ந்த அதிகாரி புற்றை பார்வையிட்டு இடிக்க நாள் குறித்து சென்றவர்தான் திரும்பவே இல்லையாம் விசாரித்ததில் நாள் குறித்த நாள் முதல் அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவராக நோய் வாய் பட்டதால் அவர் பணிக்கு வரவே இல்லையாம்,
    அடுத்த கட்டமாக ஜேசிபி இயந்திரத்தை வைத்து கோவிலை இடிக்க முயற்சித்த போது அன்றைய தினம் முழுவதும் ஜே.சி. பி தொடர்ந்து பழுதாகி உள்ளது. இதனால் அச்சமடைந்த பணியாளர்கள் ஆளை விட்டால் போதும் என வேறு சைட்டுக்கு சென்று விட்டனராம்.,
    3 ஆவது முயற்சியாக -குஜராத்தை சேர்ந்த தலமை அதிகாரி நேரில் ஆய்வு செய்ய வந்து ஆய்வை துவங்கும் முன்பே அவர் அலர்ஜி மற்றும் அதீத காய்ச்சல் ஏற்பட்டு ஆய்வு பணியில் இருந்து பின் வாங்கி சென்று விட்டாராம்.
    அடுத்தபடியாக கடப்பாறை கொண்டு புத்தை இடிக்க வந்த உள்ளூர்காரரை மக்கள் தடுத்த நிலையிலும் அவர் கடப்பாரை கொண்டு இடிக்க பணிகளை செய்து வந்த போது அன்று இரவே சாலை விபத்தில் கார் மோதியதில் அவர் கால் இழந்தாராம்.,
    அடுத்தடுத்த தடங்கள் சம்பவங்களால் அதிர்ந்து போன நெடுஞ்சாலை துறையினர் வேறு வழியின்றி புற்றை அதிநவீன ஹைட்ராலிக் மூவிங் டெக்னாலஜி மூலமாக நகரத்தை திட்டமிட்டு இன்ஜினியர்களின் உதவியுடன் புற்றின் ஆழத்தை அறிய
    புற்றினுள் கேமராவை அனுப்பி பார்த்தபோது ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் நீர் வரத்து அதிகமாக இருந்ததாகவும் மேலும் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான பாம்புகள் நெளிவது போன்று காட்சிகள் தெரிவதாகவும் வந்த டெக்னீஷியன்கள் தெரிவித்ததாகவும்
    இந்த சம்பவங்கள் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே காட்டுத் தீ போல் பரவி பேசு பொருளாக மாறி அந்த புற்றி இடிக்க மக்களின் எதிர்ப்புகள் அதிகமானதால் 3 ஆண்டுகளுக்கு பிறகு புற்றை இடிக்கும் முயற்சியை கைவிட்டு
    மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள புற்றை இடிக்காமல் கோவில் அமைந்துள்ள இடத்தில் 16 கோடி மதிப்பீட்டில் மேல் புறமாக மேம்பாலம் அமைத்துள்ளனர்.,
    இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைத் துறையால் கையகப்படுத்த முடியாத கோவில்களில் இந்த வாணியம்பாடி புத்துக்கோவிலும் ஒன்று. இந்த கோவிலின் ஸ்தல விருட்சமாக அரசமரம் திகழ்கிறது. அரச மரத்தின் அடியில் புற்று அமைந்துள்ளது அதன் முன் அம்மன் சிலையாக காட்சி அளிக்கிறார்.
    தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் வருடத்தின் 365 நாட்களிலும் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அர்ச்சனை கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது., வாகனங்களுக்கு பூஜை செய்ய 50 ரூபாய் முதல் வசூலிக்க படுகிறது.
    வைகாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறுகிறது இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வேண்டுதல் நிறைவேற பிரார்த்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர்., திருவிழா நாளில் சிறப்பு தரிசன கட்டணம் 100,50 என வரிசை படுத்தப்படுகிறது ,
    இங்கு நாள்தோறும் 25க்கும் மேற்பட்டோருக்கு தமிழக அரசு அறநிலையத்துறை சார்பில் இலவசமாக மதிய உணவு வழங்கப்படுகிறது.,
    இங்கு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லக்கூடிய கனரக வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி பூஜை செய்த பிறகே இந்த இடத்தை கடந்து செல்வதை நாம் பார்க்க முடிகிறது.,
    இவ்வாறு பூஜை செய்ததன் மூலம் விபத்துகளில் இருந்து தங்களை அம்மன் காப்பதாக வாகன ஓட்டிகள் நம்புகின்றனர்., அதே போல புதிய வாகனங்களை வாங்குவோரும் இங்கு கொண்டு வந்து பூஜை செய்து வழிபாடு மேற்கொள்கின்றனர்,
    மேலும் குழந்தை வரம் வேண்டி செவ்வாய் வெள்ளி கிழமைகளில் இங்குள்ள நாக தேவதைகள் சிலைக்கு தாய்மார்கள் பூஜைகள் செய்து அரச மரத்தில் தொட்டில் கட்டி வழிபாடு செய்கின்றனர்., வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடனை இங்கு உள்ள கோவிலில் ஆடு கோழி முதலினவற்றை பலியிடுவதன் மூலமாகவும் அம்மனுக்கு சேலை மற்றும் அலங்காரப் பொருட்களை படைத்தும் எடைக்கு எடை சில்லறை மற்றும் உணவு பொருட்களையும் காணிக்கையாக செலுத்துகின்றனர்.,
    #puthukovil #ஆடிப்பெருக்கு
    Location : maps.app.goo.g...
    Bus route: Vaniyambadi - Natrampali(Chennai Bangalore Highways)

КОМЕНТАРІ • 16