"நா செத்தா யாரு வருவா... "தனக்கு தானே கல்லறை கட்டிய பெண்... தனியே இறந்து கிடந்த சோகம்...
Вставка
- Опубліковано 6 лют 2025
- "நா செத்தா யாரு வருவா... "தனக்கு தானே கல்லறை கட்டிய பெண்... தனியே இறந்து கிடந்த சோகம்... உருக வைக்கும் உண்மை நிகழ்வு...
#Kanyakumari #Rosy
கன்னியாகுமரி மாவட்டம் சூழால் ஊராட்சியில் இறந்தால் தன்னை அடக்கம் செய்ய யாரும் இல்லை என்பதால் தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த 100 நாள் வேலை செய்யும் பெண் கேட்பாரற்று இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பல்லுளி பகுதியை சேர்ந்தவர் றோசி 66, வயதான இவருக்கு உறவினர்கள் என்று சொல்லி கொள்ள யாரும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் வீட்டு வேலைகள் செய்து வந்த இவர் பின்னாட்களில் ஊராட்சி சார்பில் வழங்கக்கூடிய 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலைக்கு சேர்ந்து ஒரு நாள் கூட விடுமுறை போடாமல் வேலை செய்து வந்துள்ளார்.இதனை பாராட்டி ஊராட்சி மன்ற தலைவர் இரண்டு முறை கவுரவித்து உள்ளார். அப்படி வேலைக்கு செல்லும் இடங்களில் உடன் பணி புரிபவர்கள் நீ இறந்தால் உன்னை அடக்கம் செய்ய யார் இருக்கார் என கேட்டு கிண்டல் அடித்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட றோசி தான் இறந்தால் தன்னை அடக்கம் செய்ய ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தான் வேலை செய்து சம்பாதித்து வைத்திருந்த ஐம்பதாயிரம் ருபாய் பணத்தில் தனக்கென்று ஒரு அழகான கல்லறையை கட்டி வைத்திருந்தார். அந்த கல்லறையின் பின்புறத்தில் ஒரு வாயில் வைத்து அதன் வழியாக உடலை உள்ளே தள்ளி அடக்கம் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக றோசிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். கவனிக்க யாரும் இல்லாததால் வீட்டிலேயே இறந்து கிடந்துள்ளார் இந்த நிலையில் ஒரு வாரமாக வீட்டின் வெளியே றோசியை காணமல் சந்தேகமடைந்த அந்த பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர் வீட்டினுள் சென்று பார்த்துள்ளார் அப்போது அவர் உடல் அழுகிய நிலையில் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார் இதனை தொடர்ந்து அவர் கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடம் வந்த போலீசார் றோசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவர் கட்டி வைத்திருக்கும் கல்லறையில் அடக்கம் செய்யப்படும். கேலி கிண்டல்களால் மனம் நொந்து தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Uploaded On 16/06/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV UA-cam PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
யாரையும் கேலி செய்ய கூடாது.நமக்கும் நாளை அந்த நிலைமை வரலாம்.பாவம் அந்த அம்மா
Yes pavam RIP amma
Mm
S its true
Yaraium kevalama pesathinga mudinja uthavi seinga mudiyalaya vilagirunga yaraium asingama pesathinga namma udambula nalla raththam irukum varaithan athuku apram nammala yarum thirumpi pakka madanga
சந்தியா சேலம் சந்தியா
அந்த பகுதியில் வாழும் மக்கள் வொவ்வறுவரும் வெட்கபடனும்.அந்த பெண்ணை கேலி செயித அனைவரும் குற்றவாளிகள்😢😢
Sssss
Super anna
சந்தியா சேலம் சந்தியா
மிகவும் மனவேதனை அளிக்கிறது😭😭😭😭😭😭😭😭😭உங்கள் ஆன்மா இறைவனடி இளைபாறட்டும் அம்மா🙏🙏🙏
Hi
😭😭😭😭🙏🙏🙏
சந்தியா சேலம் சந்தியா
தனிமை மரணத்தை விட கொடூரமானது.இறந்ததால் அவருக்கு நிம்மதி கிடைத்து இருக்கிறது.
இவ்வளவு வருஷம் நீங்க எப்படி தனியா வாழ்ந்தங்களோ இனிமேலாவது நீங்க நிம்மதியா தூங்குங்க மனிதனா பிறந்து வாழ்ந்து சாவ்றதுக்கு நிம்மதியா அந்த கல்ரயில தூங்கலம் இனிமேலாவது கர்த்தர் உங்கல ஆசிர்வதிக்கட்டும்
கடைசி வரை உழைத்து வாழ்ந்து இருக்கிறார் ஆன்மா சாந்தி அடையட்டும்
மன உறுதி படைத்த பெண்மணி. தனக்கான கல்லறையை தானே அமைத்து கொண்டது அவரது சுயமரியாதையை காட்டுகிறது.Hats off you Amma 🙏 🙏🙏🙏
மனிதர்களின் ஆதரவு இல்லாததால் கடவுளே ஏற்றுக்கொண்டார்….இவர் ஆன்மா அமைதி பெற கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம்
😭😭எதிரிக்குகூட இப்டி ஒரு நிலமை வரக்கூடாது, இந்த மனிதர்களை எவ்ளோ வெறுத்து வாழ்ந்திருப்பாங்க😭😭😭😭
இன்று இவர். நாளை நாம் என்பதை வாழ்க்கையில் ஒவ்வொருவரும் உணரவேண்டும். வரும்போது எதையும் எடுத்து வரவில்லை. அதுபோல போகும் போது எதையும் எடுத்து செல்லவும் இயலாது. இதற்கு இடைபட்ட காலத்தில் அணைவரும் அன்புடன் வாழ்வோம்.
Unmai than bro
💯 correct
☝👌👏👏👏👏👏👏
True
😥😭😭😭😭 தமிழ்நாட்டு அக்கம் பக்கத்தினர் இப்படியுமா இருப்பார்கள்? ?? மிகவும் வேதனை அளிக்கிறது😖 RIP❤️
Hi
நாகர்கோவில் dt la நடந்தது
@@sylvestersolomonrobert4112 நாகர்கோவில் தமிழ்நாட்டில்தான் இருக்குது.🤦♀️
Etharku melum irukindrargal 🤧🤧
Negalum tamil nadu thana
இது உண்மையயானால் இப்படி ஒரு வேதனையும் நிலமையும் யாருக்குமே வரக்கூடாது இயேசப்பா🙏🙏😭😭
நெஞ்சை உருக்கும் சம்பவம்.. மிகவும் வருத்தமாக உள்ளது.. RIP
மற்றவர்களை கஷ்ட்ட படுத்த வேண்டாம் 😭😭😭 ஆழ்ந்த இரங்கல் 💐💐💐
இந்த செய்தியை கேட்கும் போது என் மனம் கனக்கிறது 😭😭😭ஆத்மா சாந்தி அடையட்டும் 🙏🙏
அவர் ஒரு கிறிஸ்தவர் என்று தெரிகிறது இவர் செல்லும் ஆலயத்தில் உள்ளவர்கள் இவர்க்கு உதவி செய்யாமல் போனது மனவேதனை அளிக்கிறது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
👌
😒😣
👤🙏
வேதனை தருகிறது...
Ivanga kita kaanikai vaangi avanga settle aga tha papanga... Now a days everything is commercial.. nanum Christian tha...ippo church ku porathu ila.
உலகத்தில் பிறந்த அனைவரும் அனாதைகளே கடவுள் ஒருவரே அப்பா அம்மா
உங்களுக்கு பரலோகத்தில் வரவேற்பு இருக்கும் என்று கடவுளிடம் கேட்கிறோம் 😭
யாரையும் கேலி கிண்டல் செய்ய கூடாது
இதல்லாம் ரொம்ப பாவம் அவுங்களுக்கு உதவி செய்ய கூட ஆள் இல்லாம எவ்ளோ கஷ்ட பட்டுருப்பாங்க..... யாருமே இல்லேனு சொல்லி ஒருதவுங்கள ஒதுக்கி வைக்க கூடாது அவுங்ககூட நம்ம அன்ப பகிர்ந்து கொள்ள வேண்டும் ஒரு ஆறுதலாக இருக்க வேண்டும்..... பணத்த விட அன்புதான் பெரியது.....
அம்மா உங்களை பார்த்தால் எனக்கு கஷ்டமா இருக்கு
அம்மா உங்கள் ஆத்ம சாந்தி அடைய கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்கிறேன் உங்கள் ஆத்ம பரலோக ராஜ்யத்தில் சேர்ந்தது ஆமென்
சகோதரி ஆன்மா சாந்தி அடைய வேண்டும்
ஆழ்ந்த இரங்கல்
மிகவும் வேதனை அளிக்கிறது அவரை கிண்டல் செய்த அனைவரையும் கடவுள் மண்ணிக்க மாட்டார்
Yes 😭
கேட்கவே மிகவும் மன வேதனையா இருக்கு... அந்த சகோதரி ஆன்மா அமைதியாக உறங்கட்டும்..
அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.ஆண்டவரே ஆண்டவரே.🙏🙏
மனவேதனை அளிக்கிறது 😭😭😭😭😭
அம்மா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.... யாருக்கும் இது போன்ற நிலை வரக்கூடாது...😢😢😢🙏🙏🙏
கொஞ்சம் யோசித்து பார்த்தால் எல்லோருக்குமே இதே நிலைதான்
சகோதரி ரோஸி எங்க சபையில் இணைந்து மூன்று வருடங்கள் ஆகிறது. எங்கள் சபையிலிருந்து மாதம்தோறும் பென்ஷன் தொகை ரூ.500 கொடுக்கப்பட்டது . அவர்கள் தேவை என்று அணுகும்போதெல்லாம் உதவிகள் செய்துள்ளோம். இன்று அவர்கள் நல்லடக்க செலவுகளையும் சபை பகிர்ந்து கொண்டது. அன்புள்ளம் கொண்ட சகோதரி சபைக்கு நன்றி காட்டும் விதமாக தன்னுடைய வீடு மற்றும் நிலைத்தை சபைக்கே எழுதி தருவதாக கூறியும் சபை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தயவு கூர்ந்து தவறான கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
Sari ok evanga eppadi thanimail irukkum pothu yaaravathu help panni irukkalam ill pa 😭😭😭😭 evlo kastama irukku ponga pa
Apa one week yean yarum poi pakala.
இவ்வளவு தான் மனித வாழ்க்கை, இருக்கும் வரை நாலு பேருக்கு நல்லது செஞ்சு ட்டு போவோம்.. நம்மை அந்த ஆண்டவன் பாத்துப்பான்..
அம்மா உங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்
ரோஸி உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்
Heart touching video..Great self dignity God bless you in his kingdom with PEACE ..
மனிதர்களுக்கு ஒழுக்கம் ~ உதவும் தன்மையலாம் சொல்லிக்கொடுக்க மறந்துட்டோம்
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
nallatho kettatho..oru kalyanam pannikangappa..inda nelamai rombha kastam... 🤔🤔🙄🙄😭😭😭🙏🙏🙏
ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் 🌹
மனசு கஷ்டமா இருகிறது.. கல்லறை கட்டும் போது அந்த அம்மாக்கு எப்பிடி இருந்து இருக்கும். ஒரு வாரம் கழிச்சி தான் பாத்து இருகாங்க. மனிதம் செத்து பொய் கொண்டு இருக்கிறது 😭😭😭😭வேதனையாக உள்ளது
ஆம் சகோதரி, காலத்தின் கோலத்தால் மனிதம் செத்துக் கொண்டிருக்கிறது 😭😭😭😭😭
Neengal sorkathilaavathu nimathiyaaka irungal amma.....🙏
This story hurts me a lot....... Avanga mana nilai eapdi erunthu erukum antha kallarai ah kattumbhothu😔😞
கண்களில் கண்ணீர் வருகிறது.பாவம் அந்த அம்மா
யாராவது ஒருத்தர் தினசரி அந்த அம்மாவை கொஞ்ச நேரம் போய் பார்த்திருந்தா கூட அவங்களுக்கு
இந்த மாதிரி ஆகியிருக்காது, ஒரு சில நிமிஷங்கள் கூட அவங்களுக்காக ஒதுக்க முடியவில்லை?வருத்தம் தான்
Maranathai vidavum kodiyathu ..
Thanimai
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா 😭😭😭
எதிர்மறையாக சிந்தித்திருக்கக் கூடாது... அந்தம்மா தேவாலய காப்பாகத்தில் சென்று தங்கியிருக்கலாம்...
Great lady... Hats off madam .....sure that Jesus will wait for u n heaven... Let ur soul rest n peace mam.....
She will be great in the sight of God
R.I.P
S
S
இறைவன் படைப்பில் அனைவரும் சமம். ஜாதி மதம் ஏழை பணக்காரன் என்ற பேச்சுக்கே இடமில்லை. மரணம் இதை உணர்த்துகிறது
நீங்க சாகும் முன் உங்களுக்கு இந்த சமாதி கட்டி குடுத்து இருக்கானுங்க உங்களுக்கு உதவி செய்து இருக்கலாம் அரசாங்கம்
பொல்லாத உலகம் இது
வாழ நினைப்பவர்களையும் சாகடித்துு விடும்
💯
Thanimai Miga Kodumai....
Super Amma 👍👍. We should not depend upon anyone in this world. Great decision 👍🙏
God's daughter...RIP..
தைரியமான பெண்மணி ...... கல்லறை
கூட தனக்கு தானே கட்டியுள்ளார் ... அவர் மனநிலை எப்படியிருந்து இருக்கும் ..... யாரையும் எதிர்பார்காமல் ....... தனிமை ....... இப்போது நிறைய பேர் தனிமை தான்
சொந்தம்.. பிள்ளைகள் ... யார் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டி யவர்கள் ... தனிமை .. தான்
Great woman
அடப்பாவிகளா ஏன்டா இப்படி என்ன கொடுமைடா வாழ்க்கையில் மிகப்பெரிய சோகம் இது யாரும் இல்லாத தனிமை
மகன் மகள் அண்ணன் தம்பி உறவினர் என்று யாருமே இல்லையா இல்லை யாருமே வரலையா அப்படியானால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்
இதே நிலை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்
ஆத்மா சாந்தி அடைய ட்டும் 😓😓
மிக வேதனையாக உள்ளது 😭😭😭😭
She loving india flag, great woman RIP
மணம் இருகியது😭😭😭😭😭😭😭
அழ்ந்த இரங்கல் அம்மா
Heart touching 😭😭😭
என் எதிரிகளுக்குக் கூட இப்படி நடக்கக் கூடாது.
சிவனே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌄🌄🌄
God bless you amma🙏🏿🙏🏿🙏🏿
Brave women
Uravugal odhungalam... Akkam pakkathinar oruvar koodava pesamal palagaamal iruppaargal..🤔🤔🤔. Aacharyamaagavum bayamagavum ulladhu mudhumaiyai ninaiththaal😥😥😥
Rompa kashatma valkai dhn andha amma valnthurkanga rmpa manavedhaiya iruku 😭 yarum thayvu senjchu ipti Iruka kooda anbe sivam
God bless her soul 💐💐💐
Romba kastama erukku amma unga athoma santhi aadaya andavanai vendukiren 😔😔😔
Intha News Unmaiyave manasuku kashtama irukunga.. Antha amma mugam patha kanner varudu.
அம்மா உங்களை பார்க்க யாருமே இல்லைஇந்த நாட்டிலே இப்படி எல்லாம் நடக்குது உங்களை அக்கம் பக்கம் இருப்பவர்கள் கூட பார்க்காமல் விட்டு விட்டார்களே அம்மா மனது ரொம்ப வலிக்கிறது நானும் இதற்காகவே ஒரு அனாதை ஆசிரமம்எல்லாருக்கும் நல்லது செய்வேன் என்று உங்களின் மேல் உறுதியளிக்கிறேன் நான் உங்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் மக்களின் ஒருவன்...
New kind of experience while seeing this
Thanimai kodumai
💔 oru sec la ...solla mudiyadha alavuku mansula kastama eruku......rosy amma🥺
Being alone is more painful
பாவம்
Pavam sangadama irukku
அவருக்கு நம் இருபூம் ஊரவேனர்களாக
ஆழ்ந்த இரங்கல்😭
Pavam yarukum ipadi nadakakudathu kuda irukavan than elathukume karanam
நானும் திருமணம் ஆகாமல் தனிமையில் வாழும் மனிதன் தான்..இந்த செய்தி வேதனை அளிக்கிறது.
யாருக்கும் இந்த நிலைமை வர கூடாது கடவுளே
மனசு வலிக்குது
சகோதரி ரோஸி எங்க சபையில் இணைந்து மூன்று வருடங்கள் ஆகிறது. எங்கள் சபையிலிருந்து மாதம்தோறும் பென்ஷன் தொகை ரூ.500 கொடுக்கப்பட்டது . அவர்கள் தேவை என்று அணுகும்போதெல்லாம் உதவிகள் செய்துள்ளோம். இன்று அவர்கள் நல்லடக்க செலவுகளையும் சபை பகிர்ந்து கொண்டது. அன்புள்ளம் கொண்ட சகோதரி சபைக்கு நன்றி காட்டும் விதமாக தன்னுடைய வீடு மற்றும் நிலைத்தை சபைக்கே எழுதி தருவதாக கூறியும் சபை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தயவு கூர்ந்து தவறான கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
@@premsundar969 Inga vanthu comment panringa le athuku pathil Anga help pani rukalam eh , death agi one week kandukala , whats the purpose of following Christianity if you can't even help a fellow helpless Christian.
Very sad for her 😔
ரொம்ப கஷ்டமா இருக்கு
எல்லோருடைய நிலையும் விதி
பயன்.....அம்மா அவ்வளவு
ஒழுக்கமாகவும் தைரியமாக
வாழ்க்கை வாழ்ந்துள்ளர்....பிறர்னரிடத்தில் உதவி
அல்லது சாப்பாடு எதிர்பார்க்கமால் நல்லபடி
இறைவனிடத்தில் சேர்த்து ள்ளார்.......
இதை பார்த்தவது எனக்கு யாரும் இல்லை என பொய்சாக்கு தப்புக்கு மேல் தப்பு பண்ணுபவர்கள் திருந்த வேண்டும்
Thanimai maranam kodumai
Romba kashdama eruku
ஒரு சொந்தம் கூடவா இல்லாமல் போய்விட்டன...... மனது வலிக்கிறது....
Sonthangal eppothum avargal thevai mudinthaudan nammai anathayakkividuvargal
@@chandranagarajan2904 அதும் சரி தான்.....
கடவுளே ரொம்ப கஷ்டமா இருக்கு 😥😥😥
Acho kashtama iruku pa yen church people enga ponanga
My heart felt condolences dear amma.
இந்த அற்ப சொற்ப வாழ்கைக்கு நாம் படும் பாடு... 😢
நமக்கும் திருமணம் ஆகவில்லை என்றால் இதுதான் நிலையா?
heart breaking 💔
Idha pathadhum kannula thanni vandhuruchu aludhuta ungaluku kanner vida yaru illanu sonniga ipo ungalukaga en kannula irundhu kanner vandhuruchu amma😭😭😭😭unga athma santhi adaiyatum😔
கண்ணீர் வருகிறது
Feeling so sad about that soul. RIP