Yedhu Kurai Yennakku Yogi Ramsuratkumar - Sri Shankararajulu - Tapasvi Pon Kamaraj & Sri Selva Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • yogiramsuratku...
    ஏது குறை எமக்கு யோகி ராம்சுரத்குமார்
    காணிமடம் பரம்பொருள் யோகி ராம்சுரத்குமார் மந்த்ராலய சன்னதியில் ஆரத்தி எடுக்கும் முன் பாடப்படும் பாடல் - திரு. சங்கரராஜூலு அவர்கள் இயற்றியது.
    பல்லவி
    ***
    ஏது குறை எமக்கு யோகி ராம்சுரத்குமார்
    எம்பெருமான் நீ இருக்க ஏதுகுறை எமக்கு
    ஓதி வணங்கிடுவோம் உன் நாமம் எந்நாளும்
    ஏது குறை எமக்கு எம்பெருமான் நீயிருக்க
    அனுபல்லவி
    ******
    யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்
    யோகி ராம்சுரத்குமார் ஜெயகுருராயா
    சரணம்
    ***
    கடலின் அலைகள் வந்து காலை அலம்பி விடக்
    காணிமடம் தனிலே காட்சி தருகின்றாயே (ஏது)
    கல்லின் சிலை தன்னிலே கருணை இறங்கிவரும்
    அல்லல் ஏதுவுமில்லை ஆனந்தம் ஆனந்தமே (ஏது)
    வேதாந்தம் சித்தாந்தம் யாதும் அறியோமே
    ஓதி மகிழ்வதெல்லாம் உன் நாமம் ஒன்றினையே (ஏது)
    தேவகி மாதா உன் திருவருள் எல்லாம் வணங்க
    அருகில் ஒரு கணமும் அகலாதிருக்கின்றார் (ஏது)
    திருப்பதி, திருத்தணி, அழகர்மலை, பரங்குன்றம்
    குன்றேறி வருவதென்றால் கால்நோகும் எமக்கென்று
    கடற்கரையில் சமவெளியில் காணிமடம் வந்தாயோ (ஏது)
    காலை முதல் ஐந்து முறை கற்பூரம் ஊதுவத்தி
    பாலால் அபிஷேகமும் பக்தர்கள் புரிந்து வர (ஏது)
    பூமியெல்லாம் உனது பொற்பாதம் போற்றி வரக்
    காணிமடத்தினிலே கற்சிலையாய் ஏறி நின்றாய் (ஏது)
    கேசவா மாதவா அச்சுதா கோவிந்தா
    ஓம் முருகா நம சிவாய யோகி ராம்சுரத்குமாரா
    கலிகால மக்களெல்லாம் கண்கண்ட தெய்வமென்று
    கைகுவித்து தான் வணங்க காணிமடம் வந்தாயோ (ஏது)
    1994 இல் திருவண்ணாமலை தெய்வ குழந்தை யோகி ராம்சுரத்குமார் முன்னிலையில் மதுரையை சேர்ந்த பகவான் அருள் குழந்தை திரு. சங்கர ராஜூலு அவர்களிடம் 'குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா' என்ற பாடலின் கருத்தை ஒட்டி, காணிமடம் பற்றி ஒரு பாடல் எழுதுமாறு பகவான் யோகி ராம்சுரத்குமார் பணிக்க, திரு. சங்கர ராஜூலு அவர்கள் எழுதி பகவான் யோகி ராம்சுரத்குமார் திருவடியில் சமர்ப்பணம் செய்த பாடல் இது.
    காணிமடம் பரம்பொருள் யோகி ராம்சுரத்குமார் மந்த்ராலய சன்னதியில் யோகியின் கட்டளைக்கு இணங்க, அன்று முதல் இன்று வரை, ஆரத்தி எடுக்கும் முன் இந்த பாடல் பாடப்படுகிறது.
    இந்த யோகி ராம்சுரத்குமாரின் வேதாந்த பாடலை பக்தர்கள் அனைவருக்காக இங்கு வழங்குபவர்கள் தபஸ்வி பொன் காமராஜ் அவர்கள் மற்றும் திரு செல்வகுமார்.

КОМЕНТАРІ • 1

  • @rajathangams6991
    @rajathangams6991 4 роки тому

    யோகிராம்சுரத்குமார்ஜெயகுருராயா