Thirupugazh Muruga முருகா அருணகிரிநாதர் திருப்புகழ் இறவாமற் அவசியமுன் கலைமேவு காலனிடத் வண்டுபோற்

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • முருகா கொங்கு நாட்டு திருப்புகழ் அருணகிரிநாதர் இறவாமற் அவசியமுன் கலைமேவு காலனிடத் வண்டுபோற் இருவினைப் தசையா கோவை சகோதரர்களின் இனிய குரலோசையில்

КОМЕНТАРІ • 60

  • @poonguzhalichokkanathan1063
    @poonguzhalichokkanathan1063 4 роки тому +5

    பல முறை கேட்டும் சலிக்க வில்லை.மிக அற்புதம். மற்ற திருப்புகழ் பாடல்களையும் இதைப்போல் தொகுத்து வழங்க வேண்டுகிறேன்.

  • @Thirrupugazhmurugansongs
    @Thirrupugazhmurugansongs Рік тому

    Vetrivel Muruganuku Arohara 🙏🦚🦚💥🦚🙏

  • @poonguzhalichokkanathan1063
    @poonguzhalichokkanathan1063 5 років тому +10

    திருப்புகழ் அமிர்தம். இனிய குரல்,தெளிவான உச்சரிப்பு ,அருமையான ராகம் இழையோடிய தாளம்,கொங்கு நாட்டு திருத்தலங்களின் காட்சி அமைப்பு, இப்பாடல்கள் ஒலிக்கும் இடங்களில் முருகனே கேட்க வந்திடுவான்.மிக மிக அருமை.பதிவிட்டதற்கு நன்றி.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +1

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பவ🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌻🔱🙏

  • @bhuvaneshwarivenkatraman545
    @bhuvaneshwarivenkatraman545 2 роки тому +1

    கேட்க கேட்க ஆனந்தம்
    அற்புதமான குரல்வளம்.
    இறைபணி தொடரட்டும்.

  • @nathanjsd8412
    @nathanjsd8412 2 роки тому

    அருமை அருமை நன்றி

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 4 роки тому +8

    கலைமேவு ஞானப் பிரகாசக்
    கடலாடி ஆசைக் ...... கடலேறிப்
    பலமாய வாதிற் பிறழாதே
    பதிஞான வாழ்வைத் ...... தருவாயே
    மலைமேவு மாயக் குறமாதின்
    மனமேவு வாலக் ...... குமரேசா
    சிலைவேட சேவற் கொடியோனே
    திருவாணி கூடற் ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி ... சகல கலைகளையும்
    தன்னுள் அடக்கி வைத்துள்ள ஞான ஒளியாகிய கடலிலே திளைத்துக்
    குளித்து,
    ஆசைக் கடலேறி ... மண், பெண், பொன் என்ற மூவாசைகளாம்
    கடல்களை நீந்திக் கடந்து,
    பலமாய வாதிற் பிறழாதே ... பலத்ததான, உரத்த சப்தத்துடன்
    கூடிய சமய வாதங்களில் நான் மாறுபட்டுக் கிடக்காமல்,
    பதிஞான வாழ்வைத் தருவாயே ... இறைவனைப் பற்றிய சிவ ஞான
    வாழ்வைத் தந்தருள்வாயாக.
    மலைமேவு மாயக் குறமாதின் ... வள்ளிமலையிலே வாழ்ந்த,
    ஆச்சரியத் தோற்றம் கொண்ட, குறப்பெண்ணாம் வள்ளியின்
    மனமேவு வாலக் குமரேசா ... மனத்திலே வீற்றிருக்கும்
    இளைஞனாம் குமரேசனே,
    சிலைவேட ... வள்ளிக்காக வில்லைக் கையில் ஏந்திய வேடன் உருவில்
    வந்தவனே,
    சேவற் கொடியோனே ... சேவற் கொடியை கரத்தில் கொண்டவனே,
    திருவாணி கூடற் பெருமாளே. ... லக்ஷ்மியும் ரஸ்வதியும்
    (செல்வமும், கல்வியும்) ஒருங்கே கூடும் கூடற்பதியாகிய பவானியில்
    வாழும் பெருமாளே.

  • @kumaresan8618
    @kumaresan8618 2 роки тому +1

    ஒம்நமசிவாய.ஓம்விநகா.ஓம்முருகா

  • @swamiscollectionswaminatha4018
    @swamiscollectionswaminatha4018 3 роки тому

    சிவ சிவ
    அற்புதமான குரல் வளம்
    ஈசன் திருக்கருணை !!

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 3 роки тому

    முருகா முருகா

  • @nathanjsd8412
    @nathanjsd8412 2 роки тому

    பங்கஜவல்லி

  • @murugametaltrading1961
    @murugametaltrading1961 4 роки тому +2

    Muruga saranam sri math arunagirinathar guruve saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому

    சக்திகணபதிதுணை தம்பிவேலவன் போற்றி 🌺🌺🌺இந்த திருப்புழை தந்தமைக்கு
    மிக்கநன்றி இதில் ஒரு பாடல் கந்தர் அநுபூதியில் உள்ள (17)வது பாடல் நன்றிகள்
    வாழ்கபல்லாண்டு வாழ்கநலமோடு 🌺🌺🌺 Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🍎🍎🍎

  • @anandhisakthivel4532
    @anandhisakthivel4532 5 років тому +6

    முருகா போற்றி முத்து குமரா போற்றி

  • @dearkrish1
    @dearkrish1 4 роки тому

    Very nice! Muruga Kumara Guha!

  • @ngopalakrishnan8259
    @ngopalakrishnan8259 Рік тому

    The using has made the meaning of the verses clear. Thank you singers. I am very happy.

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 4 роки тому +5

    19.25
    தசையா கியகற் றையினால் முடியத்
    தலைகா லளவொப் ...... பனையாயே
    தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்
    றவிரா வுடலத் ...... தினைநாயேன்
    பசுபா சமும்விட் டறிவா லறியப்
    படுபூ ரணநிட் ...... களமான
    பதிபா வனையுற் றநுபூ தியிலப்
    படியே யடைவித் ...... தருள்வாயே
    அசலே சுரர்புத் திரனே குணதிக்
    கருணோ தயமுத் ...... தமிழோனே
    அகிலா கமவித் தகனே துகளற்
    றவர்வாழ் வயலித் ...... திருநாடா
    கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்
    கமலா லயன்மைத் ...... துனவேளே
    கருணா கரசற் குருவே குடகிற்
    கருவூ ரழகப் ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    தசையாகிய கற்றையினால் முடிய ... சதையின் திரளால் முழுமையும்
    தலைகால் அளவு ஒப்பனையாயே ... தலை முதல் கால் வரை
    அலங்காரமாகவே அமையப்பெற்று,
    தடுமாறுதல் சற்று ஒருநாள் ... சஞ்சலம் என்பது கொஞ்சமேனும்
    ஒருநாள் கூட
    உலகில் தவிரா உடலத்தினை நாயேன் ... இந்த உலகைவிட்டு
    நீங்காத (எப்போதும் தடுமாறும்) உடம்பை உடைய அடி நாயேன்
    பசுபாசமும் விட்டு ... அகங்காரத்தையும், பந்தங்களையும் விட்டு
    அறிவால் அறிய ... ஞானத்தால் அறியப் பெறுகின்ற
    படுபூ ரண நிட்களமான ... பூரணமானதும், உருவம் இல்லாததும்
    ஆகிய
    பதிபாவனை உற்று ... பரம்பொருளாம் கடவுள் தியானத்தை
    மேற்கொண்டு,
    அநுபூ தியில் அப்படியே அடைவித்து அருள்வாயே ... அந்த
    அனுபவ ஞானத்தில் என் சிந்தனை மாறாத வண்ணம் அப்படியே
    சேர்ப்பித்து அருள் புரிவாயாக.
    அசலேசுரர் புத்திரனே ... அசைவே இல்லாத கயிலைமலைக் கடவுள்
    சிவனார் (அசலேசுரர்*) பெற்ற புத்திரனே,
    குணதிக்கு அருணோதய ... கிழக்குத் திசையில் தோன்றுகின்ற
    உதயசூரியனின் செம்மை ஒளி உடையவனே,
    முத்தமிழோனே ... இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்க் கடவுளே,
    அகில ஆகம வித்தகனே ... சகல வேதாகமங்களிலும் வல்லவனே,
    துகளற்றவர்வாழ் வயலித்திருநாடா ... குற்றமற்றவர்கள் வாழும்
    வயலூர் என்ற திருத்தலத்தில் வாழ்வோனே,
    கசிவார் இதயத்து அமிர்தே ... உள்ளம் கசிபவர்களது மனத்தில்
    ஊறுகின்ற அமிர்தமே,
    மதுபக் கமலா லயன்மைத்துனவேளே ... வண்டுகள் மொய்க்கும்
    தாமரை மலரை ஆசனமாக உடைய பிரமனின் மைத்துனன்** முறையில்
    உள்ள கந்த வேளே,
    கருணாகர சற்குருவே ... கருணை நிறைந்தவனே, சற்குரு மூர்த்தியே,
    குடகிற் கருவூர் அழகப் பெருமாளே. ... மேற்குத் திசையில் உள்ள
    கருவூரில்*** வீற்றிருக்கும் அழகுப் பெருமாளே.
    * திருவாரூரில் உள்ள சிவன் கோயிலின் மூலவருக்கு அசலேசுரர் என்று பெயர்
    - திருவாரூர்ப் புராணம்.
    ** பிரமன் திருமாலின் மகன். முருகன் திருமாலின் மருமகன். எனவே பிரமனுக்கு
    முருகன் மைத்துனன்.
    *** கருவூர் திருச்சிக்கு மேற்கே 45 மைலில் உள்ள கரூர் ஆகும்.
    சோழநாட்டின் தலைநகரான வஞ்சியும் இதுவே.

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 4 роки тому +2

    15.00
    இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
    இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே
    திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே
    திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ
    அரியயற் கறிதற் ...... கரியானே
    அடியவர்க் கெளியற் ...... புதநேயா
    குருவெனச் சிவனுக் ...... கருள்போதா
    கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி ... நல்வினை, தீவினை
    இரண்டின் காரணமாக ஏற்படும் பிறவி என்ற கடலில் மூழ்கி,
    இடர்கள்பட்டு அலையப் புகுதாதே ... துயரங்கள் ஏற்பட்டு
    அலைந்து திரியப் புகாமல்,
    திருவருட் கருணைப் ப்ரபையாலே ... உனது திருவருளாம்
    கருணையென்னும் ஒளியாலே
    திரமெனக் கதியைப் பெறுவேனோ ... உறுதியான வகையில்
    நான் நற்கதியைப் பெறமாட்டேனோ?
    அரியயற்கு அறிதற்கு அரியானே ... திருமாலும் பிரம்மாவும்
    அறிவதற்கு அரியவனே,
    அடியவர்க்கு எளிய அற்புதநேயா ... உன் அடியவர்க்கு எளிதாகக்
    கிட்டும் அற்புதமான நண்பனே,
    குருவெனச் சிவனுக்கு அருள்போதா ... குருமூர்த்தியாக
    சிவபிரானுக்கு அருளிய ஞானாசிரியனே,
    கொடுமுடிக் குமரப் பெருமாளே. ... கொடுமுடித் தலத்தில்*
    வீற்றிருக்கும் பெருமாளே.
    * கொடுமுடி ஈரோட்டிலிருந்து தென்கிழக்கே 23 மைலில் உள்ளது.

  • @umamaheshwariganesan7493
    @umamaheshwariganesan7493 4 роки тому +4

    பாட்டுகளும் பக்க வாத்தியங்களும் மிக மிக அருமையாக இருந்தது

  • @nivirana5486
    @nivirana5486 4 роки тому

    Migavum arumai. Siva... Nathathodu inainthu ketka migavum arputham Siva.... Cumbum Panniru thirumurai mandrathil ketta yengal guruvin kural... Indru kettu rasippathil migavum magilchi Siva. Thiruchitrambalam...

  • @sivailavarasusivailavarasu6177
    @sivailavarasusivailavarasu6177 2 роки тому

    ஓம் அருணகிரிநாத மகரிஷி யே நமோ நமஹ

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 4 роки тому +5

    அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும்
    அறிவினுணர்ந் தாண்டுக் ...... கொருநாளில்
    தவசெபமுந் தீண்டிக் ...... கனிவாகிச்
    சரணமதும் பூண்டற் ...... கருள்வாயே
    சவதமொடுந் தாண்டித் ...... தகரூர்வாய்
    சடுசமயங் காண்டற் ...... கரியானே
    சிவகுமரன் பீண்டிற் ...... பெயரானே
    திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    அவசியமுன் வேண்டிப் பலகாலும் ... உன்னைத் தொழுவது
    அவசியமென அறிந்து பலமுறையும் பிரார்த்தித்து,
    அறிவினுணர்ந்து ஆண்டுக்கொரு நாளில் ... எனது அறிவினில்
    உன்னை உணர்ந்து வருஷத்திற்கு ஒரு நாளாவது
    தவசெபமுந் தீண்டிக் கனிவாகி ... தவ ஒழுக்கத்தையும்
    ஜெபநெறியையும் மேற்கொண்டு உள்ளம் கனிந்து,
    சரணமதும் பூண்டற்கு அருள்வாயே ... உனது திருவடிகளை
    மனத்தே தரிப்பதற்கு நீ அருள்வாயாக.
    சவதமொடுந் தாண்டித் தகர் ஊர்வாய் ... சபதம் செய்து இந்த
    ஆட்டை* அடக்குவேன் என்றுரைத்து, குதித்து ஆட்டின் மீது ஏறி
    அதனை வாகனமாகச் செலுத்துவாய்.
    சடுசமயங் காண்டற்கு அரியானே ... ஆறு** சமயத்தவராலும்
    காணுதற்கு அரியவனே,
    சிவகுமர அன்பு ஈண்டிற் பெயரானே ... சிவகுமாரனே, உன்னை
    அன்பு கொண்டு நெருங்கினால் நெருங்கியவரை விட்டு ஒருநாளும்
    பிரியாதவனே,
    திருமுருகன் பூண்டிப் பெருமாளே. ... திருமுருகன்பூண்டி***
    என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
    * நாரதர் செய்த யாகத்தில் தோன்றிய ஒரு முரட்டு ஆட்டுக் கிடாவை வீரபாகு
    மூலமாக பிடித்துவரச் செய்து, முருகன் அதனை அடக்கி வாகனமாகக் கொண்ட
    வரலாறு - கந்த புராணம்.
    ** ஆறு வகைச் சமயம்:
    காணாபத்யம், செளரம், கெளமாரம், சைவம், வைணவம், சாக்தம்.
    *** திருமுருகன்பூண்டி திருப்பூருக்கு வடக்கே 8 மைலில் உள்ளது.

  • @sai-en9tm
    @sai-en9tm 3 роки тому

    அப்பா ஓம் ஸ்ரீ சரவணபவ முருகா aranam ஓம் ஸ்ரீ சரவணபவ முருகா சரணம் ஓம் ஸ்ரீ சரவணபவ முருகா சரணம் ஓம் ஸ்ரீ சரவணபவ முருகா சரணம் அப்பா முருகா வேலவா குமரா வடிவேலவா கந்தா கடம்பா கதிர்வேலவா அழகு முருகா ஆறுமுகம் வேலவா தமிழ் கடவுள் முருகா கலியுக வராத ஓம் கார்த்திகேயயாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி தந்நோ ஸ்கந்த பிரோசோதயாத் எல்லாம் உன் செயல் அப்பா வேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல் நாதாந்த முடிவேல் நான்மறைகள் போற்றும் வடிவேல் நல்லதே நடக்கட்டும் அப்பா ஐ லவ் யூ அப்பா எப்போதும் என்னுடன் நீ இருந்தால் எனக்கு அது போதும் அப்பா நல்லதே நடக்கட்டும் அப்பா ஐ லவ் யூ அப்பா நல்லதே நடக்கட்டும் அப்பா ஐ லவ் யூ அப்பா

  • @s.suntharaseelan7480
    @s.suntharaseelan7480 4 роки тому +2

    Murugan thiruvadi saranam

  • @srinivasana6614
    @srinivasana6614 9 місяців тому

    அருமை

  • @ganapathikumaravel2237
    @ganapathikumaravel2237 5 років тому +4

    கேட்க இனிமையாக உள்ளது

  • @narayananmanickam5762
    @narayananmanickam5762 4 роки тому +1

    சரவணபவ

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 4 роки тому +5

    இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
    பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
    குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
    அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    இறவாமற் பிறவாமல் ... இறவாத வரம் தந்தும், மீண்டும் பிறவாத வரம்
    தந்தும்,
    எனையாள்சற்குருவாகி ... என்னை ஆண்டருளும் நல்ல
    குருவாகியும்,
    பிறவாகி ... மற்ற எல்லாத் துணைகள் ஆகியும்,
    திரமான பெருவாழ்வைத் தருவாயே ... நிலையான (ஸ்திரமான)
    முக்தியாம் மோக்ஷவீட்டை அருள்வாயாக.
    குறமாதைப் புணர்வோனே ... குறப்பெண் வள்ளியை மணந்தவனே,
    குகனேசொற் குமரேசா ... குகனே, புகழ் வாய்ந்த குமரேசனே,
    அறநாலைப் புகல்வோனே ... அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய
    நான்கு புருஷார்த்தங்களையும் உபதேசிப்பவனே,
    அவிநாசிப் பெருமாளே. ... அவிநாசியில்* வீற்றிருக்கும் பெருமாளே.
    * அவிநாசி திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 8 மைலில் உள்ளது.

  • @vasaganvasan4773
    @vasaganvasan4773 4 роки тому +1

    I like all songs. Thank you. Murugan is my favourite god.

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 Рік тому

    முதற்பாடலின் துவக்கமே....
    பிரமாதம் 🎉

  • @sekara.r8628
    @sekara.r8628 5 років тому +3

    💛✡நற்றுணையாவது நமசிவாயவே✡💛✡💛💛✡💛✡💛✡💛✡💛✡✡✡💛💛✡💛 ✡💛✡💛✡✡💛✡💛✡வாழ்க சிவம்💛✡💛✡💛✡✡💛✡✡💛✡💛✡💛

  • @olj-
    @olj- 3 роки тому +2

    Tiruppugazh list , composer - Saint Arunagirinathar
    1. 0:53 Raga sumanesharanjani
    2. 2:29 Raga desh ( or dEsh )
    3. 8:36 Raga chakravaham
    4. 11:32 Raga saraswati
    5. 14:47 Raga darbari kanada
    6. 16:35 Raga shanmukhapriya

  • @thangamanim2036
    @thangamanim2036 4 роки тому

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @anbalagannsa3757
    @anbalagannsa3757 2 роки тому +1

    அருமையாக திருப்புகழ் பாடி உள்ளீர்கள் உங்களை தொடர்பு கொள்ள கைப்பேசி நம்பர் வழங்கினால் நன்றாக இருக்கும் இந்த பாடலை மெமரியோ பதிவு செய்து கொடுத்தால் நாங்கள் தினம் கேட்டு மகிழ வசதியாக இருக்கும் அதற்கு உண்டான தொகையும் வழங்க இருக்கிறோம் நன்றி

    • @ThiruNandhiTV
      @ThiruNandhiTV  2 роки тому

      நன்றி ஐயா. ஓதுவார் ஐயாவை நேரடியாக தொடர்பு கொள்ளவும். +91 91593 56497

  • @vadivadisivam5551
    @vadivadisivam5551 4 роки тому

    thirupperum thurai sivaya namaha manikkavsa thiruvadi potri potri potri potri

  • @balaiahvengantiduraisamy559
    @balaiahvengantiduraisamy559 3 роки тому +1

    Omuruga saranam 🙏🙏🙏

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 4 роки тому +7

    காலனிடத் ...... தணுகாதே
    காசினியிற் ...... பிறவாதே
    சீலஅகத் ...... தியஞான
    தேனமுதைத் ...... தருவாயே
    மாலயனுக் ...... கரியானே
    மாதவரைப் ...... பிரியானே
    நாலுமறைப் ...... பொருளானே
    நாககிரிப் ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    காலனிடத்து அணுகாதே ... யமனுடைய ஊரை நெருங்காத
    வகைக்கும்,
    காசினியிற் பிறவாதே ... இந்தப் பூமியில் மீண்டும் பிறவாத
    வகைக்கும்,
    சீலஅகத்திய ஞான ... நற்குணம் வாய்ந்த அகத்திய முநிவருக்கு நீ
    அருளிய ஞானோபதேசம் என்ற
    தேனமுதைத் தருவாயே ... தேன் போன்று இனிக்கும் நல்லமிர்தத்தை
    எனக்கும் தந்தருள்க.
    மாலயனுக்கு அரியானே ... திருமாலுக்கும் பிரமனுக்கும் அரியவனே,
    மாதவரைப் பிரியானே ... சிறந்த தவசிரேஷ்டர்களை விட்டுப்
    பிரியாதவனே,
    நாலுமறைப் பொருளானே ... நான்கு வேதங்களின் மறை
    பொருளாக உள்ளவனே,
    நாககிரிப் பெருமாளே. ... நாககிரியாகிய திருச்செங்கோட்டில்*
    எழுந்தருளியுள்ள பெருமாளே.
    * திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து
    6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால்
    நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.
    'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே'
    - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

  • @bakthiugam4630
    @bakthiugam4630 4 роки тому

    ஓம் சரவணபவ ஓம்.நன்று.

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 4 роки тому +2

    Like it

  • @rathinamrathinam7722
    @rathinamrathinam7722 5 років тому +1

    Muruga potri muruga potri

  • @joesivam9021
    @joesivam9021 4 роки тому

    மிக அருமை, இனிமை, எளிமை, புதுமை,,.. 🙏👏👏👏

  • @pushpavenkata3175
    @pushpavenkata3175 3 роки тому

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @ramakrishnanr2741
    @ramakrishnanr2741 5 років тому +2

    அருமை ....
    ஆனந்தம் ....

  • @saktheeswarana582
    @saktheeswarana582 4 роки тому

    அனைத்தும் அருமை

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 5 років тому +1

    நன்றி

  • @sundharesanps9752
    @sundharesanps9752 3 роки тому

    💐💐💐
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karthikeyanpasupathy4057
    @karthikeyanpasupathy4057 4 роки тому

    மிகவும் அருமை

  • @manjulanithiyakumar1950
    @manjulanithiyakumar1950 4 роки тому +1

    Arumai iya

  • @yogamalar1464
    @yogamalar1464 5 років тому +1

    super

  • @dearkrish1
    @dearkrish1 4 роки тому

    Very nice!

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 4 роки тому +3

    11.30
    வண்டுபோற் சாரத் ...... தருள்தேடி
    மந்திபோற் காலப் ...... பிணிசாடிச்
    செண்டுபோற் பாசத் ...... துடனாடிச்
    சிந்தைமாய்த் தேசித் ...... தருள்வாயே
    தொண்டராற் காணப் ...... பெறுவோனே
    துங்கவேற் கானத் ...... துறைவோனே
    மிண்டராற் காணக் ...... கிடையானே
    வெஞ்சமாக் கூடற் ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    வண்டுபோற் சாரத்து அருள்தேடி ... வண்டு எவ்வாறு மலர்களின்
    தேனைத் தேடிக் களிக்கிறதோ அவ்வாறு உனது அருளை நான் தேடிக்
    களிக்குமாறும்,
    மந்திபோற் காலப் பிணிசாடி ... குரங்கு எவ்வாறு மரக்கிளைகளைத்
    தாண்ட வல்லதோ அவ்வாறே நானும் காலனின் பாசக் கயிற்றின்
    பிணிப்பைத் தாவும் வல்லமை பெறுமாறும்,
    செண்டுபோற் பாசத்துடனாடி ... செண்டாயுதத்தை* எறிந்தால்
    எவ்வாறு பகை மாய்க்கப்படுகிறதோ அவ்வாறு நான் பாசங்களுடன்
    போராடி வெல்லுமாறும்,
    சிந்தை மாய்த்தே சித்து அருள்வாயே ... அலைந்து திரியும் என்
    மனத்தை மாய்த்து சும்மா இருக்கச் செய்து மெய்யறிவைத் தந்தருள்வாயாக.
    தொண்டராற் காணப் பெறுவோனே ... உன் அடியார்களால்
    காணப்பெறும் தன்மை உடையவனே,
    துங்க வேற் கானத்து உறைவோனே ... தூய்மையான தலமாம்
    திருவேற்காட்டில் வாழ்பவனே,
    மிண்டராற் காணக் கிடையானே ... ஆணவம் மிக்கவர்களால்
    காணக் கூடாதவனே,
    வெஞ்சமாக் கூடற் பெருமாளே. ... திருவெஞ்சமாக்கூடல்** என்ற
    திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
    * திருவெஞ்சமாக்கூடல் திருத்தலம் கரூர் ரயில் நிலையத்துக்குத் தெற்கே
    12 மைலில் உள்ளது.

    • @vseenivasan1030
      @vseenivasan1030 4 роки тому +4

      ஐயா வணக்கம். பாடல் பொருள் விளக்கம். மிகவும் அருமை.

    • @joesivam9021
      @joesivam9021 4 роки тому +1

      நன்றி

    • @muraliseshasayee435
      @muraliseshasayee435 4 роки тому +1

      Arumaiyana padivu. Nandri.

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 4 роки тому

    Oom murga

  • @yesadelaide9341
    @yesadelaide9341 5 років тому +1

    please sekect aru padi vedu thirupuzal and sing

  • @vallis1170
    @vallis1170 4 роки тому

    Xl kB ku