இதயம் தொட்ட பாடல் - யார் அழைத்தது

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • இதயம் தொட்ட இன்றைய பாடல்*
    ஹரிகுமார்
    காதலென்பது
    கனவு பாதி, கவிதை மீதி ஆவது.
    காதலென்பது
    வெள்ளை நிலவில் வண்ணம் தீட்டி மகிழ்வது.
    உறங்கும்போது வந்து, விழிக்கும்போது மறைந்துவிடுவது கனவு.
    விழித்திருக்கும்போது வந்து, உறங்கும்போதும் தொடர்வது காதல்!
    உறங்கும்போது வந்து, விழித்திருக்கும்போதும் தொடர்வது?
    அவன் பாடகன்.
    அவள் ஆடலரசி.
    பாடகன் கனவுக்குள் வந்து களிநடம் இடுகிறாள்.
    கனவில் வந்தவள் கற்பனையாய்க் கலைந்துவிடவில்லை.
    உறக்கத்தில் வந்தவள் அவனை
    உறங்கவிடாமல் செய்கிறாள்.
    இசைத் தமிழையும் நாடகத் தமிழையும்
    இணைத்துப் பார்க்க
    இச்சையோடு இயற்றமிழ் எழுதுகிறது இயற்கை.
    தன் கனவு இராணியைக் கண்ணாரக் காண்கிறான் காதலன்.
    ஆளற்ற இருப்புப் பாதையில்,
    சொற்கட்டுச் சொல்ல ஒருத்தியுடன் வந்து பரதம் ஆடிக்கொண்டிருக்கிறாள்.
    மொட்டவிழ்ந்த மணம் காற்றில் பரவியது மாதிரி, ஜதியின் சப்தம் காதலனின் கவனத்தை ஈர்த்தது.
    இதயத்தில் இந்தோள இராகம் சுருதி சேர்க்கத்
    தன் கனவு இராணியின் ஜதியழைப்பில் ஓடிவருகிறான்.
    இருவரும் சந்தித்த இடைவெளியில் சிறிது நேரம் பூமிதன் சுழற்சியை நிறுத்தியது..
    அவன் இந்தோள இராகத்தை மீண்டும் இசைக்கிறான்.
    அதற்கேற்ப அவள் ஆடுகிறாள்.
    பூமி மீண்டும் சுழலத் தொடங்கியது...
    ஹிந்தோளம் எனப்படும் இராகத்தை இங்குச் சொல்லியாக வேண்டும். தமிழ்ப் பண் இந்த இராகத்தை இந்தளம் என்று கூறும். நெய்தல் பாணி என்றும் கானல் பாணி என்றும் ஹிந்தோளத்தைச் சொல்லியிருக்கின்றனர் தமிழர். பாணி என்பது ஐந்து சுரங்கள் கொண்ட இராகம். ஐந்திணைகளுள் நெய்தல் திணைக்கு உரிய பண் இது. ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் மால்கெளன்ஸ் என்று வழங்கப்படுகிறது.
    மரபிசையில் புதுமை புகுத்தியும் மரபிசையின் செவ்வியல் தன்மையின் செவி கவர் ஓசைகளைச் செப்பம் செய்து தருவதிலும் நேர்த்தி கண்டவர் இசைஞானி இளையராஜா.
    அவரது இசையில் “யார் அழைத்தது கனவு இராணியா?” என்று வியந்து பாலசுப்பிரமணியம் பாட, அதற்குப் பொருத்தமான சுரங்களையும் அகாரங்களையும் ஜானகியம்மா பாட…
    நெய்தல் திணையின் நெய்தல் பாணி என்கிற கானல் பாணி என்கிற இந்தளம் என்கிற ஹிந்தோளம் தன் சௌந்தர்யம் அனைத்தையும் கொட்டிக் கொடுத்த அழகான மெட்டு…
    படம்:
    சலங்கையில் ஒரு சங்கீதம் (1985)
    என்றென்றும் இதயத்தில் இசைஞானியின் பாடல்களுடன்
    உங்கள் இசைரசிகன்.
    (பாடல்களின் உரிமை இசைஞானிக்கு!
    கேட்கும் உரிமை இசை நெஞ்சங்களுக்கு!)

КОМЕНТАРІ •