வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே | TAMIL CHRISTAN SONG | JOHNSAM JOYSON | FGPC NAGERCOIL
Вставка
- Опубліковано 11 лют 2025
- SONG LYRICS
வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே
ஆம் என்று இருக்கின்றதே
வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே
ஆமேன் என்றும் இருக்கின்றதே
அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும்
அவர் உண்மையுள்ள தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் ஒன்றும் தவறாதே
ஆமேன் ஆமேன்
வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமேன்
ஆமேன் ஆமேன்
இயேசு சொன்னதெல்லாம் ஆமேன்
1. செத்துப்போனதாம் சாராளின் கர்ப்பத்தை
உயிர்ப்பித்ததே அவர் சொன்ன வார்த்தையே
குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே
2. துரத்தப்பட்ட தாவீதின் தலையை
உயர்த்தியதே அவர் சொன்ன வார்த்தையே
குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே
3. இடிக்கப்பட்ட யோசேப்பின் வாழ்வை
கட்டுவித்ததே அவர் சொன்ன வார்த்தையே
குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே