பிற்பகல் 1.00 மணி DD தமிழ் செய்திகள் [28.12.2024]

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024
  • 1) மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம்
    2) குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மன்மோகன் சிங்கிற்கு இறுதி மரியாதை
    3) மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு வெளிநாட்டு தலைவர்கள் இறுதி மரியாதை - மலர் அஞ்சலி வைத்து மரியாதை செலுத்தினார்கள்
    4) மறைந்த மன்மோகன் சிங்கிற்கு தில்லியில் நினைவிடம் அமைக்க நிலம் ஒதுக்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு
    5) புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் வர, அச்சப்படும் நிலைதான் தற்போதும் உள்ளது - மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
    6) மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் - அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர் என் ரவி நேரில் ஆய்வு
    7) மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு மத்திய இணையமைச்சர் எல் முருகன் நினைவஞ்சலி - தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர் என புகழாரம்
    8) விஜய்காந்த் நினைவிடத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாநிலத்தலைவர் அண்ணாமலை மலர் அஞ்சலி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
    9)‍ தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பத்து லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா - கல்வி, சுற்றுலா, மருத்துவத்திற்காக செல்பவர்களுக்கு முன்னுரிமை
    10) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் - இந்திய இளம் வீரர் நிதிஷ்குமார் அபார சதம்

КОМЕНТАРІ •