"மதீனாவில் ஒரு நாள்" - நபிகளின் வாழ்வில் நடைபெற்ற சம்பவம் ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

Поділитися
Вставка
  • Опубліковано 7 чер 2024
  • மதீனாவில் ஒருநாள் நபிகளின் வாழ்வில் நடைபெற்ற சம்பவம்.
    00:00 | Isai Murasu Speech
    07:28 | Oru Naal Madina Song
    -----------------------------------------------------------------------------------------------------------------
    ஒருநாள் மதினா நகர்தனிலே
    ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே
    பெருமான் நபிகள் பகர்ந்தார்கள்
    பண்புடன் தோழர்கள் மத்தியிலே
    ------------------------------------------------------------------------------------------------------------------
    கவிஞர் நூர் மதிதாசன் அவர்கள் எழுதிய பாடல்.
    இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்களின் கம்பீரக் குரலில் பாடிய, மதீனாவில் ஒருநாள் நபிகளின் வாழ்வில் நடைபெற்ற ஓர் சம்பவத்தை விளக்கிக் கூறும் "ஒருநாள் மதினா நகர்தனிலே.. ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே" என்ற பாடல்.
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    Lyrics
    ஒருநாள் மதினா நகர்தனிலே
    ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே
    பெருமான் நபிகள் பகர்ந்தார்கள்
    பண்புடன் தோழர்கள் மத்தியிலே
    1
    உதய நிலவின் குளிராக
    உலகில் தோன்றிய உம்மி நபி
    நீதி மறையின் திருவுருவாய்
    நிதமும் வாழ்ந்த தூதர் சொன்னார்
    இறுதி நாள் நெருங்கி வருகிறது
    இறைவன் அழைப்பும் தெரிகிறது
    கருணை இறைவன் சொல்கேட்டு
    கடமையை செய்ததில் குறை உள்ளதோ
    ஒருநாள் மதினா நகர்தனிலே
    ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே
    2
    யாருக்கும் தவறுகள் செய்தேனோ
    எவருக்கும் துன்பம் தந்தேனோ
    கூறுங்கள் அன்பு தோழர்களே
    குறைகள் இருந்தால் கூறுங்கள்
    எப்போதேனும் சிறுபிழைகள்
    என் வாழ்வில் ஏதும் செய்தேனோ
    தப்பாது இங்கே சொல்லிடுவீர்
    தயங்காமல் அதனை ஏற்றிடுவேன்
    ஒருநாள் மதினா நகர்தனிலே
    ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே
    3
    அதுகேட்ட தோழர்கள் நெஞ்சங்கள்
    அதிர்ந்தது அங்கமெல்லாம் நடுங்கியே
    நீதி தவறாத நாயகமே
    தாங்கள் நன்மையின்றி தீமை செய்ததில்லை
    அப்போது ஒருவர் எழுந்து நின்றார்
    அவர்தான் உக்காஷா எனும் தோழர்
    ஒப்பில்லாத இறைத் தூதே
    ஓர் குறை எனக்கு உண்டு என்றார்
    4
    சொன்னதும் சஹாபா பெருமக்கள்
    சினத்தால் துடித்து எழுந்தார்கள்
    அண்ணல் பெருமான் அமைதியுடன்
    ஆத்திரம் வேண்டாம் அமர்க என்றார்
    என்ன குறைகள் இருந்தாலும்
    இயம்புக அதனை நீக்கிடலாம்
    திண்ணமாய் அல்லா அறிந்திடுவான்
    தீமைகள் இன்றி காத்திடுவான்
    5
    உத்தம நபியே இரசூலே
    ஒட்டகை மேல் தங்கள் இருக்கையிலே
    சித்தம் மகிழ்வோடு நான் பிடித்து
    சீராய் மணலில் நடக்கையில்
    சாட்டையை சுழற்றி ஒட்டகையை
    சட்டென தாங்கள் அடித்தீர்கள்
    ஒட்டி நடந்த என் உடம்பில்
    ஓர் அடி விழுந்தது அப்போது
    6
    அதற்கு பதிலாய் தங்களை நான்
    அடித்திட அனுமதி வேண்டுகிறேன்
    எதிலும் நீதி தவறாத
    இரசூல் நபியதை ஏற்றார்கள்
    உண்மை உரைத்தீர் என் தோழரே
    உமது உள்ளம் சாந்தி பெற
    என்னை அடியும் என்றார்கள்
    இசைவாய் அங்கே நின்றார்கள்
    7
    என்னை அடித்த சாட்டை இங்கே
    இல்லை தங்களின் வீட்டில் உண்டு
    எண்ணம் நிறைவேற வேண்டுமதை
    ஏந்தலே எடுத்து வரச் சொல்லுங்கள்
    இனிய பிலாலே ஏகிடுவீர்
    எடுத்து வாரும் சாட்டைதனை
    கண்ணீரோடு பிலால் விரைந்தார்
    கருணை நபியின் இல்லத்திற்கே
    8
    அங்கே அன்னை ஃபாத்திமாவும்
    ஆருயிர் மக்கள் ஹசன் ஹுசைனும்
    பாங்காய் மூவரும் வீட்டினிலே
    பண்பின் உறைவிடமாய் இருந்தார்
    பாசமிகுந்த அன்பர் பிலால்
    பரிவுடன் ஃபாத்திமா எதிர் நின்று
    நேசம் தவழ்ந்திடும் சபைதனிலே
    நடந்ததை நயமுடன் எடுத்துரைத்தார்
    9
    செய்தியைச் செவியில் கேட்டவுடன்
    சிந்தையில் வேதனை பொங்கியது
    தூய என் தந்தை உடல் நலமில்லை
    தண்டனை எப்படி தாங்கிடுவார்
    என்றே புலம்பி சாட்டைதனை
    எடுத்து பிலாலிடம் தரும்போது
    நன்றே சொல்லும் உக்காஷாவிடம்
    நானே அடியை ஏற்றிடுவேன்
    11
    அருமை குழந்தைகள் ஹசன் ஹுசைனும்
    அழுது கண்ணீர் வடித்தார்கள்
    பெருமை நிறைந்த பாட்டனாருக்கு
    பதிலாய் எங்களை அடிக்கட்டுமே
    துயரம் மேலிட சாட்டைதனை
    துரிதமுடன் பிலால் எடுத்துச் சென்றார்
    பயமில்லாத உக்காஷாவிடம்
    பெருமான் நபிகள் கொடுத்தார்கள்
    12
    சாட்டையை கையில் வாங்கியதும்
    சாந்த நபியிடம் அவர் சொன்னார்
    சட்டை இல்லாது நான் இருந்தேன்
    செம்மலே தாங்கள் அடிக்கையிலே
    கேட்டதும் காத்தமுன் நபியவர்கள்
    கனிவுடன் சட்டையை நீக்கியதும்
    சாட்டையை தூக்கி எறிந்துவிட்டு
    தாவி அணைத்தார் ஆவலுடன்
    13
    நுபுவத் ஒளிரும் நபி முதுகில்
    நினைத்தது போல முத்தமிட்டார்
    உணர்ச்சியில் உள்ளம் குளிர்ந்திடவே
    உவகையில் மீண்டும் முத்தமிட்டார்
    சுற்றிலும் நின்ற சஹாபாக்கள்
    சோபனம் கூறி வாழ்த்தினரே
    மட்டில் அடங்கா மகிழ்ச்சியிலே
    மஸ்ஜிது நபவி திளைத்ததுவே
    14
    நானிலம் கண்ட நபி நாதர்
    நண்பர் உக்காஷா மனம் மகிழ
    இனிய சொர்க்கம் உமக்குண்டு
    என்றே கூறி துவா செய்தார்
    ஸல்லல்லாஹு அலா முஹம்மது
    ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்
    ஸல்லல்லாஹு அலா முஹம்மது
    ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்
    ஸல்லல்லாஹு அலா முஹம்மது
    யாரப்பி ஸல்லி அலைஹிவ ஸல்லிம்
    ********************************************************************

КОМЕНТАРІ • 12

  • @sulthanali5992
    @sulthanali5992 2 місяці тому +4

    இந்த பாடலை இப்பவும் கேட்கூடிய பாக்கியத்தை தந்த அல்லாஹ்விற்கே எல்லாபுகலும்.அஸ்ஸலாமு அலைக்கும் ஜீ உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @sadiqbasha5314
    @sadiqbasha5314 2 місяці тому +2

    Mashallah so beautiful song

  • @gulampeermohamed954
    @gulampeermohamed954 2 місяці тому +5

    அருமையான பாடல் அவர்கள் பாடும் அழகே தனி தான் அவர்களின் பாடலுக்கும் பாடலின் கருத்தும் அவரின் குரலும் அவர்கள் தேர்ந்தெடுத்த அனைத்து பாடல்களையும் கேட்க கேட்க மனம் அமைதி பெறும் வல்ல அல்லாஹ் இப்புனித ரமலானின் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு சொர்க்கத்தின் பூங்கா வை கொடுப்பாயாக நாம் துவாச்செய்வோம் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் அஸ்ஸலாமு அலைக்கும்.

  • @siyavudeen
    @siyavudeen 2 місяці тому +3

    உபதேசத்தூடன்கூடியபாடலைஎத்தனைமுறைகேட்டாலும்இனிமையாக உள்ளது.மர்ஹீம் நாகூராருக்கு வாழ்த்துக்கள்.

  • @shajahan5887
    @shajahan5887 2 місяці тому +5

    கம்பீரத்தின் உச்சம்😮 இதை மனமுடன் பதிவிற்ற என் மரியாதைக்குரிய HAJITH IBRAHIM அவர்களுக்கு என் மனமார்ந்த ஸலாம் கூறிக்கொள்கிறேன் ❤🎉

  • @zubaers518
    @zubaers518 2 місяці тому +3

    Masha Allah my favourite song

  • @syedibrahim6937
    @syedibrahim6937 2 місяці тому +3

    ❤❤

  • @AbdulSamad-jl8ki
    @AbdulSamad-jl8ki 2 місяці тому +3

    Super cute song ❤

  • @ansarim6991
    @ansarim6991 2 місяці тому +3

  • @hjafraan7539
    @hjafraan7539 2 місяці тому +4

    Isai murasu paaadal intha ramalanla video pooduga anan avargalle

  • @user-gm2ys5hl6z
    @user-gm2ys5hl6z 2 місяці тому +3

    மிகவும் சிறப்பு மிக்க பாடல் சூப்பர்