சநாதனத்தை பாதுகாத்த உதயநிதி
Вставка
- Опубліковано 11 лют 2025
- சநாதனத்தை பாதுகாத்த உதயநிதி
சநாதன தர்மம் எம்பதை எவராலும் அழிக்க இயலாது!! அப்படி ஒன்று இல்லை என்று கூறுபவர்கள், இல்லாத ஒன்றை அழிக்க இயலாது என்பதை கூடவா தெரியாமல் இருப்பார்கள்?! அப்படி என்றால் இருக்கின்றது என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஆனால் அழிப்பதற்கு அவர்களுக்கு விருப்பமா என்றால், அதெல்லாம் இல்லை!! பொதுமக்களை குழப்பி, அந்த குழப்பத்தில் மீன் பிடிக்க நினைப்பது ஒன்றே இவர்கள் நோக்கமே ஒழிய, சநாதனத்தை எல்லாம் அவர்களைப் போல போற்ற யாராலும் இயலாது!!
வர்ணாசிரம தர்ம கோட்பாடுகள் எவ்வளவு தூரம் உண்மை என்பதை நிலைநாட்டி உள்ளார் உதயநிதி
இப்ப வீரமணி, திருமாவளவன், சுபவீர பாண்டியன், லொட்டு லொசுக்கு ரூ. 200 ரகங்கள் இதை பற்றி என்ன சொல்ல போகின்றன?!
வெட்கம் மானம் சூடு சொரணை என்று ஏதாவது இருந்தால், சநாதனதர்ம ஒழிப்பு மாநாட்டை நடத்திய நாத்திக கும்பல், இதை கடுமையாக கண்டித்திருக்க வேண்டாமா என்ன?
அவர்களும் செய்ய மாட்டார்கள்!! ஏன் தெரியுமா? அவர்களுக்கும் தெரியும் ப்ராஹ்மணர்கள் உத்தமர்கள் என்பது. அதனால், தோழமை சுட்டல் கூட இருக்காது!!
இதனால் நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், எல்லோரும் சநாதனத்தை ஆதரித்து, வர்ணாசிரம முறைப்படி வாழ்ந்து, மோக்ஷத்திற்கு செல்லும் வழியை பார்க்கவும். இதற்கும் இந்த உலக வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை.
யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு சம்பாதித்துக் கொள்ளுங்கள். ஆனால் பிறப்பிறப்பு சுழற்சியில் விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள், அம்மையார் துர்கா ஸ்டாலின் போலவும், தம்பி உதயநிதி ஸ்டாலின் போலவும் செய்ய வேண்டிய கர்மாக்களை செவ்வனே செய்து மோக்ஷ மார்கத்தை நோக்கி நடை பயணம் மேற்கொள்ளுங்கள்!!