"கொங்கை திரங்கி" காரைக்கால் அம்மையார் அருளியது நன்றி குரலிசை by. கரூர் சாமிநாதன் ஓதுவார் அவர்கள்
Вставка
- Опубліковано 9 лис 2024
- தலம் : ஆலங்காடு
அ௫ளியவர் : காரைக்கால் அம்மையார் (பேயார்)
திருமுறை : பதினொன்றாம்-திருமுறை
பண் : நட்டபாடை
கொங்கை திரங்கி நரம்பெழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு பரடுயர்
நீள்கணைக் காலோர்பெண்பேய்
தங்கி அலறி உலறுகாட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும்வீசி
அங்கங் குளிர்ந்தனல் ஆடும்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே. 1
கள்ளிக் கவட்டிடைக் காலைநீட்டிக்
கடைக்கொள்ளி வாங்கி மசித்துமையை
விள்ள எழுதி வெடுவெடென்ன
நக்கு வெருண்டு விலங்குபார்த்துத்
துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச்
சுட்டிட முற்றுஞ் சுளிந்துபூழ்தி
அள்ளி அவிக்கநின் றாடும்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே. 2
வாகை விரிந்துவெண் ணெற்றொலிப்ப
மயங்கிருள் கூர்நடு நாளையாங்கே
கூகையொ டாண்டலை பாடஆந்தை
கோடதன் மேற்குதித் தோடவீசி
ஈகை படர்தொடர் கள்ளிநீழல்
ஈமம் இடுசுடு காட்டகத்தே
ஆகங் குளிர்ந்தனல் ஆடும் எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே. 3
குண்டிலோ மக்குழிச் சோற்றைவாங்கிக்
குறுநரி தின்ன அதனைமுன்னே
கண்டிலோம் என்று கனன்றுபேய்கள்
கையடித் தோடிடு காடரங்கா
மண்டலம் நின்றங் குளாளம்இட்டு
வாதித்து வீசி எடுத்தபாதம்
அண்டம் உறநிமிர்ந் தாடும்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே. 4
விழுது நிணத்தை விழுங்கியிட்டு
வெண்தலை மாலை விரவப்பூட்டிக்
கழுதுதன் பிள்ளையைக் காளியென்று
பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்
புழுதி துடைத்து முலைகொடுத்துப்
போயின தாயை வரவுகாணா
தழுதுறங் கும்புறங் காட்டில்ஆடும்
அப்பன் இடந்திரு ஆலங்காடே. 5
பட்டடி நெட்டுகிர்ப் பாறுகாற்பேய்
பருந்தொடு கூகை பகண்டைஆந்தை
குட்டி யிடமுட்டை கூகைபேய்கள்
குறுநரி சென்றணங் காடுகாட்டில்
பிட்டடித் துப்புறங் காட்டில்இட்ட
பிணத்தினைப் பேரப் புரட்டிஆங்கே
அட்டமே பாயநின் றாடும்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே. 6
சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப்பேய்
சூழ்ந்து துணங்கையிட் டோடிஆடித்
தழலுள் எரியும் பிணத்தைவாங்கித்
தான்தடி தின்றணங் காடுகாட்டிற்
கழல்ஒலி ஓசைச் சிலம்பொலிப்பக்
காலுயர் வட்டணை இட்டுநட்டம்
அழல்உமிழ்ந் தோரி கதிக்கஆடும்
அப்பன் இடந்திரு ஆலங்காடே. 7
நாடும் நகரும் திரிந்துசென்று
நன்னெறி நாடி நயந்தவரை
மூடி முதுபிணத் திட்டமாடே
முன்னிய பேய்க்கணம் சூழச்சூழக்
காடுங் கடலும் மலையும் மண்ணும்
விண்ணுஞ் சுழல அனல்கையேந்தி
ஆடும் அரவப் புயங்கன்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே. 8
துத்தங் கைக்கிள்ளை விளரிதாரம்
உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச்
சச்சரி கொக்கரை தக்கையோடு
தகுணிதம் துந்துபி தாளம்வீணை
மத்தளங் கரடிகை வன்கைமென்றோல் தமருகங்
குடமுழா மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே. 9
புந்தி கலங்கி மதிமயங்கி
இறந்தவ ரைப்புறங் காட்டில்இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமைசெய்து
தக்கவர் இட்டசெந் தீவிளக்கா
முந்தி அமரர் முழவின்ஓசை
திசைகது வச்சிலம் பார்க்கஆர்க்க
அந்தியில் மாநடம் ஆடும்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே. 10
ஒப்பினை இல்லவன் பேய்கள்கூடி
ஒன்றினை ஒன்றடித் தொக்கலித்துப்
பப்பினை யிட்டுப் பகண்டை யாடப்
பாடிருந் தந்நரி யாழ்அமைப்ப
அப்பனை அணிதிரு ஆலங்காட்டுள்
அடிகளைச் செடிதலைக் காரைக்காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும்வல்லார்
சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே. 11
சிவாய நம ஐயா
நம் அம்மையார் காரைக்கால் மலரடிகள் போற்றி போற்றி
நம் காரைக்கால் அம்மையார் மலரடிகள் போற்றி போற்றி
சிவாய நம அம்மா🙏
பேயார்க்கு அடியேன்
நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
சிவாய நம
🌹💐🌹💐🌷🌹💐🌷🌹🌹💐🌷🙏🙏🙏🙏🙏
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே 👣🙇🙏🌷🌸💐🌹🌺🌻
nandri swainathan oothuvar iyya atumyiyana divine voice
சிவ சிவ 🙏
💐🌹🌷🙏🙏🙏🙏
🌷💐🌹🙏sivyanama
கரூர் சாமிநாதன் ஓதுவார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏
சிவாய நம ஐயா🙏
சிவ சிவ
பேயார்க்கு அடியேன்
சிவாய நம 🙏
atumyiyana pathiham beyond words time nothing equal or above absolutely unique spiritually extra ordinary , muthi tharum pathiham thiruchitrambalam
சிவாய நம🙏
திருச்சிற்றம்பலம் மகனே
தில்லையம்பலம் ஐயனே🙏
atumyiyana pathivu the rarest one in the whole universe aedian contemplated past to listen , ; atputha coothu ;; thirualamgardae our thanthiyar for ever always nandri iyya thiruchitrambalam
சிவ சிவ🙏
சிவாயநம ஐயா
நமசிவாய ஐயா🙏
🔱🙏💐🌹சிவாய நம🐄🌿🙏🔱📿
சிவாய நம ஐயா🙏
Slve
சிவாய நம ஐயா