Thiruppugazh Kattazhagu Vittu (thiruchchendhUr) - திருப்புகழ் கட்டழகு விட்டு (திருச்செந்தூர்)

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2023
  • Thiruppugazh Kattazhagu Vittu (thiruchchendhUr) - திருப்புகழ் 38 கட்டழகு விட்டு (திருச்செந்தூர்)
    Written by - Saint Arunagirinadhar
    Music Programming ,Mixing and Mastering - Rithwik Sreekumar
    Music Studio - AMP Studios
    Digital 2D Arts - Theena
    Video editing and graphics - Maharajan M - mmaharajan79@gmail.com, +91 80568 13234 @sujimahi
    Vocals - Venkatesan Thirunaukkarasu Produced by - Yaazh Music EMAIL - onlyvocalmusic@gmail.com - / yaazhmusic
    Meanings in Tamil and English by Sri Gopala Sundaram (Kaumaram.com)
    You can now listen and follow Yaazh Music on…
    Spotify - open.spotify.com/album/0yuqlH...
    Apple Music - itunes.apple.com/album/id/1632...
    Amazon Music - music.amazon.com/albums/B0B5H...
    JioSaavn - www.jiosaavn.com/album/thirup...
    கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
    இட்டபொறி தப்பிப் பிணங்கொண் டதின்சிலர்கள்
    கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் ...... முறையோடே
    வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
    மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
    விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... வுணர்வேனோ
    பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
    முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
    பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் ...... முடிசாயத்
    தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
    நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
    சற்சமய வித்தைப் பலன்கண் டுசெந்திலுறை ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்து ... இறுகிய கட்டுக்கோப்பாய்
    இருந்த அழகிய உடல் தளர்ந்துபோய், அவ்வுடலில் இருந்துகொண்டு
    முனம் இட்டபொறி தப்பி ... முன்பு ஆட்டிவைத்த ஐந்து பொறிகளும்
    கலங்கிச் சிதறிப்போய்,
    பிணங்கொண்டதின் சிலர்கள் ... பிணம் என்ற நிலையை உடல்
    அடைந்ததும், சில பேர்கள்
    கட்டணமெ டுத்துச் சுமந்தும் ... பிணத்தைக் கூலிக்கு எடுத்துச்
    சுமந்து போக,
    பெரும்பறைகள் முறையோடே ... பெரிய பறைகள் முறைப்படியாக
    வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென ... வெட்டவிட
    வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சம் என்ற ஓசையில் முழங்க,
    மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும் ... மக்கள் ஒன்றுகூடிப்
    பிணத்தைத் தொடர்ந்தும், சிலர் செல்லும் வழியிலே புரண்டும்
    வழி விட்டுவரு மித்தைத் தவிர்ந்து ... சிலர் பிணம் செல்வதற்கு
    வழி விடுகின்றதுமான இந்தப் பொய்யான வாழ்வை விட்டு,
    உன் பதங்களுற வுணர்வேனோ ... உன் திருவடிகளை அடையும்
    வழியை நான் உணர மாட்டேனோ?
    பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்து ... பட்டு உருவிச்
    செல்லும்படி ஆணவம் கொண்ட உயரமான கிரெளஞ்சமலையை
    வேலாயுதம் பிளந்து எறிந்து,
    கடல் முற்றும் அலை வற்றிக் குழம்புங் குழம்ப ... கடல் முழுதும்
    அலை வற்றிப்போய் குழம்பாகக் போகும்படி,
    முனை பட்டஅயில் தொட்டு ... கூர்மை கொண்ட வேலாயுதத்தைச்
    செலுத்தி,
    திடங்கொண் டெதிர்ந்தவுணர் முடிசாய ... வலிமையோடு
    எதிர்த்த அசுரர்களின் முடி சாயும்படியாக,
    தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு நிர்த்தமிட ...
    அடியோடு அழியும்படி வெட்டி, தலையற்ற உடல்களும், பெரிய
    கழுகுகளும் நடனமாடவும்,
    ரத்தக் குளங்கண்டு உமிழ்ந்துமணி ... ரத்தம் குளமாகப்
    பெருகச்செய்தும், அசுரர் கிரீடங்களினின்று மணிகள் சிதறி விழ வைத்தும்,
    சற்சமய வித்தைப் பலன்கண்டு ... தேவர்களுக்கு நல்ல காலம்
    வருவதற்கான விதையைப் பலன் கிடைக்குமாறு நீ நட்டுவைத்த
    செந்திலுறை பெருமாளே. ... திருச்செந்தூர் நகரில் வீற்றிருக்கும்
    பெருமாளே.
    kattazhaku vittuth thaLarnthang kirunthumunam
    ittapoRi thappip piNangkoN dathinsilarkaL
    kattaName duththuc cumanthum perumpaRaikaL ...... muRaiyOdE
    vettavida vettak kidanjang kidanjamena
    makkaLoru mikkath thodarnthum puraNdumvazhi
    vittuvaru miththaith thavirnthun pathangaLuRa ...... vuNarvEnO
    patturuvi nettaik kravunjam piLanthukadal
    mutRumalai vatRik kuzhampung kuzhampamunai
    patta ayil thottuth thidangkoN dethirnthavuNar ...... mudisAyath
    thattazhiya vettik kavantham perungkazhuku
    nirththamida raththak kuLangkaN dumizhnthumaNi
    saRcamaya viththaip palankaN dusenthiluRai ...... perumALE.
    .

КОМЕНТАРІ • 73

  • @dangerous238
    @dangerous238 8 місяців тому +35

    Innum neraiya thirupugazl potunga ayya

    • @jayakumarithanikachalam7596
      @jayakumarithanikachalam7596 6 місяців тому +1

      ஆமாம்.... உங்களின் இந்த படைப்புகள் மிக மிக அருமையோ அருமை...👌👌👌👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 8 місяців тому +13

    கந்தலங்காரம் கந்தர் அனுபூதி பாட வேண்டும்🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @alangulamramasamymeena4861
    @alangulamramasamymeena4861 8 місяців тому +11

    தற்பொழுது திருச்செந்தூரில் இருக்கிறேன் ஓம் முருகா வெற்றிவேல் வீரவேல்

  • @gayulavigayulavi5585
    @gayulavigayulavi5585 8 місяців тому +6

    இந்த இசையுடன் பாடலை கேட்கும்போது என் அப்பன் முருகனின் பாதத்தை பிடித்துக் கொள்ள மனம் ஆசைபடுகிறது

  • @thilagaselvaraj2985
    @thilagaselvaraj2985 8 місяців тому +7

    அருமையான குரல்,,,,, அற்புதமான இசை,,,, தெளிவான விளக்கம்,,,,, அழகான art work,,,,, அருணகிரிநாதரின் வரிகளில் கேட்கவும் பார்க்கவும் மிக அற்புதம்,,,,,, இதேபோன்று மேலும் பல திருப்புகழை பதிவு செய்யவும்,,, வாழ்த்துக்கள்,,,, சிங்காரவேலனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rucir4895
    @rucir4895 8 місяців тому +7

    தேனினும் இனிய தித்திக்கும் திருப்புகழை, மிக அற்புதமாக பாடி, அதை கேட்கும் பாக்கியத்தை தந்தமைக்கு நன்றி 🙏
    வாழ்க வளமுடன்!

  • @priyadharshini8987
    @priyadharshini8987 8 місяців тому +12

    Was waiting for a thirupugazh today as it is Maha Sasti from our channel ❤❤❤. Such a Divine and magical voice ❤❤❤. The 3D effects, music ,voice elamee super ❤❤. முருகர் உங்களை மென் மேலும் உயர செய்வார்.❤❤. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🌈🌈❤️❤️

  • @pavithrankpavi
    @pavithrankpavi 8 місяців тому +3

    தரம் இந்த திருப்புகழ் நான் எதிர்ப்பாக்கல நான் திருச்செந்தூர் திருப்புகழ்ல எதாவது வரும்னு நெனச்சேன்... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @partha98
    @partha98 8 місяців тому +3

    Waiting for next Thirupugazh bro 🦚🐓🚩⚜️🙏

  • @SivaNanthiniSamiathal
    @SivaNanthiniSamiathal 8 місяців тому +2

    I would like to thank from bottom of my heart... because of this channel I started to read thirupugal...it's been a blessing for me in my life... can't thank enough....

  • @AnandRaj-vg9zz
    @AnandRaj-vg9zz 8 місяців тому +2

    ஆக ஆக அமுதம் ஆனந்தம் புதிதாக ஆரம்பம் திருப்புகழ் வாழ்க வளமுடன் திருமழபாடி வஜ்ரதம்பேஸ்வர் ஆனந்த்

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 3 місяці тому +1

    அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @PriyaDharshini-bf6kr
    @PriyaDharshini-bf6kr 8 місяців тому +2

    Waiting for long time for your thirupugazh. Remba nandri 🙏. OM SARAVANA BHAVA NAMAHA 🙏

  • @vani-nb9cd
    @vani-nb9cd 8 місяців тому +3

    முருகா முருகா முருகா முருகா முருகா ❤

  • @dadofvithu
    @dadofvithu 8 місяців тому +1

    செந்திலுறை பெருமானே உன் திருவடி போற்றி போற்றி 🙏

  • @vaishnavidevis3900
    @vaishnavidevis3900 8 місяців тому +3

    Super sir.....nethu full ah unga channel tha paathutu irundhu....neraiya per ku share panne .....tdy new video varavum ... I'm so happy

  • @user-uj9hq1tq8g
    @user-uj9hq1tq8g 8 місяців тому +2

    Murugan adimai forever

  • @ajishac1388
    @ajishac1388 8 місяців тому +2

    Visualization and translation is very good, apart from powerful singing. Keep it up team. ❤

  • @rajeshr2559
    @rajeshr2559 8 місяців тому +2

    வழக்கம் போல், அசத்தல்

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 8 місяців тому +2

    மிகவும அருமயான இசையும் காட்சியமைப்பும்...நன்றி..ஓம் நமச்சிவாயம்.

  • @reghungl2352
    @reghungl2352 4 місяці тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @muthukrishnansingarajha3867
    @muthukrishnansingarajha3867 Місяць тому

    good visual n music team.... keep doing your noble work for tamil n Lord

  • @selvakumarr7894
    @selvakumarr7894 8 місяців тому +2

    Superb superb bro❤....please add the thirupagz song No. Thanks you people are awesome job. I am sharing as much as possible to everyone. I expect all thirupugaz should come like this.

  • @shanmathiganeshan7827
    @shanmathiganeshan7827 8 місяців тому +2

    🙏🙏🙏 ஓம் முருக போற்றி போற்றி

  • @Loganathang-yu2sc
    @Loganathang-yu2sc 8 місяців тому +1

    கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
    இட்டபொறி தப்பிப் பிணங்கொண் டதின்சிலர்கள்
    கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் ...... முறையோடே
    வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
    மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
    விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... வுணர்வேனோ
    பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
    முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
    பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் ...... முடிசாயத்
    தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
    நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
    சற்சமய வித்தைப் பலன்கண் டுசெந்திலுறை ...... பெருமாளே.

  • @reghungl2352
    @reghungl2352 8 місяців тому +1

    அப்பனே திருச்செந்தூர் முருகா துணை

  • @jegadheesh_b2
    @jegadheesh_b2 8 місяців тому +2

    Yella thiruppugal ah yum unga version la release pannunga ayya❤. Murugar blessings yeppavum unga team ku irukkum

  • @padmaravi9502
    @padmaravi9502 8 місяців тому +2

    Super thala ,valthukkal for the music team

  • @muthukumar5512
    @muthukumar5512 7 місяців тому

    Super 👌om senthoor swamy potri 🙏

  • @mshanthi8677
    @mshanthi8677 7 місяців тому

    நன்றி நன்றி நன்றி.......

  • @keerthi712
    @keerthi712 8 місяців тому +1

    Waiting for more😊

  • @senthilkumarss1248
    @senthilkumarss1248 4 місяці тому

    பணி சிறக்கட்டும் 🎉🎉

  • @ssarvakumar
    @ssarvakumar 5 місяців тому

    ஓம் சரவணபவ போற்றி 🧡🙏

  • @Vickykalipandian
    @Vickykalipandian 8 місяців тому

    My Favourite Arulmigu Subramaniya Swamy original real life, Tiruchendur, !!

  • @manickarajag7252
    @manickarajag7252 8 місяців тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏

  • @pravi2092
    @pravi2092 8 місяців тому +1

    Jagamayai thirupugazh poduga broooo..... 🙏

  • @beautifulmonths9887
    @beautifulmonths9887 8 місяців тому

    என் அப்பா அம்மா முருகா❤🙏🥺

  • @AnandRaj-vg9zz
    @AnandRaj-vg9zz 7 місяців тому

    என்கண் முருகனின்

  • @joysswetha4595
    @joysswetha4595 8 місяців тому +1

    Pls put video for saranakamalalayam thirupugazh

  • @My_earringbox_9995
    @My_earringbox_9995 8 місяців тому

    Vel முருகன் துணை

  • @saikrishna-qh3oi
    @saikrishna-qh3oi 8 місяців тому +1

    ஆஹா கேட்க கேட்க இனிமை

  • @uamatheviapthevarajchitra3511
    @uamatheviapthevarajchitra3511 7 місяців тому

    வேல் மாறல். கந்தர் அநுபூதி பாடுங்கள் ஐயா❤ காந்த குரல்

  • @s.niranjali513
    @s.niranjali513 5 місяців тому

    Saravana bava Om ❤️🙏🦚

  • @manimaran91mani87
    @manimaran91mani87 8 місяців тому

    Varigaluku porulodu padhivittamaiku Nandrigal Kodi ..!
    Arumai. !

  • @gayulavigayulavi5585
    @gayulavigayulavi5585 8 місяців тому

    திருப்புகழ் இன்னும் நிறைய பாட வேண்டும்

  • @kausalyabd616
    @kausalyabd616 8 місяців тому

    Vanakkam,ungal videos anaithum arumaiyaka ullathu, digital art,making,thirupugazha meaning puriyara mathiri miga sirappaka ullathu,kandipaga ungalukku murugan thunai irunthitukkum,athanaal intha muyarchi ungalukku vanthirukkirathu.visualization is very good and apt to the song

  • @pamelamaureemootoo9218
    @pamelamaureemootoo9218 7 місяців тому

    Great singer, si sweet and so calm. God bless you.

  • @warii9295
    @warii9295 8 місяців тому

    Waiting for
    Agaramudalenauravu aimonda aksharamu- thiruppugazh

  • @gabrielemmanuel36
    @gabrielemmanuel36 8 місяців тому

    Vetrivel Murugannukku Arrogarra!

  • @ashvini8626
    @ashvini8626 8 місяців тому +1

    Kindly upload jegamayai thirupuzah..om muruga🙏

    • @ashvini8626
      @ashvini8626 4 місяці тому

      ua-cam.com/video/q3kzxnaaKj0/v-deo.htmlsi=BrDe2MAZBXwwFDRL thank you for uploaded this song

  • @22.dinakarau42
    @22.dinakarau42 8 місяців тому

    Nice initiative , also the visualization with animation is extraordinary to core may skanda bless everyone involved in this video creation.

  • @MadhineeBappu
    @MadhineeBappu Місяць тому

    ❤😊

  • @sugu35
    @sugu35 8 місяців тому

    மிகவும் அருமை ❤

  • @eswarypanisilvam94
    @eswarypanisilvam94 8 місяців тому

    ஓம் சரவண பவ🙏🏻🙏🙏

  • @shankarramaswamy5888
    @shankarramaswamy5888 8 місяців тому

    ❤🙏😍

  • @arulkumaranjayaraman7991
    @arulkumaranjayaraman7991 8 місяців тому

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 8 місяців тому

    🙏🙏wonderful

  • @roopakrishnan8494
    @roopakrishnan8494 8 місяців тому

    Nice video... Muruga🎉🎉

  • @gayulavigayulavi5585
    @gayulavigayulavi5585 8 місяців тому

    Super music semma

  • @hemalatha9328
    @hemalatha9328 8 місяців тому

    Kindly requesting your team , pls add video for Vel maral 🙏

  • @vedavallim3311
    @vedavallim3311 8 місяців тому

    Appane muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rhythmofrayarpranav6422
    @rhythmofrayarpranav6422 8 місяців тому

    Super ❤

  • @user-nk1pv7ro7k
    @user-nk1pv7ro7k 8 місяців тому

    Voice vera level anna🎉🎉

  • @velkakkatamilastrology
    @velkakkatamilastrology 4 місяці тому

    Please create jio tune for all your songs

  • @FbDesignStudio
    @FbDesignStudio 8 місяців тому

    💥💥💥💥💥💥💥

  • @lakshmikanthan4693
    @lakshmikanthan4693 8 місяців тому

    Om saravana bhava muruga

  • @nivedha1085
    @nivedha1085 8 місяців тому

    anna please put sarana Kamala layithai thirupugazh 🙏

  • @aswinisrinivasan4384
    @aswinisrinivasan4384 8 місяців тому +3

    கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
    இட்டபொறி தப்பிப் பிணங்கொண் டதின்சிலர்கள்
    கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் ...... முறையோடே
    வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
    மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
    விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... வுணர்வேனோ
    பட்டுருவி நெட்டைக் கிரவுஞ்சம் பிளந்துகடல்
    முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
    பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டத்தக்
    கிடந்தவுணர்
    ...... ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
    சற்சமய வித்தைப் பலன்கண் டுசெந்திலுறை ...... 😊 பெருமாளே.....

  • @kavita8808
    @kavita8808 5 місяців тому

    ♥️