எனது ஆசான் தொ. பரமசிவன் l Tho.Paramasivan l Tho Pa l Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 26

  • @dr.b.marirajassociateprofe9010
    @dr.b.marirajassociateprofe9010 3 роки тому +10

    தங்கள் இருவருக்கும் மாணவனாக இருந்தமை இவ்வுலகில் நான் செய்த பாக்கியம்

  • @malasuresh5634
    @malasuresh5634 2 роки тому +2

    வணக்கம் அய்யா. இப்பொழுது தான் இந்தப் பதிவைக் கேட்டேன் அய்யா. இவ்வளவு தாமதமாகக் கேட்டதற்கு மிகவும் வருந்துகிறேன். எப்பேர்பட்ட மனிதர் அய்யா தொ.ப.அவர்கள். சிற்பி ஒருவரை அழைத்து, பெரிய கல்லைக் கொடுத்து கடவுள் சிலை வடிக்க வேண்டும் என்றான் அரசன் ஒருவன். சிலை நன்றாக வரவேண்டும். காலம் குறைவாகத்தான் உள்ளது என்றாராம். அதற்கு சிற்பி கடவுள் மிக அழகாகவும், கருணை பொழியும் கண்களுடனும், குவிந்த இதழ்களைக் கொண்ட புண்ணகையுடனும், அபயக் கரங்களுடனும் இருக்கிறார் என்றாராம். அதிர்ந்து போனார் மன்னர். எப்படி நீ கல்லைப் பார்த்து இத்தனை விளக்கங்கள் கொடுக்கிறாய் என்றார் மன்னர். உங்களுக்குத்தான் கல் தெரிகிறது. என் கண்களுக்கு சிற்பம் மட்டுமே தெரிகிறது என்றானாம் சிற்பி. நிறைவான மனமும், அறிவும் உள்ளவர்கள் மற்றவர்களை தங்களின் நல்ல சிந்தனையாலேயே உயர்த்துவார்கள் என்பதற்கு தொ.ப அய்யா அவர்களே சான்று. அவரிடம் பயின்ற மாணவர்கள் புண்ணியம் செய்தவர்கள். அருமையான பதிவு, நன்றி அய்யா.

  • @sadiq61047
    @sadiq61047 6 місяців тому

    பழைய நினைவுகளில் மூழ்கி... கண்ணீர் ததும்பக் கேட்டேன்.
    நம் குருநாதர் அவர்களைப் பற்றிய நேர்மையான பதிவு.
    என்றும் மறக்க இயலாத பேராசான் அவர்.
    நினைவில் என்றும் நிற்கும் அவரை இன்னும் ஆழமாய்ப் பதித்தமைக்கு நன்றிண்ணே!
    அன்புடன்
    பேரா.சாகுல்

  • @funnyandmysterychannel5604
    @funnyandmysterychannel5604 3 роки тому +6

    தமிழ் தாயின் மானசீக மாணவர் இறைவன் ஆகி ஓராண்டு காலம் ஆகியுள்ளது 😭😭😭😭. பதிவுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @Manonmani_Speech
    @Manonmani_Speech 3 роки тому +3

    தமிழ்க்கடலை விளக்கும் இலக்கியக் கடலே.!அருமை..அற்புதம் ..ஐயா

  • @JaVenkataSubramanianJaVenkat
    @JaVenkataSubramanianJaVenkat 3 роки тому +3

    தொ.ப வை படித்து மகிழ்கின்றேன். நன்றி.

  • @muthukumar.n1562
    @muthukumar.n1562 3 роки тому +2

    ஐயா, நான் தொ.பரமசிவன் அவர்களின் "அறியப்படாத தமிழகம்" புத்தகத்தை படித்திருக்கிறேன் இதில் தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், உணவு, உடை, உறவுமுறை, வழிபாடு குறித்து தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
    மற்றும் தங்கள் ஆசிரியர் போன்றவரை தாங்கள் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. 🙏

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 3 роки тому +1

    அருமை ஐயா. தங்களைப் போன்ற அறிவுசார்ந்த சான்றோர்களை உருவாக்கிய மிகச்சிறந்த ஆளுமையாகிய தமிழ்சான்றோர் குறித்த நல்ல தகவல்களை வழங்கிய தம்மை வணங்குகிறேன்

  • @keerthivasan3228
    @keerthivasan3228 3 роки тому +5

    தொ.பரமசிவன் புகழ் உயரட்டும்

  • @vijayadeva06
    @vijayadeva06 3 роки тому

    Tho Pa is a precious gift to entire Thamizh fraternity and always we remember n respect him 👈🏽🙏🏽

  • @asokanperumal6411
    @asokanperumal6411 3 роки тому

    இந்த உரையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன் ஐயா

  • @smaksorganics1779
    @smaksorganics1779 2 роки тому

    வணக்கம் அய்யா. அருமையான பதிவு அய்யா. நல்ல விஷயங்களை அவ்வளவு எளிதாக கிரகித்துக் கொள்ள முடியாது. இன்றைய மக்களின் வாழ்க்கை முறை அப்படி ஆகிவிட்டது. எல்லோரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் இலக்கு இல்லாமலேயே. பணம் சம்பாதிக்க ஓடுகிறோம் என்றால் அது வாழ்க்கையின் ஒரு பகுதியே தவிர இலக்கு ஆகாது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தமிழ்மொழி மீது பற்றுடன், மாணவர்களை எப்பொழுதும் அரவணைத்து ஒருவர் வாழ்ந்தார் என்றால் அது தொ.ப. அய்யாவாகத்தான் இருக்க முடியும்.
    நன்றி அய்யா.

  • @keerthiyniranjan516
    @keerthiyniranjan516 3 роки тому +1

    ஒரு வருடத்திற்கு முன் தொ.பரமசிவன் பற்றி அறிந்து கொண்டதற்கு பிறகு எனக்கு ஏற்பட்ட ஆச்சிரியம் இன்னும் விளகவில்லை எப்படி இவரை பற்றி தெறிந்து கொள்ளாமல் விட்டேனே! என இன்றும் வருந்துகிறேன்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 дні тому

    வணக்கம் புகழ்வணக்கம்

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +2

    வணக்கம் அய்யா
    அறிவுசார்ந்த எளிய மனிதர்கள் மக்கள் மனதில் என்றும் வாழ்வார்கள்🙏❤🌹

  • @sathyaraj6603
    @sathyaraj6603 3 роки тому +2

    Supper.supper

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 роки тому +1

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @vigneshd4366
    @vigneshd4366 3 роки тому +1

    நன்றி ஐயா 🙏

  • @bhuvaneshwarikirubakaran3974
    @bhuvaneshwarikirubakaran3974 3 роки тому

    அருமை சார் 👍👍👍👍

  • @rajmanimedical851
    @rajmanimedical851 3 роки тому +2

    Good evening sir

  • @gk366
    @gk366 3 роки тому +2

    அய்யா திராவிட இயக்கம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்கள் கூறுங்கள்...

  • @drchandru4529
    @drchandru4529 2 роки тому

    பெரிய மேதைகள் வெளிச்சத்துக்கு வருவது இல்லை ஏன்? என்று தெரியவில்லை. எங்கள் ஊரில் இவரை போல் மிகப்பெரிய விஞ்சானி வைத்தியநாதன் படிப்பு 4 வகுப்பு Mechanic அவா் இப்பொழுது அவருக்கு வயது 87. அவா் இறக்கும் பொழுது வயது 68.
    பேராசிரியர் ஞானசம்பந்தம் அவா்கள் சொல்வதை கேட்டால் தொ. ப. அய்யா இறந்தது மாதிரி, தெரியவில்லை. இன்னும் உயிருடன் இருப்பது போல் தான் தெரிகிறது." அவர் தொ. ப, தோற்க்கமாடகடாா் உலகம் உள்ளவரை அவா் புகழ் இருக்கும்.

  • @vijayadeva06
    @vijayadeva06 3 роки тому

    GG Ayya - Do we have a good book for pure Thamizh names for babies? Kindly advise on this🙏🏽