Aaru Padai Veedum | Theertham | Murugan song tamil with lyrics | Kovai Kamala | Vijay Musicals

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2018
  • SONG : Aaru Padai Veedum
    SINGERS : KOVAI KAMALA
    LYRICS : KAVIYA
    MUSIC : V KISHORKUMAR
    VIDEO : KATHIRAVAN KRISHNAN
    Recorded @ Iyya Studio Chennai .
    Mixed & Mastered by Dinesh
    PRODUCED BY VIJAY MUSICALS
    #tamildevotionalsongs#popularhits#vijaymusicals
    *** தினமும் காலையும் மாலையும் கேட்கும்
    சிறந்த தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்பு ***
    பாடல் : ஆறுபடை வீடும்
    ஆல்பம் : தீர்த்தம்
    பாடியவர்கள் : கோவை கமலா
    பாடல்கள் : காவியா
    இசை : V கிஷோர்குமார்
    வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
    Lyrics :
    நாவல் பழம் தந்து ஞானத் தமிழ் கேட்ட
    கந்தா வடிவேலா என்னப்பனே முருகா
    உனக்காக தமிழ் பாடல் பல பாடினேன்
    இருந்தாலும் இதமாக நீ கேட்க
    ஒரு பாடல் இப்போது நான் பாடுவேன்
    பாடுவேன் முருகா . . .
    ஆறுபடை வீடும் அருள் வழங்கும் முருகா
    அருகே நீ ஓடோடி வா
    மூவிரண்டு முகம் ஜொலிக்க
    ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா
    ஈசன் மகனே எனைக்காக்க இங்கே
    உனையின்றி வேறாரய்யா
    நெஞ்சார நான் நினைக்க பஞ்சாமிர்தம் கொடுக்கும்
    ஒரு தெய்வம் நீதானய்யா . . ஒரு தெய்வம் நீதானய்யா
    தெய்வானை வள்ளியுடன் மணக்கோலம் கொண்டு
    திருப்பரங்குன்றம் வாழ்கின்றவன்
    நீ தேவர்களைக் காத்திடவே வீரமுடன் வேலெடுத்து
    செந்தூரில் ஆள்கின்றவன்
    மாங்கனிக்கு கோபங்கொண்டு பார்புகழும் பழனியிலே
    ஆண்டியென கோலம் கொண்டவன்
    நீ தத்துவத்தின் சாறெடுத்து சுவாமிமலை எல்லையிலே
    தகப்பனுக்கு பாடம் சொன்னவன்
    காவலென நின்று பெரும் சினந்தணிந்து தணிகையிலே
    கண்குளிரக் காட்சி தந்தவன்
    நீ பாங்குடனே அருள் தரவே பழம் முதிரும் சோலையிலே
    பரஞ்சோதியாய் நின்றவன் . . பரஞ்சோதியாய் நின்றவன்
    கருணை மணம் கமழுமந்த அருணகிரி தமிழில் மனம்
    மகிழ்ந்தாடி நின்ற முருகன்
    கிழவியிவள் புலமை கண்டு அழகுமிகும் குழந்தையென
    மயிலேறி வந்த குமரன்
    ஆதிசிவன் பிள்ளையென ஆனைமுகன் தம்பியென
    ஞானப்பழமான முதல்வன்
    நீ பாடும் குரல் வளம் கொடுக்கும்
    பனிமலையில் வாழுமந்த பார்வதியின் இளைய புதல்வன்
    தேனெடுத்து தினைவளர்க்கும் சிறுகுறத்தி வள்ளியவள்
    சிந்தையிலே நின்ற மன்னவா
    நீ நாடிவரும் பக்தர்களின் நாட்டமதை தணித்தருளும்
    ஞானகுரு நாதனல்லவா . . நாதனல்லவா
    நினைக்கின்ற பொழுதெல்லாம்
    நிகரில்லா பக்திரசம் தருகின்ற சக்தி வேலன்
    நீ துதிக்கின்ற கணமெல்லாம் இனிக்கின்ற
    இதயம்தனை அளிக்கின்ற வெற்றிவேலன்
    அழகான அவதாரம் அழியாத புகழ் செல்வம்
    அன்புக்கு ஒரு தெய்வம் நீ
    சிறுகுறையேதும் இல்லாமல் குலம்காத்து
    எந்நாளும் அருள்செய்யும் பெரும்வள்ளல் நீ
    மலைதோறும் படைவீடு இருந்தாலும்
    முருகா என் மனவீடு வந்து அமர்வாய்
    நீ மயிலேறி விளையாடி சுவையான தமிழ்பாடல்
    கனிவோடு தந்து அருள்வாய் . . கனிவோடு தந்து அருள்வாய்
    தேவைகளை பூர்த்தி செய்யும் தேன்சொரியும்
    மூன்றுதமிழ் குமரா உன் கோவிலாகும்
    தினம் தேடிவரும் பக்தர்களின் தெளிவான
    முதிர்ந்த மனம் முருகா உன் மயிலுமாகும்
    வேடன் உருக்கொண்டு பெரும் வேங்கைமரமாகி நின்ற
    வெண்ணீறு அணிந்த முருகன்
    நீ வாடுகின்ற உள்ளமதில் வற்றாது அருள்சேர்க்கும்
    வானோர்கள் போற்றும் தலைவன்
    நீரெடுத்த மேனியுடன் ஆறெழுத்தில் பேரெடுத்து
    நினைவெல்லாம் இனிக்கின்றவன்
    நீ ஓரெழுத்து ஆயுதமாய் ஓளிர்கின்ற வேலெடுத்து
    உறுதுணையாய் வருகிறவன் எனக்கு உறுதுணையாய் வருகிறவன்
    குளிர்ச்சித் தரும் தென்றலிலே மகிழ்ச்சியுடன் விண்ணதிலே
    பறக்கும் உந்தன் சேவற்கொடியே
    மனதழற்சியின்றி தனைமறந்து மலர்ச்சியுடன்
    தணிகையிலே நடம்புரியும் தோகை மயிலே
    பன்னீரில் அபிஷேகம் வெண்நீறில் அலங்காரம்
    அதிரூபம் கொண்ட முருகன்
    நீ புரியாமல் அடியேனும் பிழைநூறு செய்தாலும்
    பொருத்தருளும் செல்வக்குமரன்
    ஒய்யார மயிலேறும் உன்காட்சி எழில்யாவும்
    ஒளிவீசும் தெய்வாம்சமே
    பொய்யான என் வாழ்க்கை புவி மீது நிலையாக
    அருள் செய்ய வரவேணுமே . . நீ அருள் செய்ய வரவேணுமே
    இகழ்தலையும் புகழ்தலையும் ஒருமுகமாய் கருதும்படி
    செவி உரைத்த முத்துக்குமரன்
    நீ வறுமையையும் வளமையையும் சமநிலையாய்
    உணரும்படி மதிகொடுத்த செல்வக்குமரன்
    தடைநூறு வந்தாலும் செயல்வெற்றியாக்கித் தரும்
    தாராள குணம் கொண்டவன்
    நீ வலைவீசும் அறிவுக்கு தொலைவான வானாகி
    மாறாது அருள் செய்பவன்
    தீராத காதலொடு திருவடியை தொழுபவர்க்கு
    திரவியமே தருகின்றவன்
    நீ தாராள உள்ளமொடு தவக்கோலம் கொண்டுவரும்
    தார்மீக பொருள் தந்தவன் . . தார்மீக பொருள் தந்தவன்
    சினம் கொண்ட என்மனதை இனம்கண்டு அருள்செய்து
    வளமாக வைத்த முருகன்
    நீ பசுதேடும் கன்றெனவே பசியோடு வந்தஎனை
    பரிவோடு காத்த குமரன்
    படியேறி கால்நடக்க காவடிகள் தோள்சுமக்க
    துணையெனவே வந்த முருகன்
    படிப்பறிவும் எழுத்தறிவும் குறைந்தஎனை உலகிலின்று
    புலமைப் பெறச்செய்த குமரன்
    தோல்விகண்டுத் துவளாத வெற்றுக்கண்டும் மகிழாத
    மனம் கொடுத்த அன்பு முருகன்
    நீ தேடிவந்த பகையாவும் திசைமாறி போகச்செய்து
    எனையாளும் செந்தில்குமரன் . . எனையாளும் செந்தில்குமரன்
    கல்லாகக் கிடந்த மனம் பூவாக மலர்ந்த விதம்
    கந்தா உன் கருணையன்றோ
    நான் எல்லாம் இழந்த பின்னும்
    ஜீவன் இருப்பதிங்கே வேலா உன்னருளாலன்றோ
    கோடிபணம் இருந்தாலும் மேலுமதை தேடுகின்ற
    மானிடர்கள் கூட்டம் நடுவே
    மனம் தேடி உனைத்திரிந்தபடி திருப்புகழை பாடுமெனை
    நாடி வந்து காத்த குருவே
    ஆசையெனும் தூண்டிலிலே மாட்டிக்கொண்ட என்மனதை
    இதமாக மீட்ட முருகா
    மோகமெனும் தீச்சுழலில் முங்கிவிட இருந்தஎனை
    முழுதாக காத்த இறைவா . . முழுதாக காத்த இறைவா
    விழுந்தவர்கள் எழுவதுவும் எழுந்தவர்கள் விழுவதுவும்
    முருகா உன் செயலாலன்றோ
    இங்கு அழுதவர்கள் சிரிப்பதுவும் சிரிப்பவர்கள் அழுவதுவும்
    குமரா உன் தயவாலன்றோ
    அந்திபகல் எப்பொழுதும் தங்குதடையில்லாமல்
    உந்தன் முகம் கண்ணிலாடும்
    தினம் எந்த நிலை கொண்டாலும்
    கந்தன் துணையென்றாலே வந்த வினை மெல்ல ஓடும்
    பணம் பதவி தேவையில்லை பொன்பொருளும் நாடவில்லை
    முருகா உன் அருள் போதுமே
    உயிர் வாழுகின்ற காலமெல்லாம் மாளிகையில் நாட்டமில்லை
    குமரா உன் நிழல் போதுமே . . குமரா உன் நிழல் போதுமே

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @sekarsekar567
    @sekarsekar567 Рік тому +746

    யாருக்கெல்லாம் என் அப்பன் முருகனை பிடிக்கும்

  • @priyuu_art
    @priyuu_art 4 місяці тому +236

    இவ்வளவு அழகான பாடலை நான் எப்படி இவ்வளவு வருடங்களாக கேட்காமல் இருந்தேன்🥹🥺😍🫠
    முதல்முறை இந்த பாடலை கேட்கும் போது பாடலின் வரிகள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது 😍🫠🥹மலைதோறும் படைவீடு இருந்தாலும் என் மனவீட்டில் அமர்ந்திருக்கும் என் அப்பன் முருகன்😘ஓம் சரவணபவ😍🙏❣️

    • @snaga4888
      @snaga4888 4 місяці тому +5

      Yes me also

    • @spsarathy7148
      @spsarathy7148 3 місяці тому +5

      Yes

    • @sajithkrish7585
      @sajithkrish7585 2 місяці тому +2

      Yes

    • @shanthin4182
      @shanthin4182 2 місяці тому +2

      Yes

    • @PrakashRajesh-y8y
      @PrakashRajesh-y8y Місяць тому +2

      உண்மை
      நானும் சமீபத்தில்
      என் மச்சான் லாரியில்
      ஒளி பரப்பினர்
      இப்போது தினம் கேட்கிறேன் 🙏🌹❤️

  • @K.R.GOVARDHANANK.R.GOVARDHANAN
    @K.R.GOVARDHANANK.R.GOVARDHANAN 4 місяці тому +162

    இந்தப் பாடலை கேட்கும் போது மனம் ததும்பி அழுகை வருகிறது அதனுடன் முருகன் அருள் நமக்கு உண்டு என்கிற நம்பிக்கை வருகிறது🙏

  • @rdillikumar2707
    @rdillikumar2707 2 місяці тому +28

    இப்பாடலை இயற்றிய காவியா அவர்களுக்கும் மெல்லிசை அமைத்த கிஷோர் குமார் அவர்களுக்கும் மெய்சிலிர்க்க உயிர் கொடுத்து பாடிய அம்மா கோவை கமலா அவர்களுக்கும் கோடான கோடி வணக்கங்கள்.முருகனுக்கு அரோகரா

  • @kalidassthirumalaielectron3279
    @kalidassthirumalaielectron3279 11 місяців тому +465

    பாடல் வரிகள் அற்புதம் கேட்க கேட்க கேட்க கண் கலங்குகிறது முருகன் அருள் இருந்தால் மட்டுமே இப்படி ஒரு பாடல் எழுத முடியும் குரல் மற்றும் இசை அனைத்தும் அருமை கோடான கோடி நன்றி பாடலை கேட்பவர் அனைவருக்கும் முருகன் அருள் கண்டிப்பாக கிடைக்கும் நன்றி

    • @nandhugopi207
      @nandhugopi207 9 місяців тому +5

      S

    • @user-ek7dk9wb4p
      @user-ek7dk9wb4p 8 місяців тому +11

      இந்த பாடல் வரிகளை கேட்கும் போது கண் கலைகிறது முருகா நிம்மதியும் கிடைக்கிறது ஓம் சரவணபவ போற்றி கடம்பனுக்குபோற்றி செந்தில் ஆண்டவர் அரோகரா குமரன் அரோகரா கார்த்தியை அரோகரா சண்முகநாதனுக்கு அரோகரா கதிர்வேலன் அரோகரா குமரன் அரோகரா கார்த்தியை அரோகரா மயில் வானத்து அரோகரா சேவல் கொடிக்கு அரோகரா கருணை கடலையை போற்றி

    • @ajoyvasu
      @ajoyvasu 7 місяців тому +4

      உண்மை. அருமையான பாடல். முருகன் அருள் அனைவர்ககும் கிட்டட்டும். ஓம் முருகா போற்றி.

    • @peramavathykmchinniah2578
      @peramavathykmchinniah2578 7 місяців тому

      How to get lyrics in English . Pls share

    • @hindumathishekar9158
      @hindumathishekar9158 6 місяців тому

      😅😅😅

  • @VasanthVasanth-bq5dv
    @VasanthVasanth-bq5dv Рік тому +148

    கஷ்டமாக இருக்கும் போது இந்த பாடலை கேட்கும் போது மனம் அமைதியடைகிறது❤❤

    • @absolutecr769
      @absolutecr769 4 місяці тому +4

      Enakku eppa ellam mana kastam varutho appa ellam en murugappan entha paadal ketpen

  • @venkatachalamvenkatachalam42
    @venkatachalamvenkatachalam42 3 місяці тому +23

    இந்த பாடல் கேட்க மானிடராக ஜென்மம் எடுக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @viswanathank1452
    @viswanathank1452 Місяць тому +11

    கமலா அம்மா அவர்களுக்கு வணக்கம் இந்த பாடலை நீங்கள் பாடுவதற்க்கு இறைவன் கொடுத்த வரம் தங்களை வணங்கி வாழ்த்துகிறேன்

  • @vigneshwariVaiyapuri-lo2hv
    @vigneshwariVaiyapuri-lo2hv 2 місяці тому +22

    கந்தனை பிடிக்காத மனமும் உண்டோ இவ்வுலகில் எல்லாம் இலந்த பின்னும் ஜிவன் இருப்பதில்லை உன்னருளாஅன்றோ வெற்றி வேல் முருகன்னுக்கு அரோகரா

  • @raguramanbalakirushnan9303
    @raguramanbalakirushnan9303 Рік тому +205

    மலை தோறும் படைவீடு இருந்தாழலும் முருகா என் மனம் வீடு வந்து அமர்வாய்.

  • @m.vennilavennila4824
    @m.vennilavennila4824 2 роки тому +273

    முருகா உயிர் பிரிந்த பின்பும் உன் திருப்பாதத்தில் பிறப்பேன்...❣️🙏 வாழ்வதற்கு அல்ல என்றும் உந்தன் அன்பான திருபாதத்தில் வீழ்ந்திருக்க💝 முருகா...🙏

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 Рік тому +12

      அம்மையே.. உங்கள் தமிழ் வரிகள் அற்புதம். முருகனின் அதி பக்தர்களிடம் மட்டுமே.. இந்த மாதிரியான வார்த்தைகள் ஊறும்... வாழ்த்துக்கள்.

    • @kanagarajan373
      @kanagarajan373 Рік тому +2

      Very nice 👌.

    • @asspigeons7229
      @asspigeons7229 Рік тому

      Very nice

    • @adilanssai7532
      @adilanssai7532 Рік тому

      🙏🙏🙏

    • @jayabalc709
      @jayabalc709 11 місяців тому

      Lkkb

  • @karthikkeyan8489
    @karthikkeyan8489 6 місяців тому +26

    இந்த பாட்டு கேட்கும்போது அறியாமலே கண்ணிலிருந்து கண்ணீர் வரும்

  • @muruganhariram4688
    @muruganhariram4688 2 роки тому +137

    சும்மா அதிருதுல்ல....செம...ஆனந்த கண்ணீரே வருது...என்னப்பனுக்கான அருமையான பாடல்...வாழ்க வளமுடன்..

  • @rajrenukaoo1121
    @rajrenukaoo1121 2 місяці тому +10

    சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா. மெய்மறந்து நீண்ட நேரம் கேட்டு கொண்டு இருந்தேன்.

  • @kumarraghavan4090
    @kumarraghavan4090 15 днів тому +2

    அம்மா நீங்கள் முருகன் அருளுடன் நீடுழி வாழ்க

  • @kowsivk9874
    @kowsivk9874 Рік тому +31

    கல்லாகக் கிடந்த மனம் பூவாக மலர்ந்த விதம் கந்தா உன் கருணைன்றோ 🙏⚜️🦚

  • @jothishanmugam3229
    @jothishanmugam3229 Рік тому +62

    இப்பாடலை கேட்ட எனக்கு முருகனை கண்முன் னே கண்ட மகிழ்ச்சி ஏற்படுகிறது, வெற்றிவேல்முருகா, உனை நம்பியவர்களை காப்பாயப்பா🙏🙏🙏🙏🙏

  • @ilayarajailayamaan4761
    @ilayarajailayamaan4761 Рік тому +34

    இப்பாடலை தினமும் கேட்பேன்.மிகவும் பிடிக்கும்

  • @rbalakrishnan5785
    @rbalakrishnan5785 2 роки тому +96

    இந்த பாடல் கேட்கும்போது முருகன் நம் அருகில் இருந்து நம்மை காத்ருவர் என்ற நம்பிக்கை மிகவும் உள்ளது.
    நன்றி அம்மா

  • @meenakathir6261
    @meenakathir6261 Рік тому +27

    சொல்ல வார்த்தையே இல்லை அவ்வளவு இனிமையாக உள்ளது🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @sakthikalinsangamamtrust
    @sakthikalinsangamamtrust 2 роки тому +134

    ஒளவையை ஞானக்கண்ணில் நிறுத்திய தேவதை தாங்கள்....

  • @venkatapathiraju2384
    @venkatapathiraju2384 Рік тому +124

    KPசுந்தராம்பாள் அவர்களின் மறுபிறவி நீங்கள், வாழ்க பல்லாண்டு இந்த குரல் கேட்டு நீண்ட காலம் ஆனது என நினைத்து உங்களுக்கு முருபெருமான் கொடுத்து இருக்கிறர்

  • @RSR-es2ls
    @RSR-es2ls 5 місяців тому +154

    இந்த பாட்டுதான் என்னை தற்கொலை எண்ணத்தில் இருந்து வெளிக்கொண்டு வந்தது..... முருகன் அருள் எல்லையற்ற ஒன்று அதை நான் உணர்ந்த பொழுதினில் என் வாழ்க்கை முறை மாற்றங்கள் பெற்றது...... முருகா ❤

    • @kanthasrooban49
      @kanthasrooban49 4 місяці тому +4

      😭🥹

    • @aadhi2029
      @aadhi2029 4 місяці тому +8

      இறைவன் அருளால் உயர் வாழ்வு வாழ உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன்!

    • @priysrilanka9441
      @priysrilanka9441 4 місяці тому

      🙏🙏🙏

    • @kumarlaxman400
      @kumarlaxman400 4 місяці тому +1

      Vaalga valamudan. Murugaa

    • @user-id8mk7mj7k
      @user-id8mk7mj7k 4 місяці тому +2

      நீடூழி வாழ்க வளமுடன் 💐💐 ஈசன் துணையிருப்பார் 🔥🔥🔥 முருகா அரோகரப்பிரியா

  • @thiruaathi6289
    @thiruaathi6289 Рік тому +85

    இந்த பாடலை கேக்கும் பொழுது கண்ணீர் வருகிறது

  • @KrishnaKumar-wy3es
    @KrishnaKumar-wy3es Рік тому +35

    அம்மா உங்கள் திருவடிக்கு கோடி வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kovibalaji9491
    @kovibalaji9491 Рік тому +54

    முருகனின் இந்த பாடலை இப்போது தான் நான் கேட்கிறேன்.அருமையான பாடல்🙏🙏🙏 அனுதினமும் கேட்டுக்கிட்டே இருக்கிறேன் முருகா..கமலா அம்மா குடும்பத்துடன் உடல் நலமுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டுகிறேன்.. முருகா🙏🙏🙏

  • @narayanankrishnamoorthi2594
    @narayanankrishnamoorthi2594 2 роки тому +27

    அம்மா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் என் அப்பன் முருகப்பெருமான் பாடலை இவ்வளவு அற்புதமாக பாடியதற்கு 🙏🙏🙏

  • @sivag100
    @sivag100 3 роки тому +141

    முருகா- நீ இல்லை எனில் இவ்வுலகில் எதுவும் இயங்காது
    அம்மா குரல் தெய்வீக குரல்
    முருகா ஆரோகரா ஓம்

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 роки тому +80

    அருமை, அருமை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. முருகன் அடி யார் கெளல்லாம் அம்மா வின் குரலுக்கும் அடிமையாகி விடுவார்கள்.நன்றி நன்றி.

  • @velus5311
    @velus5311 4 місяці тому +30

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடலை கோவை கமலா அம்மா பாடியுள்ளார். அவருக்கு முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்க எல்லாம் வல்ல ஆறுபடையப்பனை வேண்டிக் கொள்கிறேன்.🙏🏻

  • @p.s.nehru.4084
    @p.s.nehru.4084 7 місяців тому +22

    எத்தனை முருகன் பக்தி பாடல்கள் கேட்டாலும், இந்த பாடல் கேட்கும் போது வாழ்க்கை சிந்திக்க வைக்கிறது.மிகவும் அருமை.பாடிய அம்மாக்கு வாழ்த்துக்கள்.என் அப்பா முருக பக்தர், இந்த பாடல் கேட்கும் போது அவர் நினைவு வருகிறது.

  • @grn-tc8ou
    @grn-tc8ou 18 днів тому +6

    What a song
    Om muruga
    Any body in 2024
    6 years gone this song still in what's app status 😘😄❤️❤️❤️❤️

  • @duraisamy1770
    @duraisamy1770 Рік тому +23

    என் வாழ்வில் இருள் நீக்கி நல்வழி காட்டும் கருணை கடவுள் முருகா🙏🙏🙏🙏

  • @karpagam881
    @karpagam881 11 місяців тому +11

    உள்ளம் உருகி விட்டது என்ற தமிழ் வார்த்தைகள் இனிக்கிறது 👌👌🙏🏽

  • @elumalaikumariek3979
    @elumalaikumariek3979 3 роки тому +30

    kAVIYA உங்களுக்கு ஆறுபடை முருகன் அருள் உங்களுக்கு இருக்கும் பாடல் வரிகள் மயக்கம் வருகிறது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏ஒம் முருகா God bless you🙏

  • @selvaganesh3057
    @selvaganesh3057 2 роки тому +91

    மனதில் எவ்வளவு இறுக்கம் இருந்தாலும்கூட இந்த பாடல் கேட்கும் போது மனம் இளகி விடுகின்றது...

  • @vanajaachiveedu66
    @vanajaachiveedu66 4 місяці тому +102

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஏன் கண்களில் தண்ணீர் வருகிறது ஏன் என்று தெரியவில்லை..

    • @komeswaran7449
      @komeswaran7449 2 місяці тому +2

      கண்ணீர்

    • @sangeethasathish8002
      @sangeethasathish8002 Місяць тому +2

      எனக்கும் அப்படி தான் இருக்கும் எத்தனை முறை கேட்டாலும்

    • @leelavathi8959
      @leelavathi8959 Місяць тому

      Same condition.

    • @gokulvani1634
      @gokulvani1634 Місяць тому

      Me also

    • @sakthidasannlibrary
      @sakthidasannlibrary 19 днів тому

      உண்மை தான் நண்பா ❤

  • @priysrilanka9441
    @priysrilanka9441 9 місяців тому +84

    ஏனோ தெரியல இந்த பாட்டை கேட்டதும் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வரும் பாட்டின் வரிகளும்
    பாடுகின்ற குரலும் என்னை மெய்மறக்க செய்கிறது🙏

  • @Senthilkumar-py6jt
    @Senthilkumar-py6jt 2 роки тому +53

    அருமையான வரிகள் .. அதை மனங்களிலே பதியச் செய்யும் பிரம்மாண்டமான குரல்..
    அதை மேலும் பட்டைதீட்டிய இசையும்..
    மனதை பக்தியில் நிறைத்தது !!!

  • @anpamur
    @anpamur Рік тому +15

    மனதை உருக்குகிறது குரல். இசையும் அருமை. வாழ்க வளர்க. முருகனடி போற்றி

  • @akilaakila7858
    @akilaakila7858 Рік тому +65

    கோவை கமலா அம்மாவின் குரல் வளத்திற்கு நான் அடிமை ❤️🙏🙏 மிக அருமையான முருகன் பாடல் கருணை கடலே கந்தா போற்றி

  • @baskaran22
    @baskaran22 Рік тому +26

    சுந்தராம்பாள் அம்மாவின் குரல் வளம் மாதிரியே உள்ளது. முருகா சரணம் 🙏🙏🙏

  • @ganesansundaram9634
    @ganesansundaram9634 2 роки тому +14

    தெய்வீக குரல் மன அழுத்தம் எல்லாம் குறைஞ்சிடுச்சு ஒம் முருகா

  • @user-pc6qb6oc8h
    @user-pc6qb6oc8h 2 роки тому +41

    ❤️அம்மா உங்களின் குரலில் முருகன் பாடலை கேட்கையில் என் மனதில் உள்ள கவலைகள் அனைத்து நீங்கி மனம் ஒருவிதமான மெல்லிய உணர்வோடு மனப்பக்குவம் அடைகிறது
    கந்தனின் நினைவுகள் அலைபாய்கிறது 🙏🙏
    பணம் பதவி தேவையில்லை பொன் பொருளும் நாடவில்லை முருகா உன் அருள் போதுமே🙏🙏

  • @bhagyaraj.k8447
    @bhagyaraj.k8447 4 роки тому +762

    கோவை கமலா அம்மா அவர்களுக்கு என் வணக்கம் இந்த முருகர் பாடலை கேட்கும் பொழுது நான் மெய்சிலிர்த்துப் போனேன் கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு

  • @MuruGan-up6xh
    @MuruGan-up6xh 2 роки тому +39

    இந்த பாடலை கேட்பதே வரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suthathiru8224
    @suthathiru8224 2 місяці тому +8

    அம்மா உங்கள் பாடலைக் கேட்கும் பொழுது முருகன் அருளால் மிகப் பெரிய தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சுயும் பிறக்கிறது. முருகனுக்கு அரோகரா

  • @srikuttysofficial
    @srikuttysofficial Рік тому +39

    இந்த பாடலை ஓரு வார காலமாக தான் கேட்கிறேன் இவ்வளவு காலம் கேட்காமல் இருந்தை எண்ணி வருத்தப்படுகிறேன் குரல் அருமை இசை அற்புதம்

    • @mohanrajtup5975
      @mohanrajtup5975 7 місяців тому +1

      Kps பாட்டியின் குரல் வளம் பேத்திக்கும் அப்படியே உள்ளது இது முருகன் கொடுத்த வரம்

  • @shankark5902
    @shankark5902 Рік тому +13

    அம்மா,உங்கள் இனிமையான குரல் அந்த முருகனின் பக்தை"அம்மா கே.பி.சுந்தரம்மாள்"குரல் போலவே உள்ளது.நன்றி அம்மா.

  • @akshithaakshithasri6014
    @akshithaakshithasri6014 4 місяці тому +7

    அம்மா ,உங்கள் குரலில் முருகன் புகழாரம் கேட்க்கும் பெரும் பாக்கியம் பெற்றேன்..... மனம் ஆனந்தம் கொண்டது .... ஓம் சரவண பவ....முருகா....

  • @Ivijee
    @Ivijee 14 днів тому +1

    Prema Bhakti Amrit Om arogara Muruga Om !!! Om Namah SIVA :. nanri !! Beautiful Thank you so much Sri Kovai Kamala Amma

  • @poongodimoorthy8470
    @poongodimoorthy8470 7 днів тому +1

    முருகனை தரிசனம் செய்தது போன்ற உணர்வு.

  • @shalu22
    @shalu22 Рік тому +75

    அம்மா உங்கள் குரலுக்கு நாங்கள் அடிமை...சொல்ல வார்த்தைகள் இல்லை... பாடலின் ஒவ்வொரு ஒவ்வொரு வரியிலும் மெய் சிலிர்க்கின்றது..🙏🙏

  • @goviraj7150
    @goviraj7150 Рік тому +22

    கமலா அம்மாவிற்கு வணக்கம் இந்த பாடலை கேட்டபின்புதான் நான் முருகனின் தீராத பக்தனானேன் இப்பிறவியின் பயன் அடைந்தேன் நன்றி அம்மா உங்களை வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் இப்பாடலுக்காகவே....

  • @kaliyugavarathannilujan181
    @kaliyugavarathannilujan181 Рік тому +21

    கணீர் என்ற குரலுக்கு இன்று தான் உதாரனம் கண்டேன் அம்மா... கண்களை மூடி இப் பாடலை கேட்கும் போது சொல்ல முடியாத பக்தி வெளிப்படுகிறது... இதயம் பக்தியால் தூய்மை பெறுவதை உணர முடிகிறது....

  • @satishkumarm4664
    @satishkumarm4664 Рік тому +27

    முருகா இன்று தான் முதன் முதலில் இந்த பாடல் என் செவியில் விழுந்தது. முருகா உன்னருளால் இந்த பாடலும் இசையும் குரலும் வரிகளும் அர்த்தமும் என்னை உன் திருவடி நீழலுக்கு அழைத்து சென்றது என்றும் முருகன் அருள் நிலைத்து இருக்கட்டும். முருகா முருகா என்றாய் மூச்சை விட அருளால் வேண்டும் கந்தவேளே.

  • @swamykandavel6886
    @swamykandavel6886 Рік тому +10

    இந்த பாடல் பாடி எங்கள் மனம் குளிர வைத்த தாயே , வாழ்க வளமுடன் அம்மா.

  • @uthayakumaruthayakumar5882
    @uthayakumaruthayakumar5882 Рік тому +9

    அருமை தாயே... முருகா....🙏🙏

  • @kalaik2319
    @kalaik2319 12 днів тому +1

    சலிக்காமல் கேட்க தூண்டும் பாடல் இது எனக்கு மிகவும் பிடிக்கும் மனம் நொந்து போகும் போதெல்லாம் கேட்பேன் ஓம் முருகா

  • @siva_muruga_dm_94
    @siva_muruga_dm_94 Рік тому +113

    மனம் உருகி.. கண்ணீரோடு முருகனை தரிசனம் செய்த ஓர் அனுபவம் இந்த பாடல்... 🙏திருச்செந்தூர் ஸ்ரீ முருகன் துணை🔱🙏

  • @devisrisubbiah9566
    @devisrisubbiah9566 Рік тому +12

    மெய்மறந்து கேட்க வைத்த பாடல் உங்கள் குரலில் கேட்பது மிகவும் அருமை

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 2 роки тому +15

    அம்மா காலை வணக்கம்.நீங்களும் இந்த பாடல் ,அதன் பொருள் , உங்கள் படைப்பு இறைவனின் அற்புத படைப்பு.வாழ்க!வளர்க!. நன்றி.

  • @mssraviadditionaldirector7359
    @mssraviadditionaldirector7359 9 днів тому

    அருமையான, அற்புதமான, மனதை நெகிழச் செய்யும் பாடல் !! எந்த ராகத்தில் அமைந்துள்ளது !!

  • @ManiKandan-eu7kc
    @ManiKandan-eu7kc 2 роки тому +17

    அம்மா என்ன ஒரு இனிமையான குரல்,அருமையான வரிகள்,இந்த பாடலை முதல் முறையாக கேட்கிறேன்,எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத தேவாமிர்தம்.முருகா.....

  • @priyasanjay7979
    @priyasanjay7979 3 місяці тому +4

    என் முருகன் ❤

  • @periasamirealchanakkianspe3654
    @periasamirealchanakkianspe3654 Рік тому +11

    முருகா முருகா
    உன் புகழைப்பாடும்
    அம்மையாருக்கு நீண்ட
    ஆயுளுக்கு அருள்வாயாக.

  • @magivetribuji
    @magivetribuji 3 дні тому

    இந்த பாடல் எவ்வளவு பக்தியுடன் முருகனை நேசித்து மனம் உருகி பாடி இருக்கீங்க உங்க பக்திக்கு தலை வணங்குறன்

  • @kumaresandamal532
    @kumaresandamal532 Рік тому +13

    என் முழு முதல் தெய்வம்🙏🙏🙏

    • @rganraja4253
      @rganraja4253 Рік тому

      Kps in sister voice same.verey nice song

  • @user-vu4ee9sw9j
    @user-vu4ee9sw9j 11 місяців тому +9

    என் அப்பன் முருகா என் மூச்சுலும் பேச்சிலும் என்றென்றும் நீயே ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி ❤❤❤

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 2 роки тому +15

    கேட்க கேட்க செவிக்கு இன்பம். மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் அருமை யான பாடல். மிக்க நன்றி அம்மா.நன்றி முருகா.

  • @karunakaran7230
    @karunakaran7230 10 місяців тому +6

    அன்புடன் இந்த முருகன் பாடலை பாடிய தெய்வ மகளே தங்களுக்கு பல வணக்கங்களும் நன்றிகளும்

  • @RajaRaja-rz2sv
    @RajaRaja-rz2sv Місяць тому +2

    தினமும் கேட்கிறேன்
    வாழ்க லளமுடன் உங்கள் குரல் முருகனை மன கண்ணில் தோன்ற வைக்கும்

  • @sakthikumar.m6946
    @sakthikumar.m6946 3 роки тому +9

    Enna Arumaiyana padal Tamil Varigal😍😍😍😍😍😍🎶🎵 Senthamilin Urukkam

  • @rajn2493
    @rajn2493 4 роки тому +14

    ஓம் முருகன் போற்றி 🙏🙏🙏

  • @gunaguna7608
    @gunaguna7608 5 днів тому

    மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 роки тому +9

    மிக மிக அற்புதமான பாடல்.மனசக்திகிடைக்கும் அருமையான பாடல்.எம் இதய கவர்ந்த பாடல் களுள்முதன்மையானது.

  • @Sachinjustin697
    @Sachinjustin697 5 років тому +43

    அழகு மிகு குழந்தையென வந்த முருகன், என் மன வீடு வந்து அமர்வாய். ஓம் சரவணபவ.

  • @simplecook5831
    @simplecook5831 Рік тому +28

    எதுகையும் மோனையும் வரிகளில் மிக அற்புதம்..
    அர்த்தமுள்ள வரிகளால் அப்பனை அழகாக வர்ணித்துள்ளார்கள்...
    குரல் வளம் kb சுந்தரம்பாள் ளை நினைவுக்கு கொண்டுவருவத்தோடு ஔவை யையும் நினைக்க செய்கிறது...
    முருகனின் பெருமையை அழகாய் வர்ணிக்கிறது இந்த பாடல்...

  • @senthil6697
    @senthil6697 7 місяців тому +2

    ஓம் நமோ குமாராய நம......
    ஓம் முருகா...... ஓம் சக்தி......
    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்......

  • @manimegalais7245
    @manimegalais7245 2 місяці тому +2

    ஒவ்வொரு வரியும் மனதை ஏதோ செய்கிறது முருகா எல்லாம் உன் செயல் பாடியவருக்கு கோடான கோடி நமஸ்காரம்

  • @AnbuRaasu
    @AnbuRaasu 11 місяців тому +4

    வரிகளும் குரலும் இசையும் 💕 ஆனந்தக்கண்ணீரால் நன்றி அறிவிக்கிறேன்..

  • @muthulakshmi5575
    @muthulakshmi5575 8 місяців тому +3

    ஓம் முருகா. பாடலின் குரல் வளம் மிகவும் அருமை.

  • @RameshP-me7bv
    @RameshP-me7bv 4 місяці тому +2

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ♥️♥️♥️♥️♥️♥️

  • @thirunavukkarasusaravanamu5847
    @thirunavukkarasusaravanamu5847 25 днів тому +1

    எம் பெருமான் புகழை இனிய குரலில் இசையுடன் தந்த
    திறமைக்கு தலை சாய்ந்து
    வணங்குகின்றேன் அம்மா....
    வாழ்க வாழ்க உங்கள் புகழ்

  • @muthukrishnanmahadevan1274
    @muthukrishnanmahadevan1274 Рік тому +3

    நெஞ்சை நெகிழவைக்கும் பாடல்!தைரியமும் ,தன்னம்பிக்கையம் தரும் பாடல்!

  • @skumarmusicskumar9504
    @skumarmusicskumar9504 5 років тому +27

    என் உயிர் முருகன் , ஓம் சரவணபவ , அம்மா பாடல் அருமை . Super

  • @MeenaCk-nu5ku
    @MeenaCk-nu5ku 4 місяці тому +2

    தினமும் மூன்று முறையாவது இப்பாடலைக் கேட்கிறேன். மனம் உருகி கண்கள் நிறைந்து விடுகிறது. முருகா உன் அருள் வேண்டுமய்யா....

  • @VigneshSamy-oo5ft
    @VigneshSamy-oo5ft Місяць тому

    நல்ல பாடல் அருமையான குரல் கமலா அம்மாவுக்கு நன்றி ஓம் முருகா 🙏🙏🙏

  • @Rajee0220
    @Rajee0220 Рік тому +59

    என் முருகனிடம் இப்பாடலின் மூலம் நெருங்க வைத்து தரிசனம் காண வைத்த அம்மாவிற்கு நன்றி... 😢 திருச்செந்திலாண்டவனுக்கு அரோகரா.... ஓம்சரவணபவ

  • @ksathishkumar8298
    @ksathishkumar8298 5 років тому +9

    என் அழகு தெய்வமே முருகையா

  • @user-xl2mu2il2x
    @user-xl2mu2il2x 8 днів тому

    மிக்க நன்றி அம்மா இந்த பாடல் என்னை மிகவும் நெகிழவைத்தது

  • @suchisujus2565
    @suchisujus2565 Місяць тому

    ஈசன் மகனே என்னை காக்க இங்கே உனை அன்றி வேற அய்யா ❤🙏🙏

  • @rameshramya2942
    @rameshramya2942 2 роки тому +12

    இந்த பாடல் கேட்கும் போது என்னையே மறந்து விடுகிறேன்

    • @sujathababu9604
      @sujathababu9604 10 місяців тому

      Can you give the lyrics in English please

  • @sripidariselliammankattank1895

    அம்மா அவர்களின் குரல் இனிமை.

  • @hari_theboss
    @hari_theboss 2 місяці тому +1

    விழுந்தவர்கள் எழுவதவும் எழுந்தவர்கள் விழுவதும் முருகா உன் செயலாலன்றோ...🙏🙏 அருமையான வரிகள் 🙏🙏🕉️

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 Місяць тому +1

    ஓம் முருகா போற்றி ஓம்! உங்கள்குரலில் இந்தப்பாடலை காலையில் கேட்டுவிட்டுத்தான் என்வேலைகளைதொடங்குவேன் மனதுக்குஆறுதலும் தேறுதலும் தரும் அருமையான பாடல்.வணங்குகிறேன்அம்மா.

  • @natarajangovinthan415
    @natarajangovinthan415 Рік тому +7

    ஆஹா என்ன அருமை பாடல்! பக்தி கண் கலங்கியது, நன்றி அம்மா

  • @sithanvazlkavalamutan2328
    @sithanvazlkavalamutan2328 Рік тому +4

    அற்புதமானது ஸ்ரீ முருகன் பாடல் வரிகள் 🌹✡️💯🙏

  • @ramasamiramasami5954
    @ramasamiramasami5954 2 місяці тому +1

    ஓம் முருகா போற்றி நன்றி ஐய்யா

  • @Sattanathanbabu
    @Sattanathanbabu Місяць тому

    அருமை அம்மா
    நான் மெய்மறந்து
    போகின்றேன்
    காரணம்
    உங்கள் பாடல்
    ஓம் வெற்றிவேல்
    முருகனுக்கு
    அரோகரா