புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்தின் மகிமையை விளக்கும் கதை | Purattasi month fasting

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்தின் மகிமையை விளக்கும் கதை | Purattasi month fasting
    பெருமாளை வழிபட உகந்த மாதம் புரட்டாசி மாதம்.
    புரட்டாசி மாதத் திருவோணம்,
    திருப்பதி வெங்கடாசலபதி சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினமாகும்.
    புரட்டாசி சனிக் கிழமையில் தான் சனிபகவானும் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடு பலன்கள் குறைய திருமாலை வணங்கு வது வழக்கத்தில் வந்தது.
    திருப்பதி வெங்கடா சலபதி கோவில் மலையில், பெருமாள் பக்தரான "பீமன் என்ற குயவர்" வசித்துவந்தார்.
    இவர் ஆயுள் முழு வதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சபதம் எடுத்துக் கொண்டவர்.
    ஆனால், இவரது ஏழ்மை மற்றும்
    தொழில் காரணமாக சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போக நேரம் இருக்காது.
    கோவிலுக்கு போனா லும் "பெருமாளே, நீயே எல்லாம்" என்று சொல்லிவிட்டு வந்து விடுவார்.
    ஒருமுறை அவருக்கு மனதில் ஒரு எண்ணம் உதித்தது. "பெருமாளைப் பார்க்க கோவிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கே யே வரவழைத்தால் என்ன?" என்று யோசித்தார்.
    உடனே களிமண் ணால் ஒரு சிலை யைச் செய்தார். மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.
    அந்த ஊரைச் சேர்ந்த பெருமாள் பக்தரான அரசர் தொண்டை மானும் சனிக்கிழமை களில் ஆலயத்திற்கு வந்து பெருமாளுக்கு தங்கப் பூ மாலை ஒன்றை அணி விப்பார்.
    ஒருமுறை இப்படி தங்கப் பூ மாலை அணிந்து விட்டு, மறுவாரம் ஆலயம் வந்து பாா்த்த பொழுது,பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை கிடந்ததை கண்டு அதிா்ச்சி யடைந்து, குழப்ப த்தில் அரண்மனை திரும்பினார்.
    அன்று அரசர் கனவில் தோன்றிய பெருமாள், நடந்த தைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொரு ளைக் கண்டு மயங் காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக் காலத்தில் வைகுண் டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணை ப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகை யில் இப்போதும், திருப்பதி ஏழுமலை யானுக்கு மண்சட்டி யில்தான் நைவேத் தியம் செய்யப்படு கிறது.
    #புரட்டாசிமாதசனிக்கிழமை
    #மண்சட்டியில்தான்நைவேத்தியம்
    #Purattasimonthfasting
    Subscribe 👇
    / @k_5_1973

КОМЕНТАРІ • 3