மகிழ்ச்சி செய்தி | TN Free Laptop News to All School Students | TamilNadu free laptop scheme 2022

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.கடந்த கல்வியாண்டு மற்றும் நடப்பு கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதற்கு கொரோனாதான் காரணம் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான இலவச லேப்டாப்களை தயாரித்து வழங்கக்கூடிய நிறுவனங்கள் ஒப்பந்தத்தை எடுக்க முன் வராததே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    அதோடு மாணவர்களுக்கு கடந்த ஆண்டுகளாக லேப்டாப் வழங்கப்படவில்லை என்பதால், இலவச லேப்டாப் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாணவர்களுக்கான இலவச லேப்டாட் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
    இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. கொரோனா உள்ளிட்ட காரணங்களால் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 11 லட்சம் லேப் டாப்கள் நிலுவையில் உள்ளது. அதனை விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    free laptop scheme 2022, free laptop for students 2022, tn government laptop 2022 news, tn government laptop 2022, Happy News to All Students | Free Laptop to All School Students | TamilNadu free laptop scheme 2022

КОМЕНТАРІ • 8