கல்வாரி பயணத்தில் | சிலுவைப் பாதை பாடல் | Tamil Siluvai pathai song
Вставка
- Опубліковано 10 лют 2025
- #புனிதஆரோக்கியஅன்னைஆலயம் #அனந்தன்நகர் #அனந்தை #kottar #lentsongs #tamilchristiansongs #lentseason #wayofcross @2025
Lyrics : Fr #michealangelus
Music & Music Direction : #felixcyril
Lead Vocals : K.M.JENIFER
Vocals : Ananthai Arokia Annai Choir , Ananthan nagar
Solo Violin : Suraj Kumar
Technical Asst : #AntoBright
Record @ Grego Studio , #nagercoil
Mix & Master By Sunish S Anand @ Bensun Creations . #thiruvanthapuram
தயாரிப்பு : அனந்தை புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்
அனந்தன் நகர்
கல்வாரி பயணத்தில் கற்கின்ற பாடங்கள்
மனமார அழைக்கும் என் தெய்வமே
வழி செல்வோம் தடம் பதிப்போம்
மனித இயேசுவாய் வாழ்வினை தொடர்வோம்
இறைவா இறைவா சிலுவை பயணம்
சிரமம் தந்தும் சிகரம் சென்றாய்
1. அவமான சின்னம் கண்முன்னே
அநியாயத் தீர்ப்பு வேதனையாய்
உண்மையை மறுத்து நேர்மையை நான் இழந்தேன்
விழி தாரும் என் இயேசுவே - நல்
வழி சொல்லும் என் நல் நண்பரே
2. தோள் மீது சிலுவையை சுமத்திடும் வேளையில்
ஏற்றுக் கொண்டீரே எனக்காக எதற்காக
பிறர் மீது பழி சுமத்தி பாதகம் பல செய்தேன்
விழி தாரும் என் இயேசுவே - நல்
வழி சொல்லும் என் நல் நண்பரே
3. தடுமாறும் கால்கள் தளர்வுற்று வேதனையால்
முதல் முறை தரை வீழ்ந்தீர் தாவீதின் மைந்தனே
பொய் முகம் கொண்டு நான் உறவுகளை விழச் செய்தேன்
விழி தாரும் என் இயேசுவே - நல்
வழி சொல்லும் என் நல் நண்பரே
4. தாய்மையின் கனிவும் உடன் வரும் பரிவும்
உந்துதல் தந்து உடல் சோர்வு போக்குதே
தரம் தாழ்ந்த வார்த்தைகளால்
தாய்மையை நோக செய்தேன்
விழி தாரும் என் இயேசுவே - நல்
வழி சொல்லும் என் நல் நண்பரே
5. தோழமைக்கு பாடம் வகுத்திடும் போது
தோள் தந்த சீமோன் நட்புக்கு இலக்கணமே
தோழமை வெறுத்திங்கு சுமைகளை சுமக்கின்றேன்
விழி தாரும் என் இயேசுவே - நல்
வழி சொல்லும் என் நல் நண்பரே
6. முகம் துடைத்தார் வெரோணிக்கா
வீரத்தின் பரிசாய் திருமுகம் தந்தீர்;
பரிகாசம் பேசி விமர்சனம் பல புரிந்தேன்
விழி தாரும் என் இயேசுவே - நல்
வழி சொல்லும் என் நல் நண்பரே
7. வீழ்பவர் எழுவார் எழுபவர் உயர்வார்
இரண்டாம் முறையும் தரை வீழ்ந்து எழுந்தீர்
அடுத்தவரை வீழ்த்த அவதாரம் பல எடுத்தேன்
விழி தாரும் என் இயேசுவே - நல்
வழி சொல்லும் என் நல் நண்பரே
8. கண்ணீரைக் கண்டு மனம் நெகிழ்ந்து
வேதனையிலும் நீர் ஆறுதல் வழங்கினீரே
அநீதி பேசி நான் உள்ளங்களை கொலை செய்தேன்
விழி தாரும் என் இயேசுவே - நல்
வழி சொல்லும் என் நல் நண்பரே
9. பலவீனம் கண்ட உடலின் சோர்வினால்
மூன்றாம் முறையாக தரை வீழ்ந்து எழுந்தீர்
நன்மைகள் தெரிந்தும் தீமையே நான் செய்தேன்
விழி தாரும் என் இயேசுவே - நல்
வழி சொல்லும் என் நல் நண்பரே
10. மானம் காத்த ஆடை களைந்தது ஏனோ
அவமானம் ஏற்றீர் மாண்பு காத்தீர்;
சுயநலம் கொண்டு பிறர் மானம் கெடுத்தேனே
விழி தாரும் என் இயேசுவே - நல்
வழி சொல்லும் என் நல் நண்பரே
11. அன்பை அமுதாய் பொழிந்தவரே
ஆணிகள் நடுவில் தொங்கினீரே
பழிவாங்கி சுகம் கண்ட அனுபவம் ஏராளம்
விழி தாரும் என் இயேசுவே - நல்
வழி சொல்லும் என் நல் நண்பரே
12. இன்னுயிர் அடங்கிய பொழுதினிலே
ஆதவன் அடங்கி இருள் இங்கு சூழ்ந்தது
இழப்பதை மறந்து அபகரிக்க துடித்தேனே
விழி தாரும் என் இயேசுவே - நல்
வழி சொல்லும் என் நல் நண்பரே
13. வியாகுலத் தாய் மடியில் மகனின் உடல்
தாலாட்டு பாடும் தாயின் அழுகுரல்
வார்த்தைகள் இல்லா அருள் வேதம் நான் கண்டேன்
விழி தாரும் என் இயேசுவே - நல்
வழி சொல்லும் என் நல் நண்பரே
14. உயிரற்ற உடல் அது கல்லறையில்
சாய்ந்திட அல்ல எழுவதற்கே
மனம் போன போக்கில் நான் வாழ்வை தொலைத்தேனே
விழி தாரும் என் இயேசுவே - நல்
வழி சொல்லும் என் நல் நண்பரே
மனதைத் தொடும் வார்த்தைகளும், மெட்டும். அருமை.❤❤❤❤❤❤❤
Praise the lord 🙏 hallelujah hallelujah hallelujah ❤️ amen amen amen 🌹👏👏👏❤️
Paatu super ahh iruku...
But, yedutha place Ettamadai. adhaum credits la potrundha nalla irundhrukum
#Ettamadai
#Holyfamilychurch
Amezing ❤
Nice song ❤❤
Nice work
Praise be to Jesus Christ.
Very nice voice.
Nice to hear this way of cross in song, superb congratulations.Good script.The singer sang nicely.
❤❤
super song
Great congratulations 😊
Touching nice songs 🎵
Amazing ❤❤
Good work felix...
nice work ✨
Congratulations
Super 😍
❤
Nice song and voice super
Happy to see you dr❤
Good Song
Aww super song..🥹
✨👍🥰
Nice