தந்தையர் தின வாழ்த்துப் பாடல், அப்பா பாடல், அருணா செல்வம், APPA SONG, Fête des pères, தமிழ்க்கவிதை

Поділитися
Вставка
  • Опубліковано 31 жов 2016
  • Appa song!
    arouna-selvame.blogspot.com
    ------------------------------------------------
    பத்துமாதம் வயிற்றுக்குள்
    பத்தியமாய்ச் சுமக்கவில்லை!
    சித்தத்தில் உன்நினைவைச்
    சிறிதேனும் இறக்கவில்லை!
    (பத்துமாதம்)
    தாலாட்டிப் பாலூட்டிப்
    பார்த்திருந்தே இரசிப்பதில்லை!
    ஆளாகி நீஉயர
    அறிவுருத்த மறப்பதில்லை!
    (பத்துமாதம்)
    உயிரிருந்தால் போதுமென்ற
    உணர்வுடனே இருப்பதில்லை!
    உயிருக்குள் உனைவைத்த
    உள்ளுணர்வைச் சொல்வதில்லை!
    (பத்துமாதம்)
    தந்தையிவர் எனக்காட்டும்
    தாய்மட்டும் உயர்வில்லை!
    சிந்தையிலே சிறைவைத்த
    தந்தைக்கோ நிகரில்லை!
    (பத்துமாதம்)
    பாவலர் அருணா செல்வம்

КОМЕНТАРІ •