உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன் மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடரடி தொழுதெழென் மனனே. -நம்மாழ்வார் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை ***- இதில், மஹோபகாரங்களைத் தமக்குச் செய்தருளின எம்பெருமானுடைய திருவடிகளைத் தொழுது மேன்மை பெறும்படியாக ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார். புறமதத்தவருடைய கொள்கைப்படி எம்பெருமான் நிர்க்குணனல்லன் ஸமஸ்த கல்யாண குணாத்மகன் என்கிற வேதாந்த ஸித்தாந்தத்தை முதலடியிலே வெளியிட்டருளுகிறார். இதனால், எம்பெருமான் தனது திருக்கல்யாண குணங்களைக் காட்டி இவ்வாழ்வாரை ஈடுபடுத்திக் கொண்டமை விளங்கும். குணங்களுக்குத் தோற்று அடிமைப்படுதல் என்றும் ஸ்வரூபமாகவே அடிமைப்பட்டிருந்தல் என்றும் இருவகைப்பட்டுள்ளதான அடிமையில் குணப்ரயுக்தமான அடிமையிற்காட்டிலும் ஸ்வரூபப்ரயுக்தமான அடிமையே சிறக்குமென்பது ஸம்ப்ரதாய ஸாரார்த்தமாயினும், ஆழ்வார் தம்மை எம்பெருமான் அகப்படுத்திக் கொண்டது திருக்குணங்களைக் கொண்டாதலால் தாம் இழிந்த துறையை முதலிலே பேசுகிறாரென்க. ஸ்வரூப ப்ரயுக்தமான அடிமையும் ஆழ்வார்க்குக் குறைவற்றதென்னுமிடம் “ஆகிலுங் கொடியவென்னஞ்ச மவனென்றே கிடக்கு மெல்லே” என்ற பாசுரத்தால் வெளியிடப்படுகின்றமை காண்க. ஸ்வரூப ப்ரயுக்தமான அடிமை இயற்கையிலேயே இருக்கச் செய்தேயும் சேஷியானவன் கல்யாணகுணங்கட்கும் கொள்கலமாயிருப்பதனால் இக்குணங்களும் அடிமைக்கு ஓர் உபாதியாக அமைகின்றன வென்றுணர்க. ஸ்ரீராமபிரானுடைய வநவாஸ ஸமயத்திலே அத்ரிபகவானுடைய ஆச்ரமத்தில் பெருமாள் எழுந்தருளி மஹர்ஷியை அநுவர்த்தித்திருந்தபின்பு அவருடைய தேவியான அநஸூயையைப் பிராட்டி அநுவர்த்தித்திருக்கிறவளவிலே, அவள் பிராட்டியைப் பார்த்து ‘உற்றாரையும் செல்வத்தையும் விட்டுப் பெருமாள் பின்னே காட்டுக்குவந்த விது தைவ யோகத்தாலே உமக்கு நன்றாகக்கூடிற்று; நகரத்திலிருக்கிலுமாம். காட்டிலிருக்கிலுழாம்; பெண்டிர்க்குத் தெய்வம் பார்த்தாவே கிடீர். நீர் இப்படியே எப்போதும் பெருமாள் விஷயத்திலே அனுகூலித்திருக்கக் கடவீர்’ என்று சொல்ல; பிராட்டி வெட்கமடைந்து கவிழ்தலையிட்டிருந்து ‘எனக்குப் பெருமாள் பக்கலில் அநுராகம் ஸ்வரூபமாகவே உண்டாயிருக்கச் செய்தே அவர் தாம் குணங்களிற் சிறந்தவராகையாலே என்னுடைய அநுராகத்தை குணப்ரயுக்தமாக நாட்டார் நினைக்கக் கூடும்; எப்போதாவது ஒரு ஸமயம் அவரைக் குணங்களைவிட்டுப் பிரித்துக்காட்டக் கூடுமாகில் அப்போது என்னுடைய அநுராகம் ஸ்வரூபப்ரயுக்தமேயன்றி குணப்ரயுக்தமல்ல என்பது நன்கு விளங்க அவகாசமுண்டாகும்; அப்படி ஒருநொடிப்பொழுதும் காட்ட முடியாதபடி அவர் எப்பொழுதும் ஸமஸ்தகல்யாணகுணாம்ருதஸாகரமாக இருப்பதால் நான் அவர் பக்கல் இருக்குமிருப்பை அறிவிக்கப் பெறுகிறிலேன்; அவர் குணஹீநருமாய் விரூபருமா யிருந்தபோதிலும் நான் அவர்பக்கல் இப்படியே காணுமிருப்பேன்’ என்றாள் என்பது ப்ரஸித்தம். இளையபெருமாள் திருவடியோடே தம்மைப்பற்றிச் சொல்லிக் கொள்ளும்போது “அஹமஸ்யாவரோ ப்ராதா குணைர் தாஸ்ய முபாகத:” என்று பெருமாளுடைய திருவுள்ளத்தாலே நான் அவர்க்கு உடன் பிறந்தவனாகிறேன் என்னுடைய கருத்தினால் குணங்கட்குத் தோற்று அவர்க்கு அடிமைப்பட்டவன் நான் என்றதும் இங்கு நினைக்கத்தக்கது.
🙏 Keshava Madhava Madhusudana Rishikesh Parthasarathy Mukunda Murari Vasudeva Krishna Khanna Govinda Rama Vittala Panduranga Lakshmi Narayana Lakshmi Narasimha Vamanan Machabaghavan Khurma Hari Achudha Damodara Vishnu 🙏👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 🙏
om namo Sri Narayana namo namaha swami en payr karuna karan fram banglur swami Sri valokkudi krishnen swami unga upenyasam kettu kettu en manem bakthiel mariyedue
உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.
-நம்மாழ்வார்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இதில், மஹோபகாரங்களைத் தமக்குச் செய்தருளின எம்பெருமானுடைய திருவடிகளைத் தொழுது மேன்மை பெறும்படியாக ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார்.
புறமதத்தவருடைய கொள்கைப்படி எம்பெருமான் நிர்க்குணனல்லன் ஸமஸ்த கல்யாண குணாத்மகன் என்கிற வேதாந்த ஸித்தாந்தத்தை முதலடியிலே வெளியிட்டருளுகிறார். இதனால், எம்பெருமான் தனது திருக்கல்யாண குணங்களைக் காட்டி இவ்வாழ்வாரை ஈடுபடுத்திக் கொண்டமை விளங்கும்.
குணங்களுக்குத் தோற்று அடிமைப்படுதல் என்றும் ஸ்வரூபமாகவே அடிமைப்பட்டிருந்தல் என்றும் இருவகைப்பட்டுள்ளதான அடிமையில் குணப்ரயுக்தமான அடிமையிற்காட்டிலும் ஸ்வரூபப்ரயுக்தமான அடிமையே சிறக்குமென்பது ஸம்ப்ரதாய ஸாரார்த்தமாயினும், ஆழ்வார் தம்மை எம்பெருமான் அகப்படுத்திக் கொண்டது திருக்குணங்களைக் கொண்டாதலால் தாம் இழிந்த துறையை முதலிலே பேசுகிறாரென்க. ஸ்வரூப ப்ரயுக்தமான அடிமையும் ஆழ்வார்க்குக் குறைவற்றதென்னுமிடம் “ஆகிலுங் கொடியவென்னஞ்ச மவனென்றே கிடக்கு மெல்லே” என்ற பாசுரத்தால் வெளியிடப்படுகின்றமை காண்க.
ஸ்வரூப ப்ரயுக்தமான அடிமை இயற்கையிலேயே இருக்கச் செய்தேயும் சேஷியானவன் கல்யாணகுணங்கட்கும் கொள்கலமாயிருப்பதனால் இக்குணங்களும் அடிமைக்கு ஓர் உபாதியாக அமைகின்றன வென்றுணர்க. ஸ்ரீராமபிரானுடைய வநவாஸ ஸமயத்திலே அத்ரிபகவானுடைய ஆச்ரமத்தில் பெருமாள் எழுந்தருளி மஹர்ஷியை அநுவர்த்தித்திருந்தபின்பு அவருடைய தேவியான அநஸூயையைப் பிராட்டி அநுவர்த்தித்திருக்கிறவளவிலே, அவள் பிராட்டியைப் பார்த்து ‘உற்றாரையும் செல்வத்தையும் விட்டுப் பெருமாள் பின்னே காட்டுக்குவந்த விது தைவ யோகத்தாலே உமக்கு நன்றாகக்கூடிற்று; நகரத்திலிருக்கிலுமாம். காட்டிலிருக்கிலுழாம்; பெண்டிர்க்குத் தெய்வம் பார்த்தாவே கிடீர். நீர் இப்படியே எப்போதும் பெருமாள் விஷயத்திலே அனுகூலித்திருக்கக் கடவீர்’ என்று சொல்ல; பிராட்டி வெட்கமடைந்து கவிழ்தலையிட்டிருந்து ‘எனக்குப் பெருமாள் பக்கலில் அநுராகம் ஸ்வரூபமாகவே உண்டாயிருக்கச் செய்தே அவர் தாம் குணங்களிற் சிறந்தவராகையாலே என்னுடைய அநுராகத்தை குணப்ரயுக்தமாக நாட்டார் நினைக்கக் கூடும்; எப்போதாவது ஒரு ஸமயம் அவரைக் குணங்களைவிட்டுப் பிரித்துக்காட்டக் கூடுமாகில் அப்போது என்னுடைய அநுராகம் ஸ்வரூபப்ரயுக்தமேயன்றி குணப்ரயுக்தமல்ல என்பது நன்கு விளங்க அவகாசமுண்டாகும்; அப்படி ஒருநொடிப்பொழுதும் காட்ட முடியாதபடி அவர் எப்பொழுதும் ஸமஸ்தகல்யாணகுணாம்ருதஸாகரமாக இருப்பதால் நான் அவர் பக்கல் இருக்குமிருப்பை அறிவிக்கப் பெறுகிறிலேன்; அவர் குணஹீநருமாய் விரூபருமா யிருந்தபோதிலும் நான் அவர்பக்கல் இப்படியே காணுமிருப்பேன்’ என்றாள் என்பது ப்ரஸித்தம். இளையபெருமாள் திருவடியோடே தம்மைப்பற்றிச் சொல்லிக் கொள்ளும்போது “அஹமஸ்யாவரோ ப்ராதா குணைர் தாஸ்ய முபாகத:” என்று பெருமாளுடைய திருவுள்ளத்தாலே நான் அவர்க்கு உடன் பிறந்தவனாகிறேன் என்னுடைய கருத்தினால் குணங்கட்குத் தோற்று அவர்க்கு அடிமைப்பட்டவன் நான் என்றதும் இங்கு நினைக்கத்தக்கது.
🙏 Keshava Madhava Madhusudana Rishikesh Parthasarathy Mukunda Murari Vasudeva Krishna Khanna Govinda Rama Vittala Panduranga Lakshmi Narayana Lakshmi Narasimha Vamanan Machabaghavan Khurma Hari Achudha Damodara Vishnu 🙏👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 🙏
Swamiji Anega Namaskaram.
Hare Krishna hare Krishna
Krishna Krishna hare hare
Hare rama hare rama
Rama rama hare hare
Super explanation to stay 👌in dhyanam.
Om namo Narayana Hari Om
om namo Sri Narayana namo namaha swami en payr karuna karan fram banglur swami Sri valokkudi krishnen swami unga upenyasam kettu kettu en manem bakthiel mariyedue
அ
Sri vellukkudi krishnan sawmigal superp upanyaas adityarku adiyaruku adiyaruku adiyen
"Acharyar Thiruvadigale Saranam..
Krishna krishna
ஆழ்ந்த கருத்துகள்..
🌺🙏🏼OM SRI GURUBHYO NAMAH🙏🏼🌺
😭😭😭😭😭 Fantastic Swamy🙏
Hi
Hare krishna🙏🙏
Hare Krishna Swamy ji 🙏🙏🙏🌺
🙏🙏🙏🙏
Hare Krsna 🙏
Adiyen Daasan... Very Enlightening. _/\_
Valga valamuden
Soulful
NAz
Part 3 & Part 4 please
Ei
Om Namo Narayana Namaha