பிற்பகல் 1.00 மணி DD தமிழ் செய்திகள் [12.07.2024]

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2024
  • 1) பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை தரத்தை‍ மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அரசு அதிகாரிகள் வழங்க வேண்டும் - பிரதமர் நரேந்திர மோதி அறிவுறுத்தல்.
    2) கஃரீப், ரபி பருவ பயிர்களுக்கு உரிய காலத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் செளகான் அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்.
    3) தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.
    4) சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டுள்ள இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மியான்மர் வெளியுறவு அமைச்சரிடம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்.
    5) வானிலிருந்து தரையிலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ருத்ரா எம் 2 ஏவுகணை - வெற்றிகரமாக சோதித்தது பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு டி ஆர் டி ஓ.
    6) முதலமைச்சர் மு க ஸ்டாலினுடன் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு - தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சில சக்திகள் முயற்சி செய்வதாக புகார்.
    7) தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு - மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
    8) விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் - நாளை வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையம் சார்பில் விரிவான ஏற்பாடுகள்.
    9) நேபாளத்தில் நிலச்சரிவில் இரண்டு பேருந்துகள் - 10 பேர் உயிரிழப்பு - 65 பேரை காணவில்லை - மீட்புப் பணிகள் தீவிரம்.
    10) விம்பிள்டன் டென்னிஸ் - முதலாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் கார்லோஸ் ஆல்காராஸை எதிர்கொள்கிறார் டேனியல் மெத்வதேவ் - மற்றொரு அரையிறுதியில் நோவாக் ஜோகோவிச் - லோரென்ஸோ மியூஸெட்டி மோதல்.
    ==============

КОМЕНТАРІ •