முத்துசுவாமி தீட்சிதர் செய்த அற்புதங்கள் | Muthuswami Dikshitar & His miracles

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Join this channel to get access to perks:
    / @pentvtamil
    இசை மும்மூர்த்திர்களில் ஒருவராக போற்றப்படுபவர் முத்துசாமி தீட்சிதர். இராமசுவாமி தீட்சிதருக்கும் சுப்புலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 1776ம் ஆண்டு பிறந்தவர். தனது 40 வயது வரை குழந்தை இல்லாத நிலையில் வைத்தீஸ்வரன் கோயில் முத்துகுமாரஸ்வாமி அருளால் இக்குழந்தை பிறந்ததால் இறைவன் கருணையில் மகிழ்ந்து அந்த சுவாமியின் திருப்பெயரையே குழந்தைக்குச் சூட்டியிருக்கின்றனர் பெற்றோர். தெலுங்கு சமஸ்கிருதம் மொழிகளையும் இசையையும் தன் தந்தையாரிடமே கற்றவர். இளம் வயதிலேயே இவருக்குத் திருமணம் நடந்தேறியிருக்கின்றது. இசையுடன் வீணை வாசிப்பதிலும் மிகச் சிறந்த தேர்ச்சி பெற்றவராக விளங்கியிருக்கின்றார்.
    இவர் தெலுங்கு, சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற்றவர்; தெய்வத் திருவருளால் சங்கீத சாஸ்திர மேதை ஆனவர்; வீணை பயிற்சியும் நிரம்பப் பெற்றவர்; ஜோதிடம், மந்திர சாஸ்திரங்கள் முறையாகக் கற்றுத் தேர்ந்தவர். யமுனா கல்யாணி, பிருந்தாவன சாரங்கா போன்ற இந்துஸ்தானி ராகங்களை கர்நாடக சங்கீதத்தில் சேர்த்தவர். கங்கையில் மந்திர சித்தியால் தெய்வீக வீனை பெற்றவர்.

КОМЕНТАРІ • 10

  • @k.sundararajanrajan7094
    @k.sundararajanrajan7094 2 роки тому +5

    அற்புதம் செய்வதற்கு என்றே பிறந்த மகான்.

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 10 місяців тому +3

    Wonderful
    Pl share
    Thanks

  • @mm-kn5qc
    @mm-kn5qc 2 роки тому +4

    அற்புதமாக தொகுத்துக்கிறீர்கள் நன்றி

  • @janakinatarajan8690
    @janakinatarajan8690 5 місяців тому +1

    Very nice

  • @sundharavadivelsundharavel3704
    @sundharavadivelsundharavel3704 2 місяці тому

    அருமையான பதிவு நன்றி

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c 6 місяців тому +1

    ஓம்சரவணபவ

  • @mangaiarkarasim7878
    @mangaiarkarasim7878 6 місяців тому +1

    🙏🌸🙏

  • @sdprakash2549
    @sdprakash2549 2 місяці тому

    ❤❤❤

  • @tnvs4248
    @tnvs4248 5 місяців тому

    You should have made out a writeup and read it clearly without stammering. Words with ழ should be pronounced with extra care. மழை should not be pronounced as மலை because the meaning changes totally.

  • @sridharanganesan
    @sridharanganesan 7 місяців тому +1

    You look like a magician and do not look ideal to provide a discourse on Muthu swami Dhikishthar.... Please maintain the required dress attire....pastor pose la video podaatheenga