மஞ்சள் மணக்கும் மண்ணிற்கும்... மக்களின் நற்பண்பிற்கும்... வந்தாரை வாழவைக்கும் ஊராம் கோவைக்கும் வணக்கங்க.... கொங்கு நாடு கோயம்புத்தூர் வந்து பாருங்கோ... நெஞ்சு இனிக்கும் கொங்கு தமிழ் கேட்டுப்பாருங்கோ... செவ்விழநி செழிக்கும் நல்ல நாடுதானுங்கோ... பாசத்திற்கும் மரியாதைக்கும் சொந்த ஊருங்ககோ... மேற்கு மலைச் சாரலிலே, தலை சாய்ந்து தூங்கும் ஊருங்க... மலையாளத்து சாரல் வந்து, மெல்ல தட்டி எழுப்பும் பாருங்க... ஆனைமலை, நீலமலை, வெள்ளிமலை அழகு பாருங்க... மூன்று பக்கம் ஊர காக்கும் இயற்கை அவள் மலைகள் தானுங்க... நொய்யல் ஆறு, ஆழியாறு, பவானிஆறும் பிறக்கும் ஊறுங்க... நம்ம சிறுவாணித் தண்ணியில சீனிச்சக்கரை கலந்தது யாருங்க... விளைந்த பஞ்சுல நூல் திரிச்சு, தரியில் இட்டு ஆடை நெய்து, மக்கள் மானங் காக்கும் கொங்கு நாடுங்க, கோயம்புத்தூர் நம்ம ஊருங்க... கருப்பு மண்ணு பூமி தானுங்க, அதில் விளையும் பஞ்சு வெள்ளை பாருங்க... அதுபோல எங்க பேச்சில் குறும்பு இருந்தாலும், மரியாத பாசம் தான் விலகாதுங்க... கொங்கு தமிழ் அம்மணி வந்தா, பூக்களுக்கும் மீசை முளைக்குங்... பொள்ளாச்சி இழநி போல, மக்கள் உள்ளம் குளிர்ந்து இனிக்குங்க... வருடம் முழுக்க வசந்தம் வீசும், சாரல் காத்துக்கு சொந்த ஊருங், விசைத்தரிதான் இரவு முழுக்க, தாலாட்டு படிக்கும் கேளுங்... அமைதியாக வளர்ந்து வரும், அற்புதமே கோவை மாநகர்... நட்புக்கள் மலர்ந்து சிரிக்கும், கல்லூரித் தாயும் அவள்... சொர்க்க பூமியாம் கோவை அவள், அன்பு கொஞ்சும் சேயும் அவள்... கோவை நமது பெருமை ஆகும்... அதை காப்பது நம் கடமை ஆகும்... பசுமைக் கோவையை காத்திடுவோம்... இயற்கையை என்றும் போற்றிடுவோம்...
SUPER. ❤. கோவை
❤️
மஞ்சள் மணக்கும் மண்ணிற்கும்...
மக்களின் நற்பண்பிற்கும்...
வந்தாரை வாழவைக்கும் ஊராம்
கோவைக்கும் வணக்கங்க....
கொங்கு நாடு கோயம்புத்தூர் வந்து பாருங்கோ...
நெஞ்சு இனிக்கும் கொங்கு தமிழ் கேட்டுப்பாருங்கோ...
செவ்விழநி செழிக்கும் நல்ல நாடுதானுங்கோ...
பாசத்திற்கும் மரியாதைக்கும் சொந்த ஊருங்ககோ...
மேற்கு மலைச் சாரலிலே,
தலை சாய்ந்து தூங்கும் ஊருங்க...
மலையாளத்து சாரல் வந்து,
மெல்ல தட்டி எழுப்பும் பாருங்க...
ஆனைமலை, நீலமலை,
வெள்ளிமலை அழகு பாருங்க...
மூன்று பக்கம் ஊர காக்கும் இயற்கை அவள் மலைகள் தானுங்க...
நொய்யல் ஆறு, ஆழியாறு,
பவானிஆறும் பிறக்கும் ஊறுங்க...
நம்ம சிறுவாணித் தண்ணியில சீனிச்சக்கரை கலந்தது யாருங்க...
விளைந்த பஞ்சுல நூல் திரிச்சு,
தரியில் இட்டு ஆடை நெய்து,
மக்கள் மானங் காக்கும் கொங்கு நாடுங்க,
கோயம்புத்தூர் நம்ம ஊருங்க...
கருப்பு மண்ணு பூமி தானுங்க,
அதில் விளையும் பஞ்சு வெள்ளை பாருங்க...
அதுபோல எங்க பேச்சில் குறும்பு இருந்தாலும்,
மரியாத பாசம் தான் விலகாதுங்க...
கொங்கு தமிழ் அம்மணி வந்தா,
பூக்களுக்கும் மீசை முளைக்குங்...
பொள்ளாச்சி இழநி போல,
மக்கள் உள்ளம் குளிர்ந்து இனிக்குங்க...
வருடம் முழுக்க வசந்தம் வீசும்,
சாரல் காத்துக்கு சொந்த ஊருங்,
விசைத்தரிதான் இரவு முழுக்க,
தாலாட்டு படிக்கும் கேளுங்...
அமைதியாக வளர்ந்து வரும்,
அற்புதமே கோவை மாநகர்...
நட்புக்கள் மலர்ந்து சிரிக்கும்,
கல்லூரித் தாயும் அவள்...
சொர்க்க பூமியாம் கோவை அவள்,
அன்பு கொஞ்சும் சேயும் அவள்...
கோவை நமது பெருமை ஆகும்...
அதை காப்பது நம் கடமை ஆகும்...
பசுமைக் கோவையை காத்திடுவோம்...
இயற்கையை என்றும் போற்றிடுவோம்...
superb bro🤝