Odi Vilaiyaadu Paappaa || Bharathiyar Songs || Gayathri Girish || Vijay Musicals

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Song : Odi Vilaiyaadu Paappaa || Album : Bharathiyar Songs || Singer : Gayathri Girish || Music : K S Raghunathan || Lyrics : Mahakavi Subramaniya Bharathi || Video : Kathiravan Krishnan || Vijay Musicals || Tamil Literary Song || பாடல் : ஓடி விளையாடு பாப்பா || ஆல்பம் : பாரதியார் பாடல்கள் || பாடியவர் : காயத்ரி கிரிஷ் || இசை : K S ரகுநாதன் || இயற்றியவர் : மகாகவி சுப்ரமணிய பாரதி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ் || தமிழ் இலக்கிய பாடல்
    பாடல் வரிகள் | Lyrics :
    ஓடி விளையாடு பாப்பா
    நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
    கூடி விளையாடு பாப்பா
    ஒரு குழந்தையை வையாதே பாப்பா
    காலை எழுந்ததும் படிப்பு
    பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
    மாலை முழுதும் விளையாட்டு
    என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா
    சின்னஞ்சிறு குருவி போலே
    நீ திரிந்து பறந்து வா பாப்பா
    வண்ண பறவைகளைக்கண்டு நீ
    மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா
    ஓடி விளையாடு பாப்பா
    நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
    கூடி விளையாடு பாப்பா
    ஒரு குழந்தையை வையாதே பாப்பா
    பாலைப் பொழிந்து தரும் பாப்பா
    அந்தப் பசுமிக நல்லதடி பாப்பா
    வாலைக் குழைத்துவரும் நாய்தான்
    அது மனிதருக்குத் தோழனடி பாப்பா
    தமிழ்மத்திரு நாடு தன்னைப் பெற்ற
    எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா
    அமிழ்தில் இனியதடி பாப்பா
    நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா
    சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
    அதைத் தாயென்று கும்பிடடி பாப்பா
    செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்
    அதைத் தினமும் புகழ்ந்திடடி பாப்பா
    உயிர்களிடத்தில் அன்பு வேணும்
    தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்
    வயிரமுடைய நெஞ்சு வேணும்
    இது வாழும் முறைமையடி பாப்பா

КОМЕНТАРІ • 6