perunagar brahmapureeswarar temple | பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் Shi Brahmma Purieshwarar

Поділитися
Вставка
  • Опубліковано 19 тра 2021
  • அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், பெருநகர் .
    காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், பெருநகர் கிராமம்.
    பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரத்தில் இருந்து 23 கிமீ பெருநகர்.
    Shri Brahmma Purieshwarar temple location map
    maps.app.goo.gl/cwgDNEvaJ4T4x...
    பெருநகர் அதிகார நந்தி சேவை முதல் உற்சவம் :
    • வாராரு வாராரு அதிகாரநந...
    Shiva Temple
    மூலவர்: #பிரம்மீசர்
    உற்சவர்: #சோமாஸ்கந்தர்
    அம்மன் / தாயார்: பட்டுவதனாம்பிகை
    தல விருட்சம்: #வன்னிமரம்
    தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்
    பழமை: 500-1000 வருடங்களுக்கு முன்
    புராண பெயர்: பிரம்மநகர், சதுரானனம் சங்காரானனம், பிரம்மபுரம்
    ஊர்: #பெருநகர்
    மாவட்டம்: #காஞ்சிபுரம்
    மாநிலம்: தமிழ்நாடு
    அருள்மிகு பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், பெருநகர் .
    maps.app.goo.gl/gACdo6E5C6q9i...
    பாடல் பாடியவர்கள்:
    கவிராட்சசர் கச்சியப்ப முனிவர், பிரமீசர் பதிற்றுப்பத்தந்தாதி, #காஞ்சிப்புராணம் 2ஆம் காண்டம்.
    #பிரம்மீசன் #perunagarvillage #festival #thaipoosam
    1760ல் #பிரமீசம்_பதிற்றுப்_பத்தந்தாதி எழுதிய #கச்சியப்பர், ஊரின் செழிப்பை பின் வருமாறு புகழ்ந்துள்ளார்.
    #மறைசூழ்_பிரமநகர்_(94)
    பலகாலும் ஏத்து விழவின் மிகுதிக்கண் நின்ற பிரமாபுரத்து தேவர் கூட்டங்கள் எவ்விடத்தும் நின்று பல முறையும் துதிக்கின்ற விழாக்கள் முகிதியிடத்து விளங்குகின்ற பிரமநகர் (27)
    பிரமநகர் பிரமீசன் தனையிறைஞ்சியேத்தினார்கள் காந்து மணி முடிஇமையோர்க்கு இறைவராய்ப் பேரின்பம் கலந்து வாழ்வார் (3)
    முடிஇமையோர்க்கு இறைவராய்ப் பேரின்பம் கலந்து வாழ்வார் (3)
    உமாதேவி என்றும் தவம் செய்திருக்கும் காஞ்சி தலத்தின் எல்லைக்கண் விளங்குகின்ற தேவர் குழாம் மகிழ்ச்சி மிகுந்து வணங்கும் சதுரானன சங்கரம் எனும் பெயரைப் பெற்றுள்ள பிரமநகர் (2)
    திருவிழா:
    தைமாதம் பிரமோற்சவம், தைப்பூசம், மாசிமகம், பிரதோஷம், சிவராத்திரி,...
    தல சிறப்பு:
    சிவலிங்கம் வழிபாடு, மூலவர் சன்னதி கஜபிரதிஸ்டை பச்சை கருங்கல்லால் கட்டப்பட்டது. கோயிலின் உட்பிரகார ஈசான மூலையில் பச்சைக் கல்லில் ஆன மகாபைரவர் வாகனமின்றி தனித்தே காட்சியளிப்பது சிறப்பம்சமாகும். கோயிலின் மூன்றாவது திருச்சுற்றில் அட்ட நாகங்களான அனந்தன் வாசுகி, தட்சகன், கார்க்கோடன், சங்கன், பத்மன், மகாபத்மன், குளிகன் ஆகியோர் உள்ளனர். பச்சைக் கல்லாலான தூங்கானைமாடக் கோயிலான இக்கோயில் விமானத்தில் 3 கலசங்கள் கொண்டு அழகுடன் விளங்குகிறது.
    திறக்கும் நேரம்:
    காலை 6- மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
    முகவரி:
    அருள்மிகு #பட்டுவதனாம்பிகை உடனுறை #பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், #பெருநகர் (அஞ்சல்), #மானாம்பதி (வழி), உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் - 603403.
    பொது தகவல்:
    ஊரின் வடகிழக்கே கோயில் உள்ளது மதில்சூழ் 5 நிலை கொண்ட 7 கலசத்துடன் ராஜகோபுரம், தெற்கே நுழைவாயில், முதல் திருச்சுற்றில் சிம்மத்தூண் மண்டபத்தில் சக்கர வினாயகர், தொந்தி விநாயகர் ,இஷ்டசித்திஸ்வரர், அழகேசுவரர் திருக்குளம் ( பிரம்ம தீர்த்தம் ), தலத்தருவான வன்னி மரம், பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் அலங்கார மண்டபம், நவக்கிரக கோயில் , பழனி ஆண்டவர் சன்னதி உள்ளன.
    கோயில் கிழக்கு நோக்கியுள்ளது மூன்று நிலையுள்ள ரிஷி கோபுரவாயில் நுழைந்து அடுத்த சுற்றினை கடந்து மூலவரை வணங்கலாம் மகா மண்டபம், அடுத்து பலிபீடமும் சிங்க மண்டபமும் உள்ளன. தனிக்கோயிலில் அம்பாள் நின்ற கோலத்தில் அருள் வழங்குகிறாள், அன்னையின் திருப்பெயர் ஸ்ரீ பட்டுவதனாம்பிகை. மேலும் , பிரசித்தி பெற்ற #ஜேஷ்டாதேவி பிரகாரத்தில் அருள் பாலிக்கிறார்.
    மூன்றாவது திருச்சுற்றில் அட்ட நாகங்களான அனந்தன் வாசுகி, தட்சகன், கார்க்கோடன், சங்கன், பத்மன், மகாபத்மன், குளிகன் ஆகியோர் உள்ளனர். நான்முகன், நந்தி தேவர், கொற்றவை, வல்லபவிநாயகர், ஏழு கன்னியர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், மகா கணபதி, ஆறுமுகக்கடவுள், தட்சிணாமூர்த்தி, திருமால் ஆகியோரை தரிசிக்கலாம்,
    பச்சைக் கல்லாலான தூங்கானைமாடக் கோயிலான இக்கோயில் விமானத்தில் 3 கலசங்கள் கொண்டு அழகுடன் விளங்குகிறது.
    தலபெருமை:
    தைமாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் 14 நாட்கள் நடைபெறும் அதில் 5 ஆம் நாள் திருக்கல்யாணம், 7ஆம் நாள் திருத்தேர், 9ஆம் நாள் 63 நாயன்மார்கள் திருஉலா, 10ஆம் நாள் தைப்பூசத்தீர்த்தவாரி சிறப்புற நடைபெறுகின்றன, தைப்பூசத்தன்று சேயாற்றில் காஞ்சி மாவட்டம் மற்றும் அருகிலுள்ள திருவண்ணாமலை , காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 கிராமங்களில் உள்ள கடவுள் திருமூர்த்திகள் ஒன்று கூடி அருள் பாலிக்கும் திருக்காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
    அருள்மிகு பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், பெருநகர் .
    maps.app.goo.gl/gACdo6E5C6q9i...
    Shri Brahmma Purieshwarar temple
    maps.app.goo.gl/4PQwc342kstxL...
    Shiva Temple
    maps.app.goo.gl/QRxik3JBAHdx1...
    #பெருநகர்_அதிகார_நந்தி_சேவை முதல் உற்சவம் :
    • வாராரு வாராரு அதிகாரநந...
    #அதிகாரநந்திசேவை
    #perunagar_brahmapureeswarar_temple
    #பெருநகர்பிரம்மபுரீஸ்வரர்
    #பிரம்மபுரீஸ்வரர் #பிரம்மீசர்
    #Shri_Brahmma_Purieshwarar_temple
    #jeshtadevitemple #jestadevikovil_chennai #muthevi #moodevi #mudeviAmman #perunagar_jestakovil
    #பெருநகர் #பட்டுவதனாம்பிகை #பிரம்மபுரீஸ்வரர்
    #ஜேஷ்டாதேவிஆலயம் #ஜேஷ்டாதேவிபெருநகர்
    #Jestadevi #Jeshtadevi_perunagar
    #பெருநகர்பிரம்மபுரீஸ்வரர் #சிவன்கோவில் #perunagar #ஜோஷ்டாதேவிபெருநகர் #ஜேஷ்டாதேவிசென்னை #காஞ்சிபுரம் #உத்திரமேரூர் #brammaburishwarar_perunagar #brammapurishwarar_kanchipuram #brammapureeshwarar_thiruppattur #perunagarpirammapureeshvarar #thaipusam

КОМЕНТАРІ • 38

  • @rajm4676
    @rajm4676 2 роки тому +4

    thambi..is the timing correct..in google review it says only 6-8PM...திறக்கும் நேரம்:
    காலை 6- மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 Рік тому +1

      உச்சிக்கால பூஜை பகல்12மணிக்கு நடைபெறும்.

  • @karthikshanmuganathan2175
    @karthikshanmuganathan2175 11 днів тому +1

    ஓம் நாக பூசணி அம்மாவே போற்றி போற்றி தமிழர்கள் பாதுகாக்கப்பட தமிழர் பிரதேசங்கள் பாதுகாக்கப்பட தமிழர் மொழி பாதுகாக்கப்பட மேன்மைகள் சைவநீதி விளங்குக தமிழர் தேசமெங்கும் என்று நீ அருபுரிவாயாக தாயே

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 роки тому +6

    அருமையான பதிவு 🙏

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 7 місяців тому +2

    அற்புதம் நன்றி வணக்கம்

  • @SasiKumar-vn8mb
    @SasiKumar-vn8mb Рік тому +2

    அருமை 🙏🏼 அருமையான பதிவு 💐🙏🏼

  • @sukumars381
    @sukumars381 2 роки тому +2

    பதிவிற்கு நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi 7 місяців тому +1

    Nanba 🤝🤝🤝

  • @rajeswarinatarajan1111
    @rajeswarinatarajan1111 2 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Рік тому +1

    நன்றி 🙏🙏🙏

  • @ArunKumar-cv5ob
    @ArunKumar-cv5ob Рік тому +1

    Super...

  • @saraswathiv6123
    @saraswathiv6123 2 роки тому +1

    Super

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 9 годин тому

    Mine is kettai i can visit rt

  • @sambrani_vasanai
    @sambrani_vasanai  Рік тому +1

    ua-cam.com/video/oTFNtHTrXhE/v-deo.html
    ஜேஷ்டாதேவி ஆலயம் பெருநகர், பட்டுவதனாம்பிகை பிரம்மபுரீஸ்வரர் கோவில், ஜேஷ்டா தேவி வரலாறு,
    ua-cam.com/video/oTFNtHTrXhE/v-deo.html

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 3 місяці тому +3

    முலவர் சன்னதியை கொஞ்சம் உயர்த்தி காட்டவும் 🎉

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 3 місяці тому +3

    சேஷ்டா தேவி அம்மா
    கோயில் நுழைவு வாயில் வலதுபுறம் உள்ளது 🎉🎉

    • @sambrani_vasanai
      @sambrani_vasanai  3 місяці тому

      ஸ்ரீ சேஷ்டா தேவி அம்மன் தரிசனம் பெருநகர்
      ua-cam.com/video/oTFNtHTrXhE/v-deo.html

  • @apn5524
    @apn5524 2 роки тому +10

    தைதுளை கரணத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய தெய்வம் ஜேஷ்டா தேவி. இங்கு அவர்கள் வந்து வழிபடலாம்

    • @sambrani_vasanai
      @sambrani_vasanai  Рік тому +1

      ua-cam.com/video/oTFNtHTrXhE/v-deo.html
      ஜேஷ்டாதேவி ஆலயம் பெருநகர், பட்டுவதனாம்பிகை பிரம்மபுரீஸ்வரர் கோவில், ஜேஷ்டா தேவி வரலாறு,
      ua-cam.com/video/oTFNtHTrXhE/v-deo.html

    • @NirmalKumar-yn8lz
      @NirmalKumar-yn8lz Рік тому +1

      Really benefit for thaithulai karanam people? Anyone told the effect?

  • @sudamanisrinivasan5418
    @sudamanisrinivasan5418 8 днів тому +1

    Bhattar phone number and temple timings

  • @murugananthaml8106
    @murugananthaml8106 2 роки тому +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம் ஐயா அடியேன் ஒற்றியூர் சிவ முருகானந்தம் அடியேனுக்கு பிரம்மபுரீஸ்வரர் கைலாய வாத்திய குழுவின் தொடர்பு எண் வேண்டும்

  • @omshridisai
    @omshridisai 2 роки тому

    Thanks for the useful video.
    how to travel from chennai..is there public transport or only cab

    • @sambrani_vasanai
      @sambrani_vasanai  2 роки тому +1

      Thanks a lot 🙏, public transport is available , chennai to kanchipuram, then kanchipuram to perunagar ( just 24 km in vandhawasi road ). Location map also given sir, so please check this video discription. Thank you ... 🙏

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 3 роки тому +4

    Please make a video on the Perumal temple of Perunagar.

    • @sambrani_vasanai
      @sambrani_vasanai  2 роки тому

      ua-cam.com/video/pSwZ3qlDmd4/v-deo.html
      அருள்மிகு பெருந்தேவி தாயார் சமேத திருவூரக வரதாரஜ பெருமாள் திருக்கோவில் பெருநகர்.
      Perunagar Perumal Temple, Kanchipuram
      ua-cam.com/video/pSwZ3qlDmd4/v-deo.html

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 3 роки тому +1

    Gajaprashta vimanam

  • @meenakshirammurty1720
    @meenakshirammurty1720 8 місяців тому +1

    Thaithulai karanam.....appidi endral enna?

  • @sambrani_vasanai
    @sambrani_vasanai  2 роки тому +1

    ua-cam.com/video/pSwZ3qlDmd4/v-deo.html
    அருள்மிகு பெருந்தேவி தாயார் சமேத திருவூரக வரதாரஜ பெருமாள் திருக்கோவில் பெருநகர்.
    Perunagar Perumal Temple, Kanchipuram
    ua-cam.com/video/pSwZ3qlDmd4/v-deo.html

  • @sakthis5515
    @sakthis5515 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி இந்த கோவிலுக்கு அடிக்கடி பஸ் வசதி எங்கிருந்து உள்ளது சென்னையில் இருந்து வரும் போது எப்படி வரவேண்டும்

    • @sambrani_vasanai
      @sambrani_vasanai  2 роки тому +1

      மிக்க நன்றி அய்யா, 🙏. சென்னையிலிருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வர வேண்டும். காஞ்சிபுரம் to வந்தவாசி செல்லும் சாலையில் 24 km தொலைவில் பெருநகர் என்ற கிராமத்தில் இந்த கோவில் உள்ளது.

    • @marimuthu5234
      @marimuthu5234 10 днів тому

      ​@@sambrani_vasanai5:26

  • @senthilselvandurairaj2353
    @senthilselvandurairaj2353 Рік тому +1

    Temple timing plz

    • @sambrani_vasanai
      @sambrani_vasanai  Рік тому

      காலை 6-12 மணி , மாலை 4- 8 மணி வரை திறந்திருக்கும்

  • @chandrasekar2071
    @chandrasekar2071 5 днів тому +3

    காஞ்சிபுரம் பஸ் நிலயம்த்திலிருத்து அடிக்கடி பஸ் உணடா

    • @sambrani_vasanai
      @sambrani_vasanai  3 дні тому

      ஆம் , 15 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இருக்கும்

    • @dwarakanathbabu7550
      @dwarakanathbabu7550 3 дні тому

      காஞ்சீபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து வந்தவாசி செல்லும் பஸ்சில் ஏறி பெருநகர் பஸ் ஸ்டாப்பில் இறங்கவும். அங்கிருந்து 1 கிமீ....ஆட்டோ அல்லது நடை.