அங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவதேவனே! (Angum Ingum Mai) - கமலா பழனியப்பன்(kamala palaniappan)

Поділитися
Вставка
  • Опубліковано 3 сер 2020
  • ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
    ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
    அங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவதேவனே!
    ஆதியாய் அநாதியாய்ச் சமைந்த ஜோதி ரூபனே!
    மங்களங்கள் யாவும் நல்கும் அம்பிகை மணாளனே
    மைந்தன் செய்யும் பூஜையில் மகிழ்ந்தருள்நடேசனே (ஓம்)
    எந்த இல்லம் ஆயினும் இருந்த இல் சிதம்பரம்
    எடுத்த பீடம் ஆலயம் தொடுத்த கூரை கோபுரம்
    செந்தமிழ்ச்சொல் மந்திரம் திருந்தும் அன்பே ஆகமம்
    சிவந்தபாத பங்கயம் உவந்தருள் நடேசனே! (ஓம்)
    மன்றிலே எடுத்த கால் என் மனையிலும் எடுத்துவை
    மனதிலே நினைத்த நன்மை விரைவிலே முடித்துவை
    என்றும் தீமை அணுகிடாமல் ஈசனே தடுத்து வை
    ஏத்தும் அன்பர்குழுவில் என்னைச் சேர்த்துவை நடேசனே! (ஓம்)
    ஆபயந்த ஐந்தினோடு பால் பழம் பஞ்சாமிர்தம்
    ஆலைவாய்க் கரும்பு தெங்கு தேன் சுகந்த சந்தனம்
    நீபயந்த யாவையும் நினக்களித்தேன் ஈசனே!
    நேர்த்தியாய் அனைத்தும் ஆடி வாழ்த்துவாய் நடேசனே! (ஓம்)
    அட்டநாக பூஷணம் அளிக்க வல்லன் அல்லனே
    ஆனை மான் சிறுத்தை வேட்டை ஆடவல்லன் அல்லனே
    இட்ட மாலை ஆடையோடு தொட்டுவைத்த சந்தனம்
    என்றும் நல்கவல்லன் வல்லன் கொண்டருள் நடேசனே! (ஓம்)
    வில்லினால் அடிக்கவோ? வீசுகல் பொறுக்கவோ?
    மிதித்த போதுகை பிரம்பை மேலும் நான் எடுக்கவோ?
    நல்ல பிள்ளை என்னை ஆளும் நாதனும் நீ அல்லவோ?
    நாளும் நான் படைத்த சொல்லும் பூவும் கொள்நடேசனே (ஓம்)
    ஆடநீ எடுத்ததாய் அறிந்தவர் இயம்புவார்
    அல்ல அல்ல என் தலைமேல் சூட என்று சொல்கிறேன்
    ஈடில்லாத தெய்வம் நீ இடப்புறம் எடுத்தகால்
    எந்த நோக்கில் என்று சொல்ல வந்தருள் நடேசனே! (ஓம்)
    மழுவெடுத்(து) எதை விளக்க மன்றுதோறும் ஓடினாய்?
    மதியெடுத்த சிரம் இருக்க மத்தனாய் ஏன் ஆடினாய்?
    கழுதெடுத்து நடனம் ஆடும் காட்டில் என்ன தேடினாய்
    கையில் நான் எடுத்த தூபம் கொள்ளுவாய் நடேசனே! (ஓம்)
    எடுத்த தூபம் ஆதியாவும் ஏற்றருள் மகேசனே!
    இன்று நான் படைத்த யாவும் உண்ணுவாய் சபேசனே!
    தடுத்த பண்டை வினையகற்றித் தாங்குவாய் சர்வேசனே!
    சரணம் உன்னையன்றி ஏது? தாங்குவாய் நடேசனே! (ஓம்)
    வாழி நீபடைக்கும் தெய்வம் மலரணை அமர்ந்ததாம்!
    வகுத்தளிக்கும் தெய்வம் கூட அரவணை கிடந்ததாம்!
    ஊழிதோறும் ஐந்தொழில் உவந்து செய்யும் ஈசனே! ஓய்ந்து
    சற்றென் நெஞ்சணைக் கண் சாய்ந்து கொள் நடேசனே! (ஓம்)
    ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நமரூபனே!
    ஓதும் ஐந்து சபையில் ஆடும் பாதனே சங்கீதனே
    வாமியாய்த் தலைத்த சிவகாமி காதல் நேசனே
    மாறிலாத கருணை நீ வழங்குவாய் நடேசனே (ஓம்)
    -அருட்கவி கு. செ. ராமசாமி

КОМЕНТАРІ • 43

  • @rameshramesh-ds7ly
    @rameshramesh-ds7ly Рік тому

    இனிமையாண குரல் வளம். எல்லாம் வல்ல தந்தை சிவனின் ஆசியோடு நோய் நெடி இன்றி நிங்கள் நூறாண்டுகாலம் வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்
    🙏

  • @sudarsonsudarson680
    @sudarsonsudarson680 Рік тому +1

    அழகானகுரல்வளம் ஓம் நமச்சிவாய ஓம்| ஓம் நமசிவாயா🙏🙏

  • @bamagopalakrishnan1362
    @bamagopalakrishnan1362 3 роки тому +4

    தெய்வீக குரல் அம்மா🙏

  • @jeevaj4999
    @jeevaj4999 2 роки тому +6

    அருமை அருமை. குரல் இனிமை. ஜெய் சாய்ராம்

  • @soundar3457
    @soundar3457 Рік тому

    பேராசிரியர் அருட்கவிகுசெரா
    அவர்கள் பேசுவதை உணர்கிறேன் அம்மா

  • @HARIKUMAR-cv5iu
    @HARIKUMAR-cv5iu 10 місяців тому +1

    Chidambara vaasanae thillai nadarasane song paadi upload pannunga mam

  • @thangarajthangaraj6854
    @thangarajthangaraj6854 2 роки тому +4

    அருமையான குரல் வளம்.வாழ்துக்கள்.

  • @voyageesan5029
    @voyageesan5029 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deivanayakim3621
    @deivanayakim3621 3 роки тому +2

    மஞ்சள் முகத்தழகும் ... பாடல் உங்கள் குரலில் அருமை அம்மா

  • @user-iz1ye2fg5e
    @user-iz1ye2fg5e 9 місяців тому

    Arumai

  • @vijayalakshminagaraj1686
    @vijayalakshminagaraj1686 3 роки тому

    Amma indruthaan allikodupathil..murudar song unga voice nu therindukondeen...ella paadalum..ketukondee irukireen..3 manineeramaai...arumaiyaana kural var(l)am ..pakthimanakirathu thankalin theuveeka kuralil

  • @umapathip6033
    @umapathip6033 Рік тому

    Arumai amma 🙏🙏🙏

  • @Tulasi586
    @Tulasi586 3 роки тому +2

    Super voice mam

  • @ramanathanchidambaram750
    @ramanathanchidambaram750 Рік тому

    Very good voice.

  • @RameshB-ro3vv
    @RameshB-ro3vv Рік тому

    🙏🙏🙏🪷🪷🪷🪷🪷OHM NAMASHIVAYA🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

  • @cuteranger11
    @cuteranger11 3 роки тому +2

    Excellent 👏👏👏🙏🙏

  • @meenalannamalai9324
    @meenalannamalai9324 2 роки тому

    Super

  • @lakshmimeyappan8005
    @lakshmimeyappan8005 3 роки тому +1

    Super aachi

  • @pannirselvamramachandran8874
    @pannirselvamramachandran8874 2 роки тому

    Om namashivaya om.

  • @user-xu3zp8zi3y
    @user-xu3zp8zi3y 10 місяців тому

    பாடல் வரிகள் ப்ளீஸ்

  • @ravirm5441
    @ravirm5441 3 роки тому

    🙏🙏🙏

  • @Mahesofficial2118
    @Mahesofficial2118 2 роки тому

    Semma voice

  • @thenu200
    @thenu200 3 роки тому +1

    அருமை 👌

  • @saisundar3807
    @saisundar3807 3 роки тому +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @kishorem1960
    @kishorem1960 3 роки тому +2

    Super voice sum magical voice mam ,

  • @jennifermaria8190
    @jennifermaria8190 3 роки тому +3

    oh god ,really amazing voice

  • @user-no2ol8md9g
    @user-no2ol8md9g 11 місяців тому

    அம்மா நான் சாய்பாபாப் பற்றி பாடல் எழுதி வைத்திருக்கிறேன் தங்களுக்கு அனுப்பினால் பாடுவீர்களா தங்களின் கணீர் குரல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

    • @user-no2ol8md9g
      @user-no2ol8md9g 11 місяців тому

      தங்களின் வாட்ஸ்அப் நம்பரை தாருங்களேன்

  • @SruthiMagal-sz8om
    @SruthiMagal-sz8om 3 місяці тому

    Padal varigal kidaikuma amma

  • @SelvaraniMll
    @SelvaraniMll 3 роки тому

    🙏🙏🙏🙏

  • @MuthurajaPalaniappan2
    @MuthurajaPalaniappan2 4 роки тому +12

    ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
    ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
    அங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவதேவனே!
    ஆதியாய் அநாதியாய் சமைந்த ஜோதி ரூபனே!
    மங்களங்கள் யாவும் நல்கும் அம்பிகை மணாளனே
    மைந்தன் செய்யும் பூஜையில் மகிழ்ந்தருள் நடேசனே (ஓம்)
    எந்த இல்லம் ஆயினும் இருந்த இல் சிதம்பரம்
    எடுத்த பீடம் ஆலயம் தொடுத்தக் கூரை கோபுரம்
    செந்தமிழ்ச் சொல் மந்திரம் திருந்தும் அன்பே ஆகமம்
    சிவந்தபாத பங்கயம் உவந்தருள் நடேசனே (ஓம்)
    மன்றிலே எடுத்த கால் என் மனையிலும் எடுத்துவை
    மனதிலே நினைத்த நன்மை விரைவிலே முடித்துவை
    என்றும் தீமை அணுகிடாமல் ஈசனே தடுத்து வை
    ஏத்தும் அன்பர் குழுவினில் என்னைச் சேர்த்துவை நடேசனே! (ஓம்)
    ஆபயந்த ஐந்தினோடு பால் பழம் பஞ்சாமிர்தம்
    ஆலைவாய்க் கரும்பு தெங்கு தேன் சுகந்த சந்தனம்
    நீபயந்த யாவையும் நினைக்களித்தேன் ஈசனே!
    நேர்த்தியாய் அனைத்துமாடி வாழ்த்துவாய் நடேசனே! (ஓம்)
    அட்டநாக பூஷணம் அளிக்க வல்லன் வல்லனே
    ஆனை மான் சிறுத்தை வேட்டை ஆடவல்லன் அல்லனே
    இட்ட மாலை ஆடையோடு தொட்டுவைத்த சந்தனம்
    என்றும் நல்கவல்லன் வல்லன் கொண்டருள் நடேசனே! (ஓம்)
    வில்லினால் அடிக்கவோ வீசுகள் பொருக்கவோ?
    மிதித்த போதுகை பிரம்பை மேலும் நான் எடுக்கவோ
    நல்ல பிள்ளை என்னை ஆளும் நாதனும் நீ அல்லவோ
    நாளும் நான் படைத்த சொல்லும் பூவும் கொள் நடேசனே! (ஓம்)
    ஆடநீ எடுத்தாய் அறிந்தவர் இயம்புவர்
    அல்ல அல்ல என் தலைமேல் சூட என்று சொல்கிறேன்
    ஈடில்லாத தெய்வம் நீ இடப்புறம் எடுத்தக் கால்
    எந்த நோக்கில் என்று சொல்ல வந்தருள் நடேசனே! (ஓம்)
    மழுவெடுத்(து) எதை விளக்க மன்றுதோரும் ஓடினாய்
    மதியெடுத்த சிரம் இருக்க மத்தானாய் ஏன் ஆடினாய்
    கழுதெடுத்து நடனமாடும் காட்டில் என்ன தேடினாய்
    கையில் நான் எடுத்த தூபம் கொள்ளுவாய் நடேசனே! (ஓம்)
    எடுத்த தூபம் ஆதியாவும் ஏற்றருள் மகேசனே!
    இன்று நான் படைத்தயாவும் உண்ணுவாய் சபேசனே
    தடுத்த பண்டை வினையகற்றித் தாங்குவாய் சர்வேசனே
    சரணம் உன்னயன்றி ஏது தாங்குவாய் நடேசனே! (ஓம்)
    வாழி நீ படைக்கும் தெய்வம் மலரணை அமர்ந்ததாம்!
    வகுத்தளிக்கும் தெய்வம் கூட அரவணை கிடந்ததாம்
    ஊழிதோறும் ஐந்தொழில் உவந்து செய்யும் ஈசனே!
    ஓய்ந்து சற்றென் நெஞ்சினைக் கண் சாய்ந்து கொள் நடேசனே! (ஓம்)
    ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நமரூபனே!
    ஓதும் ஐந்து சபையில் ஆடும் பாதனே சங்கீதனே
    வாமியாய் தலைத்த சிவகாமி காதல் நேசனே
    மாறிலாத கருணை நீ வழங்குவாய் நடேசனே! (ஓம்)
    பாடல் இயற்றியவர்: அருட்கவி கு.செ.ராமசாமி
    பாடியவர்: கமலா பழனியப்பன்

  • @tamilarasishankar8944
    @tamilarasishankar8944 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanambalsenthilnathan854
    @gnanambalsenthilnathan854 Рік тому

    Super