தைப்பூசம் 2025 - விரத முறை, வழிபாட்டு முறை & நேரம் | வள்ளலாரின் வழிபாட்டு முறை | Thaipusam 2025

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #thaipusam #murugan #muruga #தைப்பூசம் #முருகன் #முருகா
    முருகனிடம் தினமும் சொல்ல வேண்டிய 4 வரி பதிகங்கள் எனது குரலில்| Simple 4 line Padhigangal in my voice
    • முருகனிடம் தினமும் சொல...
    வேல் மாறல் மஹா மந்திரம் எனது குரலில் (முழுவதும்) | Vel Maral Manthram in my voice
    • வேல் மாறல் மஹா மந்திரம...
    வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | "VEL" Worship method at Home explained by Desa Mangayarkarasi
    • வீட்டில் வேல் வழிபாடு ...
    வேல் வகுப்பு பாராயணம் செய்யுங்கள், கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்
    பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
    விழிக்குநிக ராகும்
    பனைக்கமுக படக்கரட மதத்தவள
    கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
    தெறிக்கவர மாகும்
    பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
    கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
    யிடித்துவழி காணும்
    பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
    ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
    புசிக்கவருள் நேரும்
    சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
    இடுக்கண்வினை சாடும்
    சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி
    ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
    ஒளிப்பிரபை வீசும்
    துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
    நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
    எனக்கோர்துணை யாகும்
    சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
    யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
    மறத்தைநிலை காணும்
    தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
    கழற்குநிக ராகும்
    தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
    வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
    விதிர்க்கவளை வாகும்
    தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
    வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
    பகற்றுணைய தாகும்
    சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
    விருப்பமொடு சூடும்
    திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
    குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
    நிறைத்துவிளை யாடும்
    திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
    விசைத்ததிர வோடும்
    சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
    விழித்தலற மோதும்
    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
    விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
    நடத்துகுகன் வேலே
    நவக்கிரக பிரச்சினைகள் தீர:
    நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
    கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
    தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
    தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே
    பாடல் 1:
    அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
    ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
    எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
    எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும்
    செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
    திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
    தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
    தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.
    பாடல் 2:
    ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
    உத்தமர்தம் உறவுவேண்டும்
    உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்
    பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும் பொய்மை
    பேசாதிருக்கவேண்டும்
    பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
    பிடியாதிருக்கவேண்டும்
    மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
    மறவாதிருக்கவேண்டும்
    மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
    வாழ்வில் நான் வாழவேண்டும்
    தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள் வளர்
    தலம் ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே.
    பாடல் 3
    அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
    அன்பெனும் குடில்புகும் அரசே
    அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
    அன்பெனும் கரத்தமர் அமுதே
    அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
    அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
    அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே
    அன்புரு வாம்பர சிவமே.
    பாடல் 4
    எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
    ⁠தம் உயிர்போல் எண்ணி உள்ளே
    ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்
    ⁠யாவர் அவர் உளந்தான் சுத்த
    சித்துருவாய் எம் பெருமான் நடம்புரியும்
    ⁠இடம் என நான் தெரிந்தேன் அந்த
    வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
    ⁠சிந்தை மிக விழைந்த தாலோ.
    ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 245

  • @Dhanalakshmi-b5z
    @Dhanalakshmi-b5z Годину тому +212

    அம்மா நீங்க சொன்ன மாதிரி சஷ்டி விரதம் இருந்தேன் திருமணமாகி 15 வருடங்கள் கழித்து நாள் தள்ளி போய் இருக்கு அம்மா எனக்கு அந்த முருகனே குழந்தையாக பிறக்க வேண்டும் நாளை மருத்துவமனை போய் பார்க்க போகிறேன் என் சகோதர சகோதரிகள் எனக்காக முருகனிடம் வேண்டி கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @subhakarthick09
    @subhakarthick09 3 години тому +233

    அக்கா நீங்க சொன்ன எல்லா விரதம் நான் முருகனை நம்பி இன்னும் இருக்கிற அவர் ஏனோ கண்ணு முழிக்கல இந்த வருடம் எனக்கு குழந்தை வரம் அருள்வார் என்று நம்புகிறேன் ஓம் சரவணபவ

    • @MahaLingam-x2i
      @MahaLingam-x2i 2 години тому +27

      கட்டிப்பா குழந்தை கிடைக்கும் அக்கா ❤🦚🙏

    • @b.sumithrab.sumithra3043
      @b.sumithrab.sumithra3043 2 години тому +16

      முருகர் அருளால் இந்த வருடம் கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும்.ஓம் சரவணபவ

    • @AyyanmoorthiA
      @AyyanmoorthiA 2 години тому +3

      Akka vanakkam kavalapatathinga kandippagamurugan kotuppar

    • @MeenaMeena-wu7ig
      @MeenaMeena-wu7ig 2 години тому +8

      நிச்சயமாக முருகன் அருளால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஒரே மனதாக முழு மனதோடு முருகனை நம்புங்கள் 🙏

    • @sulekhasundar5424
      @sulekhasundar5424 2 години тому

      Nanum 4 varushama murugana nambi than kathurukiren. Intha thaipusam la karunai katuvarunu nambikioda irukiren . Kuzhanthaya ah vanthuru Muruga

  • @DHANALINGESHSS
    @DHANALINGESHSS 3 години тому +80

    அம்மா கோடான கோடி நன்றி அம்மா இந்த பதிவை பார்த்து கண்கள் பூத்து போச்சு அம்மா எப்ப சொல்லுவீங்க எப்ப சொல்லுவீங்கன்னு காத்து கொண்டு இருந்தேன் மாமா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா

  • @D.josh077
    @D.josh077 3 години тому +30

    விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றாமொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்தபழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனிவழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே
    🙏🏻 ஓம் முருகா 🙏🏻

  • @annamannam1348
    @annamannam1348 2 години тому +24

    அம்மா முருகன் அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது . மிக்க நன்றி அம்மா.
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏

  • @SangeethaSangeetha-m2t
    @SangeethaSangeetha-m2t 2 години тому +7

    உங்க வீடியோ எதிர்பார்த்து கொண்டிருந்தேன் அம்மா.. நன்றி அம்மா

  • @Anbudan_naan.
    @Anbudan_naan. 3 години тому +47

    வேலுண்டு வினை இல்லை
    மயிலுண்டு பயம் இல்லை
    குகனுண்டு குறைவில்லை மனமே
    கந்தன் உண்டு கவலையில்லை மனமே
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @sivalingama5225
    @sivalingama5225 Годину тому +3

    தை பூசம் பதிவு எதிர்பார்த்து கொண்டிருந்தேன் மிகவும் நன்றி அம்மா

  • @MuraliS-es1md
    @MuraliS-es1md Годину тому +5

    ரொம்ப நன்றி அம்மா எங்களுக்கு முருகன் இந்த வருஷமாவது கண்ணத்திரக்கட்டும்🙏🏼🙏🏼🙏🏼

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 години тому +20

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤

  • @MeenaMeena-wu7ig
    @MeenaMeena-wu7ig 2 години тому +5

    கடவுளின் அருள் எனக்கு கிடைக்க 🙏 முழு காரணம் நீங்கள்தான் அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏

  • @Nirmalamani1987
    @Nirmalamani1987 Годину тому +2

    இந்த பதிவை தான் நான் எதிர்பார்த்தேன். மிக்க நன்றி அம்மா.

  • @AlahiniNadarasa
    @AlahiniNadarasa Годину тому +5

    வேலும் மயிலும் சேவலும் துணை.. ஓம் முருகா

  • @arumugamarum4330
    @arumugamarum4330 Годину тому +2

    பதிவு மிகவும் அருமை... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏

  • @MaheshP-ix1fd
    @MaheshP-ix1fd 3 години тому +10

    அம்மா இன்று நான் கிர்த்திகா விரதம் இருக்கேன் அம்மா ஓம் சரவண பவ ஆறு முகம் அறுளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் சரவண பவ

  • @SATHYABama-s9q
    @SATHYABama-s9q 2 години тому +1

    தங்களின் இந்த பதிவிற்காகத்தான் காத்திருந்தேன்... நன்றி அம்மா❤

  • @lavanyayuvasri704
    @lavanyayuvasri704 2 години тому +1

    அம்மா உங்களுடைய பதிவை தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன். என்னுடைய வாழ்க்கையிலும் என்னுடைய மனதிலும் நிறைய மாற்றங்கள் .அதற்காக உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி அம்மா 🙏

  • @aravindanm2548
    @aravindanm2548 2 години тому +1

    முருகா முருகா முருகா எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் வேண்டிய வரங்களும் தந்தருள வேண்டுகிறேன் முருகி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @lakshmisudhakar6358
    @lakshmisudhakar6358 Годину тому +5

    🙏காலை வணக்கம் அம்மா🙏தைபூசம் பதிவை எதிர்ப்பார்தேன் அம்மா நன்றி😊திருச்சி மாவட்டம் வயலூர் முருகன் கோவில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது அம்மா நீங்களும் வாருங்கள் அம்மா 😊பக்தர்கள் அனைவரும் வாருங்கள் நம் சொந்த கடவுள் கந்த கடவுளின் அருளைப் பெறலாம் 🙏🦚🦚🦚கந்தா போற்றி 🙏ஓம் சரவணபவ🙏🦚வேலும்மயிலும் துணை🙏🦚மிக்க நன்றி அம்மா😊🙏🙏🙏

  • @Munees-y2g
    @Munees-y2g 3 години тому +1

    வணக்கம் அம்மா உங்களுடைய பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அம்மா

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 3 години тому +5

    நான் நினைக்கும் போதெல்லாம் அந்த நேரத்தில் உங்களின் பதிவு வந்து விடுகிறது தெய்வமே நான் வணங்கும் புன்னைநல்லூர் மாரியம்மனாகவே உங்களை வணங்குகிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parvathiPetchi-sh1ks
    @parvathiPetchi-sh1ks 2 години тому +4

    அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி நாம் செய்கிற அனைத்துக்கும் ஜெயம் நிட்சயம் என்பது உண்மையே....

  • @g.s.amrathasri3350
    @g.s.amrathasri3350 2 години тому +4

    உங்க நல்ல மனசுக்கு முருகன் உங்க கூட இருப்பார் அம்மா

  • @RajeshwariNatarajan-fb3xf
    @RajeshwariNatarajan-fb3xf 2 години тому

    அம்மா உங்கள் இந்த பதிவை மிகவும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தேன்

  • @sugunasundarrajan1302
    @sugunasundarrajan1302 2 години тому +1

    ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம் முருகா சரணம்
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    ஓம் சரவணபவ போற்றி

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 години тому +3

    மிக்க நன்றி அம்மா ❤
    ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤
    ஓம்முருகா சரணம் ❤

  • @sivasoorian8504
    @sivasoorian8504 2 години тому +1

    ஓம் முருகா எல்லாமுமாக கந்தா கடம்ப வேலவா மயில் வாகனம் தாங்கள் அருளால் ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைய மனதார விரதமிருந்து வேண்டி கேட்டுக்கொள்கிறேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et Годину тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹ஓம் வள்ளலார் போற்றி 🙏🙏🙏
    காலை வணக்கம் அம்மா🙏🙏தைப்பூசம் அதன் சிறப்புகளை ரொம்ப அற்புதமாக சொன்னிங்க மிக்க நன்றி அம்மா🙏🙏

  • @KiruthikaSatheeshsumathy
    @KiruthikaSatheeshsumathy 2 години тому +8

    முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒரு கைமுகன் தம்பியே நின்னுடைய தன் டைகால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்🙏🙏❤️

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 Годину тому +1

    காலை வணக்கம் சகோதரி 🙏🙏🙏🌹

  • @Rajekathir
    @Rajekathir 2 години тому +3

    ஓம் சரவணா பவ🙏🏻🙏🏻🌸🌸வெற்றி vel முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻

  • @masilamani5380
    @masilamani5380 3 години тому +3

    வெற்றி வேல் வீர வேல் குடும்பம் வசதியாக வாழ அருள் ‌செய்யுங்கள் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @KaviRaj-b7r
    @KaviRaj-b7r 3 години тому +5

    Appane muruga en kanavar daily daily rompa kodumai paduthiranga.ennala thangave mudiyala appa.syco madhiri nadanthukiranga.en uyiruke apatthu iruku avlo koduramaga nadanthukiranga.bad words,payangarama adikiranga 10years ah.athuvum intha 2years ah rompa kodumai panranga intha 2month ah alavuku athikamana kodumaiyila iruken .en 2babys kaga Nan uyirudan iruka vendum appa.enaku ungala vidda yarum ila appa ennai Kai vidrathinga.intha varudam sasti virathathil milaku viratham irunthen.monthly one time Palani poidu varukiren.karthigai viratham,mouna viratham ellame pannidu iruken.48days viratham start pannathila irunthu athikapadiyana pirachanai.velmaral thodarnthu padikka mudiyala.48days viratham vidralanu ethanaiye time thoniduchu.analum na vidala continue panidu iruken.enaku ninga madum than pa irukinga enaku nalla Vali kaadra varaikum ungala na vidamten appa.en kanavaruku nalla putthi kudutthu engala nalla vaala vainga appa muruga.Om Saravana Bhava

  • @kishoremano2196
    @kishoremano2196 3 години тому +1

    காலை வணக்கம் அம்மா பதிவுக்காக மிக்க நன்றி அம்மா ஓம் சரவண பவ

  • @BabuSanker
    @BabuSanker 3 години тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நன்றி சகோதரி

  • @charanyahari8662
    @charanyahari8662 Годину тому

    Was waiting for this video... Thanks Amma 🙏

  • @shebasudha6329
    @shebasudha6329 2 години тому

    உங்களுக்கு ஆயிரம் நன்றிகள் அம்மா எப்போதும் நீங்களே எங்களை வழி நடத்தும் வழி காட்டி அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏 எங்களுக்கு எப்போதும் நீங்களே குரு, தாய் வழிகாட்டி உங்களுடைய பதிவிற்காக எப்போதும் காத்துக் கொண்டு இருக்கும் உங்கள் குழந்தைகள் நாங்கள் 🙏🙏🙏

  • @KavithaKavitha-f8n
    @KavithaKavitha-f8n 3 години тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @rishir-vd7tl
    @rishir-vd7tl Годину тому +2

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
    தனிப்பருங்கருணை
    அருட்பெருஞ்சோதி

  • @SuthanthiraRani-e4g
    @SuthanthiraRani-e4g 3 години тому

    Vanakkam Amma 🙏🙏🙏🙏inaiku than poduvenganu ninachen amma intha pathiva.Romba nandri Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @LaluLalu-so6bk
    @LaluLalu-so6bk Годину тому

    அப்பனே முருகா நீயே துணை

  • @devendran8991
    @devendran8991 Годину тому +1

    முருகா சரணம்.சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @jaswanthmari6718
    @jaswanthmari6718 Годину тому

    தகவலுக்கு நன்றி

  • @Mithra0520
    @Mithra0520 3 години тому

    Intha video ku dha wait pannittu irinthen amma

  • @elumalain1705
    @elumalain1705 3 години тому +1

    குரு ஆத்ம வணக்கம் ஐயா குருவே போற்றி போற்றி போற்றி ஓம்

  • @vijayalakshmisivakumar4255
    @vijayalakshmisivakumar4255 2 години тому

    Amma intha pathivaithan romba romba Ethir parthu kodu irunthen nandri amma

  • @SuganyaChettiyar-b1q
    @SuganyaChettiyar-b1q 3 години тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பா அரோகரா

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 2 години тому +1

    கருணைக் கடலே கந்தா போற்றி❤❤❤

  • @Reka.mReka.m
    @Reka.mReka.m 3 години тому

    காலை வணக்கம் அம்மா இந்த பதிவை தானே எதிர்பார்த்தேன்.

  • @urboltpc9090
    @urboltpc9090 3 години тому +2

    வணக்கம் அம்மா.🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🌹....

  • @poornima.cpoorani853
    @poornima.cpoorani853 Годину тому

    Thank you so much Mam.
    🙏🙏🙏🙏🙏

  • @sarumathiyogalingam4780
    @sarumathiyogalingam4780 2 години тому

    Long waited video. Thanks for posting

  • @PonniPasumpon
    @PonniPasumpon Годину тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரர❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @MeenaJon-or3th
    @MeenaJon-or3th 2 години тому

    அம்மா உங்க பதிவ எதிர்பாத்து இருந்த நன்றி மா நிங்க சொன்னமாதிரி பூசை பண்வே ஓம் சரவணபவ

  • @myhouse5689
    @myhouse5689 2 години тому +1

    Thank u amma ❤❤❤❤

  • @MahaLaksmi-dc5vu
    @MahaLaksmi-dc5vu 3 години тому +1

    வணக்கம் அம்மா rompa ethir parthu kondiruntha pathivu 21nall viratham irrunthu murukanai ninaithu potrukirom muruga saranam 🙏🙏🙏🙏

  • @dharanishm9058
    @dharanishm9058 2 години тому

    மிக்க நன்றி அம்மா ❤

  • @kamalamani4652
    @kamalamani4652 Годину тому +1

    Thanks amma

  • @sivanandanc2207
    @sivanandanc2207 Годину тому

    OM Saravanbhava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🐔🙏🙏🙏🙏🙏🙏Hare Guruvayurappa Saranam 🙏Namskaram Sister 🙏chaithanya sivan

  • @MahaLaksmi-dc5vu
    @MahaLaksmi-dc5vu 3 години тому +1

    Murugan nenaitha vetuthal anaithaum neiraivetuvar anaithuperathu viratham ventuthal neraivera ventukirom muruga saranam sanmuga saranam 🙏🙏🙏

  • @sathyacity5731
    @sathyacity5731 3 години тому

    Enthaa pathivukku Nandri Amma ❤

  • @AnithaRajugandhi
    @AnithaRajugandhi 3 години тому +1

    ஓம் முருகா

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 2 години тому

    அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏 ஓம் Saravana Bhava🙏🙏🙏🙏

  • @amsavenisurendiran7992
    @amsavenisurendiran7992 3 години тому

    நன்றி மேடம் 🙏🙏🙏

  • @Kavya-d3o
    @Kavya-d3o 3 години тому

    நன்றி அம்மா ❤❤❤❤❤

  • @sgv2626
    @sgv2626 Годину тому

    அருள் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அறுள்பெரும் ஜோதி அருள் பெரும் ஜோதி
    அருட்பா.....…🙏🙏🙏🙏🙏

  • @kekkebukke5313
    @kekkebukke5313 3 години тому

    அம்மா 🙏 முருகனுக்கு அரோகரா 🙏

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 2 години тому +1

    கந்தன் பாதம் கனவிலும் காக்கும்🕉

  • @NanthiniAnanthaselvan
    @NanthiniAnanthaselvan 3 години тому

    Thanks for the information 😊

  • @MaheshPavi-c3g
    @MaheshPavi-c3g Годину тому

    அம்மா உங்கலை நான் என் வாழ்க்கை யில் என்னுடைய குருவாக ஏற்றுகொண்டேன் அம்மா நன்றி வாழ்த்த வயது இல்லை வணங்குகின்றேன் 🎉🎉🎉🎉🎉🎉

  • @suganyak6693
    @suganyak6693 3 години тому +1

    Vel vel muganuku vetri vel muruganukku arogaraa🙏🙏

  • @MrsAsharani
    @MrsAsharani 3 години тому

    Om muruga🌸🙏🌸 Thanks Amma ❤

  • @muruganMurugan-vi8qp
    @muruganMurugan-vi8qp Годину тому

    வனக்கம் அம்மா ❤❤❤❤❤❤❤

  • @AjithkumarmanojaManoja
    @AjithkumarmanojaManoja 2 години тому

    நன்றி அம்மா

  • @dhanaLakshmi-ov1rs
    @dhanaLakshmi-ov1rs Годину тому

    Nandri amma

  • @SuganyaRajendran-g7h
    @SuganyaRajendran-g7h Годину тому +1

    முருகா 🙏🙏🙏🐓🦚

  • @chitrasingaravel9570
    @chitrasingaravel9570 2 години тому +3

    இந்த வருடம் குழந்தை குழந்தை பாக்கியம் கிடைக்கும் நம்பிக்கையோட விரதம் இருக்கிறேன் அம்மா

  • @nalinivkr3904
    @nalinivkr3904 3 години тому

    Vanakkam amma romba thanks❤❤❤❤🙏

  • @kirithickkani5696
    @kirithickkani5696 3 години тому

    வெற்றி வேல் முருகனுக்கு போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @RevathiRajanthiran-i3w
    @RevathiRajanthiran-i3w 3 години тому

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @KalpanaR-eq2bi
    @KalpanaR-eq2bi 3 години тому

    அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏

  • @SR.SelvamRajeshvariSR
    @SR.SelvamRajeshvariSR 3 години тому +1

    அம்மா வணக்கம் அம்மா என் பெயர் ராஜேஸ்வரி முதல்ல பார்த்தேன் எப்ப எப்ப எதிர்பார்த்தது கொண்டியிருந்தேனா அம்மா ரொம்ப நன்றி அம்மா

  • @MageshWari-ho7ys
    @MageshWari-ho7ys 3 години тому +1

    ஓம் சரவணபவ🙏

  • @GovindarajRaj-z1r
    @GovindarajRaj-z1r Годину тому

    🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Om Saravana bava.🙏🙏🙏 Iniya kaalai vanakkam Amma.🙏🙏🙏

  • @deepeka1740
    @deepeka1740 3 години тому

    First comment.waiting for this

  • @umayadav4646
    @umayadav4646 3 години тому

    Vetrivel muruganku arohara🦚🙏🏻

  • @TamilSelvi-q1f
    @TamilSelvi-q1f 2 години тому

    நன்றி

  • @SanjuDeepak-g4g
    @SanjuDeepak-g4g 3 години тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤

  • @Saranya-sm9cx
    @Saranya-sm9cx 2 години тому

    Super amma🙏🥰

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 3 години тому

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @SermakKani-vf2or
    @SermakKani-vf2or Годину тому

    காலை வணக்கம் ௮ம்மா ❤❤❤❤❤

  • @deepaDeepa-qp7td
    @deepaDeepa-qp7td Годину тому +1

    Om Saravana bava 🙏

  • @venkatesane2453
    @venkatesane2453 2 години тому +1

    ஓம் சரவணபவ சரவணபவ

  • @Karpagaselvi-o3c
    @Karpagaselvi-o3c 2 години тому

    🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏

  • @NandhiniKaruvachi
    @NandhiniKaruvachi Годину тому

    முருகா குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா 🙏🙏🙏🙏

  • @usharania147
    @usharania147 2 години тому

    Thank-you ma

  • @sumathimanokaran6000
    @sumathimanokaran6000 3 години тому

    nandri amma ❤

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty 3 години тому

    குரு வணக்கம் அம்மா 🙏

  • @VenkatVenkat-py7no
    @VenkatVenkat-py7no 3 години тому

    ஓம் முருகா ஓம்

  • @DDS_kitchen
    @DDS_kitchen Годину тому

    ஓம் சரவண பவ🙏🏻🙏🏻🙏🏻