திருப்புகழ் Thiruppugazh துள்ளு மதவேள் (பொதுப்பாடல்கள்) thuLLumadhavEL (common)

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • ......... சொல் விளக்கம் .........
    துள்ளுமத வேள் ... செருக்குடன் வரும் மன்மத வேளின்
    கைக் கணையாலே ... கைகளிலிருந்து வரும் மலர்ப்
    பாணங்களினாலும்,
    தொல்லைநெடு ... நீண்ட துன்பத்தைத் தரும்
    நீலக் கடலாலே ... நீலநிறக் கடலாலும்,
    மெள்ளவரு ... மெதுவாக வந்து (தன்சோகக் குரலைக் காட்டும்)
    சோலைக் குயிலாலே ... சோலையிலுள்ள குயிலினாலும்,
    மெய்யுருகு மானை ... காதலால் உடல் உருகும் மான் போன்ற
    என் மகளை
    தழுவாயே ... அணைத்துக் கொள்ள மாட்டாயா?
    தெள்ளுதமிழ் பாட ... இனிமையான தமிழில் பாடல்களைப் பாடவல்ல
    தெளிவோனே ... தெளிவு கொண்ட சம்பந்தப் பெருமானே,
    செய்யகும ரேச ... செம்மை வாய்ந்த குமரேசன் எனப் பெயர்பெற்ற
    திறலோனே ... பராக்கிரமசாலியே,
    வள்ளல்தொழு ... வள்ளற் பெருமானாம் சிவபிரான் தொழுகின்ற
    ஞானக் கழலோனே ... ஞானத் திருவடிகளை உடையவனே,
    வள்ளிமண வாளப் பெருமாளே. ... வள்ளிக்கு மணவாளனாம்
    பெருமாளே.
    இப்பாடல் அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய்
    கூறுவதுபோல அமைந்தது. மன்மதன், அம்புகள், கடல், குயில் ஆகியவை
    விரகத்தைத் தூண்டுபவை.
    ......... Meaning .........
    thuLLu madha vEL: The arrogantly pouncing Love God (Manmathan)
    kaik kaNaiyAlE: is sending a barrage of flower arrows;
    thollai nedu neelak kadalAlE: The blue seas are constantly causing distress;
    meLLa varu sOlaik kuyilAlE: The cuckoo from the groves comes slowly and sings a tune in melancholy;
    mey urugu mAnaith: All these melt my deer-like daughter who is tormented by love.
    thazhuvAyE: Will You not come and embrace her?
    theLLu thamizh pAdath theLivOnE: You are the learned Sambandhan capable of composing poems in chaste Tamil!
    seyya kumarEsath thiRalOnE: You are the fair one named Kumaresan, the valorous!
    vaLLal thozhu nyAnak kazhalOnE: You have the feet of knowledge which the Great Munificent SivA worships.
    vaLLi maNavALap perumALE.: You are the Consort of VaLLi, Oh Great One!
    This song is based on the NAyaka-NAyaki BhAva, where the poet, assuming the heroine's mother's role, expresses the pang of separation from the hero, Murugan.
    The God of Love Manmathan and His flowery arrows, the blue seas, the cuckoo are a few of the things that aggravate the agony of separation.

КОМЕНТАРІ • 2