BRIO Creations
BRIO Creations
  • 4
  • 15 892
Anbin Mozhi Song Only/(official)அன்பின் மொழி பாடல் மட்டும்/ சிலுவை பாதை பாடல் / Siluvai Pathai Song.
Lyrics , Music : S.Martin prakash 9486472372
Singer
L.V. Brabhu
Prayer
Rev.Fr.J. Maria Anto Halvin
Chorus
Belgin Festus
Felix Stephen
Jisil Raja
Melphin Felix
Cynthia
Alfrin Barbea
Violin
Suraj
Bass Guitar
Beno
Violin Recorded by
Sunish@Besnsun Studio, Tvm.
Vocals Recorded by
Justin@Geetham Recording Studio, Ngl.
Keyboard Programming & Mixing by
M. Jeba Raja @ Raja Music Works, Vky.
Lyrical Video
Studio B9
Music Composing
L.V Brabhu., S.Martin Prakash
Lyrics & Direction
S. Martin Prakash
Produced by
S.Martin Prakash @ BRIO Creations
சிலுவை பாதை பாடல் :
பல்லவி ::
கல்வாரி பாதையில்
கல்லும் முள்ளும்
கண் மூடி தூங்கியதே
உன் மேனி தவழ்ந்த
நிலமும் மரமும்
புனிதம் அடைந்ததுவே
மனிதனை மீட்க
உயிரை நீத்த
மாபரன் இவர் யாரோ
இறைமகன் இவர்தானே
இன்னுயிர் தந்தாரே
இறைமகன் உமக்கே இந்நிலை என்றால்
என் நிலை என்னாகும்
என் நிலை மாற்ற
இந்நிலை ஏற்றாய்
என்பது மெய்யாகும்
என்பது மெய்யாகும்
(1)
அநீத தீர்ப்பு உலகில் எங்கும்
பரவி கிடக்கின்றதே
இறைமகன் இயேசுவும் விதி விலக்கில்லை தீர்ப்புக்குள்ளானாரே
மனுவுருவெடுத்த மாசறுபொன் இன்று கள்வர்கள் கைகளிலே
பலியிடத் துடிக்கும் கொடியவர் நடுவில்
செம்மறி தனி மரமே...
இறைமகன் உமக்கே இந்நிலை என்றால் என் நிலை என்னாகும்
என் நிலை மாற்ற
இந்நிலை ஏற்றாய்
(என்பது மெய்யாகும்) -2
(2)
முள்முடி தரித்த
மன்னவன் உனது
பயணம் தொடங்கியதோ
முறையற்ற தீர்ப்பில்
மனம் தளராமல்
சிலுவையை ஏற்றீரே
வேடர்கள் நடுவில்
மானின் நிலையில்
தவிக்கும் வேளையிலே
வேடிக்கை காணும்
மனிதர்களாலே
வேறெதும் பலனில்லையே
இறைமகன் உமக்கே.......
(3)
சிலுவையின் பாரம்
அழுத்திடும் நேரம்
கால்களும் தடுமாறும்
வலுவினை இழந்து
நிலமதன் மீது
விழுந்தது வானமுதம்
புதுமைகள் புரிந்த
புண்ணிய பூவிங்கே
புழுதியில் புரள்கின்றதே
புதைகின்ற விதைகள்
பூமியை பிளந்து
புலர்ந்தெழும் வேழையிதே..
இறைமகன் உமக்கே....
(4)
குருதியில் குளித்த
இறைமகன் இயேசு
மரியின் எதிரினிலே
உணர்வுகள் இடையில்
வார்த்தைகள் ஏது
மௌனம் ஆறுதலே
கருவறை சுமந்த
கண்மணியின்
கல்லறை பயணமிது
கண்களிரண்டில்
கூரிய ஆணிகள்
யாரதை அகற்றுவது
இறைமகன் உமக்கே....
(5)
தோள் கொடுக்க ஒரு
தோழனின் வரவு
தோள்களுக்காறுதலே
காலத்தினால் செய்த
சிறு உதவி இது
ஞாலத்தில் மிக பெரிதே
தொலைந்து போன
மனித நேயம்
துளிர்க்கும் தருணமிது
தொலை தூர பயணம்
துணை தேடும் தருணம்
யார் உம்மை தேற்றுவது...
இறைமகன் உமக்கே....
(6)
வீரமும் ஈரமும்
நிறைந்த வெரோணிக்கா
பெண்மையின் புது உருவம்
கறைபட்ட முகத்தை
துடைத்ததனாலே
கிடைத்தது அருள் வதனம்
கறைபட்ட மனிதரை
கழுவிடத்தானே
பொழிந்தது செந்நீர் மழை
பாதங்கள் கழுவிய
பணிவிடைக்காகவா
இறுதியில் இந்த நிலை
இறைமகன் உமக்கே.....
(7)
இரண்டாம் முறையாய்
நிலை தடுமாறி
நிலமதில் விழுந்தீரே
விழுவது எல்லாம்
எழுவதற்காக
மீண்டும் எழுந்தீரே
நெடிய இப்பயணத்தில்
கொடிய இவ் வேதனை
எல்லாம் எதற்காக
முள்முடி, கசையடி,
வசைமொழி, உயிர்வலி
எல்லாம் எனக்காக...
இறைமகன் உமக்கே...
(8)
அழுதிடும் எருசலேம்
மகளிருக்காக
ஆறுதல் சொன்னவரே
மரணத்தின் கோர
பயணத்தின் போதும்
ஆறுதலாய் நீரே
உனக்காகத்தான் இந்த
சிலுவை பயணம் - நீ
எனக்காக வருந்தாதே
பிறர் நலன் எண்ணியே
வாழ்ந்திடும் ஜீவனோ
போனாலும் திகையாதே
இறைமகன் உமக்கே.....
(9)
கண்களும் மயங்கி
உடலெல்லாம் நடுங்கி
பலமெல்லாம் இழந்தீரே - என்
பாவச்சுமையின்
பாரம் தாங்காது
தடுமாறி விழுந்தீரே
பலி பீடம் தன்னில்
பாவிகள் முன்னில்
பலியாக துணிந்தீரே - என்
பாவத்தின் பரிசை
ஏற்றிடத்தானே
மீண்டும் எழுந்தீரே...
இறைமகன் உமக்கே....
(10)
மானம் காக்கும்
ஆடையை அகற்றி
அவமான படுத்தினரே
கிழிந்த சதையும்
குருதியுமே இங்கு
ஆடையாய் ஆனதுவே
வலுவும் இழந்து
உருவம் இழந்து
வெறுமையாய் நின்றீரே
கடவுளின் திருவுளம்
நிறைவேறிடத்தானே
மரணிக்க துணிந்தீரே
இறைமகன் உமக்கே.....
(11)
கைகளும் கால்களும்
கூரிய ஆணியால்
சிலுவையில் அறைந்தனரே
மன்னவன் இயேசு
மரணத்தின் வாயிலில்
சிதைந்தழுதாரே
எம்மீது நீர் கொண்ட
பேரன்பின் ஆழம்
இதுவென்று உணரச்செய்தீர்
நண்பருக்காக
இன்னுயிரையும் ஈயும் - உயர்
பண்பினில் உருகச் செய்தீர்
இறைமகன் உமக்கே.....
(12)
சிதைந்திட்ட உடலும்
தளர்ந்திட்ட மனமும்
ஓய்ந்திடும் நேரமிது
மனுவுருவெடுத்த
இறைமகன் இயேசு
விடை பெறும் தருணமிது
தந்தையின் கையில்
ஆவியை ஒப்படைத்து
இன்னுயிர் துறந்தாரே
தன்னையே கரைத்து
ஒளி தந்த மெழுகு
ஐயோ அணைந்திட்டதே...
இறைமகன் உமக்கே....
( 13)
உயிரற்ற உடலாய்
தூயவன் இயேசு
தாயின் மடியினிலே
இதயத்தில் வாள் ஒன்று
ஊடுருவும் நேரம்
உள்ளம் சிதறியதே
இறைவாக்கினர் அன்று
உரைத்தது போலே
எல்லாம் நிகழ்ந்ததுவே
அருள் நிறை மரியே
ஆண்டவர் தாயே - எம்
தாயுமாய் ஆனீரே...
இறைமகன் உமக்கே....
(14)
அடக்கம் செய்ய ஓர்
இடம் கூட இல்லை
கடவுளின் மைந்தனுக்கு
மாடடை குடிலில்
பிறந்தவன் இறுதியில்
மாற்றான் கல்லறையில்
மனிதம் காத்திட
வந்த இம் மன்னா
மறைந்து போனதெங்கே
கோதுமை மணிகள்
முழைத்திடத்தானே
மண்ணுக்குள் மடிந்ததிங்கே,..
இறைமகன் உமக்கே....
Переглядів: 267

Відео

ANBIN MOZHI # ( Official)# Siluvaipathai Padal # அன்பின் மொழி #சிலுவை பாதை பாடல் # செபங்களுடன் 2023
Переглядів 15 тис.Рік тому
Lyrics , Music : S.Martin prakash 9486472372 Singer L.V. Brabhu Prayer Rev.Fr.J. Maria Anto Halvin Chorus Belgin Festus Felix Stephen Jisil Raja Melphin Felix Cynthia Alfrin Barbea Violin Suraj Bass Guitar Beno Violin Recorded by Sunish@Besnsun Studio, Tvm. Vocals Recorded by Justin@Geetham Recording Studio, Ngl. Keyboard Programming & Mixing by M. Jeba Raja @ Raja Music Works, Vky. Lyrical Vid...
Kalvari pathail.... siluvai pathai song Recording....# கல்வாரி பாதையில் .. சிலுவை பாதை பாடல் பதிவு .
Переглядів 342Рік тому
Kalvari pathail.... siluvai pathai song Recording....# கல்வாரி பாதையில் .. சிலுவை பாதை பாடல் பதிவு .

КОМЕНТАРІ

  • @antonypoulose3511
    @antonypoulose3511 9 місяців тому

    சகோதரர் மார்டின் உங்கள் திருச்சிலுவை பாதையின் படைப்பு இயேசப்பா உங்களுக்கு கொடுத்த கிருபை .உழைத்த அனைவருக்கும் கிறிஸ்துவுக்கு நன்றி.

  • @kavikavi5406
    @kavikavi5406 10 місяців тому

    Nenjathai negizhla vaitha siluvai paathai paadalukku mikka nandri.....💐🌷🙏

  • @graciouspeter2256
    @graciouspeter2256 Рік тому

    மிகவும் ௮ழகான படைப்பு வாழ்த்துக்கள் மார்ட்டின்

  • @rosyjoseph7602
    @rosyjoseph7602 Рік тому

    இந்த சிலுவை பாதை மிகவும் சிறப்பாக இருந்தது. நன்றி

  • @maheswarimaheswari5193
    @maheswarimaheswari5193 Рік тому

    super bro.Nice lyrics.

  • @shadesofraymond8268
    @shadesofraymond8268 Рік тому

    Kalvarike yennei konde sentrethu ungel kural... Yesuvin anbu Ungelai yepovumeh asirvathikum.

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Рік тому

    மனதை உருக்கும் பாடல் மற்றும் சிலுவைப்பாதை

  • @irisjane7030
    @irisjane7030 Рік тому

    மனதை உருக்கும் அருமையான பாடல்வரிகள் இசையமைப்பு,கண்ணீரை வரவழைக்கும் குரல்.அனைத்துமே அருமை.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.இன்று தான் இச்சிலுவைப்பாதை பாடலைக்கேட்டேன்.இனிவருங்காலங்களில் எம் பங்கிலும் இப்பாடலை அறிமுகப்படுத்துவேன்.(இலங்கைதேசத்திலிருந்து).

    • @martinprakash
      @martinprakash Рік тому

      Thank you so much.. Thanks for your support 🎶🎶🙏

  • @graciouspeter2256
    @graciouspeter2256 Рік тому

    Awesome.

  • @joseanto6498
    @joseanto6498 Рік тому

    பாவி நான் மனமாற இரங்கும் இறைவனே

    • @martinprakash
      @martinprakash Рік тому

      இறைவன் எப்போதும் உங்கள் உடனிருப்பார்..

  • @sahayajeyanthijeyanthi6931

    Heart touching song ,meaningful wards, 🎉

  • @kavikavi5406
    @kavikavi5406 Рік тому

    Amen...... Ippadalai ethanai murai kettalum kettukonde irukka seygirthu.... Ippadalai thoguthu vazlangiyavargalai.... Paaraatta vaarthaigale illai..... 👌👌👌👌👌👌👌........ 💐💐💐💐💐💐💐..... 💜💛❤️💙💚♥️..... Kuzluvinar anaivarkkum manadhara vaazlthukkal..... Thank u Thank u Thank u Thank you so much 🙏

    • @martinprakash
      @martinprakash Рік тому

      Thank you so much kavi mam இறையோசை channel க்கும் நீங்கள் தந்து கொண்டிருக்கும் ஆதரவிற்கும் நன்றிகள் !! இந்த பாடல் எனது முதல் படைப்பு எனது படைப்புகள் தொடர்ந்து வெளிவர தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் நன்றி!! அன்புடன் ... மார்ட்டின் பிரகாஷ் @ BRIO Creations and இறையோசை ..

    • @kavikavi5406
      @kavikavi5406 Рік тому

      Ungal padaippugal anaithum vetri per vaazlthugirom ungal Pani sirakka Irai Thanthaiydam vendikkolgirom ..... Ungal seyvai thodral manamaara vaazlthukkal...... Naangalu ungalin paadalgalai ethirpaarthu kaathirukkirom..... Nandrigal Iyya 💜 🙏

  • @martinprakash
    @martinprakash Рік тому

    அன்புள்ள subscribers , viewers .அனைவருக்கும் வணக்கம் !! எனது படைப்பாகிய இந்த சிலுவை பாதை பாடலுக்கு ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் 🙏🙏 ஒரு சிறிய வேண்டுகோள்.... இப்பாடலை உங்கள் பங்கு தளங்களில் . சிலுவை பாதை நிகழ்வில் பாடுவதற்க்கு பயன் படுத்தினால் . இந்த பாடலின் comment ல் தெரிவியுங்கள். எந்த பங்கு என்பதையும் குறிப்பிடுங்கள் . நிறைய பேர் உங்கள் பங்கு தளங்களில் சிலுவை பாதை நிகழ்வில் இப்பாடலை பாடினால் அதனை நீங்கள் தெரிவித்தால். அதுவே இப்படைப்பிற்கு கிடைத்த வெற்றி !! என் உழைப்பின் பயனை அடைந்ததாக மகிழ்வேன். மேலும் பல பாடல்களை வெளியிட உந்து சக்தியாக அமையும் . நன்றி !! அன்புடன் .... மார்ட்டின் பிரகாஷ். @ BRIO Creations.!!

  • @franklinandrews2828
    @franklinandrews2828 Рік тому

    மிகவும் மிகவும் அருமையாக உள்ளது 👏👏🤝🤝 பாடல் எழுதியவருக்கும் பாடியவர்களுக்கும் இசையாக உருவாக்கியவர்களுக்கும் நன்றி... 🙏🙏🙏

  • @graciouspeter2256
    @graciouspeter2256 Рік тому

    சமீபத்தில் ௮திகமுறை கேட்டு ரசித்த பாடல்

  • @Benjamin-ue5yh
    @Benjamin-ue5yh Рік тому

    திருசிலுவைபாதை பாடல் அனைத்தும் சூப்பரா இருக்கு உங்களை யேசு ஆசிர் வதிபாரக.

  • @reventamilsqueen687
    @reventamilsqueen687 Рік тому

    👌வாழ்த்துக்கள், வளர்க இன்னும் பல பாடல்களோடு.

  • @maryshyla-kh5br
    @maryshyla-kh5br Рік тому

    Nice

  • @abbimary9238
    @abbimary9238 Рік тому

    இயேசுவுக்கே புகழ்... உங்கள் அனைவரையும் மனதார பாராட்டுகின்றேன்.. ஜெபிக்கின்றேன்.. மீண்டும் நான் மடதட்டுவிளை பங்கில், உங்களோடு பாடல் குழுவில் இருப்பது போன்ற ஒரு உணர்வு.. பக்தியான அழகான பாடல் வரிகள்.. பாடகர்களுக்கு பாராட்டுக்கள்👍👏👏 மாட்டின் அண்ணா உங்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்🙌 சோ. நிம்மி.ஜார்க்கண்ட்

  • @graciouspeter2256
    @graciouspeter2256 Рік тому

    மார்ட்டின் தினமும் காலையில் இதை கேட்பது ஒ௫ தியானம் செய்வது போன்ற ௨ணர்வை த௫கிறது. வார்த்தையில்லை வர்ணிக்க

    • @martinprakash
      @martinprakash Рік тому

      இறைவனுக்கு நன்றி !!

  • @suging5655
    @suging5655 Рік тому

    அருமையான பாடல் மற்றும் இசை 🤍✨

  • @jencyjegan1242
    @jencyjegan1242 Рік тому

    பாட்டு சூப்பர் அண்ணா

  • @albin8332
    @albin8332 Рік тому

    பாடல் வரிகள் அருமை

  • @johnvaltharis4948
    @johnvaltharis4948 Рік тому

    உருக வைத்த சிலுவை பாதை அருமை மார்டின்

  • @stelladhas5954
    @stelladhas5954 Рік тому

    மிக மிக அருமையான, சிந்திக்க வைத்த ,இறைமகனை மனதில் நிலைநிறுத்த வைத்த அருமையான பாடல்கள் கருத்துக்கள். மார்ட்டின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். மேலும் மேலும் நல்ல நல்ல தரமான பதிவுகள் வெளியிட வாழ்த்துகள்.

  • @cesilygeorge6959
    @cesilygeorge6959 Рік тому

    மிகவும். அருமையான.. பாடல். கருத்து ள்ள. மறையுரை. நன்றி நன்றி நன்றி

  • @theesmaspankiraj2201
    @theesmaspankiraj2201 Рік тому

    Heart touching song

  • @flowerteaching2593
    @flowerteaching2593 Рік тому

    👍🏻

    • @flowerteaching2593
      @flowerteaching2593 Рік тому

      🙏🏻 மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @orchestrateamsirabin4873
    @orchestrateamsirabin4873 Рік тому

    மிக மிக அருமை... பாடல் வரிகள், இசை மற்றும் குரல்கள் அனைத்தும் அருமை. நண்பர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. . . மார்ட்டின் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @josephsahayam3696
    @josephsahayam3696 Рік тому

    Congratulations 👏👏🎉 Awesome brother. May God bless you. Amen Hallelujah 🛐📿✝️📿 Hail Mary ✝️📿

  • @jeyabalan7025
    @jeyabalan7025 Рік тому

    கல் மனதையும் கரைக்கும் அற்புதமான பாடல் வரிகளில்,சிலுவையின் பாதையில் எம்மை உறையவைத்த மார்ட்டினுக்கும், இந்த கூட்டு முயற்சிக்காக உழைத்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் எம் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுகளும்..

  • @Jeba_Raja
    @Jeba_Raja Рік тому

    🎉

  • @graciouspeter2256
    @graciouspeter2256 Рік тому

    மிகவும் ௮௫மை மார்ட்டின் பாடல் வரிகள் மிக மிக மிக ௮ழகு . வாழ்த்துக்கள்

  • @emeldalizy2172
    @emeldalizy2172 Рік тому

    Glory to Jesus

  • @neversaynever5832
    @neversaynever5832 Рік тому

    Super👌🏻

  • @FMC687
    @FMC687 Рік тому

    ✨✨

  • @jessysahaya
    @jessysahaya Рік тому

    Nice brabhu anna