Це відео не доступне.
Перепрошуємо.

வழிமுறைகளான தர்மங்களையும் அறிபவர | Sri. U. Ve. Velukkudi Krishnan | Namangal Aayiram

Поділитися
Вставка
  • Опубліковано 19 тра 2023
  • Velukkudi Sri U. Ve. Krishnan Swamy has been rendering spiritual discourses all over the globe for close to 3 decades and many bhaktas have been regularly enjoying his lucid explanation of the esoteric meanings of our traditional scriptures. He has covered a great variety of subjects like the Vedas, Puranas and Upanishads, Sri Ramayana, the Mahabharata, the 4000 Divyaprabandhams of the Alwars, the life and works of our Acharyas and so on
    #kumudambakthi #namangalaayiram #velukkudikrishnan #uvevelukkudikrishnan #VelukkudiUpanyasam #VelukkudiDiscourses #velukkudikrishnanupanyasam #lordperumal #vainavam
    Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too.
    email: kumudambakthi2021@gmail.com
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
    Subscribe to Bakthi
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    SnehidhiMagazine
    / @kumudambakthi
    / %e0%ae%95%e0%af%81%e0%...

КОМЕНТАРІ • 17

  • @parvathid4001
    @parvathid4001 Рік тому +1

    பகவான் ஶ்ரீ சௌந்தரராஜன் பெருமாள், ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள், ஸ்வாமியின் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Рік тому

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushavt8420
    @ushavt8420 Рік тому +1

    Nameshkaram adiyen Ramajuja dasan 🙏🙏🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Рік тому +2

    NARAYANA NARAYANA NARAYANA OM 🙏🙇🕉️🌹🙏

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 Рік тому

    From Uk
    Very blessed swami

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Рік тому +1

    ஸ்வாமிகளுக்கு அடியேனின் அனந்தகோடி நமஸ்காரம்

  • @user-ms6pj9vy4q
    @user-ms6pj9vy4q Рік тому

    Sirappu swami Sirappu

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 Рік тому

    🙏🙏🙏🙏

  • @kidambiramanrajagopal6567
    @kidambiramanrajagopal6567 Рік тому

    🙏🙏🙏

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 Рік тому

    🙏🙏🙏🙏💐💐💐

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 Рік тому +1

    தன்னியன் அனேன் சுவமி

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Рік тому

    முதல் பகுதி -
    விஷ்ணுவின் 133 வது திருநாமம் முதல் 138வது திருநாமங்கள் வரை 6 திருநாமங்களுக்கு அர்த்தங்களை அத்புதமாய் ஞான குரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் வரையறுத்த திலிருந்து -
    133வது திருநாமம் வேதவித்-இந்த
    வேத வித்திற்கு அர்த்தமாய் சந்தேகத்திற்கு இடமில்லாமல் வேதத்தின்
    பொருள் கொண்டு தர்மத்தை நடத்துபவர். தர்மத்தை நடக்க தூண்டுகிறார். வேதத்தின் அர்த்தம் கொண்டு பாராயணம் செய்வது, வேள்வி செய்வது என்பது ஒரு சிலரே. வேதாந்தமான தர்மத்தை அறிந்தவர். செய்கின்ற கிரிசைகள் யானே என்னும் என ஆழ்வார் தன் பாசுரத்தில் குறிப்பிட்டது போல் யார் யார் எந்தந்த தர்மத்தின் படி நடக்கிறார்களோ அவர்களுக்கு உள்ளேயிருந்து தூண்டி செய்ய வைப்பதும் யானே செய்பவனும் யானே என்றபடியும் கண்ணன் கீதையில் கூறியடி துஷ்டர்களை நிரஸிக்க, சாதுக்களை ரக்ஷிக்க தர்மத்தை ஸ்தாபனம் செய்ய என்ற இந்த 3 பயனுக்காக பிறக்கிறேன் என்கிறார். தருபவரும் பயனாய - தரும் வரும் பயனை என அருமையான பயன்களை தர்மத்திற்கே என்று இருக்கும் பயன்களை பகவான் நமக்கு கொடுக்கிறார் என்ற அந்த அர்த்தத்தை அறிந்து அதன்படி அந்த அர்த்தத்திலேயே தர்மத்தை ப்ரவர்த்தனம் பண்ணுகிறேன் என்கிறார் கண்ணன்.
    134வது திருநாமம் கவி: கவி என்றால்
    புரட்சிகரமாக எழுதுபவர். கவிக்ராந்தி தரிசி: என்றபடி இக்காலத்தை மட்டும் பார்க்காமல் இனி வரும் காலத்தையும் சேர்த்து பார்ப்பவர். கவி: 25 வருடங்கள் கழித்து சமுதாயம் எப்படி இருக்கும் என தொலை நோக்கு பார்வையுடன் முன்கூட்டியே எழுதும் வல்லமை படைத்தவர்கள் எப்படியும் அனந்த பத்மநாபன் பெருமான் நாளை என்ன நடக்கும் என்பதும் அறிவார். இதற்கு சான்றாய் நாகை செளந்தரராஜன் பெருமானை பொன் இவர் மேனி .... அச்சோ ஒருவர் அழகிய வா என திருமங்கை ஆழ்வார் பாசுரப்படி பெருமான் அருகில் செளந்தரவல்லி தாயார் இருப்பதும் பாராமல் பரகால நாயகியையே உற்று நோக்க அதைக் கண்டு பரதால நாயகி தாயார் முன்னிலையில் இப்படி பார்க்கிறாரே என வெட்கப்பட பெருமானோ பரகால நாயகியின் இடை சிறுத்து இருக்கிறதா ( போஜனம் மிதமாய் உண்கிறாரா)- அதாவது உலக இன்பத்தில் வைராக்யம் கொண்டவரா நம்மிடத்தில் ராகம் வளர்ந்ததா என்றும் கண் தீக்ஷண்யமாக இருக்கா (ஞானம் மிகுந்து காணப்படுகிறாரா) என்றும் திருமார்பு வளர்ந்திருந் தால் பக்தி வளர்கிறதா என்றும் பார்ப்பது. ஆக மொத்தம் பக்தி, ஞானம் வைராக்யம் வளர்ந்ததா என பெருமான் பார்க்கிறார். 10ம் பத்து கடைசி பாசுரத்தில் வஞ்சக் கண்ணன் மாமாயன் ... மாயக்கவியாய் வந்து இன்று பராங்குச நாயகி அழுகிறாள் என்று விடாமல் ஜனங்களை திருத்த ஆழ்வாரைக் கொண்டு பல பாசுரங்களை பெறுகிறார். ஆக நம்மாழ்வாரை பிறப்பித்தார். சதுர் கவியாய் 4கவியாக - விஸ்தார கவி - நிறைய பாட்டு பாடுவது, மதுரகவி - இனிமையாக பாடுவது, சித்ரகவி - 7, 6, 4 என ணெக்கையில் பாடுவது. ஆசுகவி - ஒன்றை பார்த்தவுடன் சட்டென்று பாடுவர். இங்கனம் பரகால நாயகி பாடுவதாக கூறி இந்த ப்ரபாவம் பெருமானான கவியிடமிருந்து அவர் பெற்றார் என்றார். என்று கூறி இப்பகுதியை அத்புதமாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய. க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Рік тому

    நிறைவு பகுதி -
    கடந்த பகுதியின் தொடர்ச்சியாய்
    விஷ்ணுவின் 135 முதல் 138 வரையிலான 4திருநாமங்களுக்கு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அத்புதமாய் அர்த்தத்தை அர்த்தித்திருந்து
    135 வது திருநாமம் - லோகாத்யக்ஷ-
    ப்ரத்யும்னன் - தர்மத்தின்படி நடக்கக்கூடியவர். அநிருத்தன். - அதற்கு தகுந்த பலனை கொடுக்கும் பலப்ரதானன். இத்திருநாமத்திலிருந்து 15வது ஸ்லோகம் ப்ராரம்பிக்கிறது.
    அகஷச என்றால் தலைவர் என்ற பொருள் என சாதித்தார். லோகா என்றால் தர்மகதிகளைப் பற்றி தெரிந்துவைத்து இருக்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தர்மத்தை பண்ணுவதை அறிந்து வைத்திருப்பவர். ருச்சி வேற - அது தெரிந்தால் தான் தர்ம காரியத்தையே தூண்ட முடியும். தூண்டி அதற்கேற்ற பலனையும் கொடுக்க முடியும்.
    136 வது திருநாமம் ஸுராத்யர்ஷ:
    அவரவர்கள் தர்மத்தை பண்ண நேராக அந்த வேலையை தானே எடுத்துக் கொள்ளாமல் அதனதர்க்குரிய தேவர்களான இந்திரன், சந்திரன் குபேரன் போன்றவர்களை நியமித்து அவரவர்களை ஆராதிக்க கூறி அவரவர்களுக்கு பலனை அவர் மூலம்கொடுப்பார். பித்ருக்கள் ஆராதனை என பிரித்து கொடுக்கிறார். ஸூர-தேவர்களை குறிக்கும். ஆராதிக்கும் தேவர்களான இந்திரன் சந்திரன் குபேரன் போன்றோரையும் அறிந்து கொண்டு இருக்கிறார்.
    137 - தர்மாத்யக்ஷ: தர்ம அதிகாரிகள் எந்தந்த தேவதைகளை குறித்து எந்தெந்த தர்மங்களை பண்ணுகிறார்களோ அவை அனைத்தும் அறிந்து வைத்திருப்பவர். தர்மத்தின் மூலம் ஆராதிக்கப்பட வேண்டிய தெய்வத்தையும் அறிந்து கொண்டு அந்த தர்மத்தின் மூலம் செய்யும் ருசியையும் அறிந்து வைத்திருப்பவர். அப்யாகமம் - ஒரு தப்பு செய்யாததற்கு கெட்டது நடந்து விடக் கூடாது க்ருதப்ரணாசம் - ஒரு தப்பு செய்து விட்டு தப்பித்து விடவும் கூடாது.
    138 வது திருநாமம் - க்ரு தாக்ருத:
    பலத்தை விரும்பி சில செயல்களை லோகத்தில் செய்கிறோம். இந்த லோகத்து பலனையும் கொடுத்து அந்த பரலோகத்து மோக்ஷம் வேண்டும் என்றாலும் கொடுக்கிறார். சம்சார ஸ்வ ப்ரவர்த்தக நிவர்த்தக:
    நாம் இந்த லோகத்து பலனை கேட்டால் அது ப்ரவர்த்தன மார்க்கம். அந்த லோகத்தில் போனால் நிவர்த்தி மார்க்கம். மேன்மேலும் பலத்தை கொடுத்தால் ப்ரவிருத்தி மார்க்கம் (க்ருத:)
    ப்ரவ்ருத்தி மார்க்கம் வேண்டாம் மோக்ஷம் அடைவோம் என்றால் நிவ்ருத்தி மார்க்கம்.( அக்ருத:) ஆக ப்ரேயஸ் ஸ்ரேயஸ் இரண்டையும் கொடுக்கிறார். புக்தி முக்தி ப்ரதானைன் என்று கூறி அருமையாய் இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 Рік тому

    🙏🙏🙏🙏🙏