இரவு 10.00 மணி DD தமிழ் செய்திகள் [07.07.2024]

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2024
  • 1) ரஷ்யா-ஆஸ்திரியா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி நாளை முதல் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் - மாஸ்கோவில் நடைபெறும் இந்திய-ரஷ்ய வருடாந்திர உச்சிமாநாட்டிலும் பங்கேற்கிறார்
    2) மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்கள் நிறைவு - வரும் 23 ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் ‍செய்கிறார் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
    3) அஸ்ஸாம் மாநிலத்தில் தொடரும் வெள்ளப்பெருக்கால் 21 லட்சம் பேர் பாதிப்பு - வெள்ள நிலவரம் குறித்து மாநில முதல்வரிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
    4) காஷ்மீர் துப்பாக்கிச்சண்டை- உயிரிழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்வு- இரண்டு ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம்
    5) வரும் 2047 ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் - மத்திய இணையமைச்சர் எல் முருகன் நம்பிக்கை
    6) ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி மலரஞ்சலி- திருவள்ளுர் மாவட்டம் பொத்தூரில் உடல் அடக்கம்
    7) தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
    8) பிரான்ஸ் நாடாளுமன்றத்தேர்தல் - இறுதிச்சுற்று வாக்குப்பதிவு மும்முரம்
    9) ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டி - 100 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
    10) தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வரும் 13 ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்- கர்நாடகாவில் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது

КОМЕНТАРІ • 1