அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன். பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன். உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள். உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும். யாத்திராகமம் 34:10
Amen Praise God 🎉❤
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
*யாத்திராகமம் **34:10*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள். உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.*
🌹 *கர்த்தருடைய செய்கைகள் எப்படியாய் செயல்படுகிறது?*
*1️⃣சிருஸ்டிக்கிற தேவனாய் செயல்படுகிறார்* .
*எபிரேயர் 11:3*
🏵️விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினாலே உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
💙தேவன் ஒரு பொருளை வைத்து இன்னொன்றை உருவாக்கவில்லை.
மாறாக
💙ஒன்றும் இல்லாமையில் இருந்து அவருடைய வார்த்தையின் நிமித்தமாக ஒவ்வொன்றையும் சிருஸ்டித்தார்.
💙நம் தேவன் இல்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கிற தேவன். ஆமென் ஆமென்.
💙இந்த பூமி ஆதியில் ஒழங்கின்மையும், வெறுமையும், இருளுமாய் இருந்தது. ஆனால் தேவன் வார்த்தையின் மூலமாக எல்லாவற்றையும் ஜீவனுள்ளதாய் மாற்றினார்.
💙இந்த வருடத்திலும் ஒன்றும் இல்லாமல் வெறுமையாய் இருக்கக்கூடிய நம் வாழ்க்கையிலும் சிருஸ்டிப்பின் தேவனாய் செயல்பட போகிறார். ஆமென் ஆமென்.
*2️⃣பாதுகாப்பின் தேவனாக செயல்படுகிறார்.*
*சங்கீதம் 121: 3 - 8*
உன் காலைத் தள்ளாடவொட்டார், உன்னைக் காக்கிறவர் உறங்கார்.
இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.
கர்த்தர் உன்னைக் காக்கிறவர், கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.
பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார், அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.
கர்த்தர் உன் போக்கையும் உன்வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்
💚தடுமாறாமல் பாதுகாப்பார்.
💚உடனிருந்து பாதுகாப்பார்.
💚உறங்காமல் பாதுகாப்பார்.
💚சேதமடையாமல் பாதுகாப்பார்.
💚எல்லா தீங்குக்கும் விலக்கி பாதுகாப்பார்.
💚நம் ஆத்துமாவையும் பாதுகாப்பார்.
💚நம் போக்கையும் வரத்தையும் பாதுகாப்பார்.
ஆமென் ஆமென்....
💚இந்த வருடத்திலும் தேவனுடைய தெய்வீக பாதுகாப்பு நம்மை பாதுகாக்க போகிறது. ஆமென்.
*3️⃣மீட்பின் வல்லமையுள்ள தேவனாய் செயல்படுகிறார் .*
*எபேசியர் 1:7*
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
💜நம்மை இரட்சிக்கவும்,
நம்மை மறுசீரமைக்கவும் மீட்பின் வல்லமை நம்முடைய வாழ்க்கையில் செயல்படுகிறது.
💜உச்சக்கட்ட மீட்பின் வல்லமையை தேவன் சிலுவையில் வெளிப்படுத்தினார்.
💜தேவனுடைய
இரத்தத்தை நினைவுகூறும் ஒவ்வொரு நேரமும் தேவனுடைய மீட்பின் வல்லமை நம்முடைய வாழ்க்கையில் செயல்பட போகிறது.
தேவனே
இந்த வார்த்தையின்படியாக எங்களை இந்த வருடம் முழுவதும் நடத்த போகிற பெரிதான வல்லமைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறோம் 🙏.
அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன். பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன். உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள். உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.
யாத்திராகமம் 34:10