Це відео не доступне.
Перепрошуємо.

அந்த மாப்பிள்ளை காதலிச்சான் பாடலை சென்சார் கத்தரித்த காரணம் என்ன? - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 5 сер 2021
  • அந்த மாப்பிள்ளை காதலிச்சான் பாடல்
    சென்சார் ஏன் கத்தலி வைத்தது?
    #ngr #vaali #andha_mappillai #msv_songs

КОМЕНТАРІ • 35

  • @mariappanraju7242
    @mariappanraju7242 3 роки тому +14

    பாடலை மிகவும் இனிமையாக நீங்கள் பாடிவிட்டீர்கள்...டிஎம்எஸ்..சுசீலா அம்மா..மெல்லிசை மன்னர்கள் இசை..என்ன சொல்ல...அத்தனையும் தேன்இசை தான்...

  • @ilankovan596
    @ilankovan596 3 роки тому +11

    அந்த காலங்களில் வாலியின் பாட்டு னா சென்சார் உஷாரயிடுவாங்களாம்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 роки тому +3

    மிக அழகாக பாடுகிறீர்கள் நல்ல தகவல் வாழ்த்துக்கள் 💐

  • @dafinijustin6306
    @dafinijustin6306 3 роки тому +4

    Your voice very sweet

  • @anbuvadivan9637
    @anbuvadivan9637 3 роки тому +12

    அந்த காலத்திற்கு KR விஜயாவின் கவர்ச்சி கொஞ்சம் ஓவர்தான்!

    • @ananthakumar7876
      @ananthakumar7876 3 роки тому +3

      Yes she one swimming suit in Patinnatil Boodam

    • @ramakrisna3507
      @ramakrisna3507 3 роки тому +2

      Ithu kavarchi endral endru varum kavarchi kachikal enna solleh getu

  • @jenobaram2632
    @jenobaram2632 3 роки тому +5

    ரிச்சாக்காரன் படம்-பம்பை ஒடுக்கு தட்டி பாடல் பற்றி கூறுங்கள்

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 роки тому

    Nice information about this song.

  • @pandiyanpandi6884
    @pandiyanpandi6884 3 роки тому +3

    Super

  • @subramanibalu7589
    @subramanibalu7589 3 роки тому

    Arumai

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 2 роки тому

    Super song

  • @manimaster9144
    @manimaster9144 3 роки тому +2

    Super👌🕺

  • @ravicharles5192
    @ravicharles5192 2 роки тому

    தணிக்கை குழுவினர் அந்நாட்களில் எடுத்த சில முடிவுகள் ஏற்புடையதாக காணப்பட்டாலும் இன்றைய காலகட்டத்தில் காணப்படும் வன்முறை காட்சிகளாகட்டும் , சமூக காழ்ப்புணர்ச்சிகளை நியாயப்படுத்தும் திரைக்கதையாகட்டும், கவர்ச்சியே காணாமல் போகும் விரசமாகட்டும் தணிக்கை குழு ஒருவேளை இது தான் இன்றைய சமூகத்தின் பிம்பம் என்று ' அறிவுறுத்தப்பட்டு' பேசாமல் இருக்கிறதோ தெரியவில்லை.

  • @Nathancsr
    @Nathancsr 3 місяці тому

    Mgr வாயசைப்பு கன்னிசுகம் என்றே இருக்கும்..

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 роки тому +1

    😀

  • @NaviN_VisioN
    @NaviN_VisioN 3 роки тому +1

    Pls make video for copycat song iyya

  • @murugayahmuru5008
    @murugayahmuru5008 3 роки тому +1

    அது என்ன கணக்கு?
    18 வயசுக்கு மேல்தான் புரியும் என்று பொய் சொல்வது.

    • @rexrex7471
      @rexrex7471 3 роки тому +1

      இந்த காலத்தில் பிஞ்சுலேயே பசங்க பழுத்துவிட்டனர் .

  • @kalaiabi771
    @kalaiabi771 2 роки тому

    அந்த காலத்தில் 18+ இப்போ அப்படியா?

  • @Eswarkaruvaa
    @Eswarkaruvaa 3 роки тому +1

    Vellachaami sir eppothum ilayaraja patriye pesaatheergal vidyasagar patriyum pesungal

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +4

    அது ஏண்ணா நீங்க ரொம்ப ரொம்போ வெறுப்பேத்தறீங்க!?ஓவரா பில்டப் நல்லாயில்லண்ணே!! எம்ஜிஆர் அப்பாவின் இந்தப் பாட்டு அருமையா இருக்குமே! வார்த்தைகள் இ.ரா. பாட்டைவிட நல்லா இருக்குமே! அசிங்கமும் ஆபாசமும் வாலியிடமிருந்து புறப்பட்டது இ.ராவுக்குத்தான் ! வாலி ஒரு ஆபாசமானவர் தான் ! அது இ.ரா ப் பாடல்களீல் தெரியும்! அண்ணே! பொய்களை அள்ளீவிட்டு எம்ஜிஆர் அப்பாவின் தயவால் சாப்பூடும் நீங்க இது மாதீ ப் போடாமல் இ.ராவப் புகழ்ந்தோமான்னுப் போங்க!! இப்படிக்கு உங்களோட அன்புத் தங்கை!

    • @krisgray1957
      @krisgray1957 3 роки тому +2

      ஐயோ என்ன ஒரு தமிழ்டா. தற்கொலை செய்ய தோன்றுகிறது.

    • @s.ganesh9475
      @s.ganesh9475 3 роки тому +2

      செம உளறல்

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 3 роки тому +3

      எல்லா விஷயத்துலயும் தெரிஞ்சமாதிரி மூக்கை நுழைத்துக் கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல் நீங்கள் செய்யும் உங்கள் தனிமனிதத் தாக்குதல் கமென்ட்டைப் பதிவிட வேண்டாம்!
      ஆலங்குடி வெள்ளைச்சாமி எம்ஜிஆர் பற்றிய தவறான தகவல்களை அளிப்பவர்தான்! ஆனால், இந்தப் பதிவில் அவர் சொல்வது முக்காலும் உண்மை!
      அந்தப் பாட்டின் இறுதிவரி "அம்மம்மா என்ன சுகம்? அத்தனையும் கன்னி சுகம்!" என்றுதான் படத்துக்காக முதலில் பதிவு செய்யப்பட்டது! சென்சார் objection காரணமாக "அம்மம்மா என்ன சொல்ல? அத்தனையும் கண்டதல்ல!" என்று மாற்றப்பட்டிருக்கும்! பழைய Colombia ரெக்கார்ட் இருந்தால் அல்லது பழைய audio tape இருந்தால் tape recorder-இல் ஓடவிட்டுக் கேட்கவும்!
      "கன்னிசுகம்" என்பதை இரண்டுவிதமாகப் பொருள் கொள்ளலாம்!
      1. ஒரு கன்னியிடமிருந்து கிடைக்கும் சுகம்!
      2. முதன்முதலாகக் கிடைக்கும் சுகம்! 'கன்னிசாமி' என்று முதன்முதல் மாலைபோட்ட சாமியைச் சொல்வதில்லையா? அதுபோல!
      சென்சார் போர்ட் எண் 1-இல் சொல்லப்பட்ட பொருளை எடுத்துக்கொண்டதால் cut செய்துவிட்டது! அதே சென்சார், "கண்ணுறங்க பாய் விரிச்சான்! கொடிஇடையில் காய் பறிச்சான்!" என்று சுசீலா பாடுவதைக் கண்டுகொள்ளவில்லை! கொடிஇடையில் காய் பறித்தல் என்பதற்கு ஏதோ அவரைக்கொடி, புடலங்கொடி, சுரைக்காய்க் கொடிகளுக்கு இடையே அவரைக்காய், புடலங்காய், சுரைக்காயைப் பறிப்பது என்றெண்ணி சென்சார் விட்டுவிட்டது போலும்! கொடிஇடை என்றது பெண்களின் கொடிபோன்ற இடை என்பதையும், காய் என்றது மார்பகங்கள் என்பதையும் சென்சார் அறிந்திருக்க நியாயமில்லை! எம்ஜிஆர் பாடல்களில் ஆபாசம் இருக்காது எனக்கூறும் "அன்புத் தங்கை" இதற்கு என்ன சொல்வார்! "கொடிஇடையில் காய் பறிச்சான்!" என்ற தொடர் ஆபாசமில்லையா? அதுவும் ஒரு பெண் இப்படிப் பாடுவதாக வருவது!
      உங்கள் கண்ணுக்கு அஃது ஆபாசம்! என் போன்றவர்களுக்கு அஃதோர் இலக்கியத்தரமான பாடல்! இப்பாடலின் இதுபோன்ற சொற்கள் தமிழ் நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே பொருள் புரியும்படி அமைந்தவை! பொருள் புரிந்த என்போன்றோர் அதனை ஒரு ரசனையாக எடுத்துக் கொள்வோமே தவிர, ஆபாசமாகக் கருத மாட்டோம்!
      இதுபோல எத்தனையோ இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்கள் சென்சாரில் இருந்த ரசனையற்ற முண்டங்களால் சிதைத்துச் சின்னாபின்னம் ஆக்கப்பட்டுள்ளன!

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 3 роки тому +2

      உதாரணமாக,
      'பெற்றால்தான் பிள்ளையா?' திரைப்படத்தில் இடம்பெற்ற "சக்கரக்கட்டி ராசாத்தி!" என்ற பாடலில் சரோ எம்ஜிஆரிடம் "தோகை மயிலின் தோளை அணைத்துப் பள்ளிகொள்வது சுகமோ?" எனக் கேட்பார்! இதில் வரும் "பள்ளிகொள்வது சுகமோ?" என்பது "பழகிக்கொள்வது சுகமோ?" என மாற்றப்பட்டிருக்கும்! எம்ஜிஆர் சரோவிடம், "உறவைத் தேடி நான் வரவோ? என் உதட்டில் உள்ளதைத் தரவோ?" என்று கேட்பார்! அது சென்சார் செய்யப்பட்டு, "உறவைத் தேடி நான் வரவோ? என் உயிரை உன்னிடம் தரவோ?" என மாற்றப்பட்டது! எம்ஜிஆரின் lip movement - இலும் எம்ஜிஆர் இடக்கை பெருவிரல் சுட்டுவிரலால் வருடுவதில்கூட அது அழகாகத் தெரியும்! அதே பாடலில், "மடியைத் தேடி வந்து விழவோ? இந்த மாப்பிள்ளை அழகுக்கு அழகோ? காலை வரையில்... சேலை நிழலில்... காலை வரையில் சேலை நிழலில் கண்கள் உறங்கிட வா! வா!" என்று சரோ எம்ஜிஆரை அழைப்பார்! சென்சார் எதிர்ப்பால்,
      " காலை வரையில் சோலை நிழலில் கண்கள் உறங்கிட வா! வா!" என்று மாற்றப்பட்டிருக்கும்! 'காலை வரையில்' என்று சரோ சொல்வதால், இப்பாடல் இரவில் ஆண்பெண் உறவுபற்றிப் பாடப்படுவது என்பது புரியும்! இரவில் சோலையில் இருட்டுத்தான் இருக்கும்! நிழல் எங்கே இருக்கும்? சென்சார் போர்டில் உள்ளவர்கள் அறிவில்லாதவர்கள் என்பதற்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு!
      அதுபோல, 'காசேதான் கடவுளடா' திரைப்படத்தில் ஜெயகுமாரி பாடுவதாக அமைந்த "இன்று வந்த இந்த மயக்கம்!" என்ற பாடலில் சென்சார் செய்த கொலை!
      அப்பாடலின் முதல் சரணம் இப்படித் தொடங்கும்!
      "எங்கெங்குத் தொட்டால் என்னென்ன இன்பம் அங்கங்குத் தொட வேண்டும்! கை பதமாக!
      அங்கங்கள் முழுதும் தங்கங்கள் எழுதும் ஆனந்தம் பெற வேண்டும்! உன் பரிசாக!
      கையோடு பூவாட்டம் எடுத்து - என்னை
      மெய்யோடு மெய்யாக அணைத்து
      அஞ்சாறு சின்னங்கள் கொடுத்து -
      அந்த
      ஆரம்பப் பாடத்தை நடத்து!
      ஆரம்பப் பாடத்தை நடத்து!
      இந்தச் சரணத்தை,
      "எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம் அங்கங்கு வரவேண்டும்! - என் நிழலாக!
      அங்கங்கள் முழுதும் தங்கங்கள் எழுதும் ஆனந்தம் பெற வேண்டும்! உன் பரிசாக!
      கையோடு பூவாட்டம் எடுத்து - என்னை
      மெய்யோடு மெய்யாக அணைத்து
      அஞ்சாறு சின்னங்கள் கொடுத்து -
      நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது! நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது!
      இப்படி மாற்றி இருப்பார்கள்! இசையை வேறு சொற்களால் நிரப்பியதைத் தவிர, இந்த மாற்றத்தில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?
      இப்படி ஒரு thesis எழுதும் அளவுக்கு சென்சார் குளறுபடிகள் ஏராளம்! ஏராளம்!
      சகோதரி ஹெலன் பூர்ணிமா! உங்களுக்கு ஒரு வேண்டுகோள்! தெரியாத விசயங்களில் மூக்கை நுழைத்துக் கருத்தைச் சொல்லாதீர்கள்!
      அடுத்து உங்கள் கமென்ட்டில் அடுத்தவர்களைத் தரம்தாழ்ந்து விமர்சிக்கும் தனிமனிதத் தாக்குதல்களைத் தவிர்த்து விடுங்கள்!

    • @chathirasekaramchathirasek6919
      @chathirasekaramchathirasek6919 3 роки тому

      இ.ரா என்றால் யார் ?