#BREAKING

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் மதுரை நிகழ்ச்சிகள் முடிவடைந்த நிலையில் விருதுநகர் புறப்பட்ட உதயநிதி ஸ்டாலினை நடிகர் வடிவேலு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
    தயாரிப்பாளராக திரைத் துறையில் நுழைந்து நாயகனாக உயர்ந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் அரசியலில் தீவிர ஆர்வம் காட்டாமல் இருந்தார்.
    vadivelu udhayanidhi stalin politics
    இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அவ்வப்போது திமுக நிகழ்ச்சிகளிலும், போராட்டம், ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொண்டார். ஒரு சாதாரண தொண்டனாக மட்டுமே தான் கட்சியை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
    அதனை தொடர்ந்து மெல்ல மெல்ல திமுக மேடைகளில் தோன்றிய அவர், அதன் பிறகு மக்களவைத் தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் போன்றவற்றில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து கட்சியின் இளைஞர் அணி செயலாளராகவும் அவர் நியமனம் செய்யப்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட அவர் பெரு வெற்றி பெற்றார். இதை அடுத்து அவர் அமைச்சராக நியமனம் செய்யப்படுவதாக தகவல் வெளியானது.
    ஆனால் அவரது ஆதரவாளர்கள் அமைச்சராக பதவி ஏற்ற நிலையில் உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. இதை அடுத்து அவர் அமைச்சராக வேண்டும் என திமுக நிர்வாகிகள் கூறி வந்தனர். தொடர்ந்து சில மாத இடைவெளிக்கு பிறகு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது ஏற்பாட்டின் பேரில் செஸ் ஒலிம்பியாட், சென்னை ஃபார்முலா 4 கார் ரேஸ் உள்ளிட்டவை நடத்தப்பட்டது.
    இதை அடுத்து ஆட்சி நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பல மூத்த அமைச்சர்களே உதயநிதி ஸ்டாலின் துணை முதல் அமைச்சர் ஆக வேண்டும் என பேசி வந்தனர். அதற்கு இன்னும் காலம் இருப்பது என்பது போலவே மு.க.ஸ்டாலின் பேசி வந்தார். இந்த நிலையில் சட்டவிராத பண பரிமாற்ற வழக்கில் சிறை சென்ற செந்தில் பாலாஜி விடுதலையான நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அதில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார்.
    நேற்று முன்தினம் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.அவருடன் செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் உள்ளிட்ட ஒரு அமைச்சர்களாக பதவி ஏற்றனர். துணை முதலமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பிரபலங்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
    அதே நேரத்தில் திமுக வாரிசு அரசியல் செய்வதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். திமுகவில் துரைமுருகன் போன்ற மூத்த நிர்வாகிகள் இருக்கும்போது முதலமைச்சரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக உதயநிதி துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார். அதே நேரத்தில் தன் மீது விமர்சனங்கள் வரும் என எனக்கு தெரியும், அதனை எனது செயல்பாடுகள் மூலம் முறியடிப்பேன் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.
    அதோடு துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்ற கையோடு தென் மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நேற்று மதுரை வந்த அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து இன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
    இதற்காக மதுரை விருதுநகர் சாலையில் உதயநிதி தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் இன்று அவரை நடிகர் வடிவேலு நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து துணை முதல்வர் ஆனதுக்காக வாழ்த்துக்களை கூறினார். தற்போது இந்த புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு உதயநிதி ஸ்டாலின் இணைந்து நடித்த மாமன்னன் படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது

КОМЕНТАРІ • 1

  • @gbalabala9725
    @gbalabala9725 Годину тому

    பயம் வந்து விட்டது.