Thillai ambala Nataraja - Mohanam

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • Sowbaghyavathi

КОМЕНТАРІ • 1 тис.

  • @manimegalaiganesh2566
    @manimegalaiganesh2566 3 роки тому +163

    எனக்கு மிகவும் பிடித்த சிவனின் பாடல் இது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று கேட்டு மகிழ்ந்தேன். நன்றிகள் கோடி. ஓம் நமசிவாய.

  • @mahendranmahendran7654
    @mahendranmahendran7654 Рік тому +22

    கடவுள் மறுப்பு கொள்கை உடைய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆக இருந்த போதும் எம் இறைவனை எவ்வளவு அழகான தமிழில் ஆராதனை செய்கிறார் 🙏கண்கள் குளமாகிறது எத்தனை முறை கேட்டாலும் 🙏🙏

  • @smanikandan9256
    @smanikandan9256 2 роки тому +85

    உலகில் டி. ம் எஸ் ஐயா வைத் தவிர வேறு யாரும் இப்படி உயிரை உருக்கும் படி பாட முடியாது, மக்கள் கவி பட்டுக்கோட்டை பாடல் வரிகள் அருமையிலும் அருமை!

  • @rajendranvellu746
    @rajendranvellu746 2 роки тому +99

    ஏனோ தெரியவில்லை. இந்த பாடலை கேட்கும்போது உணர்ச்சிப் பெருக்கில் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

  • @sivalingam6729
    @sivalingam6729 Рік тому +49

    உள்ளத்தை உருகவைத்த பாடல். பாடலின் வரிகளும், குரல் வளமும் சொல்லவே வார்த்தை இல்லை 💞💞💞❤️

  • @palanivelr2665
    @palanivelr2665 4 роки тому +50

    எப்படி இருந்த சினிமா உலகம் இப்படி ஆயிடுச்சி . எல்லாம் காலத்தின் கோலம்...

    • @Csk86
      @Csk86 3 місяці тому

      நான் கடவுள் வந்ததும் இதே சினிமாலதானே...
      டிஆர்ராஜகுமாரி லாம் அட அந்த பாட்டுல நடிச்சவர் இன்னிக்கு என்னனுவீங்க??? காதல் மன்னன் னு அன்று சொன்னது இன்றோ ஊர்பொறுக்கியாக களி சாப்பிடறாங்க...😂😂😂😂 கமலை கழுவி ஊத்தறாங்க...
      நம்ம பார்வை தான் மாறனும்... காலம் கலாச்சாரம் மாறலை

  • @bean229
    @bean229 2 роки тому +40

    கல்யாண சுந்தரம் வாழ்ந்த காலம் 28 மட்டுமே... ஆனால் அவர் வரிகள் காலத்தில் இருந்து கொண்டு இருக்கும்...

  • @ponmudirponmudir8347
    @ponmudirponmudir8347 Рік тому +36

    டிஎம்எஸ் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்ததை நினைக்கும்போது ஒரு அலாதியான மகிழ்ச்சி.

  • @murugesanmurugesan1342
    @murugesanmurugesan1342 Рік тому +83

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    அவர்கள்இறைவன்மீதுநம்பிக்கை
    இல்லதவர்இப்பாடலைஎழுதினார்
    என்றால் அதற்கு சிவபெருமானின்
    அருளே..❤❤❤❤❤❤❤

    • @lakshmimurali8064
      @lakshmimurali8064 11 місяців тому +9

      இல்லை என்று சொல்ல வைப்பதும்,உண்டு என்று சொல்ல வைப்ப்பதும் அந்த இறைவன் தானே.

    • @chandrasekaranmanickavelu2413
      @chandrasekaranmanickavelu2413 9 місяців тому +3

      அப்படியா! சிவனின் சிறப்பை பற்றி என்ன எழுதி இருக்கிறார்?

    • @premap7647
      @premap7647 8 місяців тому +1

      எனக்கு மிகவும் பிடித்த பாடல் சந்தோஷமாக
      இருந்தது 🙏🙏🙏🙏

    • @RSANGILIRAJAN
      @RSANGILIRAJAN 6 місяців тому +1

      ​u😅 3:57 3:557 m5u

    • @esakisankaran7716
      @esakisankaran7716 4 місяці тому +1

      உலக நடனத்தின் ஆதி சிவன் நடராஜர்.பிரான்ஸ் நாட்டின் அணு ஆராய்ச்சி முகப்பு அகராதி நடராஜன் சிலை வடிவம் அமைத்து உள்ளனர்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 роки тому +78

    கங்கை அணிந்தவா கண்டோர் தொழும் விலாசா சதங்கை ஆடும் பாத வினோதா‌ லிங்கேஸ்வரா நின் தாள் துணை நீதான் அருமையான பக்தி தேன் மதுர கீதம் டி.எம்.சௌந்தரராஜன் ஐயா அவர்களின் காவிய குரலில் நாம் கேட்கும் போது மனம் அமைதி பெரும்

  • @vetrivelayutham3611
    @vetrivelayutham3611 4 роки тому +203

    2020ல கேட்டவங்க லைக் பண்ணுங்க பார்ப்போம்

  • @cukanticukanti1644
    @cukanticukanti1644 Рік тому +21

    எனது அப்பாவிற்கு பிடித்த பாடல் எனக்கும் பிடிக்கும் பாடலுக்கும் போது அப்பாவின் முகம் தெரிகின்றது

  • @manoharana7364
    @manoharana7364 5 років тому +202

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகள் என்னை மெய் மறந்து ரசித்தேன்
    இப்படி ஒரு பாடல் இனி என்று கேட் பேன். TMSகுரல் தேனி னும் இனிமை. தெவிட்டாத தமிழ் வாழ்க தமிழ்

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 3 роки тому +295

    நான் ஒருகிறிஸ்தவப் பெண். என்றாலும் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். டிஎம்ஸ் அவர்கள் குரல் வளம் அப்படியே என்னை மயக்கி விட்டது.

    • @kannanrealestate9579
      @kannanrealestate9579 3 роки тому +13

      Love is God.all people s one family

    • @takesrt5769
      @takesrt5769 2 роки тому +7

      Thank You , My Dear!!

    • @subburajr8139
      @subburajr8139 2 роки тому +5

      Veryverysuper

    • @subramaniamsaravanamuttu537
      @subramaniamsaravanamuttu537 2 роки тому +1

      ​@@kannanrealestate9579

    • @sj9918
      @sj9918 2 роки тому +13

      But Tamil is a culture. So you will love this irrespective of religion. In fact I am a Malayalee, but I believe my ancestors are Tamil!

  • @rajupandian998
    @rajupandian998 2 роки тому +45

    TMS இன் இந்த இனிய பாடல்...1962_ இல் என்னுடன் படித்த மாணவனால் இனிமையாக பாடிய இந்த பாடல்,அதன் ரீங்காரம் .. இன்றும் என்னை முணு,முனுக்க வைக்கிறது...🙏🙏

  • @aravinthpoojari817
    @aravinthpoojari817 4 роки тому +87

    இந்த பாடலை பார்க்கும் போது சிவன் மேல் கொண்ட பக்தி இன்னும் அதிகமாகிறது

  • @asokanchitra5578
    @asokanchitra5578 Рік тому +23

    பாடல் கேட்டால் திரும்பவும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல்......

  • @rajaramt5907
    @rajaramt5907 4 роки тому +91

    தெய்வப் பாடகர் TMS அவர்கள் குரலில் இறைமணம் கமழும் இப்பாடல் மனதை ஈசனின் பாதத்தில் கொண்டு சேர்க்கின்றது. அருமை.

    • @kr.krishnan8436
      @kr.krishnan8436 Рік тому +2

      Om Namasivaya😂😂😂😂😂😂😂❤❤❤❤❤😂❤❤❤

    • @rajalakshmik7312
      @rajalakshmik7312 Рік тому +1

      Om namasivaya super hit siva song thanks tms

  • @kuppusamyangamuthu5988
    @kuppusamyangamuthu5988 Рік тому +9

    இறைவனைப் பாடும் பாடலிலும் தன் பொதுவுடைமைக் கருத்தைப் பதிவு செய்துள்ளார் பட்டுக்கோட்டையார்.‌ எளிமை அகல வரம் தா. எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமா. எத்தனைப் பொருத்தமான வரிகள்.

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 2 роки тому +41

    படைத்த உருவாக்கிய பாடிய இசை அமைத்தபிரம்மா க்களின் பாதத்தை தொட்டு வணங்கு கின்றேன்

  • @santhanamkumar5255
    @santhanamkumar5255 5 років тому +166

    ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என் ஈசனை பற்றி அழகாக பாடல் வரிகள் எழுதி இருக்கிறார், சிவ சிவ,

    • @9095937347
      @9095937347 3 роки тому +7

      Pattukkottaikku kadavul nambikkai illiya?!

    • @vijaikrishnan2712
      @vijaikrishnan2712 3 роки тому +1

      You are wrong

    • @maragathamRamesh
      @maragathamRamesh 2 роки тому +10

      கடவுள் நம்பிக்கை இல்லாதவர் இப்பாடலை இவ்வளவு அழகாக எழுத முடியாது..

    • @ganashganesh1859
      @ganashganesh1859 2 роки тому +1

      YES Ksa 100%Unmai Good Post

    • @tirunavukkarasu9204
      @tirunavukkarasu9204 2 роки тому +5

      Yes....
      Pattukottaiyar kadavul nambikkai illadhavar but he is a natural poet....

  • @rajendranp9061
    @rajendranp9061 2 роки тому +29

    தேனினுமினிய இசையும் பாடல் கருத்துக்களும் எவரையும் கவரும்😎காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்கும் நிலையில் உள்ளது 👍

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 2 роки тому +37

    பல நூறு முறை கேட்டிருப்பேன்.... தேவிட்டாத இனிய பாடல்.....

  • @user-vp6df8nm3p
    @user-vp6df8nm3p 4 роки тому +48

    இந்த பாட்டை கேட்டால் மெய்மறந்து பாடுவேன் ஓம் நமச்சிவாய வாழ்க.

    • @kanavelayan3630
      @kanavelayan3630 2 роки тому

      🙏Om Namasivaya
      Sivayanama Om 🙏

    • @sameeantro8337
      @sameeantro8337 2 роки тому

      நானும் பாடுவேன் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Рік тому +17

    டி.எம்.எஸ் அவர்களால் மட்டும் எப்படி இவ்வளவு அழகா பாட முடியும்?🙏👏👏👏

  • @zerotwomusic5258
    @zerotwomusic5258 Рік тому +23

    கங்கை அணிந்தவா
    கண்டோர் தொழும் நிலாசா
    சதங்கை ஆடும் பாத விநோதா
    லிங்கேஸ்வரா நின்தாள் துணை நீதா
    தில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா
    தில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா
    அல்லல் தீர்த்தாண்டவா
    வா வா அமிழ்தானவா
    அல்லல் தீர்த்தாண்டவா
    வா வா அமிழ்தானவா
    தில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா
    எங்கும் இன்பம் விளங்கவே
    எங்கும் இன்பம் விளங்கவே
    அருள் உமாபதி
    எளிமை அகல வரம் தா
    வா வா வளம் பொங்க வா
    எளிமை அகல வரம் தா
    வா வா வளம் பொங்க வா
    தில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா
    பலவித நாடும் கலையேழும்
    பணிவுடன் உனையே துதிபாடும்
    பலவித நாடும் கலையேழும்
    பணிவுடன் உனையே துதிபாடும்
    கலையலங்கார பாண்டியராணி நேசா
    கலையலங்கார பாண்டியராணி நேசா
    மலைவாசா மங்கா மதியானவா

  • @MohamedAli-se1px
    @MohamedAli-se1px 2 роки тому +14

    இந்த அற்புதத்தை நினைத்தவுடன் கேட்டு மெய்சிலிர்க்கச் செய்த மேலைத்துவ அறிவியலுக்கு மனமார்ந்த நன்றிகள்...

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 6 років тому +177

    அய்யா TMS அவர்களின் குரல்வளம் அருமை.வேற யார் பாடியிருந்தாலும் ஆன்மாவை அடையமுடியாது...
    அருமையான பாடல்.

    • @user-yu3wt9vr6b
      @user-yu3wt9vr6b 4 роки тому +10

      💯 true

    • @prakashr.3544
      @prakashr.3544 2 роки тому +5

      சிறப்பான குரல் வளம்

    • @ganashganesh1859
      @ganashganesh1859 2 роки тому +4

      YES Ksa 100%Unmai

    • @angurajaanguraja8424
      @angurajaanguraja8424 2 роки тому +1

      Murugesanrmkv

    • @velmurugan-cq1gx
      @velmurugan-cq1gx 2 роки тому +4

      அருமையான பாடல் வரிகள் தினமும் காலையில் கேட்க தூண்டும்.

  • @user-ux7ev4le2m
    @user-ux7ev4le2m 4 роки тому +78

    நான் என்னை கடந்து. உள்கடந்து. கடவுளையே காண்கிறேன் எனக்குள்ளே.
    இந்த பாடலால்.... வாழ்க தமிழ்.

    • @kailasams6952
      @kailasams6952 2 роки тому +1

      வாழ்க தமிழ் சிவசிவ

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +33

    நம் டிஎம் சௌந்தரராஜன் உருகி பாடும் பாடல் மிகவும் அருமை இனிமை இனிமை இனிமை படம் சௌபாக்கியவதி... சாவித்திரி ஜெமினி கணேசன்... நன்றி

    • @veniamudan
      @veniamudan 2 роки тому

      Gemini Ganesan Savitribai Gemini Ganesan Savitri Jodi Jodi Gemini Ganesan Savitri

  • @dead_gaming351
    @dead_gaming351 2 роки тому +86

    எனது பள்ளியில் கடவுள் வாழ்ந்தாக இந்த பாடலை பாடியிருக்கிறேன் மனம் கனிந்து ரசித்து பாடிய பாடல். எனக்கு வயது 67.

    • @sekar5633
      @sekar5633 2 роки тому +3

      எழுபத்தைந்து வயதிலும் இந்த பாடல்களை கேட்டு மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன். ஆஹா என்ன சுகம்.

    • @nagammalr811
      @nagammalr811 Рік тому +3

      எனக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும். எனது அண்ணன் இந்த பாடலை பாடி இருக்கிறான். அப்போது எனக்கு வயது 8. இப்போது 72.

    • @chandranraman9519
      @chandranraman9519 Рік тому +2

      வாழ்க வளமுடன். 💐🌹🙏🌹💐

    • @GirijaR-wi9te
      @GirijaR-wi9te 4 місяці тому +1

      Arumai Ennimai

  • @padmanathangopu3779
    @padmanathangopu3779 Рік тому +10

    எல்லா இடங்களிலும் சில பக்தி பாடல்கள் என்றும் இன்று போல் அனைத்துமதங்களிலும் உள்ளது.

  • @lakshmananr9619
    @lakshmananr9619 5 років тому +114

    கவிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்குபவர் எங்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

    • @kkthirupathikk6026
      @kkthirupathikk6026 4 роки тому +1

      Mananimathitharumpadal

    • @yaanai1951
      @yaanai1951 4 роки тому +2

      வெறும் 29 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்த மாமேதை. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼அவருடைய ஒவ்வொரு பாட்டும் ஒரு ஒப்புயர்வற்ற வைரம். பட்டுக்கோட்டையாரின் மறைவு தமிழுக்கு பேரிழப்பு.😢

    • @manickaraju6678
      @manickaraju6678 Рік тому +1

      With communist policy is nicely placed.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +31

    அருமை!!ஆஹா!டிஎம்எஸ் குரலுக்காகவே இதை நான் கேட்பேன் ! என்னை மயக்கும் பாடல் இது!!

    • @vaseegaranr7798
      @vaseegaranr7798 2 роки тому

      இப்பாடலை ரசித்த தங்களுக்கு என் வணக்கம்.
      ஆ.ராஜமனோகரன்.

  • @manoharanm3102
    @manoharanm3102 Рік тому +30

    இளம்பிராயத்தில் எனது ஊரானபுதுக்கோட்டையில் வெஸ்ட் தியேட்டரில் பாடலைகேட்டஞாபகம் இன்றும் கேட்டவுடன் மனதில் ஒருவித ஈசனின் சான்னித்யம் நிறைவதாக உணர்கிறேன்.அய்யா ட.எம்.எஸ்.அவர்களுக்கு நன்றி

    • @gopalanv7412
      @gopalanv7412 Рік тому +1

      எங்கள் ஊரும் புதுக்கோட்டை தான். நாங்கள் சந்தை பேட்டையில் இருந்தோம். பழநியப்பா , பிரஹதாம்பாள் தியேட்டர் எல்லாம் ஞாபகம் வருகிறது. 1969ல் நாங்கள் மும்பை போனோம். ஆங்கேயே settle ஆகி விட்டோம்

    • @rajavelu3678
      @rajavelu3678 9 місяців тому

      நானும் புககையில் பிறந்தவன்தான் நன்றி

  • @sadeeshwaran1099
    @sadeeshwaran1099 3 роки тому +18

    2021 இல் கேட்டவர்கள் 👍 பண்ணவும் ❤❤🙏🙏

    • @DriverAnbu
      @DriverAnbu 10 місяців тому

      2023 ல் கேட்கிறோம்

  • @sivan_sureshsaha
    @sivan_sureshsaha 5 років тому +95

    தென்புலமெங்கும் சிவநாமம் ஒளிக்கட்டும்.....

  • @a.n.ramachandran8801
    @a.n.ramachandran8801 4 роки тому +90

    காஞ்சி காமாட்சி நேரில் வந்து ஆசீர்வதிப்பாள் இந்த பாடலை பாடியவர்கும் பாடலை கேட்பவர்களுக்கும்.

  • @mahadevanhariharan2409
    @mahadevanhariharan2409 3 роки тому +34

    என்றும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கும் பாடல் நன்றி அய்யா

  • @udhayakumar6457
    @udhayakumar6457 2 роки тому +36

    எத்தனை முறை கேட்டாலும் தெகட்டாத வரிகள்

  • @deenadayalanrangaswamy3770
    @deenadayalanrangaswamy3770 4 роки тому +10

    பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளும் டி.எம்.எஸ். அவர்களின் வெண்கலக் குரலும் இப் பாடலை அமரத்துவம் உள்ள பாடலாகச் செய்து விட்டது. விடியோவுடன் துல்லியமான ஒலிப்பதிவும் அருமையாக அமைந்துள்ளது. பதிவுக்கு மிகவும் நன்றி!

  • @rajindiaryb786
    @rajindiaryb786 5 років тому +86

    வரிகளாலும் குரலாலும் மெய் சிலிர்க்க வைத்த பாடல்...

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +11

    எதைப்பாடச்சொன்னாலும் இனிமைக்கு குறைவில்லாமல் பாடும்
    இசையரசர்,
    இறைவனை எழுதிய பட்டுக்கோட்டையார், அதை அபூர்வம் பாடிய தெய்வக்குரலோன்,
    ஆஹா... காலங்கடந்தும் நம் செவிகளை இனிக்கச்செய்கிறதே
    இந்த இனிமை, அருமை.
    மலர்கிறது நினைவலைகள்
    மீண்டும் கருப்பு வெள்ளையில்.
    படம் : சௌபாக்யவதி.
    இசை : நாகேஸ்வரராவ் அவர்கள்.

  • @arokiyaajitha3903
    @arokiyaajitha3903 6 років тому +132

    என்ன இனிமையடா எனது மொழி மதம் இங்கே ஏதடா மதம் கொண்ட யானை போல உடலில் ஒரு அசுர வேகம் அந்த சிலிர்ப்பு நான் அடைந்து விட்டேன்பிறந்த பயனை வாழ்க தமிழ் வாழ்க தயவுசெய்து நல்ல தமிழில் பிழை இல்லாமல் எழுதி பழகுங்கள் தமிழ் சொற்கள் மட்டும் எழுதி பழகுங்கள் .

    • @nivethas9201
      @nivethas9201 5 років тому +4

      நல்ல கருத்து..

    • @veerasamyrajan7584
      @veerasamyrajan7584 5 років тому +4

      நற்ப்பிறப்பின் பலன் கண்டீர் அய்யா

    • @sgaai3631
      @sgaai3631 4 роки тому +3

      நானும் ஆமோதிக்கிறேன்

    • @svedanayagam1008
      @svedanayagam1008 4 роки тому +3

      இதுதான் உண்மையான தமிழ் பற்று கண்டு உவகையுற்றேன்

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 роки тому

      தமிழை கொலை செய்கிறார்கள் நன்றி நண்பா

  • @raghusharma7054
    @raghusharma7054 2 роки тому +11

    இவ்வளவு அருமையான குரல் ஜெமினிக்கு பொருத்தமில்லை !

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 5 років тому +14

    பாட்டுக்கோட்டையாரின் அழகான பக்தி பாடும் சொல்லாடல் ... ஆஹா ..
    மனித வாழ்வின் கசப்புகளை பாடிய கல்யாணசுந்தரம் .. இறைவனின் இணையில்லாத பெருமையை பாடிய அற்புதம் இந்த பாடல் ..
    பாடலின் சந்த ஓசையை பாடலாக புனைவதில் வல்லவர் ...
    "கலையலங்கார பாண்டிய ராணி நேசா .." என்று தில்லை அம்பலநடராஜனை பாடுவது ...
    தமிழுக்கு தன் குரலால் வளம் சேர்த்த பாடகர் சௌந்தர்ராஜன் ...
    ஆண்டவனின் புகழ் பாடும் வளம் தமிழ் மொழிக்கு நிறைய உண்டு ..

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 4 роки тому +51

    this is an immortal song.which i enjoyed right from 1957. i wasa poor boy then. whenever i hear this song i get solace and peaceof mind and hope for future.

    • @devakimenon7380
      @devakimenon7380 4 роки тому +1

      👍👍👍

    • @nathanpathma3529
      @nathanpathma3529 2 роки тому +1

      Same here, now at the age of 74, the memory of the song is as fresh as ever.

  • @jayakumarravindran4770
    @jayakumarravindran4770 Рік тому +6

    Naan Tamilnatil piranthu valarntha oru Tamil Malayali. படித்து தமிழ் அந்த நாளில் நான் கேட்ட மிகவும் அருமையான பாடல்

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 6 років тому +529

    இப்பாடலை என்தந்தையார் எனக்காக என் சிறுவயதில் (5) பாடி மகிழவிப்பார். இப்போது என் அகவை 77.

    • @sridhartn43
      @sridhartn43 5 років тому +12

      Even my father like this one

    • @veerasamyrajan7584
      @veerasamyrajan7584 5 років тому +14

      நல்லாத்மா நீங்கள்

    • @mohanakrishnanragav1593
      @mohanakrishnanragav1593 5 років тому +12

      My Dad favorite song

    • @munisamyg4299
      @munisamyg4299 5 років тому +8

      You are blessed

    • @manoharana7364
      @manoharana7364 5 років тому +16

      நடராஜன் சோமசுந்தர ம் உங்கள் ஞாபகத்தின் மறவாமைக்கு தலைவணங்குகிறேன்

  • @velayuthams7183
    @velayuthams7183 Рік тому +5

    I am singing this song daily from 1974 when I came to hear this song.
    First I sang before Lord Nataraja in the temple of Thirugnana Sambandar in Tirunelveli.I am blessed with whatever I prayed for

  • @knat9695
    @knat9695 4 роки тому +44

    A great devotional song by TMS, very soothing and comforting! Handsome devotee.

    • @samuelgeorge3823
      @samuelgeorge3823 8 місяців тому

      I think lyris by the great Pattukotai kalyana sundaram..

  • @arumugammathavan802
    @arumugammathavan802 Рік тому +12

    அற்புதமான பாடல் ..காலத்தை கடந்து நிற்க்கும்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +5

    அழகான இறைவன் பாடல் பெற்ற வரிகள் அழகுள்ள சாவித்திரி அம்மாள் தம்பதியருக்கு வாழ்த்துக்கள்

  • @kumarshanmugam1984
    @kumarshanmugam1984 5 років тому +6

    என்ன தவம் செய்தோம்...மனிதனாக பிறக்க.... அதுவும் ஹிந்து மதத்தில் பிறந்து என் அப்பன் ஈசனை வணங்க....இப்பாடலை கேட்க....சிவ...சிவ....

    • @duraisamykayalvizhi7316
      @duraisamykayalvizhi7316 4 роки тому

      ஆமாம் உண்மை......சம்போ சிவ சம்போ... மகாதேவா...🙏🙏🏼🙏🏼🙏🏼

  • @dr.m.iniyaniniyanflute9773
    @dr.m.iniyaniniyanflute9773 7 років тому +89

    தற்போது அபஸ்வரமாக.இசையமைக்கும் புதிய ஒருசிலஇசையமைப்பாளர்கள்.பழயபாடல்களை கேட்டாலே .. போதுமே. ஞானம்பிறக்கும்

    • @samyrajah4124
      @samyrajah4124 5 років тому

      Its saranam

    • @rockerstamil5397
      @rockerstamil5397 5 років тому

      today music composition is full of music pollution except Rahman sir

    • @srinivasanrangamannar5803
      @srinivasanrangamannar5803 4 роки тому

      பறைக்கொட்டு இசையமைப்பாளனை ஒரு தலைமுறைக்கு தலை மேல் வைத்துக் கொண்டாடிய கொடுமையை என்னவென்று சொல்வது?

    • @subramaniankopula3252
      @subramaniankopula3252 3 роки тому

      Nailed the truth bluntly

    • @selvamk2815
      @selvamk2815 2 роки тому

      @@srinivasanrangamannar5803 பறைதாண்டா பரமனின் இசை கழுதை.

  • @ayyanarayyanar6127
    @ayyanarayyanar6127 4 роки тому +38

    பஞ்சாத்திர மந்திர கடவுளே.ஓம் நமசிவய நம

  • @ponmarricbe3205
    @ponmarricbe3205 4 роки тому +47

    இந்த பாடல் கேட்பவர்கள் அதிர்ஷ்டசாலி

  • @rathnamsenthil2939
    @rathnamsenthil2939 5 років тому +10

    பட்டுக்கோட்டை எங்கள் பாட்டுக்கோட்டை.! காலத்தால் அழியா பாடல்..!

  • @babuamudhan5854
    @babuamudhan5854 Рік тому +1

    பட்டுக்கோட்டையார் கடவுள் மறுப்பாளர்
    அவர் பக்தி பாடல்களை அதிகம் எழுதியதில்லை
    எழுதிய ஒன்றிரண்டிலும் எவ்வளவு அருமையான கருத்து, இனிமை
    எளிமை அகல வரம்தா என இதிலும் ஏழைத் துயர் தீர்க்கக் கோருகிறார்.

  • @SivakumarNagarajan
    @SivakumarNagarajan Рік тому +24

    கங்கை அணிந்தவா!
    கண்டோர் தொழும் விலாசா!
    சதங்கை ஆடும் பாத விநோதா!
    லிங்கேஸ்வரா! நின் தாள் துணை நீ தா!
    தில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா
    தில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா
    அல்லல் தீர்த்தாண்டவா வா வா
    அமிழ்தானவா வா
    அல்லல் தீர்த்தாண்டவா வா வா
    அமிழ்தானவா வா
    தில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா
    எங்கும் இன்பம் விளங்கவே
    எங்கும் இன்பம் விளங்கவே
    அருள் உமாபதே
    எளிமை அகல வரம் தா வா வா
    வளம் பொங்க வா
    எளிமை அகல வரம் தா வா வா
    வளம் பொங்க வா
    தில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா
    பலவித நாடும் கலையேடும்
    பணிவுடன் உனையே துதிபாடும்
    பலவித நாடும் கலையேடும்
    பணிவுடன் உனையே துதிபாடும்
    கலையலங்கார பாண்டிய ராணி நேசா
    கலையலங்கார பாண்டிய ராணி நேசா
    மலை வாசா! மங்கா மதியானவா
    தில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா

    • @yogarajahsgy3553
      @yogarajahsgy3553 4 місяці тому

      பட்டுக்கோட்டையில் சிவ பக்தி இசையும் மலராதனையும் பக்தி பரவச இசையும் ஒன்றாகி மெய் சிலிர்க்க வைக்கிறது. ஓம் சிவாயநம .

    • @shivanandhafoodinn7241
      @shivanandhafoodinn7241 4 місяці тому

      Super bro

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 роки тому +29

    அருமையான பாடல் அருளும் சிவன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏🙏🙏🙏❤❤

  • @samayalkaiyalavu1406
    @samayalkaiyalavu1406 11 років тому +45

    தமிழின் மிக சிறந்த பாடல்

  • @ramasamymuthusubramanian3719
    @ramasamymuthusubramanian3719 3 місяці тому +2

    கடவுள் நம்பிக்கை பாடலாசிரியரின் தனிப்பட்ட விருப்பம். இந்த பாடல் படத்தில் நாயகனை நாயகியின் பெற்றோர் கோயிலில் முதல் முதலாக சந்திக்க எழுதியது

  • @sivamohan7167
    @sivamohan7167 3 роки тому +3

    கடவுள் இல்லை என்று என்னம் உள்வைன் உள்ளத்தில் கடவுள் எப்படி புகுந்து எழுத உள்ளார் அழகிய தமிழ் உச்சரிப்பு மென்மையான பொருள் எப்படி பாராட்டுவது பாடலாசிரியரை தெய்வப் பாடல்

  • @c.mohanchandrasekaran8166
    @c.mohanchandrasekaran8166 2 роки тому +10

    Tears roll out on hearing this heart-rending song. What an amazing singer. He takes us to the world of eternity.

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 5 років тому +4

    Enakku thamizh theriyaadha vayadhil (in 70's) en appaa arumayaaga pada ketta paadal. Andru en vayadu 8 .appodhu TMS Ayyaa thaan padinavarnu theriyaamale Gemini ayyaa dhaan paadugiraarnu nambi rasitha paadal. Ippodhu en appa ennodu illaiyendraalum TMS Ayyaa ungalin gambeera kuralil olikkum indha paadal neengalum en appaavum ennodu iruppadhu pola ulladhu... Vaazhga ungalin dheiveega paadalgal. Vanangugiren ayyaa ungalai.

  • @kannantk2614
    @kannantk2614 26 днів тому

    1957-58 என்று நினைக்கிறேன்,வெள்ளகோவில் தாராபுரம் ரோட்டில் இயங்கி வந்த சென்ட்ரல் டூரிங் டாக்கீஸ்ல் பார்த்த இந்த படமும் பாட்டும் இன்றும் என் நெஞ்சில் நீங்காத நினைவாய் நிறைந்திருக்கிறது.நன்றி!

  • @krishnaiyermani7334
    @krishnaiyermani7334 8 днів тому

    நான் விரும்பி கேட்கும் பழைய பாடல்களி
    ல் இதுவும் ஒன்று. ரொம்ப நன்றி. தஞ்சாவூர் கே. மணி. 16.08.2024..ஞாயிறு.

  • @mariappansubramanian4459
    @mariappansubramanian4459 Рік тому +5

    I am 90s kid,but likes old golden songs,this song also my favourite.amarar dms aiijaa endral enakku uyir

  • @p.n.raamaduraip.n.raamadur7324
    @p.n.raamaduraip.n.raamadur7324 6 років тому +35

    என் மனம் உருகும் பாடல்

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 10 місяців тому +2

    அடியேன் பல வருடங்களாக பாடி வரும் பாடல்
    நன்றி நடராஜரே

  • @pachaipalani8399
    @pachaipalani8399 4 роки тому +21

    பட்டுக்கோட்டை கல்யானசுந்தரத்தின் பாடல் Tmsகுரளில்
    காதல்மன்னனின் பக்தியில் அந்தக்காலம் ஒரு பொன்னான காலம்

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 4 роки тому +17

    சம்போ.....மகாதேவா......!!!! பாண்டிய ராணி நேசன்........🙏🙏🙏🙏🙏

  • @kandasamysellathurai5930
    @kandasamysellathurai5930 7 років тому +282

    (1) கங்கை அணிந்தவா!
    கண்டோர் தொழும் விலாசா!
    சதங்கை ஆடும் பாத விநோதா!
    லிங்கேஸ்வரா!
    நின் தாள் துணை நீ தா!
    .
    (2) தில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா தில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா
    (3) அல்லல் தீர்த்தாண்டவா வா வா
    அமிழ்தானவா வாஅல்லல் தீர்த்தாண்டவா வா வா
    அமிழ்தானவா வாதில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா
    .
    (4)எங்கும் இன்பம் விளங்கவே........)எங்கும் இன்பம் விளங்கவே
    அருள் உமாபதேஎங்கும் இன்பம் விளங்கவே
    அருள் உமாபதே
    (5) எளிமை அகல வரம் தா வா வா
    வளம் பொங்க வா.எளிமை அகல வரம் தா வா வா
    வளம் பொங்க வாதில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா
    (6) பலவித நாடும் கலையேடும்
    பணிவுடன் உனையே துதிபாடும்பலவித நாடும் கலையேடும்
    பணிவுடன் உனையே துதிபாடும்
    (7) கலையலங்கார பாண்டிய ராணி நேசாகலையலங்கார பாண்டிய ராணி நேசா
    மலை வாசா! மங்கா மதியானவாதில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா
    தில்லை அம்பல நடராஜா
    செழுமை நாதனே பரமேசா

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 років тому +12

    T.M.S இன் உச்சரிப்பு, அஅழுத்தம் கொடுத்துப் பாடுவது அவரின் தனிச் சிறப்பு.கம்பீரமான குரல்,தெளிவான உச்சரிப்பு இவை அவருக்கே உரிய சிறப்பு

  • @Marirajasathish
    @Marirajasathish 2 роки тому +11

    அருமையான👌 பாடல் வரிகள் கேக்க 😌இனிமையாக 🎶இருக்கு... செழுமை நாதனே போற்றி ஓம் நமசிவாய......🙏❤️✨

  • @subburajp2963
    @subburajp2963 2 роки тому +2

    எப்படிப்பட்ட நாத்திகனும் இந்தப் பாடலைக் கேட்டால் ஆத்திகன் ஆவான்

  • @natchander
    @natchander 11 років тому +35

    the legend tms /sings this song after seeing thillai ambalathan. otherwise how he could sing so divinely. tms was blessed with HIS GRACE.

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 роки тому +10

    அருமை அருமை அருமை அமுதகானம் இந்த பாடல் மனசு அற்புதமாக இருக்கிறது

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 5 років тому +8

    சிரஞ்சீவித்துவப் பாடல்.
    பக்தி ரசம் நனி சொட்டும் இசை
    அற்புதம்.

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 4 роки тому +2

    தேனினும் இனிமையான பாடல் வரிகள். கேட்டாலே மெய் சிலிர்க்கிறது. எத்துணை அளப்பரியது. அதி அற்புதமான பாடல். ஓம் நமசிவாய வாழ்க.

  • @sabarinathan9268
    @sabarinathan9268 5 років тому +9

    மனதை வருடி, இறைவனிடம் நம்மை அழைத்துச்செல்லும் அருமையான பாடல்

  • @osksmbc4
    @osksmbc4 2 роки тому +1

    Intha padailai kettu thaan. En thantai enakku per vaitar enku Nadarajan. Valga tamil valga nadaraja. Pirkalatil naanum sivan bakthanen. Enatu thirumanamum sitambara nadaraja alaiyatil nadantatu. Valga tamil valga sivan

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +2

    தேனினும் இனியதமிழை பாடும் செல்லங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +3

    பெண்டியாலா.. நாகேஸ்வர ராவ் இசை உருக்குகிறது மனதை....!!!! பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகளில்!!! தமிழ் கொஞ்சி விளையாடுகிறது!!!!! மிகவும் அருமை அருமை அருமை இனிமை இனிமை இனிமை நன்றி நன்றி நன்றி

  • @kadirwhatasongoldmemoriesk9476
    @kadirwhatasongoldmemoriesk9476 4 роки тому +40

    2019 still listening,old is gold

  • @user-te1jx7lk9u
    @user-te1jx7lk9u 18 днів тому

    கவிஞர் அமெரிக்கா செல்லும் முன்பு கடைசியாகஎழுதியது பாடலைதிரும்பி வந்து கேட்கிறேன் என்று சென்றவர்தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +1

    1000,murai, ketka thoondium
    Padal, fantastic music lyrics acting excellent rendition of TMS

  • @ahmedsha2242
    @ahmedsha2242 5 років тому +18

    ஒரு நாத்திகர் இறைமன கமழும் வரிகளை இயற்றியது வியப்பே

    • @vinothkamli4620
      @vinothkamli4620 4 роки тому

      அதுவே கடவுளின் சித்தம்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 10 місяців тому +6

    மனதிற்கு அமைதி தரும் பாடல்

  • @t.subashchandrabose9411
    @t.subashchandrabose9411 3 місяці тому

    எங்கள் பாட்டுக்க கோட்டையின் வரிகள்,பட்டுக்கோட்டை எங்கள் ஊருக்கு,மண்ணுக்கு பெருமை,காலமும்,kaalanum அவரை எங்களிடமிருந்து பிடித்துவிட்டது

  • @mugamathualijinna7358
    @mugamathualijinna7358 2 роки тому +1

    மிகவும் அழகான பாடல் தற்போது இப்படி படமும் பாடலும் வரது நான் சிறு வயதில் பார்த்து மகிந்த நாட்கள் அதிகம்

  • @vijayalakshmi.r.t.8237
    @vijayalakshmi.r.t.8237 Рік тому +5

    Words, music, voice , actor settings everything is like that of Real " Devamirtham". I feel very pleasant when I hear this song. It brings that much happiness to me. Thanks to our Tamil Cinema makers, Great Legends" . Thanks to My Lord Thiru Chokaya"****

  • @gokuldasshenoy8437
    @gokuldasshenoy8437 3 роки тому +19

    After 45 years, I vividly remember this song with lyrics.

  • @sudharshanb1734
    @sudharshanb1734 6 років тому +19

    Divine voice of TMS. Really Enchanting. Enjoyed. Sudharshan.

  • @balasubbiramanian5005
    @balasubbiramanian5005 6 років тому +44

    தெய்விகுரல் தமிழ் அமுதம் TM.S

  • @rajboy9818
    @rajboy9818 2 роки тому +15

    I think it's from the movie Sowbhagyiavathi.The song was choreographed for dance classes here in Malaysia in the fifties till the eighties.It gives a divinity to the dance.Only TMS can evoke such divinity

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +1

    என் ஈசனின் அருமையான அற்புதமான எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 3 роки тому +24

    பாடல் :- தில்லை அம்பல நடராஜா
    படம் :- சௌபாக்கியவதி
    பாடல் வரிகள் :- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    நடிகர் :- ஜெமினி கணேசன்
    இசை :- நாகேஸ்வர ராவ்
    ஆண்டு :- 22.10.1957

  • @srinivasank.v9044
    @srinivasank.v9044 5 років тому +6

    வாழ்வில்மறக்கமுடியாதபாடல்கள்