"என் மகள் இன்ஸ்டா பேஜ்-யை பாருங்க" - சென்னை போலீசிடம் பதறி ஓடி வந்த தாய்... பல அதிர்ச்சி தகவல்

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • #chennai | #instagram | #police | #crime
    "என் மகள் இன்ஸ்டா பேஜ்-யை பாருங்க"
    சென்னை போலீசிடம் பதறி ஓடி வந்த தாய்
    விசாரணையில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்
    போலி இன்ஸ்டா ஐ.டி மூலம் பல பெண்களை மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு....
    நாகர்கோவில் காசி போல, சென்னையில் ஒரு இளைஞர் பல பெண்களை போலி இன்ஸ்டா மூலம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது...
    சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏழுகிணறு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், தனது மகளின் இன்ஸ்டா பக்கத்தில் ஒருவர் ஆபாசமாக பேசியும், மிரட்டியும் வந்ததாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு கூறியிருந்தார்.
    இதையடுத்து அந்த இன்ஸ்டா ஐடியை வைத்து நடத்திய விசாரணையில், சென்னை போரூர் பகுதியில் எலக்ட்ரிக்கல் நிறுவனம் நடத்தி வரும் ஆனந்த் பாபு என்பவர் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு நடத்திய விசாரணையில், மும்பை மாடலிங் ஒருவரின் படத்தை பயன்படுத்தி மோசடியை அரங்கேற்றியிருப்பது அம்பலமானது.
    இதில், அவரது 2 செல்போன்களை கைப்பற்றி ஆய்வு செய்த போது போலீசாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செல்போனில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள், 500க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருந்துள்ளது. இதையடுத்து ஆனந்த் பாபுவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
    புவனகிரி அடுத்த பூவாலை கிராமத்தை சேர்ந்த ஆனந்த் பாபு, யோகேஷ் ராகுல் என்ற பெயரில் போலி இன்ஸ்டா ஐடியை உருவாக்கி, மும்பை மாடலிங் ஆன அதர்வா பவார் என்பவரின் புகைப்படத்தை வைத்து கொண்டு பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். குறுந்தகவல் மூலமாக பேசி சில பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்து, வாட்ஸ்ஆப் எண் மூலமாக அவர்களது நிர்வாண வீடியோ மற்றும் போட்டோக்களை வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். ஆனந்த் பாபு. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகள் பலரை ஏமாற்றி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியும் வந்துள்ளார்.
    இந்த நிலையில் ஆனந்த் பாபுவிடம் ஏமாந்த பெண்கள் காவல்துறையில் புகார் அளிக்கலாம் எனவும், அவர்களை பற்றிய தகவல் ரகசியம் காக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ஆனந்த் பாபுவின் செல்போன்களை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வீடியோக்கள் ஏதேனும் அழிக்கப்பட்டுள்ளதா எனவும், காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத ஆண்களிடம் பழகும் இளம்பெண்கள், குறைந்தபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டியது அவசியம் எனவும், போலிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
    Uploaded On 23.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 10

  • @princlynprince3620
    @princlynprince3620 4 місяці тому +6

    இன்ஸ்டா பயன்படுத்தினால் யார் யாரோ மெசேஜ் பண்றாங்க. அவர்களுக்கெல்லாம் நாம் பதிலளித்தால் பின்விளைவு விபரீதமாகும்

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 3 місяці тому +1

    In many cases parents encourage insta....recently i noticed a lady sharing her datr insta ac in her status ....😮😮😮😮after i alerted her she started posting more😮😮😮😮😮😮

  • @Just_In-km5hr
    @Just_In-km5hr 4 місяці тому +1

    புகார் இருந்தால் மட்டுமே நடவடிக்கை... நம் நாட்டின் வாழ்வியல் முறைக்கு எதிராக உள்ள பாதுகாப்பற்ற வடிவம்... மனித உயிர்களுக்கு தேவை உணவு... அதை மீறி கொண்டு வந்த வியாபாரம் அனைத்தும் நாட்டின் அரசு... அதில் புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை என்றால் லாபம் தனிப்பட்ட ஆள்... சொகுசு தனிப்பட்ட ஆள்... கறுப்பு பணம் தனிப்பட்ட ஆள்...
    ஆனால் பாதுகாப்பற்ற பாதிப்பு ஏற்பது பல உசுரு... சட்டம் புகார் வந்தால் மட்டுமே என்றால் கண்டுபிடிப்புகளுக்கு பாதுகாப்பற்ற அனுமதி எதற்க்கு...?

  • @homeconnect7296
    @homeconnect7296 4 місяці тому +7

    Nanum than da insta use panren. Ena la lam oru ponnu kuda correct pana mudiyala 🥲 😢😢

    • @vishal.d11cs33
      @vishal.d11cs33 4 місяці тому

      Na insta use pandratha illa enga use panavena solitanga

    • @rajannairnair3600
      @rajannairnair3600 4 місяці тому

      Adukku Kunji Mele, Macham Errukkanam , Thambi

  • @rajannairnair3600
    @rajannairnair3600 4 місяці тому

    Jailkkulle Ponal Anandama Errukkalam

  • @RSR-es2ls
    @RSR-es2ls 4 місяці тому

    உங்களுக்கு எல்லாம் இதுகு மேலயும் வேணும்