ஒரு நகரில் ஏழு வயதுடைய .. தமிழ் பாடல் வரிகளுடன் - நாகூர் EM.ஹனீபா | Oru Nagaril - Nagoor EM.Hanifa

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 20

  • @mohammadsakkymohammadsakky5870
    @mohammadsakkymohammadsakky5870 2 роки тому +15

    ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன்…
    ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன்
    உபவாச நன்மை சொல்லுறேன்
    கேட்பீரே மாந்தரே
    உயர் நோன்பு மாத பெருமையே
    இதுவாகும் மாந்தரே
    ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன்
    ஓயாது எண்ணினான் மனதில் நோன்பையே நிதம்
    பெரும் ஆனந்தம் கொண்டான் ரமழான் மாதம் வந்ததும்
    தன் தாயை கட்டி தழுவிக் கொண்டு கெஞ்சினான் சனம்
    மறவாது சஹரு நேரமதில் எழுப்ப வேண்டுமாய்
    மன்றாடினானே நோன்பு நோற்க வேண்டும் என்றவன்
    மாதா மதிக்க வில்லை அருமை மைந்தன் சொன்னதை
    மறு நாளின் காலை எழுந்து மனம் பதறி வருந்தினான்
    ஆதாரமின்றி வருந்துவதை கண்ட தாயவள்
    அன்போடனைத்து ஆறுதலாய் சாற்றினாள் இதை
    போதாத வயதில் நோன்புனக்கு கடமையல்லவே
    பொறு இன்னும் கொஞ்சம் காலம் வரை என்று கூறினாள்
    வல்லோன் உரைத்த திருமறையாம் குர்ஆன் என்பதை
    வையம் சிறக்க நமக்களித்த மாதம் அல்லவோ
    சொல்வார்கள் நோன்பு நோற்பவர்க்கு சொர்க்கம் மீதிலே
    சுகமுண்டு என்ற போதனையை நீ அறியாயோ
    கல்லோ உன் நெஞ்சு கூறும் தாயே கருணையில்லையா
    கண்ணாலே எந்தன் ஆண்டவனை காண வேண்டுமே
    அந்நாள் இரவு முழுதும் அவன் தூங்க வில்லையே
    ஆசை அவனின் கண்களிலே ஆட்சி செய்ததே
    ஏண்ணம் போல் சஹரு நேரமது வந்த போதிலே
    எழுந்தோடி நோன்பு வைத்து மனம் புரிப்பெய்தவே
    ஆனாலும் அன்னை தந்தை கூடி அதட்டினார்களே
    ஆகாது என்று சாதனையால் வம்பு பேசினான்
    திருவான அஸரு என்னும் தொழுகை நேரம் நெருங்கவே
    தண்ணீரின் தாகம் அதிகமாகி நாவரண்டதால்
    பாரிதாபமான நிலையில் பையன் மூச்சு திணறியே
    பாரிவோடு தாயின் மடியில் சாய்ந்து மூர்ச்சையாகினான்
    பிரியம் மிகுந்த செல்வன் உயிர் பிரிந்து சென்றதால்
    போனாயே என்று கூவி அழுது புலம்பி வாடினாள்
    இனிமை நிறைந்த பாங்கின் ஓசை செவியில் கேட்கவே
    இறையோனை தொழுது வேண்டினார்கள் ஒன்று கூடியே
    தனிமையில் அன்னை ஆண்டவன் பால் கைகளேந்தியே
    தகுமோ இறைவா என்று துஆ கேட்டு புலம்பினாள்
    இனி யாது செய்வேன் என்று அன்னை மனது நோகவே
    இதயம் உடைந்து வேதனையால் இன்பம் நீங்கினாள்
    தந்தை அருகில் சோகமதாய் தவிக்கும் போதிலே
    தலைவாசலிலோர் சாதுமகான் வந்துமே நின்றார்
    எந்தைகளே நான் நோன்புடையோன் ஏழை ஆதலால்
    ஏதேனும் உணவு தந்துதவ இயலுமோ என்றார்
    சிந்தை இரங்கி வீட்டிலன்று சமைத்திருந்ததை
    சந்தோஷமாக தந்த போது சாது வினவினார்.
    கவலை மிகுந்த முகத்துடனே காணப்படுவதேன்
    கடவுள் கருணை உங்கள் மீதுண்டாகுக வென்றார்
    சவமாகினானே எங்கள் ஒரே செல்வ பாலகன்
    சாகா வரமே தருக உம்மால் ஆகுமோ வென்றார்
    தேவா சிறுவன் நோன்பிருந்து உயிரை நீத்ததால்
    தெய்வீக சக்தி உண்டெனில் உயிர் வாழ செய்குவீர்
    ஆயாசமாக வீனில் யாரும் வருந்திட வேண்டாம்
    அடியேனுக்கந்த பையனை நீர் காட்டுவீரென்றார்
    வாயாற வாழ்த்தி வாருமென்று உள்ளே அழைத்தார்
    வந்தார் உடனே சாது பையன் பக்தியைக் கண்டார்
    நீயே எழுவாய் என்று சாது கூறினாரதே
    நிமிஷத்திலே எழுந்து சிறுவன் இறையை வணங்கினான்
    ஆனந்த காட்சி இதனை கண்ட அன்னை தந்தையும்
    அன்போடு சாதை தழுவிக் கொண்டு இறையை போற்றினார்
    தீனோர்களே ரமழான் மாதம் மேன்மையானதே
    துன்பங்கள் தீரும் இறைவனுக்கே நன்றி நவிலுவீர்
    என்றும் பெறுவார் நோன்பிருந்தார் இறைவன் ஆசியை
    எனக்கூறி மறைந்தாரே சாது உலக மாந்தரே
    உலக மாந்தரே உலக மாந்தரே

  • @saitmohamed7688
    @saitmohamed7688 Місяць тому

    Super fantastic Excellent performance

  • @hussianvlogs9
    @hussianvlogs9 2 роки тому +3

    Ameen ameen yarabbule almeen enniye ariyana kannir vanthetuchu allah

  • @sjgold1449
    @sjgold1449 9 місяців тому +2

    மாற்றுமத கட்டுக்தை வறலாற்றுடன் ஒத்துப்போகும் ஷிர்க் மிகுந்த பாடல்....

    • @aaqiffmohideen4141
      @aaqiffmohideen4141 2 місяці тому

      But here parents and child worship Allah not that சாது. Thats the different between Islam and other religion

    • @aaqiffmohideen4141
      @aaqiffmohideen4141 2 місяці тому

      Im accepting music is haram. But இஸ்லாமிய தமிழ் இலக்கியம் is a different field during that era they have dragged several people to accept Islam. What is shirk in this song.
      1. மூர்ச்சையாகினார், உயிர் பிரிந்து சென்றதாய் நினைத்தார் word suggest not DEATH here. மூச்சை விட்டார் என கூறப்படவில்லை.
      2. பையன் இறையை வணங்கினார், தந்தை தாய் சாதைத் தழுவிக்கொண்டு இறையைப்போற்றினார். இங்கு சாதை வணங்கினார் அல்லது போற்றினார் என சொன்னால் ஷிர்க் என கூறலாம்.
      3.பெற்றோர் தொழுது அல்லாஹ்விடம் துஆ கேட்டனர்.
      இந்த எந்த வரிகளில் ஷிர்க் உள்ளது.

  • @ramsanmohamed7793
    @ramsanmohamed7793 3 роки тому +3

    😟😟😟😟 அருமையான பாடல்

  • @mohamednusrath120
    @mohamednusrath120 Рік тому +5

    ما شاء الله

  • @DREAM-ANSARI-DA
    @DREAM-ANSARI-DA 3 роки тому +3

    Masha Allah

  • @zumarzumarrock753
    @zumarzumarrock753 9 місяців тому +1

    ❤❤

  • @shakkilfamily7
    @shakkilfamily7 7 днів тому

    . Not tail best song tail Masha Allah😢😢

  • @B2B9v-7
    @B2B9v-7 2 роки тому +1

    Super

  • @mohomadzanhar7772
    @mohomadzanhar7772 2 роки тому +4

    ماشاءالله

  • @mohamednusrath120
    @mohamednusrath120 Рік тому +2

    جيد

  • @stf386
    @stf386 2 роки тому

    intha song kku copyright clime varalayaa ? bro

  • @ArRilwan_hajj_service
    @ArRilwan_hajj_service 3 роки тому +2

    Upcoming video's ellam black screen laye podunga bro Insha Allah

  • @ramsanmohamed7793
    @ramsanmohamed7793 2 роки тому +1

    best song

  • @kotharkhanballb1352
    @kotharkhanballb1352 6 місяців тому +1

    ❤❤❤