"தரித்திரம்" போக்கி "சரித்திரம்" படைப்பாள் மூதேவி.! பாற்கடலில் லட்சுமிக்கு முன் தோன்றிய மூ(த்த)தேவி

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #சிந்திக்கலாம்வாங்க... #தமிழ்விரும்பி
    செல்வச் செழிப்பிற்காக ஜேஷ்டா தேவி எனும்
    மூ(த்த)தேவி தவ்வையை வணங்கும் வழக்கத்தை வைத்திருந்தனர். 'ஜேஷ்ட' என்ற வடமொழிச் சொல்லுக்கு 'முன் தோன்றிய' என்று பொருள்.
    சோழர்களின் காலத்தில் படையெடுப்பிற்குச் செல்லும் முன்னர் ஆயுதங்களை ஜேஷ்டா தேவியின் முன்பு வைத்து வணங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
    தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள பல்லவர் மற்றும் சோழர்களின் கால சிவன் தலங்களில் ஜேஷ்டா தேவியின் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
    செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்த திருக்கழுக்குன்றத்திற்கும் மதுராந்தகத்திற்கும் இடையில் அமைந்த அரையப்பாக்கம் என்ற கிராமத்தில் உள்ள ஸ்ரீஅருணாதீஸ்வரர் கோயிலில் வடமேற்கு திசையில் ஜேஷ்டா தேவிக்கு ஒரு சன்னிதி அமைந்துள்ளது.
    புடைப்புச் சிற்ப வகையைச் சேர்ந்த இந்த சிற்பத்தின் இரு புறங்களிலும் சேடிப்பெண்கள் நின்ற கோலத்தில் காணப்படுகின்றனர். ஏர்க்கலப்பை ஒருபுறமும் கழுகுக் கொடி மற்றொரு புறமும் அமையப்பெற்றுள்ளன.
    செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனூர் என்ற சிற்றூரில் அமைந்துள்ள சிவன் கோயிலில் ஜேஷ்டா தேவியின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. மேலும், செங்கற்பட்டிற்கு அருகில் ஆத்தூரில் அமைந்துள்ளது ஸ்ரீ தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ஸ்ரீ முக்தீஸ்வரர் ஆலயம். இக்கோயிலில் அருள்பாலிக்கும் ஜேஷ்டா தேவி விவசாயத்தின் காவல் தெய்வமாகவும், வளமைக்கு அதிபதியாகவும் திகழ்கிறாள். தன்னை வணங்குவோரை இவள் விபத்திலிருந்து காப்பாள் என்பது ஐதீகம்.

КОМЕНТАРІ •