கதை கேட்க வாங்க | "நெடுந்தூரம்" - ஜெயமோகன் | பவா.செல்லதுரை | Bava Chelladurai

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 193

  • @vasanthv6850
    @vasanthv6850 4 роки тому +89

    இந்த லாக்டவுன் டைம்ல எனக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திய பவாவுக்கு ஆயிரம் முத்தங்கள்

    • @muthiaha7770
      @muthiaha7770 4 роки тому

      Dear Bava sir, I listened so many your stories today " Nedunthooram " really I was surprised. Sir, I would like to speak to you over phone. Pl Can you send me your contact No. I am Expecting.... TRICHY. 9486178170

    • @manimannai9006
      @manimannai9006 Рік тому

      என்னை பாவாவாகவே மாற்றிவிட்ட பாவா விற்கு வாழ்த்துக்கள்

  • @Santhoshezhumalai
    @Santhoshezhumalai 2 роки тому +1

    ஐயா. எண்ணங்களை எழுத்தாக ஆரம்பித்து மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும்.
    ஆனால் படிப்பதில் சற்றும் நாட்டம் இல்லை.
    முதல் முதலில் நீங்கள் சொன்ன ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் கேட்டுத்தான் படிக்கத்துவங்கினேன். ஆனால் இக்கதையை என்னால் தொடர இயலவில்லை. ஆனால் நெடுந்தூரம் கேட்டு முழுதுமாக படித்து முடித்தேன்.
    முதல் முதலாக படித்து முடித்த ஓர் தமிழ் கதை.
    அதற்கு உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். மகிழ்ச்சி. உயிருள்ள தங்களின் கதையாடலை நான் காதல் செய்கிறேன்.

  • @kavithaathaikuttieskathaig2168
    @kavithaathaikuttieskathaig2168 4 роки тому +27

    "மனித வார்த்தைகள் அனாதையாக்கப்படுவது காவல் நிலையங்களில் " உங்கள் உணர்வுகளுடன் கேட்கையில் கண்ணீர் முட்டியதால் சிலநொடிகள் சலனமற்றுச் சிலையானேன்....கதை தொடர்ந்தது...மனம் ஏனோ சிறைபட்டது

  • @ibrahimrajmohamed8540
    @ibrahimrajmohamed8540 3 роки тому +1

    Really my tears are welledup I hate the deafness of our social

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 9 місяців тому

    பறவைகளின் நன்றி, பாசம் கூட மனிதர்களிடம் இல்லை --அருமையான கதை

  • @svparamasivam9741
    @svparamasivam9741 2 роки тому +3

    Jayamohan kaalathin kodai.
    Bava vaazhthukkal.
    Kovid special.jaihindh

  • @veeranganait4087
    @veeranganait4087 4 роки тому +1

    நன்றி பவா அண்ணா நல்ல கதையாக தேர்வு செய்து சொல்வது உங்கள் ரசனையை காட்டுகிறது. ஜெயமோகன் வலியை வாசகருக்கு கடத்துவதில் வல்லவர். ஏழைகளிடம் சுரண்டித் திண்பது போன்ற அருவருக்கத்தக்க செயலை இச்சமூகம் என்று கைவிடுமோ அன்று தான் எளியவர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 4 роки тому +2

    அப்பா இன்னுமொரு கனக்க வைக்கும் கதை.... ஜெயமோகன் ஐயாவின் அமைதி ததும்பும் முகத்திற்கு பின் அவதரிக்கும் முகங்கள் எல்லா காலத்திற்கும் காணும் காட்சிகளுக்கும் பொருந்தக் கூடிய வகையில் உள்ள பல நிகழ்வுகளை கதைக்களமாய் அமைத்து அசர வைக்கிறது... அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்வது அதற்கு மேலும் வலு சேர்கிறது.. மீண்டும் மீண்டும் மனித நேயம் வளர துணை நிற்க வேண்டும் என்ற எண்ணம் கருத்து இது மட்டுமே உங்கள் ஆழ் மனதின் தாக்கமாக நிரம்பி வழிகிறது... கழுகின் பசிக்கு முதியவரும், முதியவர் மீது கொண்ட அக்கறையில் இளைஞனும், தேனீர் வாங்கி தரும் காவல்காரும், ஒளிந்து கொள்ளச் சொல்லும் பக்கத்து வீட்டு காரும்..கண் முன்னே காட்சிகளாய்... பறக்க இயலாமல் பறக்கும் கழுகுகள் இறந்து கிடந்த தந்தை காரணமின்றி அடி வாங்கும் இளைஞன்... மனதை கனக்க வைக்கிறது...

  • @KARTHIEDITSTAMI
    @KARTHIEDITSTAMI 3 роки тому

    மிகவும் வலுவான அழகான வார்த்தைகள் பவா அவர்களே , காவல் துறைக்கு சக மனிதனை அணுகும் பயிற்சி தேவை என கூறியது அருமை

  • @raginik4239
    @raginik4239 Рік тому

    பவா கதை சொல்ல நா கதையோட நகர நிஜமான ஒரு நிகழ்வு போல அழகா நகர 🙏

  • @valliammala9892
    @valliammala9892 4 роки тому +3

    இன்றைய சட்டத்துறையும் நீதித்துறையும் எப்படி தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள், மனிதம் எப்படி மாறிக்கொண்டிருக்கிறது, மனிதர்களின் ஜீவிதம் எவ்வளவு இன்னல்களை கொண்டது என்பதையும் எடுத்தரைத்த கதை. வழக்கம் போல் இதயம் கணத்தது காணொளியின் இறுதியில். நன்றி பவா அப்பா..

  • @santhisanthi4730
    @santhisanthi4730 4 роки тому

    ஐயா உங்கள் குரலில் கேட் ட கதை அருமை அருமை மனதை உருக்கும் விதமாக தங்களது குரலில் கேட் ட கதை அருமை அருமை மனதை உருக்கும் விதமாக இருக்கிறது

  • @maran761111
    @maran761111 4 роки тому +2

    இந்தக் கதையை சொன்ன பவாவுக்கு நன்றி.. சிலருக்கு இந்த வாழ்க்கை மிகப்பெரிய சாபம்...😭😭😭😭

  • @chandrasekar9443
    @chandrasekar9443 4 роки тому +5

    ஒரு கதை சொல்லியின் அடுத்த பரிமாணத்தை இந்த பதிவில் உணர்கிறேன். உணர்வுபூர்வமாக கதை சொல்லி கேட்டு வந்த எனக்கு முதல்முறையாக உணர்ச்சிப்பிழம்பான கதைசொல்லியை காணமுடிந்தது. எந்தக் கதையானாலும் சோகமானாலும் புன்னகை மாறாமல் குரலில் மட்டும் கனம் ஏற்றியதை கேட்டு வந்த எனக்கு. இந்தப்பதிவில் ஏனோ நீங்களும் உள்ளூர பயணிப்பதை நன்கு உணரமுடிந்தது. சிலநேரங்களில் உணர்ச்சிவயத்தில் தளுதளுக்கும் அந்தக்குரலை கேட்பது இதுவே முதல்முறை. சில வாழ்வியல் முறைகளை கண்டதே இல்லாதபோதும், தங்களது கதை சொல்லும் பாணியில் முழுமையாக அதனை வாழ்வது போன்ற எண்ணங்களை உருவாக்கும் மாயவலையில் சிக்குவதும் சுகமாய்தான் இருக்கிறது. காந்தக்குரலால் என்னை எத்தனையோ வாழ்வியல் முறைக்கு இணைத்து பயணப்பட வைத்த உங்கள் பதிவுகளில் இந்த ஒன்று உச்சம் தொட்டது. நன்றி பவா. கழுகுகளும் அந்த மூன்று கதாபாத்திரங்களும் என்னைச்சுற்றி ஜீவனோடு இன்னும் வட்டமிட்டுக்கொண்டே இருக்கின்றது.

  • @vagthiagarajan
    @vagthiagarajan 4 роки тому +28

    நண்பர் பவா அவர்களே இக்கதையை கேட்ட பிறகு மிகவும் கனமானது! இதனை ஒரு 10 நிமிட குறும்படமாக எடுத்து யூடியூப்பிலும் மற்றும் காவலர் பயிற்சி நிலையத்திற்கு அனுப்பி அவர்களுக்கு மனித நேயத்தை அறிய வைக்க முயலலாம்! தற்போதைய அரசியல்வியாதிகளுக்கு பாடம் நடத்தலாம்!

  • @loganathanrajamanickam7428
    @loganathanrajamanickam7428 4 роки тому

    எனக்கு கதை கேட்க ரொம்பவே பிடிக்கும் .இதுவே நான் முதல் தடவ உங்க கதை கேட்கிறேன் .மனம் கனத்து போயிடுச்சு. போலீஸ்காரர்களை பற்றிய உங்கள் கருத்து , அதிலும் மற்றவர்கள் ஆற்றாமை, துன்பத்தை பொறுமையோடு கேளுங்கள் என்று நீங்கள் கூறியது அருமை .இந்த கருத்துகளை இன்னும் உங்களால் முடிந்த எல்லா சுழ்நிலையிலும் சொல்லுங்கள்.🙏🙏🙏🙏🙏

  • @vijaydurga2211
    @vijaydurga2211 4 роки тому

    அன்பு பவா நீங்கள் வாழ்க பல்லாண்டு ,வளர்க உங்கள் புகழ், உங்கள் தொலைபேசி எண் தாருங்கள் ,உங்களை வாழ்த்த வேண்டும் ,
    வாழ்க ஜெயமோகன் நன்றி

  • @rajkumarb5998
    @rajkumarb5998 4 роки тому +24

    பவா வை பார்த்தில் மிகப்பெரிய மகிழ்ச்சி

  • @dreamcricket7986
    @dreamcricket7986 4 роки тому +1

    மீந்து போன நினைவுகளை கொண்டு வாழ்கிற கலைஞர்களில் ஒருவனாய்.... முடியல தோழர்

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 4 роки тому +10

    🦅🦅🦅 கதையில் police நடவடிக்கை மிகவும் வேதனையாக உள்ளது இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்க கூடாது சரியான நேரத்தில் சரியான பதிவு நன்றி ஐயா 👍👍👍🙏

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 4 роки тому

    பவா நீங்கள் மிகவும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெறவாழ்த்துகள்

  • @sakthi4524
    @sakthi4524 4 роки тому

    பவா அண்ணா எனக்கு எந்தவிதமான மன அழுத்தம் வந்தாலும் நான் தேடுகிற முதல் மனிதர் நீங்கள் தான் அண்ணா எனக்கு உங்கள பார்க்கனும் உங்கள கட்டி பிடித்து உங்கள் கைகளுக்கு ஒரு முத்தம் கொடுக்கனும்
    மா.சக்திவேல்
    திருப்பூர்

  • @angavairani538
    @angavairani538 4 роки тому

    பவா தங்களின் குரல் ஒரு அழகு..இயற்கை சூழல் பறவைகளின் ரீங்காரம் கதை சொல்லும் அழகு...வசீகரிக்கும் குரலில் கதை சொல்லும் அழகு பவாவிற்கு நிகர் பவா தான் தேவனால் ஆசிா்வதிக்கப்பட்டவர் பவா நீங்கள்..👍👍👍👍❤❤❤❤⚘⚘⚘⚘

  • @RameshRamesh-qy2yh
    @RameshRamesh-qy2yh 4 роки тому +4

    கதை சொல்லிக்கிட்டே இருங்க
    கடைசி வரை எனர்ஜி குறையாமல்
    இறைவன் பார்த்து கொள்வான்.

  • @naanjilpeter787
    @naanjilpeter787 4 роки тому +1

    கேட்கும் போதே கண்கட்டி விட்டது. படித்தால்....

  • @ஏழிலைப்பாலை

    இன்றே இரண்டு முறை கேட்டு விட்டேன்...
    பவா அண்ணா உன்னை ஆரத் தழுவிக் கொள்கிறேன்...
    உனக்கும் எனக்கும் நெடுந்தூரம் இல்லை...
    என்ன சொல்ல, ம்........

  • @anandnatarajan8212
    @anandnatarajan8212 4 роки тому

    விளிம்பு நிலை மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை அவர்களின் வலிகளை "நெடுந்தூரத்தில்" பதிவு செய்திருந்த ஜெமோ வின் எழுத்துகளின் வார்த்தை ஓவியம் அருமை..பவா ண்ணே!

  • @nagarajan2440
    @nagarajan2440 4 роки тому +3

    ஐயா வணக்கம் நீங்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை நான் வகுப்பறையில் ஒருபோதும் சிறந்த ஆசிரியர்களை பார்த்ததே இல்லை நான் காற்றுக் கொண்ட விஷயங்கள் அனைத்தும் வகுப்பறைக்கு வெளியில்தான்... அதைப் போலத்தான் நானும். தங்களிடம் இருந்து நிறைய அனுபவங்களை கற்றுக்கொள்கின்றேன்....

  • @balamuthukumaran5379
    @balamuthukumaran5379 4 роки тому +4

    மிக கனமா இருக்கு... டெல் லி யாகவே , பாவா கதையை சொல்வது இன்னும் உருகவைகிறது..

  • @SenthilKumar-en8fs
    @SenthilKumar-en8fs 4 роки тому

    சல்லடை போட்டு சலித்த பிறகும்
    உங்கள் சல்லடையில் சிக்கிய இந்த கதை தானா பவா அவர்களே ,
    மீள முடியாத கதைகளின் வரிசைகளில் ஒன்று , இருந்தாலும் பவாவின் வர்ணனை சிறப்பு

  • @akshayabharathi8290
    @akshayabharathi8290 4 роки тому

    அருமையான கதை சொல்லல் திறன் பவா ஐயா அவர்களுக்கு....

  • @Megaaravind143
    @Megaaravind143 4 роки тому +1

    சூப்பர் சார் touching story❤😊🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @naseemanaseema7132
    @naseemanaseema7132 4 роки тому

    வணக்கம் ஐயா
    ரொம்ப மகிழ்ச்சி இன்னைக்கு உங்களின் கதையைக் கேட்கும் போது

  • @babua3462
    @babua3462 4 роки тому +1

    🙏👌அருமை பவா, கதையில் வரும் காவல்துறை நீதித்துறையின் செயல்கள் தந்தை, மகன் காவல்துறை மரணத்தை நினைவுபடுத்துகிறது

  • @sarojini1958
    @sarojini1958 3 роки тому +1

    Mr Bava , I am glad listening to your story telling at my 63 years old. My favourite authors🙏🏻🌹👌

  • @mohanmak2147
    @mohanmak2147 4 роки тому +2

    No words started crying while hearing this story sir

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 4 роки тому

    என் அன்பு பவா... BACK GROUND படமா.. நிஜமா., Sorry நிஜம் தான் மரம் செடி கொடி எல்லாம் ஆடுது...

  • @monicamaran700
    @monicamaran700 4 роки тому

    வாசித்த போது எனக்கு மிகவும் பிடித்த கதை.நீங்கள் சொல்லும்போது அற்புதமாக உள்ளது.

  • @noolsaalaram-7355
    @noolsaalaram-7355 4 роки тому +3

    கதையை நான் ஜெமோ தளத்தில் படித்து விட்டாலும் பவா அவர்களின் மூலம் அதைக் கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

  • @KalaiSelvi-qu4uu
    @KalaiSelvi-qu4uu 4 роки тому +2

    நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்கள் கதை கேட்டதில் மகிழ்ச்சி உருக்கமான கதை நன்றி

  • @manomala6781
    @manomala6781 4 роки тому

    மிகவும் உணர்ச்சிபூர்வமாக சிறப்பாக சொல்கிறீர்கள் ஐயா
    மிக்க நன்றி

  • @Priya-mn8cn
    @Priya-mn8cn 4 роки тому

    100 வது கருத்து இந்த பதிவு, உங்களை சந்திக்க ஒரு நாள் காலம் அமையும் என்று எதிர்நோக்கி

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 4 роки тому +1

    கதை சொன்ன அழகு அற்புதம் 👏👌

  • @sathishkumar9627
    @sathishkumar9627 4 роки тому +27

    "மனித வார்த்தைகள் அனாதை ஆக்கப்படுவது காவல் நிலையத்திலும், நீதி மன்றத்தில் தான்" என் வாழ்நாள் பயத்தை ஒரு வரியில் கூறிவிட்டார்.

  • @muthuramalingamma52
    @muthuramalingamma52 4 роки тому

    ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு காரணம் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கதைக்கும் பல்வேறு கோணங்கள்....
    கதைசொல்லிக்கு விருது என்றால் அது உங்களைத் தவிர வேறு யாருக்கும் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை....
    -- முத்துராமலிங்கம் காஞ்சிபுரம்--

  • @SenthilKumar-vj6zq
    @SenthilKumar-vj6zq 4 роки тому

    பவாவின் எதார்த்த வார்த்தைகளில் வலிமை மிக்க கதையாடல்....மீண்டும மனிதத்தை உரையவைக்கின்றது

  • @vijayakumarirajendran1933
    @vijayakumarirajendran1933 4 роки тому +4

    அருமை பவா.
    கழுகுகளுக்கு இரை வாங்க வந்த நிறைய டெல்லி கள் லத்தி களுக்கு இன்னும் இரையாகிக் கொண்டிருக்கின்றனர்

  • @mr-sdaguru
    @mr-sdaguru 4 роки тому +2

    Naan appavin kuralai ippothu ketukkuren.😘😘

  • @vpvignesh5858
    @vpvignesh5858 4 роки тому +1

    Empathy எனும் உணர்வை எல்லோரும் வளர்த்துக்கொண்டால் உலகில் போரும், பல வலிகளும் ஒழிந்த்து போகும்.

  • @kadampavam-7896
    @kadampavam-7896 4 роки тому +1

    அருமை...தோழரே
    கழகு தான்"ஆனால் கோழி க் குஞ்சு மனம் படைத்தவையே...

  • @rajarathinampackiri6751
    @rajarathinampackiri6751 4 роки тому +1

    சிறப்பான பிரதிபளிப்பு....

  • @elayarajaramasamy2489
    @elayarajaramasamy2489 4 роки тому +2

    நீங்க தான் சார் மோகன் சாா் எமுத்துகளை உலகத்திற்கு அறிமுகம் செய்கிறீா்கள். நல்ல நட்பு. உயர்ந்த உள்ளம் .

  • @akumaraniway
    @akumaraniway 4 роки тому +7

    Bava Sir, After long time during this lockdown...as usual, you have narrated the story with your style in a extraordinarily..hope everyone is fine at home, please take care and will meet soon.

  • @60667
    @60667 10 місяців тому +1

    சாதாரண மனிதர்களுக்கு வாழ்விடம் என்பது ...சும்மா தங்களை மறைத்து கொள்வதற்க்கான ஒரு இடம்...
    நான் பல நேரம் நினைத்து கொள்ளும் வார்த்தை இது....ஒரு மிடில் கிளாசுக்கும் அப்பர் மிடில் கிளாசுக்கும் வீடு என்பது பொருட்களால் நிரப்பப்பட்ட சொர்க்கம் ஆனால் சாதாரண ஏழை கூவம் கரை வாழ் மனிதனுக்கு?...
    அருமையான வார்த்தை பிரயோகம் பவா சார்

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 4 роки тому

    பவாவுக்கு எனது அன்பான முத்தங்கள். 😍😘😘

  • @Edm310
    @Edm310 4 роки тому +2

    what a coincidence.. i juz read that 100th today... what a personality Writer Jayamohan is??

  • @gomathibalasubramani533
    @gomathibalasubramani533 4 роки тому +3

    வணக்கம் பவா. மனது பாரமாகி ... பாரம் கண்ணீராய் கரைந்ததெனக்கு. அது யாருக்கான கண்ணீர் ?
    டில்லிக்கானதா? அவர் அப்பாவுக்கானதா?
    அந்த கழுகுக்கானதா?
    கழுகு நாற்றத்தை விட அருவருக்கத்தக்க மனித நாற்றங்களுக்குள் வாழும் வாயும் மனமும் செத்த சனங்களுக்கான அழுகையா என கோடிட்டு காட்ட முடியவில்லை எனக்கு.

  • @ibrahimrajmohamed8540
    @ibrahimrajmohamed8540 3 роки тому

    Really my tears are welledup. Realy i hate the social deaf

  • @alawrence5665
    @alawrence5665 4 роки тому

    அருமையான பதிவு தோழர், நெஞ்சை பிழியவைத்த கதை, மேலும் போலிஸை பற்றிய விவாதங்கள் மேலும் நெஞ்சை உருக்கி விட்டது. என் நெஞ்சார்ந்த துக்கங்களை பகிர்ந்து கொள்கிறேன். அன்புடன் லாரன்ஸ்

  • @selvendranp4541
    @selvendranp4541 4 роки тому

    வசீகரகுரல் பாவார...
    உங்களுக்கும் எனக்கும்
    வயது, ரசனை, ரொம்ப
    வித்தியாசம் இல்லை.
    48 நாட்கள் ,
    ஒரு மண்டலம்
    விரதம் போல்
    உங்களுடைய உரையாடலை கேட்டு ரசித்து ருசித்து
    லயித்து மனம் வெதும்பி
    விழி கசிந்து ஏதோ ஒரு புது உலகத்தில் இருந்தேன். அதிலிருந்து விடுபட எண்ணி ஒரு மாதம் இன்றைய ஊகடவியலார்களின்
    புழுதிவாரி பூசிக்கொள்ளும் உரையாடல்களை கேட்டேன். இன்று மீண்டும் உங்களின் குரலில் ஜெயமோகனின் கூவம் கழுகு கதையினைக் கேட்டேன். அட... அட.. அடடா...
    மீண்டும் அதே விம்மல் , ஆற்றாமை, அழுகை,
    பெருமூச்சு அனைத்தும் என்னைத் தொற்றிக் கொண்டது.
    இவன்
    கனவுகளில் மட்டும் சாதித்துக் கொண்டு இருக்கும்
    விஜய் செல்வேந்தர்
    காரைக்கால்

  • @Moonlightfoto
    @Moonlightfoto 4 роки тому +1

    Such a beautiful story.
    Sir you just made to live in that moment. Your such a beautiful story telling . I do remember when I was a kid my dad use to tell stories and share his experience to me. But he's no more. You full fill his place each night .
    wanna hug you sir love you

  • @muhammadfarid827
    @muhammadfarid827 4 роки тому +5

    அவைகள் கழுகு உருவில் உள்ள டெல்லியின் உடன்பிறப்புகள் போல் உணர்ந்தேன்

  • @vasanthaashokan9626
    @vasanthaashokan9626 4 роки тому

    சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏

  • @roservicekovilpatti9447
    @roservicekovilpatti9447 2 роки тому

    அட போங்க பவா... அழுகையை அடக்க முடியல ... 😭😭😭😭😭

  • @karthikeyanmohan4972
    @karthikeyanmohan4972 4 роки тому +1

    great bava.naan azhuthan.thanks or your on the way contribution.

  • @venkatachalamthirupathi3106
    @venkatachalamthirupathi3106 4 роки тому +1

    நன்றி சார்

  • @ilakkiyasoundarapandiyan4763
    @ilakkiyasoundarapandiyan4763 4 роки тому +2

    intha kathaiyai ketum pothu nejam adaikirathu

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 роки тому

    Thanks for selladurai sir ❤️🙏

  • @ronaldherman9018
    @ronaldherman9018 4 роки тому

    Ungal rathayhil nadipum erku.amazing

  • @arockiasamyarockiasamy7546
    @arockiasamyarockiasamy7546 4 роки тому +4

    Super tholar

  • @logusundarp813
    @logusundarp813 4 роки тому +1

    பவா அப்பா 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘.............

  • @prabhumohan5183
    @prabhumohan5183 4 роки тому

    அருமை அய்யா வாழ்த்துக்கள்

  • @sarojini1958
    @sarojini1958 3 роки тому +1

    Mr Bava, you are great and excellent👍I am a Malaysian. I am getting an opportunity to hear your voice in our radio program on Sunday. “Thamila Amuthava “

  • @thangakumar4390
    @thangakumar4390 4 роки тому +12

    அறிஞர் அண்ணாவின் செவ்வாழை,யார் மீது கோபித்து
    கொள்வது இந்த இரண்டு சிறுகதைகளை கூற முடியிமா பவா sir
    Plzz...👂👂👂

  • @muralitharan61
    @muralitharan61 4 роки тому +1

    thanks sir, realy good story we live such a society sir, we must walk a long endless path
    .

  • @ganganaidu3881
    @ganganaidu3881 4 роки тому

    Bhawaa doing vashika, sathveegha. Abinyam wooow spr...

  • @JesusandMe23
    @JesusandMe23 4 роки тому +1

    நெகிழ்வுக்குள்ளாக்கிவிட்டீர்கள் பவா...

  • @kathirsengeni4220
    @kathirsengeni4220 4 роки тому

    Bava appa arumai, I love you appa

  • @vaidehisubramani6302
    @vaidehisubramani6302 3 роки тому

    This story has touched the soul. Thank you.

  • @pearlmuthu82
    @pearlmuthu82 4 роки тому

    பவா ஐயா நான் உங்கள்
    ரசிகர்களின் ஒருவன் ஆக மாறிவிட்டேன் உங்களை ஒரு நாளாவது நான் சந்தித்து விட வேண்டும் என்று தினமும் நினைத்து கொண்டிருக்கிறேன் அந்த வாய்ப்பு கிடைக்குமா

  • @lalithaloganathan9290
    @lalithaloganathan9290 4 роки тому

    Arumai sir

  • @tamil_arvalan
    @tamil_arvalan 4 роки тому

    arumai bava..

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 4 роки тому

    Oru kaalathil naanum kalugayi....indru kalugu valappavanaga.....naalai kalugu valartha Appavaaga iruppeyhn

  • @venkai81
    @venkai81 4 роки тому

    பவா, சுய மோகன் கதைகள் சுத்த வேஸ்ட்...

  • @tamiladal
    @tamiladal 4 роки тому

    கறைகுமிந்து; நாற்றமேறி;
    கந்தலானத் துணியழகில்;
    கருத்துப்போன கரத்தினிலே;
    கதறியழும் குழந்தையுடன்;
    களைத்துப்போய்; கண்பிதுங்கி;
    காலோடும் தடத்தினிலே;
    கனவொன்றும் பெரிதாயின்றி;
    கஞ்சிக்காகக் காசுகேட்கும்;
    கனகாம்பரம்போல; தினமும்நாம்;
    கடந்தோடும் மேகங்களேராளம்!!
    கனகாம்பரமும்; நம்போல;
    கடந்தோடும் மேகங்களேராளம்!!
    கசந்திடாவிக் கவிதையைப்போல
    கடந்தோடும் மேகங்களேராளம்!!
    கடந்தோடும் மேகங்களேராளம்!!
    Dedicating to the phrase 'Passing Clouds' &
    the great story teller 'Bava Chelladurai'...

  • @amyrani7960
    @amyrani7960 4 роки тому

    Beautifully narration.. thanks Brother Bava!

  • @sankarramasamy848
    @sankarramasamy848 4 роки тому

    Bava sir your great i like your definition and effort to everyone stories many many thanks

  • @medicalplatform5273
    @medicalplatform5273 4 роки тому

    Bava chellakutty 😍😍😍

  • @sushiranganag
    @sushiranganag 4 роки тому

    பறவையை கண்டான்
    விமனம் படைத்தான்
    பாயும் மீன்களில் படகினை கண்டான
    எதிரொலி கேட்டான வானொலி படைத்தான்
    எதனை கண்டான் பணம்தனை படைத்தான்...!!!!

  • @bharathwaj1768
    @bharathwaj1768 4 роки тому

    Pala pustaggal erundalum neengal chola nan ketkinra kathai aladhiyanadu vazhiga Bava avargal samugam

  • @nedunchezhiyankaliyamoorth6908
    @nedunchezhiyankaliyamoorth6908 4 роки тому

    அருமை பவா

  • @அமுதன்இனியவன்

    அவரது தளத்தில் பதிவிட்ட பத்து நாட்களுக்குள் இதைச் சொல்லுவீர்கள் என எதிர்பார்க்கவில்லை.. ஏற்கனவே படித்து விட்ட கதை நீங்கள் சொன்னதை கேட்ட பிறகு வேறொரு தளத்திற்கு செல்கிறது.

  • @Edm310
    @Edm310 4 роки тому +2

    This story reminded me of Thotiyude magan by the great writer Thakazhi.

  • @sen8948
    @sen8948 4 роки тому +1

    ஆமாம் உங்கள் வாயின் வழியாக கதையை கேட்க' நெடும்தூரம்' தான்.

  • @MrSenthil000
    @MrSenthil000 2 роки тому

    ஏன் பவா ஒவ்வொரு கதையிலும் என்னை அழ வைக்குனுமா??

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 4 роки тому

    Emotional happiness sir.thank you.

  • @karthikshanmugam452
    @karthikshanmugam452 4 роки тому

    Heart touching story

  • @muthu_wanderluster
    @muthu_wanderluster 4 роки тому

    பவா தினமும் ஒரு மணி நேரம் கதை சொல்லுங்க தயவு செய்து கேட்கமால் இருக்க முடியல

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 4 роки тому

    அருமை சார்

  • @tamilselvan-qm9zn
    @tamilselvan-qm9zn 4 роки тому

    அய்யா நான் தங்களுடைய கதை கேட்க வாங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மிகுந்த ஆசை.வாய்ப்பு கிடைக்குமா